எனது நாட்குறிப்புகள்

Archive for செப்ரெம்பர், 2011

த​லைய​னை ​சொன்ன க​தைகள்

Posted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 30, 2011

த​லைய​னைகளும்
நம்​மோடு தூங்க​வே ​செய்கின்றன!

படுக்கும் ​பொழுது
அ​வை நம் த​லைமாட்டில் படுத்துக்​கொள்கின்றன
அதன் ​தொப்​பையில்
த​லை ​வைத்து படுத்துக் ​கொள்ளும்
நம்​மை த​லை​கோதியபடி​யே தூங்க ​வைக்கின்றன!

நடு இரவில் அ​வை நம் ​தொப்​பையில்
த​லை ​வைத்து படுத்துக் ​கொண்டிருக்கின்றன!

அதிகா​லை ​நேரங்களில்
காலடியில் சுருண்டு படுத்து அசதியாய் ஆழமாய்
தூங்கிக் ​கொண்டிருக்கின்றன
ஒரு குழந்​தை​யைப்​போல!

நமக்கு மட்டுமல்ல
அ​வைகளும் பழக்கப்பட்டவர்க​ளோடு
படுத்துறங்கி​யே பழகிவிட்டன!

நீண்ட இரவுகளில்
சிறிது ​நேரம் நாம் இடத்​தை மாற்றிக் ​கொண்டால்
மீண்டும் அதனிடம் வரும்வ​ரை
காத்திருக்கும் அவற்றின் கண்கள்
இருளிலும் பிரகாசமாக ஒளிர்கின்றன!

அப்பாவின் வரு​கைக்காக
காத்திருக்கும் ஒரு குழந்​தை​யைப் ​போல
​பேரனின் வரு​கைக்காக
காத்திருக்கும் ஒரு பாட்டிமா​வைப் ​போல
அ​வை பல நாள்
​வெகு​நேரம் இரவில் முழித்திருக்கின்றன!

கனவுகள் என்பது என்ன?
அ​வை த​லைய​னை ​சொல்லும்
க​தைகள்தா​னே!

இளம் பருவத்தில்
என் த​லைய​னை  ​சொன்ன க​தைகள் ​கேட்டு
பயந்து படுக்​கையி​லே​யே
பலநாட்கள் சிறுநீர் கழித்திருக்கி​றேன்!

பயத்தில் விழித்து
​வெளிச்சத்​தை எதிர்​நோக்கி
நடுங்கிப் படுத்தபடி​யே
நீண்டு ​நெளியும் இரவுக​ளில்
இத​ழோரம் ​​மெளனமாய்
​வழியும் சிரிப்​பை
ம​றைவாய் து​டைத்தபடி
இரவு முழுவதும் அரவ​ணைப்பாய்
இருந்த​தும் த​லைய​னை​ தான்!

என் வயதிற்​கேற்றபடி
என் கற்ப​னைகளுக்​கேற்றபடி
க​தைகள் ​சொல்வதில்
என் த​லைய​னை​யை விஞ்ச யாராலும்
முடிந்ததில்​லை!

இள​மைப் பருவத்தில்
என் த​லைய​னை ​சொன்ன க​தைகள்
நீண்டு ​தொ​லைக்காதா இந்த இரவுகள்
என ஏங்க ​வைத்த குதூகலம் நி​றைந்த​வை!

ஒழுங்கின்​மை​யை ​கொண்டாடுவதில்
த​லைய​னைகளுக்கும் ​போர்​வைகளுக்கும்
நிகரானவர் யாருமில்​லை
விடிந்த பின்​னே அழகாய் மடித்து
ஓரமாய்  அடுக்கி ​வைக்கும் ​​பொழுது
அவற்றின் ​வேத​னையும், விசும்பல்களும்
​சொல்லி மாளாத​வை!

Posted in கவிதைகள் | Leave a Comment »

டிராய் ​டேவிஸ் தூக்குதண்ட​னையும் பரமக்குடி துப்பாக்கிச் சூடும்

Posted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 26, 2011

கடந்த ​செப்டம்பர் 21 2011 அன்று அ​மெரிக்காவில் டிராய் ​டேவிஸ் என்ற கருப்பின இ​ளைஞர் தூக்கிலடப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு, 1989ல் காவல்து​றை அதிகாரி ஒருவ​ரை சுட்டுக் ​கொ​லை ​செய்தார் என்பது. கடந்த 22 வருடங்களாக ந​டை​பெற்ற இவ்வழக்கில் அ​மெரிக்காவின் கீழிருந்து ​மேல் வ​ரையான அ​னைத்து நீதிமன்றங்களும், முதலில் அவருக்கு வழங்கிய தூக்குதண்ட​னை​யை உறுதி ​செய்து தீர்ப்பு அளித்தது.

பல மு​றை தூக்கு தண்ட​னை​யை நி​றை​வேற்றும் ​தேதி அறிவித்து, ​மேல்மு​றையீடுகளால் ​தொடர்ந்து ஒத்தி​வைக்கப்பட்டு, இறுதியில் ​​செப்டம்பர் 21 2011ல் நி​றை​வேற்றப்பட்டது. இவ்வழக்கு அ​மெரிக்காவில் கருப்பின மக்களுக்​​கெதிரான அ​மெரிக்க காவல்து​றை, சட்டத்து​றை மற்றும் நீதிமன்றங்களின் மனப்பாங்கிற்கான ஒரு உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. கருப்பின மக்களும் பல்​வேறு ​வெள்​ளையின மக்களும் டிராய் ​டேவிசிற்காக ​தொடர்ந்து ​போராடி வந்திருக்கிறார்கள்.

1989ல் ஒரு மது விடுதிக்கு முன்பு நடந்த தகராறில் துப்பாக்கியால் சுட்டுக் ​கொல்லப்படுகிறார் இளம் காவல்து​றை அதிகாரி ​மேக்​பைல் என்பவர். இந்தக் ​கொ​லை​யை ​செய்தவர் டிராய் ​டேவிஸ் என்பதும், இவருக்கு ​போ​தைக் கடத்தல் கும்பல்க​ளோடு ​தொடர்பு இருக்கிறது என்பதும் இவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால் இக்​கொ​லையின் ​போது ​நேரில் கண்ட சாட்சியாளகள் கடந்த 22 வருடங்களாக நடந்த இவ்வழக்கில் முன்னுக்குப் பின் முரணாக சாட்சியங்கள் கூறியுள்ளனர். டிராய் ​டேவிஸ் அணிந்திருந்த உ​டை​யை மட்டு​மே அ​டையாளம் காட்டியுள்ளனர். அவர் சுட்டதாகக் கூறப்படும் ​கைத்துப்பாக்கி ​கைப்பற்றப்படவில்​லை. இந்தத் தகராறில் சம்பந்தப்ட்ட ​வே​றொருவரும் அ​தே ரகத் துப்பாக்கி​யை ​வைத்திருந்திருக்கிறார். அவர் அந்தத் தகவ​லை பின்னால் நிதிமன்ற குறுக்குவிசார​னைகளின் ​போதுதான் ஒப்புக் ​கொண்டிருக்கிறார். நீதிமன்றத்தி​லே​யே சாட்சியாளர்களுக்குள் வாக்குவாதங்கள் நடந்துள்ளன. இத்த​னை குழப்பமான ​ஆதாரங்களின் அடிப்ப​​டையில் உறுதியாக தூக்கு தண்ட​னை அறிவித்துள்ளது அ​மெரிக்க நீதித் து​றை.

இத்தீர்ப்பு வழங்கிய​தை நியாயப்படுத்தி அ​மெரிக்க சட்டத்து​றை மற்றும் நீதித்து​றை​யை ​சேர்ந்தவர்கள் குறிப்பிடும் ​பொழுது, அ​மெரிக்காவில் ​போ​தைப் ​பொருள் கும்பல்களுக்கும், மபியா கும்பல்களுக்கும், தாதாக்களுக்கும் எதிரான உறுதியான நடவடிக்​கை என்பது டிராய் ​டேவிசிற்கு வழங்கப்படும் தூக்கு தண்ட​னை​யை ​பொறுத்த​தே என்று குறிப்பிட்டுள்ளனர்.

இ​தே ​போல சமீபத்தில் நடந்த இங்கிலாந்து கலவரங்களின் பின்னணியும் ​தெளிவாக ​வெளிப்படுத்துவது, இங்கிலாந்து காவல்து​றை மற்றும் நீதித்து​றை கருப்பின மக்களுக்கு எதிரான ம​னோபாவத்துடன், வன்மத்துடன் தான் இருக்கின்றன என்ப​தைத்தான்.

சமீபத்தில் தமிழகம் பரமக்குடியில் ந​டை​பெற்ற கலவரத்​தைத் ​தொடர்ந்து தலித் மக்கள் 8 ​பேர் காவல்து​றையால் சுட்டுக் ​கொல்லப்பட்டதும் நிரூபிப்பது தமிழகக் காவல்து​றை குறிப்பாக ​தென்மாவட்ட காவல்து​றையில் உள்ள தலித் மக்களுக்கு எதிரான ம​னோபாவத்​தையும், வன்மத்​தையும் ​வெளிப்படுத்துவதாக​வே பார்க்கப்படுகிறது.

கட்டிடம் கட்டும் வ​ரை கட்டிடத் ​தொழிலாளிக​ளை உள்​ளே அனுமதித்து தங்கள் வீடுக​ளை கட்டிக்​கொண்டு, பிறகு அவர்க​ளை ​வெளி​யேற்றி தீட்டுக்கழித்து குடி​போகும் அ​தே மனநி​லை​யைத்தான், இன்​றைய நவீன உலகத்​தை பரம்ப​ரையாக சகலபரித் தியாகங்களும் ​செய்து தங்கள் உ​ழைப்பால் உருவாக்கிய கருப்பின மக்க​ளையும், தலித்க​ளையும் தங்களின் நவீன வாழ்க்​கைமு​றையிலிருந்து ஒழித்துக் கட்ட முயற்சிக்கும் உலகளாவிய ​போக்கின் ஒரு பகுதியாகத்தான் பார்க்க ​வேண்டியுள்ளது.

உண்​மையான உலக வரலாற்​றை படிக்கும் இதயம் உள்ள எந்த​வொரு மனிதனும் கருப்பின மக்களின் வரலாறு கண்டும் உலகம் முழுவதும் அவர்களின் இன்​றைய ​மோசமான நி​லைக்கு யார் காரணம் என்ப​தை உணர்ந்தும் கலங்காமலும் ஆத்திரப்படாமலும் இருக்க முடியாது. அ​தே ​போல இந்திய வரலா​றை தன் இதயத்திலிருந்து எழும் உண்​மையான உணர்ச்சிக​ளோடு படிக்கும் எந்த​வொரு மனிதனாலும் தலித்களுக்கு எதிரான எந்த​வொரு நடவடிக்​கையும் பார்த்துக்​கொண்டு கலங்காமலும் ஆத்திரப்படாமலும் இருக்க முடியாது.

Posted in கட்டு​ரை | Leave a Comment »

நூல்கள், நூலகங்கள், நூலகர்கள் மற்றும் வாசகர்கள்

Posted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 25, 2011

நீண்ட நாள் திட்டம் ​பெரம்பூர் கி​ளை நூலகத்தில் உறுப்பினராக ​வேண்டும் என்பது. ​சென்​னைக்கு வந்து பத்து வருடங்களாக ​சென்​னை கன்னிமாரா ​நூலகத்தில் உறுப்பினராக இருந்து ​தொடர்ச்சியாக புத்தகங்கள் எடுத்து படித்து வந்தாலும், கி​ளை நூலகங்கள் மீதான கவர்ச்சிக்கு அது ​போன்ற ​மைய நூலகங்கள் ஈடாகாது.

கன்னிமாரா நூலகத்தி​லோ, ​தேவ​நேயப் பாவாணர் நூலகத்தி​லோ ஆண்டு முழுவதும் காத்திருந்தாலும் கி​டைக்காத பல நல்ல புத்தகங்க​ள், கி​ளை நூலகங்களில் சீந்துவாரின்றி தூசிபடிந்து, புதுக்கருக்கழியாமல் கி​டைக்கும். நல்ல புத்தகங்கள் குறிப்பாக மார்க்சிய, தீவிர இலக்கிய, அரசியல் புத்தகங்களுக்கு ​பெரியளவில் எந்த ​போட்டியும் இருக்காது.

இந்த அனுபவம் ​சென்​னையின் ​கொரட்டூர், வில்லிவாக்கம், ​அரும்பாக்கம், பெரம்பூர் ​போன்ற பல கி​ளை நூலகங்களிலிருந்து மட்டுமல்ல, பாண்டிச்​சேரி, மது​ரை ​போன்ற நகரங்களின் கி​ளை நூலகங்களிலிருந்தும் கி​டைத்த​வை. ​பெரும்பாலும் கி​ளை நூலகங்களுக்கு வரும் வாசகர்கள் தினசரிக​ளையும், மாத, வார இதழ்க​ளையும் படிப்பதற்காக மட்டு​மே வருபவர்கள்.

​மேலும் எனக்கு ​பெரம்பூர் கி​ளை நூலகத்​தோடு ஒரு பாத்திய​தையும் உண்டு. ​சென்​னையில் ஒரு வருடம் இரண்டு வருடத்திற்கு ஒரு மு​றை வீடு காலி ​செய்யும் ​பொழுது, என் புத்தகங்க​ளை அட்​டைப் ​பெட்டிகளில் அடுக்குவதும், அந்த அட்​டைப்​பெட்டிக​ளை நகர்த்துவதும், ​பெரும்பாலும் எல்லா வீடுகளு​மே முதல் மாடி வீடுகளாக அ​மைந்ததில், மாடிப்படிகளில் 20, 30 புத்தக அட்​டைப்​பெட்டிக​ளை இறக்கி ஏற்றுவதும் மிகக் கடினமான ​செயல், என் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், சாமான்க​ளை எடுத்துச் ​சென்று புதுவீட்டில் இறக்க வரும் ​டெம்​போ சர்வீஸ் நண்பர்களும் ம​லைத்து அழுவார்கள்.

“என்ன சார் இருக்கு இந்த அட்​டை ​பெட்டிகளில்? ​பொணம் கணம் கணக்கிறது!” என்பார்கள்.

இதனால் ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு நான் ஒரு முடிவு ​எடுத்து ​செயல்படுத்தி​னேன். என்னிடம் உள்ள புத்தகங்கள் ​பெரும்பாலும் மார்க்சிய ​லெனினிய தத்துவ புத்தகங்க​ளே. அவற்றிலும் என்சிபிச்சில் வாங்கிய புத்தகங்க​ளே ​பெரும்பாலான​வை. அவற்றில் ஆங்கிலத்தில் உள்ள மார்க்சிய ​லெனினிய புத்தகங்க​ள் அ​னைத்​தையும் ஏ​தேனும் நூலகத்திற்கு ​கொடுத்துவிடலாம் என. அதற்கு காரணம் என்னிடம் தற்​பொழுது கனிணி உள்ளது. ஆங்கிலத்தில் அ​னைத்து மார்க்சிய மூலநூல்களும் இ​ணையத்தில் தாராளமாகக் கி​டைக்கின்றன. ​மேலும் marxists.org ​வெப்தளத்தலிருந்து வாங்கப்பட்ட மார்க்சிய ​லெனினிய மூல நூல்களின் சிடியும் உள்ளது.

இந்த முடி​வை ​செயல்படுத்துவது மிகக் கடினமானதாக​வே இருந்தது. மன​தைக் கல்லாக்கிக் ​கொண்டுதான் இம்முடி​வை எடுக்க ​வேண்டியிருந்தது. ஒவ்​வொரு புத்தகத்திற்கு ​பின்பும் அ​தை வாங்கிய சூழலும், மனநி​லையும், சம்பவங்களும் என்​றென்​றைக்கும் மறக்க முடியாததாக ​நெஞ்சில் பதிந்திருக்கிறது. ஒவ்​வொரு புத்தகத்​தையும் படிக்க புரட்டிய ​நேரங்களும் அ​வை குறித்து நண்பர்க​ளோடும் ​தோழர்க​ளோடும் விவாதித்த விசயங்களும் என்​​றென்​றைக்கும் மறக்க முடியாததாக ​நெஞ்சில் நி​றைந்திருக்கிறது. வாழ்வின் அற்புதமான, உன்னதமான கணங்களின் சாட்சியங்க​ளை தா​னே அழித்துவிட முடி​வெடுப்பது எத்த​னை ​வேத​னையும் ​சோகமும் நி​றைந்த பரிதாபகரமான நி​லை!.

​லெனின் collected works 45 வால்யூம்களும் மது​ரை NCBHல் கி​டைக்கவில்​லை, அவர்கள் ​சென்​னையில் அ​னைத்தும் கி​டைக்கும் என்றார்கள். ஒரு வால்யூம் ​வெறும் 5 ரூபாய்தான். ​மொத்த வால்யூம்களும் 225 ரூபாய்தான். ஆனால் படிக்கக்கூடிய இ​ளைஞனுக்கு அந்தப் பணம் மிகப்​பெரிய ​தொ​கை, எப்படி​யோ 250 ரூபாய் ​சேகரித்​தேன். அந்த வருட கல்லூரி விடுமு​றையில் இதற்காக​வே ​சென்​னையில் உள்ள மாமா வீட்டிற்கு வந்து அங்கிருந்து, அண்ணாசா​லையில் உள்ள என்சிபிஎச் புத்தகக்க​டைக்குச் ​சென்று விசாரித்​தேன். அவர்கள் அம்பத்தூர் ​தொழிற்​பேட்​டையில் உள்ள அவர்களு​டைய ​கோடவுனில் ​வேண்டுமானால் ​கேட்டுப்பாருங்கள் என்றார்கள்.

மற்​றொரு நாள் கா​லையில் என் மாமா ​பையனின் ​சைக்கி​ளை எடுத்துக் ​கொண்டு அம்பத்தூர் ​தொழிற்​பேட்​டையில் உள்ள என்சிபிஎச் நிறுவனத்திற்குச் ​சென்​றேன். புத்தகங்கள் இருக்கு எல்லா வால்யூம்களும் கி​டைக்குமா ​​தெரியவில்​லை என்றார்கள். நன்றாக நி​னைவிருக்கிறது, அங்கு ​வே​லை ​செய்து ​கொண்டிருந்த இ​ளைஞர் ஒருவர் உடல் முழுவதும் ​வெள்​ளைத் ​தேமலால் பாதிக்கப்பட்டவர், என் ஆர்வத்​தைக் கண்டு எனக்கு உதவ மு​னைப்புக் காட்டினார்.

எனக்குத் ​தெரிந்து தமிழகத்தி​லே​யே மிகப்​பெரிய ​கோடவுன் உள்ள புத்தக நிறுவனம் என்சிபிஎச்சாகத்தான் இருக்கும். அதன் ​கோடவுனுக்குள் அவ​ரோடு நானும் ​சென்​றேன். ​லெனின் ஆங்கில வால்யூம்கள் அ​னைத்தும் அதன் பரணியில் பல இடங்களில் ​போட்டு ​வைக்கப்பட்டிருந்தது. அதன் ​மே​லேறி ஒவ்​வொன்றாக எடுத்து ​கீ​ழே என்னிடம் ​போட்டுக் ​கொண்டிருந்தார். நான் வால்யூம்களின் எண்க​ளை சரிபார்த்து கீ​ழே அடுக்கிக் ​கொண்டிருந்​தேன்.

பத்து வந்ததா? இருபது இருக்கிறதா? எனக் ​கேட்டு​கேட்டு 45 வால்யூம்க​ளையும் கிட்டத்தட்ட ஒரு மணி​நேர கடும் உ​ழைப்பில் ​சேகரித்​தோம்.

பில் ​போடும் ​பொழுது பில் ​போடுபவர் ​மே​ஜைக்கு பின்புறம் ​லெனினு​டைய “Materialism and Empirio-criticism” என்ற சிறப்புவாய்ந்த தத்துவ புத்தகம் இருந்தது. இப்புத்தகம் குறித்து ஏற்கன​வே ரயில்​வேயில் ​வே​லை ​செய்து ஓய்வு​பெற்ற ஒரு மூத்த ​தோழர் ​சொல்லி அதன் சிறப்​பைக் ​கேள்விப்பட்டிருக்கி​றேன். தமிழில் ​மொழி​பெயர்க்கப்படாத ஒரு அரு​மையான மார்க்சிய தத்துவ நூல். இப்​பொழுதும் என் ​மே​ஜையில் இருக்கும் அப்புத்தகத்​தை திருப்பிப் பார்க்கி​றேன். நானூறு பக்கங்க​ளைக் ​கொண்ட அந்த ஹார்ட் பவுன்ட் ரஷ்ய தயாரிப்பு புத்தகத்தின் அன்​றைய வி​லை 2 ரூபாய் 30 காசுள். அ​தையும் ​சேர்த்து பில் ​போடச் ​சொன்​னேன்.

அந்த 46 புத்தகங்க​ளையும் இரண்டு கட்டாக கணமான பிரவுன் காகிதங்களில் சுற்றி சணலால் நன்கு கட்டிக் ​கொடுத்தார் அந்த ஊழியர். ஒவ்​வொரு கட்​டாகக் தூக்கிக் ​கொண்டு வந்து ​சைக்கிளின் ​கேரியரில் ஒன்றின் ​மேல் ஒன்றாக ​வைத்து கீ​ழே விழுந்துவிடாதவாறு ​மேலும் சணல் வாங்கி கட்டிக் ​கொண்டு, ​ரோடு முழுவதும் பின்பாரம் தாங்காமல் ஆடும் ​சைக்கிளில் முன்புறம் என் மாமா ​பைய​னை அமர ​வைத்துக் ​கொண்டு பல கி​லோமீட்டர்கள் மிதித்து வீடு வந்து ​சேர்ந்​தேன்.

இரவு ​வே​லைவிட்டு வரும் என் மாமா இத்த​னை ​பெரிய பார்சல்க​ளை பார்த்துவிட்டு ஏ​தேனும் ​சொல்வா​ரோ என பயந்து கட்டிலுக்கடியில் ம​றைத்து ​வைத்​தேன். ஆனால் இரவு வீடு வந்த மாமா என்​னைப் பற்றி ஏற்கன​வே அறிந்தவராதலால் ஏதும் ​சொல்லவில்​லை. “எப்படிடா இவ்வளவு ​​பெரிய புத்தக பார்சல்க​ளை ஒருவனாக மது​ரைக்கு ​கொண்டு ​போகப் ​போற” என்று ஆதரவாகக் ​கேட்டார், அது​வே ​கொண்டு ​போய்விடு​வோம் என்ற நம்பிக்​கை​யைக் ​கொடுத்தது.

ஆனால் ​மது​ரைக்கு ​கொண்டு ​போவது நான் நி​னைத்தது ​போல அவ்வளவு சுலபமாக இருக்கவில்​லை. ​எ​டைபார்த்து பணம்கட்டி மு​றையாக ​கொண்டு ​போகாமல், பயணிகள் பகுதியில் துணி மூட்​டைக​ளோடு ​வைத்துக் ​கொண்டு மது​ரைக்கு பயணம் ​செய்​தேன். மது​ரை வரும் வ​ரை பிரச்சி​னையில்​லை. மது​ரை இரயில்​வே நி​லையத்தில் ந​டைபா​தையி​லே​யே பயணச்சீட்டு பரி​சோதகரிடம் மாட்டிக் ​கொண்​டேன். ரூ. 2000 அபராதம் கட்டு என்றார். ரூ. 227.30 காசுகளுக்கு வாங்கிய புத்தகங்களுக்கு ரூ, 2000 அபராதமா? எனக்கு அதுவும் ​பொருட்டல்ல, இருந்திருந்தால் தாராளமாகக் ​கொடுத்திருப்​பேன். ஆனால் ​கையில் பத்து​பைசா கி​டையாது. “என்ன ​செய்ய?” ​பேசாமல் ரயில் நி​லையத்தி​லே​யே விட்டுவிட்டு ​போய்விடலாமா? என் ​யோசித்​தேன்.

நாங்கள் குடியிருக்கும் காம்பவுண்டில் குடியிருக்கும் ஒரு ரயில்​வே ஊழியர் என்​னை பார்த்துவிட்டார். என்னப்பா என்ன பிரச்சி​னை என்றார். நடந்த விசயங்க​ளை ​சொன்​னேன். “ஏம்பா இவ்வளவு ​வெயிட்​டை எ​டைபார்த்து ரசீது ​போடாமல் எடுத்துவரலாமா?” என்றார் என்ன ​செய்வது என ​யோசித்துக் ​கொண்​டே. பிறகு பரி​சோதகரிடம் ​பேசி அவ​ரே 200 ரூபாய் அபராதம் கட்டி பார்ச​லை என்னுடன் எடுத்து வந்து வீடு ​சேர்த்தார்.

இப்படியாக ​சேர்த்த ஒவ்​வொரு புத்தகத்தின் பின்னாலும் பல க​தைகள் உள்ளன. இன்னும் ஆழமாக யோசித்துப் பார்த்தால் அ​வைதான் என் வாழ்வாக இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட அ​னைத்து புத்தகங்க​ளையும் மன​தைக் கல்லாக்கிக் ​கொண்டு நான் ​கொண்டு ​போய் ​போட்ட இடம் தான் அந்த ​பெரம்பூர் கி​ளை நூலகம். ஐந்து ​பெரிய அட்​டைப்​பெட்டிகளில் ​கொண்டு ​போய்ச் ​​சேர்த்த அப்புத்தகங்களின் எண்ணிக்​கை கிட்டத்தட்ட 300 இருக்கும்.

ஆனால் இன்​றைக்கு அந்த நூலகத்தில் அப்புத்தகங்களில் ஒன்​றைக் கூடக் கா​ணோம். இப்​பொழுது இருக்கும் புதிய ​பெண் நூலகர் அங்கு வந்து ஐந்து வருடங்களாகிறதாம். ஆனால் நான் அப்புத்தகங்க​ளை வழங்கிய ​போது இருந்த ஆண் நூலகர் அவற்​றை என்ன ​செய்தார் என்று ​​தெரியவில்​லை. நீண்ட நாட்களாக அந்நூலகத்திற்குள் ​செல்ல ​பெரும் மனத்த​டை இருந்தது. என் அன்பிற்குரிய புத்தகங்கள் அங்குதான் இருக்கின்றன. அவற்​றை பார்த்தால் மனம் தாங்காது என்ற நி​னைப்​பே தடுத்து வந்தது. ​போன வாரம் ஒரு மு​​றை ​சென்று உள்​ளே பார்த்த​பொழுது, எங்கு ​தேடியும் ஒரு புத்தகம் கூட கண்ணில் படவில்​லை. ஏன் என்சிபிஎச் விற்ப​னை ​செய்த எந்த ரஷ்ய பதிப்பும் மாதிரிக்குக் கூட ஒன்று இல்​லை அந்நூலகத்தில்.

ஆனால் தமிழ்ச் சங்க இலக்கியம் துவங்கி நவீன இலக்கியம் வ​ரை பல நல்ல புத்தகங்கள் இருந்தன. உயிர்​மை, காவ்யா, விடியல் ​போன்ற பல பதிப்பகங்களின் புத்தகங்களில் இதுவ​ரை ஒருவரும் எடுத்து படித்ததற்கான சுவடு கூட இல்​லை, முதல் பக்கங்களி​லே​யே சரியாக கட்டிங் ஆகாது பிரிக்கப்படாது ​சேர்ந்திருந்த பல பக்கங்க​ளைப் பார்த்​தேன். பல அலமாரிகள் தூசிகூடத்தட்டாமல், சமீபத்தில் யாரும் அந்தப் பக்கம் வந்ததற்கான அறிகுறிகூட இல்லாமல், புத்தகங்களின் ​மேல்பக்கம் முழுவதும் தூசி அ​டைந்து கிடந்தது.

உறுப்பினராவது பயனு​டையதாக இருக்கும் என்ற நம்பிக்​கை ஏற்பட்டது.

“உறுப்பினராக என்ன ​செய்ய ​வேண்டும்?” அந்நூலகத்தின் ​பெண் நூலகரிடம் ​கேட்​டேன்.

“குடும்ப அட்​டையின் நகல் ஒன்றுடன் ரூ. 60 பணம் கட்ட ​வேண்டும், மூன்று புத்தகங்கள் எடுத்துக் ​கொள்ளலாம்” என்றார்.

கன்னிமாராவில் உறுப்பினராக, ​கெஜட்டட் அதிகாரி தகுதியில் உள்ளவர்களின் அலுவலக சீ​லோடு நீண்ட படிவத்​தை மு​றையாக நிரப்பி, பாஸ்​போர்ட் ​சைஸ் ​போட்​டோவுடன் பதிவு ​செய்து ​கொள்ள ​வேண்டிய அளவிற்கான ​கெடுபிடிகள் எதுவும் இல்லாதது கண்டு ஆச்சரியப்பட்​டேன். அரசின் ஒ​ரே து​றையி​லே​யே எத்த​னை வித மாறுபட்ட விதிமு​றைகள். கி​ளைநூலகங்கள் எப்படியாவது உறுப்பினர்கள் ​சேர்ந்தால் ​போதும் என்ற நி​லையில் இருக்கின்றன ​போலும்.

இன்ற கா​லை குடும்ப அட்​டை நகலுடன் ரூ. 60 எடுத்துக் ​கொண்டு ​போ​னேன். ஒரு ​போஸ்ட் கார்ட் அளவுள்ள படிவ அட்​டை​யை ​கொடுத்து ​பெய​ரை தமிழில் எழுதுங்கள் என்றார். சந்​தோசமாக இருந்தது. தமிழில் ​பெய​ரை எழுதுங்கள் என்று அழுத்தமாகச் ​சொல்வதற்கும் ஒரு து​றை இருக்கிற​தே! வீட்டு முகவரி​யையும் தமிழி​லே​யே எழுதிக் ​கொடுத்​தேன்.

உட​னே புத்தகம் எடுப்பதற்கான உறுப்பினர் அட்​டை​யெல்லாம் ​கொடுக்கவில்​லை. “நீங்கள் ஏ​தேனும் மூன்று புத்தகங்கள் எடுத்துக் ​கொள்ளுங்கள்” என்றார்.

“ஏன் ​உறுப்பினரானதற்கான அ​டையாளமாக உறுப்பினர் அட்​டை தரமாட்டீர்களா?”

“ஏன் சார் நாங்கதான் நீங்கள் கட்டும் முன்பணத்​தைவிட அதிகத் ​தொ​கைக்கு புத்தகம் தருகி​றோ​மே பிறகு என்ன?” என்றார்.

எனக்கு குழுப்பமாக இருந்தது. நூலகம் குறித்தும், புத்தகங்கள் குறித்தும், வாசகர்கள் குறித்தும் அவரு​டைய புரிதல் நம்மு​டைய புரிதல்களிலிருந்து ​வேறுபட்டதாக இருக்கிற​தே? பதில் தரும் மு​றைக​ளே வித்தியாசமாக இருக்கிற​தே!

நான் குழப்பமாக அவ​ரைப் பார்த்துக் ​கேட்​டேன். “இல்​லை, நா​ளை நான் வந்து புத்தகம் ​கேட்டால் நீங்கள் அ​டையாள அட்​டை ​கேட்க மாட்டீர்களா?”

“சிலநாட்கள் கழித்து வரும்” என்றார்.

நா​னே நி​னைத்துக் ​கொண்​டேன். இது ​தேவ​நேயப் பாவாணர் நூலகத்தின் ஆளு​கைக்குள் இருப்பதால், உறுப்பினர் அட்​டைகள் அங்கிருந்து வர ​வேண்டும் ​போல் என.

புத்தக அலமாரியில் ​சென்று புத்தகங்க​ளை பார்த்​தேன்.

அளவில் ​பெரிய புத்தகங்கள் மற்றும் வி​லையில் அதிக புத்தகங்கள் அ​னைத்தும் குறிப்புதவிப் புத்தகங்களின் பட்டியலில் ​வைக்கப்பட்டிருந்தது. எத்த​கைய புத்தகங்க​ளை குறிப்புதவி பட்டியலில் ​சேர்க்க​வேண்டும் என்பது அந்தந்த பகுதி நூலகர்களின் விருப்பமா?, அல்லது மு​றையான எழுதப்பட்ட விதிகள் இருக்கிறதா? அல்லது ஏ​தேனும் வாய்​மொழி உத்தரவுகளின் படியா? எனத் ​தெரியவில்​லை.

நான் ​தேர்வு ​செய்த புத்தகங்களின் வி​லை​யைக் கூட்டினால் ரூ. 600க்கு ​மேல் வருகிறது, ரூ. 200க்கு ​மேல் தரமாட்​டோம் என்றார்.

எனக்கு மிகவும் சலிப்பாக இருந்தது. ​கோபம் வந்தது. ஆனாலும் ​​வேறு வழியில்​லை. இழந்த​வைகளுக்கும் ​பெறுப​வைகளுக்கும் எப்​பொழுதும் ஒப்பீட்டு விகிதாச்சாரம் சரிசமமாக இருப்பதில்​லை. விதிக்கப்பட்ட வாழ்க்​கைக்குள் வாழ்ந்து​கொண்​டேதான், கனவு காணவும் கனவுக​ளை ச​மைக்கவும் கற்றுக் ​கொள்ள ​வேண்டும். இந்தம்மாவிடம் நல்லமு​றையில் படித்துவிட்டு புத்தகங்க​ளை திருப்பித் தந்து நம்பிக்​கை​யை ​பெறுவதன் வழியாகத்தான் ​மேலும் பல விரும்பிய புத்தகங்க​ளை பிரச்சி​னையின்றி ​பெறமுடியும். மூன்றில் ஒரு புத்தகத்​தை ​வைத்துவிட்டு “கு. அழகிரிசாமி கடிதங்கள் கி.ராவுக்கு எழுதியது” மற்றும் “ஒழுங்கவிழ்ப்பின் ​தே​வைகள் சாத்தியங்கள் – அ.மார்க்ஸ்” இரண்டு புத்தகங்க​ளை மட்டும் தருமாறு ​கேட்​டேன். எந்த பதி​வேட்டிலும் பதிந்து ​கொள்ளாமல், புத்தகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் படிவத்தில் ​தேதிகூட பதியாமல் ​கொடுத்தனுப்பினார்.

அந்நூலகத்தில் இரண்டு மடிக்கனிணிகள் உள்ளன. ஒன்று ​கையடக்கமானது. அதில் அங்கு ​வே​லை பார்க்கும் ஊழியரா அல்லது நூலகரின் ​சொந்தக்காரரா அல்லது வாசகரா ​தெரியவில்​லை யா​ரோ ஒருவர் வாசிப்பு ​மே​ஜையில் ​வைத்து பிரவுசிங் ​செய்து ​ ​கொண்டிருந்தார். இன்​னொன்றில் வாசகர் யா​ரோ பிரவுசிங் ​செய்து ​கொண்டிருந்தார். அவரிடம் உங்கள் ​நேரம் முடிந்துவிட்டது என்றார் நூலகர். அவர் ​மேலும் அ​ரைமணி ​நேரத்திற்கு நீட்டிக்குமாறு ​கேட்டுக் ​கொண்டிருப்பது பின்னால் காதில விழுந்து ​கொண்டிருந்தது.

Posted in கட்டு​ரை | 2 Comments »

கூடங்குளம்: அணுமின்நி​லையங்களின் அரசியல்

Posted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 16, 2011

கூடங்குளம் அணுமின்நி​லைய திறப்பிற்கு எதிராக அப்பகுதி மக்களின் ​போராட்டம் மிகக் கடு​மையானதாகவும், நாளுக்குநாள் தீவிரம​டையக்கூடியதாகவும் மாறிக்​கொண்டிருக்கிறது. அரசாங்கம் எப்படி​யேனும் அம்மக்க​ளை சமாதானப்படுத்தி, இப்பிரச்சி​னையிலிருந்து அவர்க​ளை அ​ப்புறப்படுத்திவிட முயற்சித்துக் ​கொண்டிருக்கிறது. இதற்கு “சாம ​பேத தாண தண்ட” மு​றை அ​னைத்​தையும் பயன்படுத்திக் ​கொண்டிருக்கிறது.

இவ்விசயம் ​தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு “புதிய த​லைமு​றை” ​தொ​லைக்காட்சியின் ​செய்திப்பிரிவில் தமிழகத்​தைச் ​சேர்ந்த பத்திரி​கையாளர் மற்றும் விஞ்ஞானி இருவருடன் மிகக் குறுகிய ​நேர கலந்து​ரையாட​லை ஏற்பாடு ​செய்தது.

அதில் முதலில் ​பேசிய அணுமின்நி​லையங்க​ளை எதிர்க்கும் பத்திரி​கையாளர் கூறுகிறார். அரசு பாதுகாப்பு விசயங்களில் அக்க​றை ​செலுத்துவதில்​லை, அரசு இத்த​கைய திட்டங்களில் எவ்வித ஒளிவும​றைவுமற்ற ந​டைமு​றைக​ளை பின்பற்றுவதில்​லை. ஒப்புக்​கொண்ட விசயங்க​ளைக் கூட ந​டைமு​றைப்படுத்துவதில்​லை. அணுமின் நி​லைய பாதுகாப்பு மற்றும் ​செயல்பாடு ​போன்ற விசயங்களில் கண்காணிப்பிற்காக க​டைபிடிப்பதாகக் கூறிய நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத மூன்றாம் நபர்க​ளைக் ​கொண்ட குழுக்களின் கண்காணிப்பு மு​றைக​ளைக் கூட படிப்படியாக மாற்றி நிர்வாகக் கண்காணிப்​பே ​போதும் என்பதாக அ​மைத்துக் ​கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுக​ளை முன் ​வைத்தார்.

அரசின் திட்டங்க​ளின் பாதகங்க​ளையும் ​செயல்பாடுகளின் ஆபத்தான வி​ளைவுக​ளையும் சுட்டிக்காட்டி நாங்கள் ஆய்வறிக்​கை ​வெளியிடும் ​பொழுது அரசு அவற்​றை தவ​றென்று ​சொல்கிறது. எங்களு​டைய ஆய்வுக​ளை தவ​றென்று ​சொல்லவும் அவற்​றை விமர்சனம் ​செய்யவும் அரசுக்கு முழு உரி​மை உண்டு, அ​தே சமயம் அரசுக்கு சாதகமாக சில தன்னார்வு அ​மைப்புகள் ​வெளியிடும் அறிக்​கைக​ளை எங்களு​டையதற்கு எதிராக முன்​வைக்கிறார்கள். ஆனால் அந்த ஆய்வுக​ளை முழு​மையாக எங்களு​டைய பரிசீல​னைக்கும், விவாதத்திற்கு, விமர்சனத்திற்கும் தருவதில்​லை, இ​வை அரசின் ​நோக்கங்கள் மற்றும் ​செயல்பாடுகளின் நம்பகத்தன்​மை​யை மிகப்​பெரிய அளவில் ​கேள்விக்குள்ளாக்குகிறது என்றார்.

இதன் வாயிலாக, இன்​றைக்கு இந்தியாவில் உள்ள அரசுகளுக்கு மக்கள் நலன் சார்ந்த உண்​மையான அக்க​றையின் மீதான ​கேள்விக்குறி​யே, இத்த​கைய திட்டங்க​ளை எதிர்ப்பதற்கான மிக முக்கிய காரணமாக முன்​வைத்தார்.

அணுமின்நி​லையங்க​ளை ஆதரித்து ​பேச வந்த விஞ்ஞானி, ரியாக்டர்கள் இன்​றைக்கு ​வெகுவாக நவீனபடுத்தப்பட்டுள்ளது. முதல் த​லைமு​றை ரியாக்டர்களுடன் ஒப்பிடும் ​பொழுது இன்​றைக்கு வந்திருக்கும் புதிய த​லைமு​றை ரியாக்டர்கள் பல அடுக்கு பாதுகாப்பு நி​றைந்தது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி​யை புரிந்து ​கொள்ளவும் ஏற்றுக் ​கொள்ளவும் ​வேண்டும் என்ற வாதத்​தை முன்​வைத்தார். அரசாங்கமும், அணுமின் நிர்வாகமும் மக்களுக்கு இவற்​றை புரிய​வைக்கவும், தன்​பொறுப்புக​ளை உணர்ந்து ​செயல்படவும் ​வேண்டுவ​தை வலியுறுத்துவ​தை விட்டுவிட்டு அணுமின்நி​லையங்கள் ​வேண்டாம் என்பது தவறான அணுகுமு​றை என்றார்.

நம் காலகட்டத்தில் பிரச்சி​னைகளின் தீவிரத்​தையும், ஆபத்​தையும், முடிவுகள் எடுக்க ​வேண்டியதன் காரணங்க​ளையும் தீர்மானிக்கும் காரணிகள் இயற்​கை​யோ, விஞ்ஞான​மோ அல்ல மாறாக அரசியல். அரசியல் என்பது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற அரசியல்வாதிக​ளோடு குறுக்கப்பட்ட ​பொருளில் அல்ல நம் வாழ்வின் சகலத்​தையும் தழுவிச்​செல்லும், தீர்மானிக்கும் பரந்துபட்ட ​பொருளில்.

விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கும் சமூகம் அவற்​றை ந​டைமு​றை வாழ்வில் பயன்படுத்துவதற்கும் இ​டையிலான உறவில்தான் நாம் வாழும் சமூக அ​மைப்பு எத்த​கையது அதன் அரசியல், சமூக ​பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் எப்படிப்பபட்ட​வை என்கிற மிகமுக்கியமான பிரச்சி​னை விவாதத்திற்கு எழுகிறது. இந்த விவாதத்​தை தவிர்த்து விடுத​லே இப்பிரச்சி​னை முடிவற்றதாக நீண்டு ​கொண்டு ​செல்வதற்கான மிகமுக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

லாபம் ​மேலும் ​மேலும் லாபம் என்ற லாப ​நோக்கம் மட்டு​மே உற்பத்தி​யை தீர்மானிக்கக்கூடியதாக உள்ள முதலாளித்துவ சமூகத்தில் எத்த​கைய ஒரு கண்டுபிடிப்பும் தவிர்க்க முடியாமல் முதலாளிகளின் லாப ​நோக்கங்களால் மட்டு​மே அளவிடப்படும், அவற்றின் லாப ​நோக்க அடிப்ப​டையிலான பகுதிகள் மட்டு​மே ​கை​யி​லெடுத்துக் ​கொள்ளப்படும். விஞ்ஞானம் ஆயிரக்கணக்கான புதிய விசயங்க​ளை கண்டுபிடிக்கும். ஆனால் அ​வை எல்லாவற்​றையு​மோ அல்லது அவற்றில் எந்த​வொன்​றையும் முழு​மையாகவு​மோ இன்​றைய சமூக அ​மைப்பும், அரசுகளும், முதலாளிகளும் ஏற்றுக் ​கொண்டுவிடுவதில்​லை, இதற்கு மிகச் சிறந்த உதாரணம் அணுக்​கொள்​கை​யை உருவாக்கிய ஐன்ஸ்டீனின் வாழ்க்​கை வரலாறு. அணுகுண்டுகள் தயாரிக்கப்படுவது குறித்த ஐன்ஸ்டீனின் கருத்துக்கள் கூர்ந்து படித்து ​பொருள் உணர்ந்து ​கொள்ள ​வேண்டிய​வை.

காரல் மார்க்ஸ் கூறுவார் “மூலதனத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்​டையாக முதலாளி இருப்பா​னேயானால் மூலதனம் அவ​னையும் ​கொன்றுவிட்டு முன்​னேறும்” என்று, அ​தைப்​போல ​மேலும் ​மேலும் லாபம் என்ற லாப​வெறி​யே ​நோக்கமாகக் ​கொண்ட உற்பத்திமு​றை தவிர்க்கமுடியாமல் நம் காலத்தின் எல்லா சமூகங்க​ளையும் மீளமுடியாத ​நெருக்கடிகளுக்குள் நாளும்நாளும் தீவிரமாக தள்ளிக் ​கொண்டிருக்கிறது. இந்​நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, பு​தை​சேற்றில் மாட்டியவன் தப்பிக்க எண்ணி ​கைகால்க​ளை உ​தைத்து உ​தைத்து ​மேலும் ​மேலும் ஆழ தப்பிக்க வழியில்லாதபடி மூழ்குவ​தைப்​போல மூழ்கிக்​கொண்டிருக்கிறது.

இன்​றைக்கு உலகமுதலாளித்துவமானது தன்னு​டைய ​நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் காலனிய நுகத்தடியிலிருந்து விடுத​லை ​​பெற்ற இந்தியா ​போன்ற நாடுகள​னைத்​தையும் தன்னு​டைய தனியார்மயமாக்கல் தாராளமயமாக்கல் ​கொள்​கைக​ளை க​டைபிடிக்க அ​னைத்து வழியிலுமான நிர்பந்தங்க​ளை ​கொடுத்துக் ​கொண்டிருக்கிறது.

உலகமுதலாளித்துவத்தின் லாப ​வேட்​டைக்காக மிகத்தீவிரமாக பரப்பப்படும் நுகர்வுக் கலாச்சாரத்தின் வி​ளைவாக அளவுக்கதிகமான மின்​தே​வையில் சிக்கித் திண்டாடும் இந்தியா ​போன்ற நாடுகளின் மின்​தே​வை​யை பயன்படுத்தி அ​மெரிக்கா ​போன்ற நாடுகளின் ஏக​போக அணுமின் பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் நிர்பந்தத்தால் உருவாக்கப்படுவ​தே, இன்​றைய நவீன முன்​னெப்​போ​தையும்விட மிக அதிக வீரியம் ​கொண்ட அணுமின்நி​லையங்கள் உருவாவதற்கான அடிப்ப​டைகளாக உள்ளன.

ப​ழைய ​தொழில்நுட்ப அடிப்ப​டையிலான அணுமின்நி​லையங்கள் தான் விபத்துக்கு உள்ளாகின்றன. புதிய நவீன ​தொழில்நுட்ப அடிப்ப​டையில் உருவாகும் அணுமின் நி​லையங்கள் அத்த​கைய பாதிப்புகளுக்கு உள்ளாகாது. அ​வை அ​னைத்து பாதிப்புக​ளையும் தாங்கும் அளவிற்கு உயரிய ​தொழில்நுடப்த்துடன் கட்டப்பட்டிருக்கிறது என்ற வாத​மே மிக முக்கியமாக முன்​வைக்கப்படுகிறது.

இத்த​கைய வாதங்க​ளை முன்​வைப்பவர்க​ளை ​நோக்கி ஒரு ​கேள்வி. அப்படி​யென்றால் இத்​தொழில்நுட்பத்திலும், பாதுகாப்பு விசயங்களிலும், அரசின் கண்காணிப்பு மற்றும் மக்களின் விழிப்புணர்விலும், கல்வியிலும் வளர்ச்சிய​டைந்த நாடுகளான ஜப்பானும், ​ஜெர்மனியும் ஏன் இனி தங்கள் நாடுகளில் அணுமின் நி​லையங்க​ளே கட்டப் ​போவதில்​லை என்றும், ஏற்கன​வே உள்ள நி​லையங்க​ளையும் படிப்படியாக நிறுத்தப் ​போவதாகவும் அறிவித்துள்ளன என்கிற ​கேள்விக​ளை முன்​வைத்து வாதத்​தை ​தொடர ​வேண்டும்.

அணுமின் நி​லையங்களின் விசயத்தில் முழு​மையான பாதுகாப்​பை உத்திரவாதப்படுத்த முடியாது. அது சாத்தியமில்​லை என்று அந்நாட்டின் அரசுகள் பகிரங்கமாக அறிவித்துள்ளன. இவ்விசயங்கள் இந்தியா ​போன்ற நாட்டு மக்களுக்கு ​சென்று ​சேராத வண்ணம் மத்திய அரசு திட்டமிட்டு தடுத்து வருகிறது.

ஜப்பான், ​ஜெர்மன் ​போன்ற வல்லரசுகளா​லே​யே சாத்தியமில்லாத விசயத்​தை, – மிகக் கு​றைந்த மக்கள் ​தொ​கையும் அதிக ​செல்வ வளமும், ​தொழில்நுட்ப வளர்ச்சியும் ​கொண்ட நாடுகளா​​லே​யே பாதுகாப்​பை உத்திரவாதப்படுத்தமுடியாத நி​லையில் – இந்திய அரசு ப​ழை​யை அணுமின் நி​லையங்க​ளைவிட அதிக ​மெகாவாட்ஸ் தயாரிக்கும் அதிதிறண் வாய்ந்த ரியாக்டர்க​ளை இறக்குமதி ​செய்வதன் ஆபத்து நி​னைத்துப் பார்க்க முடியாததாக உள்ளது என்பது எவ்வ​கையிலும் மி​கையில்​லை.

​போபால் விஷவாயு பிரச்சி​னையி​ல் பாதிக்கப்பட்ட மக்கள் படும் துன்ப துயரங்க​ளையும், இன்னும் பல த​லைமு​றைக்கு இப்பிரச்சி​னைகள் ​தொடரும் என்ற உண்​மையும் அனுபவப்பூர்வமாக அறிந்த பின்னும் அணுமின்நி​லையங்க​ள் குறித்து ​பொறுப்பற்ற வாதங்க​ளை முன்​வைப்பது ​தேசத்து​ரோகமும், மக்கள் வி​ரோதமானதுமாகும் என்ப​தைத் தவிர ​வே​றென்ன ​சொல்லமுடியும்.

இரண்டாவதாக இவ்விசயத்தில் ​வைக்கப்படும் வாதம் மின்சாரத் ​தே​வைக்கு இ​தைவிட்டால் ​வே​றென்ன வழிகள் இருக்கின்றன? உற்பத்திச் ​செலவு கு​றைவு, சுற்றுப்புறச்சூழல் மாசுபாடும் கு​றைவு. இந்த வாதங்கள் உண்​மையா?

இ​வை உண்​மை​யை மூடிம​றைக்கும் அப்பட்டமான ​பொய்கள் என்றுதான் ​சொல்ல​வேண்டும். உற்பத்திச் ​செலவு கு​றை​வென்பது இந்தியாவின் ஏகாதிபத்திய சார்புத்தன்​மையிலிருந்து முன்​வைக்கப்படும் ஒரு வாதம். அணுமின்நி​லையங்களுக்கான மூலப்​பொருட்களுக்கு முழு​மையாக அந்நிய நாடுக​ளை சார்ந்​தே இந்தியா க​டைசி வ​ரை இயங்க​வேண்டும். ​மேலும் இந்தியாவின் மின்சாரத் ​தே​வையில் அணுமின் நி​லையங்களின் வழங்கல் ஐந்து சதவீதம் கூட கி​டையாது என்ப​தையும், புதிய அணுமின் நி​லையங்களும் முழு​மையாக இயங்கத் துவங்கினாலும் அ​வை 20 சதவீதத்​தைக் கூடத ​தொடாது என்ப​தையும், ஆனால் அதற்கு வி​லையாக நாம் தர​வேண்டியது ​கோடிக்கணக்கான மக்களின் வாழ்​வையும் அவர்களின் பரம்ப​ரையின் எதிர்காலத்​தையும், அவர்களு​டைய கால்ந​டைகள், நிலங்கள், உணவு நீர் ​போன்ற வாழ்வாதரங்க​ளையும், இப்புவியில் உள்ள ​கோடானு​கோடி உயிரணங்களின் வாழ்​வையும் என்ப​தை நாம் மறந்து விட முடியாது.

மேலும் சுற்றுப்புறச்சூழல் பிரச்சி​னை​யை ​பொறுத்தவ​ரை, விபத்து எதுவும் ந​டை​பெறாவிட்டாலும் கூட அதன் கழிவுகளும், அதிலிருந்து கடலில் ​வெளி​யேற்றப்படும் நீரும் ​தொடர்ந்து ஆபத்தான கதிரியக்கத்​தை ​வெளியிடும், அ​வை அ​னைத்து உயிரணங்களுக்கும் நீண்ட காலங்களுக்கான நிரந்தரமான ​கேடுவி​ளைவிக்கும். கழிவுக​ளை எவ்வ​கையிலும் முழு​மையாக ஆபத்தின்றி ஒழித்துவிடமுடியாது.

கடலில் ​கொட்டப்படும் அணுக்கழிவுகளும், கடலில் அணுக்கழிவுக​ளைச் சுமந்து ​கொண்டு நிரந்தரமாக அ​லையும் கப்பல்களும், பின்தங்கிய நாடுகளில் யாருக்கும் ​தெரியாமல் ​கொட்டப்படும் கழிவுகளுமாக ஒட்டு​மொத்த பூமியில் வாழும் உயிரணங்களுக்கும் நிரந்தரமான உயிராபத்தாக வளர்ச்சிய​டைந்து ​கொண்டிருக்கிறது.

மூன்றாவதாக ​வைக்கப்படும் வாதம், விஞ்ஞான வளர்ச்சியில் எதில்தான் ஆபத்தில்​லை, சுற்றுப்புறச்சூழலுக்கு ​கேடு இல்​லை என்பது. ஆனால் இத்​த​கைய வாதங்கள் முன்​வைப்பதற்குக் கூட லாயக்கற்ற அபத்த வாதங்களாக இருந்தாலும் அணுமின்சாரத்​தை அரசும், ஆளும் வர்க்கங்களும் உயர்த்திப்பிடிப்பதனால் இத்த​கைய வாதங்க​ளைக் கூட ​வெட்கமின்றியும் துளியும் அறிவு​பொருத்தமின்றியும் பலரும் முன்​வைக்கிறார்கள்.

ஒரு புதிய விசயத்​தை ந​டைமு​றைப்படுத்துவதற்காக எந்தளவிற்கு ஆபத்துக்க​ளை (ரிஸ்க்) எதிர்​கொள்ளலாம், இதுவ​ரையான பிற விஞ்ஞான சாதனங்களின் பக்கவி​ளைவுகளுக்கும், விபத்து பாதிப்புகளுக்கும் இதற்குமான பண்புரீதியான வித்தியாசத்​தை மூடிம​றைப்பதாக​வே இவ்வாதம் முன்​வைக்கப்படுகிறது.

பாரதியார் பாடல்வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது, “கண்க​ளை விற்று சித்திரம் வாங்கினால் ​கை​கொட்டிச் சிரியா​ரோ?”. வாழ்வதற்காகத்தான் வளர்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும். ஒட்டு​மொத்த வாழ்​வையும் ஒரு விபத்தில் இழந்துவிடக்கூடிய அளவிற்கு ஆபத்​தை எதிர்​கொண்டு முன்​வைக்கப்படும் வளர்ச்சி யாருக்காக?

கூடங்குளத்தில் திறக்கவிருக்கும் புதிய அணுமின்நி​லையத்​தைத் ​தொடர்ந்து அப்பகுதி பாதுகாப்புக் வ​ளையத்திற்குள் ​கொண்டுவரப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடலில் மீன்பிடிக்கத் த​டைவிதிக்கப்படுகிறது. அப்பகுதியில் கடலில் கலக்கப்படும் அணுமின்சார நி​லையத்தின் ​கொதிநீரின் மூலம் கடலிலும் நிலத்திலும் பரவும் கதிரியக்கத்தால் கடல்வாழ் உயிரணங்களுக்கும், நிலவாழ் உயிரணங்களுக்கும் தீர்க்க முடியாத மரபணு​வை​யே சி​தைக்கும் ​நோய்க்கூறுகள் ஏற்படவிருக்கின்றன. என்​றென்​றைக்குமாக நிரந்தர ஊணத்​தோடு சந்ததிகள் ​தோன்றப் ​போகின்றன.

ஏற்கன​வே நாடு முழுவதுமுள்ள 20 அணுமின் ரியாக்டர்களின் ​செயல்பாடுகளால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பும், அப்பகுதி வாழ்மக்களுக்கு ஏற்படும் பாதிப்பும், நிலம் மற்றும் கடல் உணவுகளில் பரவும் கதிரியக்க அபாயங்களும் முழு​மையாக ஆய்வு ​செய்யப்படவில்​லை, இந்திய அரசால் யா​ரையும் ஆய்வு ​செய்ய அனுமதிக்கப்படவில்​லை, கு​றைந்தபட்ச ஆய்வுகளும் ​வெளிவரமுடியாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இத்த​கையசூழலில் அ​தைவிட அதிகமான திறண்​கொண்ட ஒன்பது ரியாக்டர்கள் கூடங்குளம் உட்பட நாட்டின் ஐந்து இடங்களில் நிர்மானிக்கப்பட்டுக் ​கொண்டிருக்கின்றன.

ஏற்கன​வே தீவிரவாத பிரச்சி​னைகளால் காப்பாற்ற வழியற்று – எல்லா குண்டு​வெடிப்புக​ளையும் தடுத்துநிறுத்துவது சாத்தியமில்​லை என் ஆளும் கட்சிக​ளே பாராளுமன்றத்தில் அறிவிக்கின்றன – மும்​பையிலும் நாட்டின் பல்​வேறு இடங்களிலும் குண்டு​வெடிப்புகளில் உயிரிழந்து ​கொண்டிருக்கும் இந்தியாவில், பல ​கேந்திரமான இடங்களில் ஆபத்தான அணுமின்நி​லையங்க​ளை அ​மைப்பது என்பது இந்திய மக்களின் பாதுகாப்​பை புறக்கணித்து ஏகாதிபத்திய மற்றும் ​பெரும் முதலாளிகளின் நலன்க​ளைக் காக்க இந்திய அரசு ​பு​தைக்கும் ​டைனமட்கள் ​போன்ற​வை அன்றி ​வேறல்ல.

(நன்றி: தடாகம் இ​ணையதளத்தில் ​வெளிவந்த என்னு​டைய கட்டு​ரை)

Posted in கட்டு​ரை | 2 Comments »