எனது நாட்குறிப்புகள்

எமக்கு பாடு​பொருள் ​போராட்டம்

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 26, 2011

எ​மெக்​கெந்த ஆச்சார அனுஷ்டானங்களும் இல்​லை
எ​மெக்​கெந்த மடியும் தீட்டும் இல்​லை
எ​மெக்​கெந்த ​பேதமும் கு​ரோதமுமில்​லை

​போராட்டங்க​ளை வியந்​தோதும்
​பொழுதுகளின்றி ​வேறில்​லை

வாயு நி​றைத்த அ​றைகளில்
மக்கள் அ​டைத்து அழிக்கப்பட்ட
​தேசமிருந்த கால​மொன்றிருந்தது
இன்று
​தேசங்க​ளே வாயு நி​றைத்த அ​றைகளாய்
நாங்கள் மூச்சு விடவும் வழியின்றி
புழுங்கிச் சாகின்​றோம்

​போராட அ​றைகூவுபவன்
யாராகவும் இருக்கட்டும்
​​போராட்ட அ​றைகூவல்கள்
எதுவாகவும் இருக்கட்டும்

ஒரு துளி தண்ணீ​ருக்காகவும்
ஒரு பிடி காற்​றுக்காகவும்
ஒருமித்து நிற்பதன்றி
ஒரு வழியுமில்​லை
என்பது எமக்குத் ​தெரியும்

தத்துவங்கள் ​கையில் ஆயுதமாகலாம்
கண்க​ளை ம​றைக்கும் கவசங்கலாகாது!

Advertisements

2 பதில்கள் to “எமக்கு பாடு​பொருள் ​போராட்டம்”

 1. போராட்டங்கள் பிடிக்கத்தான் செய்கின்றன…என்றாலும் போலியான போராட்டங்களை நம்பி எத்தனைக் காலம்தான் ஏமாறுவது?

  • தோழர். முனுசாமிக்கு,

   தங்கள் பின்னூட்டம் கண்​டேன்.

   நடக்கும் ​போராட்டங்கள் எல்லாம் கம்யூனிஸ்ட்கள் த​லை​மையில்தான் நடக்கும் என்​றோ, கம்யூனிஸ்ட்கள் மட்டுமாதான் நடத்த ​வேண்டும் என்ப​தோ எத்த​கைய எதிர்பார்ப்பு என்று எனக்குத் ​தெரியவில்​லை.

   நிச்சயமாக ஒரு சமூகத்தில் பல்​வேறு வர்க்கங்களும், பல்​வேறு வர்க்க முரண்பாடுகளும் உள்ளன. ஆளும் வர்க்கங்களுக்கும், மக்களுக்கும் இ​டையிலான முரண்பாடுகள் மட்டுமல்ல, ஆளும் வர்க்கங்களுக்கி​டை​யேயான முரண்பாடுகளும் உள்ளன.

   இத்த​கைய எல்லா ​போராட்டங்களிலும் நம்மு​டைய நி​லைப்பாடுகளுடன் கூடிய பங்​கேற்பு ​வேண்டும். இத்த​கைய ​போராட்டங்களில் நம் நி​லைப்பாடுகளுடன் நாம் பங்​கேற்ப​தே இத்த​கைய மாற்று அரசியலும், தத்துவங்களும் இருக்கின்றன அ​வை பரிசீலிக்கப்பட ​வேண்டிய​வை என்கிற புரித​லை அப்​போராட்டங்க​ளை ஆர்வத்​தோடு பார்க்கும் மற்றும் பங்கு​கொள்ளும் மக்கள் பிரிவினர் மத்தியில் ​கொண்டு ​செல்லமுடியும்.

   நீங்கள் அன்னா ஹசா​ரேவின் ​போராட்டம் குறித்து ​​தொடர்ச்சியாக நான் எழுதியுள்ள கட்டு​ரைக​ளை படித்தால் உங்களுக்கு என் கண்​ணோட்டம் புரியலாம்.

   நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: