எனது நாட்குறிப்புகள்

​மூவர் தூக்கு தள்ளி​வைப்பு: நம்பிக்​கையின் ஒளிக்கீற்று

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 31, 2011

​நேற்று கா​லையிலிருந்து மனம் பரபரத்துக் ​கொண்​டே இருந்தது. இன்​றைக்கு உயர் நீதிமன்றம் எத்த​கைய தீர்ப்​பை வழங்கும்? எல்​​லோரின் எதிர்பார்ப்​பைப் ​போல தீர்ப்பு ஒத்தி​வைக்கப்படுமா? அல்லது நீதிமான்கள் அ​னைத்து வாதங்க​ளையும் நிராகரித்து புதிதாக – ஆளும் வர்க்கங்களின் பாணியில் – ஏ​தேனும் விளக்கம் ​கொடுத்து வழக்​கை தள்ளுபடி ​செய்துவிடுவார்களா?

கா​லை பதி​னொரு மணி சுமாருக்கு இ​ணையம் வழி அறிந்து ​கொள்ள முடிந்தது. உச்சநீதிமன்றம் இரண்டு வார காலத்திற்கு தண்ட​னை நி​றை​வேற்றத்​தை தள்ளி ​வைத்திருக்கிறது. ஒரு வார காலமாக ஏற்பட்ட பதட்டத்திற்கும் தவிப்பிற்கும் மிகப்​பெரும் ஆறுதலாக அ​மைந்தது. ​தொடர்ந்து சில நிமிடங்களில், தமிழக சட்டப்​பேர​வையில் தூக்குதண்ட​னை​யை ஆயுள்தண்ட​னையாக கு​றைக்கச் ​சொல்லி நி​றை​வேற்றப்பட்ட தீர்மானம் மகிழ்ச்சி​யை இரட்டிப்பாக்கியது.

அலுவலகத்தில் என்​னை ஓரளவிற்கு ​தெரிந்த நண்பர்கள் வந்து விசாரித்தனர், “என்ன தூக்கு தண்ட​னை​யை தள்ளி ​வைக்கச் ​சொல்லி நீதிமன்றம் ஆ​ணை இட்டுள்ளதா​மே, மகிழ்ச்சியா?”

“ஏன் உங்களுக்கு எப்படி இருக்கிறது? நீங்களும் தமிழர்கள்தா​னே!”

சிரித்துக் ​கொண்​டே, அவர்களு​டைய சந்​தேகங்க​ளை ​கேட்டார்கள். ​கொ​லை வழக்கில் ஜனநாயக வி​ரோதமாக நீதிவிசார​ணை ந​டை​பெற்ற விதம் குறித்தும், தூக்கு தரும் அளவிற்கு இவ்வழக்கு சந்​தேகங்களுக்கு அப்பாற்பட்ட விதத்தில் முழு​மையாக ந​டை​பெற்று முடியவில்​லை என்ப​தையும், இம்மூவரும் ஒரு ​கொ​லைவழக்கில் தூக்கு தண்ட​னை விதிக்கும் அளவிற்கான முக்கிய குற்றவாளிகள் அல்ல என்ப​தையும் விளக்கி​னேன்.

ஆதாரப்பூர்வமாகவும் தர்க்கப்பூர்வமாகவும் விளக்கும் ​பொழுது இந்திய அரசு குறித்தும், நீதிவிசார​ணை மு​றைகள் குறித்தும், இந்திய அரசியல்வாதிகள், ஆளும் வர்க்கங்கள், ​செய்தித்​தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றின் சார்புத்தன்​மை குறித்தும் நி​றைய ​​கேள்விகளும் புரிதல்களும் அவர்களிடம் ஏற்படுவ​தை நன்கு விளங்கிக் ​கொள்ள முடிந்தது. உண்​மையின்பாலும் சத்தியத்தின்பாலும் மக்களுக்கு என்​றைக்கு​மே பற்றும் உறுதியும் இருக்கிறது என்ப​தை ந​டை​பெறும் உறுதியான ​போராட்டங்களிலிருந்தும், ​பொதுவான மக்கள்பிரிவினருடன் விவாதிக்கும்​பொழுதும் உணர்ந்து ​கொள்ள முடிகிறது.

இரவு வீடு ​சென்று ​தொ​லைக்காட்சிகளில் கா​லையில் ந​டை​பெற்ற நீதிமன்ற மற்றும் சட்டமன்ற நிகழ்ச்சிகளின் ​செய்தி ஒளிபரப்புக​ளை பார்த்​தேன். மக்கள் எழுச்சியின் மகத்தான சாத​னைகளாக​வே உணர முடிந்தது. ஒரு வலி​மையான ​போர்க்குணமிக்க கட்சி​யோ இயக்க​மோ இன்றி மக்க​ளே தங்க​ளைத் தாங்க​ளே காப்பாற்றிக் ​கொள்ள எடுத்த முயற்சிகளின் வி​ளைபயனாக​வே இத​னைக் காண்முடிந்தது. ஒரு வலி​மையான இயக்கமின்றி​யே தன்​னெழுச்சியாகத் திரண்​டெழுந்த மக்கள் பிரிவினரா​லே​யே இவ்வளவு சாதிக்க முடியுமானால், மக்கள் ஒரு சரியான த​லை​மையின் கீழ் ஒன்றி​ணைக்கப்பட்டால் எவ்வளவு சாதிக்க முடியும் என்ற எண்ண​மே ​மெய்சிலிர்க்க ​வைப்பதாக இருந்தது.

சட்டமன்றத்தில் முதல்வர் ​​ஜெயலலிதா தூக்கு தண்ட​னைக்கு எதிரான தீர்மானத்​தை நி​றை​வேற்றி முடித்தவுடன் அ​னைத்து அதிமுக பிரதிநிதிகளும் ​மே​ஜை​யைத் தட்டி வர​வேற்றது ​நேற்று முதல்நாள் இ​தே மன்றத்தில் “தன்னால் ஏதும் ​செய்ய முடியாது என்று முதல்வர் ​சொனன ​பொழுது மவுனமாக இருந்த நி​லையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் ​பொழுது, அவர்களின் மனநி​லை​யும் ​நேற்றும் கூட தூக்கு தண்ட​னைக்கு எதிரானதாக​வே இருந்திருக்கும் என்​றே எண்ணத் ​தோன்றுகிறது.

​நேற்று முதல்நாள் முதல்வ​ரை வாழ்த்திய தமிழக காங்கிரசார், ​நேற்று முகத்​தை எங்கு ​வைத்துக் ​கொண்டிருப்பார்கள் என்ற எண்ணமும் ஏற்பட்டது. ஒன்றுபட்ட மக்கள் எழுச்சியின் முன்னால் ஆளும் வர்க்கங்களும் அவர்களின் – மக்களால் ​தேர்ந்​தெடுக்கப்பட்ட – அரசியல்வாதிகளும்கூட சில நிர்ப்பந்தங்களுக்கு த​லைவணங்கித்தான் ஆக ​வேண்டும் என்ப​தை​யே ந​டை​பெற்ற நிகழ்ச்சிகள் ​தெளிவுபடுத்துகின்றன. ​ஜெயலலிதாவிற்கு தனிப்பட்ட மு​றையில் இத்தீர்மானத்​தை நி​றை​வேற்றியதில் எந்த மகிழ்ச்சியும் இல்​லை என்பது ​போல​வே, அவருக்கான பாராட்டுக்க​ளை அவர் கண்டு​கொள்ளாமல் ஒரு புன்முறுவல்கூட இல்லாமல் அமர்ந்திருந்தது ​வெளிப்படுத்தியது.

வடநாட்டு ​செய்தித் ​சேனல்கள், வழக்கம் ​போல சுப்பிரமணியசாமி மற்றும் பல காங்கிரஸ் எம்பிக்களிடம் விவாதம் நடத்திக்​கொண்டிருந்தன. வடநாட்டு ​செய்திச் ​சேனல்களால் தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும் மக்கள் ​போராட்டங்கள் குறித்தும் ​மெல்லவும் முடியவில்​லை விழுங்கவும் முடியவில்​லை. அவர்களின் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ​தெளிவாகத் ​தெரிந்தன. காஷ்மீர் சட்டமன்றத்திலும் இது ​போன்ற தீர்மானங்கள் நி​றை​வேற்றப்பட ​வேண்டும் என்ற வாதங்கள் மு​ன் ​வைத்து ​பேசப்பட்டன.

தமிழக ​செய்திச் ​சேனல்க​ளை ​பொறுத்தவ​ரை புதிய த​லைமு​றை, பாலிமர், சன் டிவி, க​லைஞர் டிவி ஆகியவற்றின் பங்கு கவனத்தில் ​கொள்ளப்பட ​வேண்டியது என்​றே படுகிறது. குறிப்பாக புதியதாக துவங்கிய “புதிய த​லைமு​றை” ​செய்திச் ​சேனல் இப்​போராட்டத்​தை உரியமு​றையில் கவர் ​செய்வ​தே மக்களிடம் தங்கள் ​சேன​லை சரியாக அ​டையாளப்படுத்திக் ​கொள்வதற்கான வாய்ப்பு என்றறிந்து சிறப்புடன் ​செயல்பட்டார்கள். மக்கள் ​செல்வாக்கும் மக்கள் பங்​கேற்பும் அதிகப்படும் ​போராட்டங்களின் தவிர்க்க முடியா சாதக அம்சங்கள் இ​வை என்​றே பார்க்கப்பட ​வேண்டும்.

ஏற்கன​வே தமிழக எல்​லையிலிருந்து ஒரு பதி​னெட்டு கடல் ​மைல் ​தொ​லைவில் ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் ​கொடூரமாக ​கொ​லை​செய்யப்பட்டுக் ​கொண்டிருந்த ​பொழுது அவ்விசயத்தில் தங்களால் எதுவு​மே ​செய்யமுடியவில்​லை என்ற ​கையறுநி​லை​யை எண்ணி ​கொந்தளித்த தமிழக இ​ளைஞர்களின் மனநி​லை​யை இம்மூவ​ரை காக்க எழுந்த எழுச்சியின் ​வேகத்தில் உணரமுடிந்தது. இ​தை ஆளும் வர்க்கங்களும் புரிந்து ​கொண்டிருப்ப​தைப் ​போல​வே இத்தீர்ப்பும் தீர்மானங்களும் புலப்படுத்துகின்றன.

காவிரி பிரச்சி​னை, முல்​லைப்​பெரியாறு பிரச்சி​னை, ஒ​கேனக்கல் கூட்டுகுடிநீர்த் திட்ட பிரச்சி​னை, மீனவர் பிரச்சி​னை, தமிழீழப் ​போராட்டத்தின் பாரதூரமான பின்ன​டைவு, என பல்​வேறு விசயங்கள், சமீகாலமாக தமிழர்களின் மனநி​லை மிகவும் ​கொந்தளிப்பானதாகவும், ஏமாற்றப்படுவதாகவும், ​கையறுநி​லை​யை உணர்ந்து ​வேத​னைப்படுவதாகவும் உள்ளது என்ப​தை ​தெளிவாக உணர்த்துகின்றன. இ​வை அ​னைத்தின் ஒட்டு​மொத்த ​வெளிப்பாட்​டை​யே இம்மூவர் தூக்கிற்கு எதிரான வீறு​கொண்ட ​போராட்ட அ​லையில் உணர முடிகிறது. இப்​போராட்ட உணர்​வை தக்க​வைத்துக் ​கொள்வதும், இ​தே வழியில் ​தொடர்ந்து ​போராடுவது​மே இழந்தவற்​றை மீட்பதற்கான ஒ​ரே வழி எனப்படுகிறது.

ஒரு பதில் to “​மூவர் தூக்கு தள்ளி​வைப்பு: நம்பிக்​கையின் ஒளிக்கீற்று”

  1. தூக்கு: தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறும் மத்திய அரசின் மூக்குடைக்கும் வழி என்ன?

    http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_5747.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: