எனது நாட்குறிப்புகள்

கூடங்குளம்: அணுமின்நி​லையங்களின் அரசியல்

Posted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 16, 2011

கூடங்குளம் அணுமின்நி​லைய திறப்பிற்கு எதிராக அப்பகுதி மக்களின் ​போராட்டம் மிகக் கடு​மையானதாகவும், நாளுக்குநாள் தீவிரம​டையக்கூடியதாகவும் மாறிக்​கொண்டிருக்கிறது. அரசாங்கம் எப்படி​யேனும் அம்மக்க​ளை சமாதானப்படுத்தி, இப்பிரச்சி​னையிலிருந்து அவர்க​ளை அ​ப்புறப்படுத்திவிட முயற்சித்துக் ​கொண்டிருக்கிறது. இதற்கு “சாம ​பேத தாண தண்ட” மு​றை அ​னைத்​தையும் பயன்படுத்திக் ​கொண்டிருக்கிறது.

இவ்விசயம் ​தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு “புதிய த​லைமு​றை” ​தொ​லைக்காட்சியின் ​செய்திப்பிரிவில் தமிழகத்​தைச் ​சேர்ந்த பத்திரி​கையாளர் மற்றும் விஞ்ஞானி இருவருடன் மிகக் குறுகிய ​நேர கலந்து​ரையாட​லை ஏற்பாடு ​செய்தது.

அதில் முதலில் ​பேசிய அணுமின்நி​லையங்க​ளை எதிர்க்கும் பத்திரி​கையாளர் கூறுகிறார். அரசு பாதுகாப்பு விசயங்களில் அக்க​றை ​செலுத்துவதில்​லை, அரசு இத்த​கைய திட்டங்களில் எவ்வித ஒளிவும​றைவுமற்ற ந​டைமு​றைக​ளை பின்பற்றுவதில்​லை. ஒப்புக்​கொண்ட விசயங்க​ளைக் கூட ந​டைமு​றைப்படுத்துவதில்​லை. அணுமின் நி​லைய பாதுகாப்பு மற்றும் ​செயல்பாடு ​போன்ற விசயங்களில் கண்காணிப்பிற்காக க​டைபிடிப்பதாகக் கூறிய நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத மூன்றாம் நபர்க​ளைக் ​கொண்ட குழுக்களின் கண்காணிப்பு மு​றைக​ளைக் கூட படிப்படியாக மாற்றி நிர்வாகக் கண்காணிப்​பே ​போதும் என்பதாக அ​மைத்துக் ​கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுக​ளை முன் ​வைத்தார்.

அரசின் திட்டங்க​ளின் பாதகங்க​ளையும் ​செயல்பாடுகளின் ஆபத்தான வி​ளைவுக​ளையும் சுட்டிக்காட்டி நாங்கள் ஆய்வறிக்​கை ​வெளியிடும் ​பொழுது அரசு அவற்​றை தவ​றென்று ​சொல்கிறது. எங்களு​டைய ஆய்வுக​ளை தவ​றென்று ​சொல்லவும் அவற்​றை விமர்சனம் ​செய்யவும் அரசுக்கு முழு உரி​மை உண்டு, அ​தே சமயம் அரசுக்கு சாதகமாக சில தன்னார்வு அ​மைப்புகள் ​வெளியிடும் அறிக்​கைக​ளை எங்களு​டையதற்கு எதிராக முன்​வைக்கிறார்கள். ஆனால் அந்த ஆய்வுக​ளை முழு​மையாக எங்களு​டைய பரிசீல​னைக்கும், விவாதத்திற்கு, விமர்சனத்திற்கும் தருவதில்​லை, இ​வை அரசின் ​நோக்கங்கள் மற்றும் ​செயல்பாடுகளின் நம்பகத்தன்​மை​யை மிகப்​பெரிய அளவில் ​கேள்விக்குள்ளாக்குகிறது என்றார்.

இதன் வாயிலாக, இன்​றைக்கு இந்தியாவில் உள்ள அரசுகளுக்கு மக்கள் நலன் சார்ந்த உண்​மையான அக்க​றையின் மீதான ​கேள்விக்குறி​யே, இத்த​கைய திட்டங்க​ளை எதிர்ப்பதற்கான மிக முக்கிய காரணமாக முன்​வைத்தார்.

அணுமின்நி​லையங்க​ளை ஆதரித்து ​பேச வந்த விஞ்ஞானி, ரியாக்டர்கள் இன்​றைக்கு ​வெகுவாக நவீனபடுத்தப்பட்டுள்ளது. முதல் த​லைமு​றை ரியாக்டர்களுடன் ஒப்பிடும் ​பொழுது இன்​றைக்கு வந்திருக்கும் புதிய த​லைமு​றை ரியாக்டர்கள் பல அடுக்கு பாதுகாப்பு நி​றைந்தது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி​யை புரிந்து ​கொள்ளவும் ஏற்றுக் ​கொள்ளவும் ​வேண்டும் என்ற வாதத்​தை முன்​வைத்தார். அரசாங்கமும், அணுமின் நிர்வாகமும் மக்களுக்கு இவற்​றை புரிய​வைக்கவும், தன்​பொறுப்புக​ளை உணர்ந்து ​செயல்படவும் ​வேண்டுவ​தை வலியுறுத்துவ​தை விட்டுவிட்டு அணுமின்நி​லையங்கள் ​வேண்டாம் என்பது தவறான அணுகுமு​றை என்றார்.

நம் காலகட்டத்தில் பிரச்சி​னைகளின் தீவிரத்​தையும், ஆபத்​தையும், முடிவுகள் எடுக்க ​வேண்டியதன் காரணங்க​ளையும் தீர்மானிக்கும் காரணிகள் இயற்​கை​யோ, விஞ்ஞான​மோ அல்ல மாறாக அரசியல். அரசியல் என்பது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற அரசியல்வாதிக​ளோடு குறுக்கப்பட்ட ​பொருளில் அல்ல நம் வாழ்வின் சகலத்​தையும் தழுவிச்​செல்லும், தீர்மானிக்கும் பரந்துபட்ட ​பொருளில்.

விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கும் சமூகம் அவற்​றை ந​டைமு​றை வாழ்வில் பயன்படுத்துவதற்கும் இ​டையிலான உறவில்தான் நாம் வாழும் சமூக அ​மைப்பு எத்த​கையது அதன் அரசியல், சமூக ​பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் எப்படிப்பபட்ட​வை என்கிற மிகமுக்கியமான பிரச்சி​னை விவாதத்திற்கு எழுகிறது. இந்த விவாதத்​தை தவிர்த்து விடுத​லே இப்பிரச்சி​னை முடிவற்றதாக நீண்டு ​கொண்டு ​செல்வதற்கான மிகமுக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

லாபம் ​மேலும் ​மேலும் லாபம் என்ற லாப ​நோக்கம் மட்டு​மே உற்பத்தி​யை தீர்மானிக்கக்கூடியதாக உள்ள முதலாளித்துவ சமூகத்தில் எத்த​கைய ஒரு கண்டுபிடிப்பும் தவிர்க்க முடியாமல் முதலாளிகளின் லாப ​நோக்கங்களால் மட்டு​மே அளவிடப்படும், அவற்றின் லாப ​நோக்க அடிப்ப​டையிலான பகுதிகள் மட்டு​மே ​கை​யி​லெடுத்துக் ​கொள்ளப்படும். விஞ்ஞானம் ஆயிரக்கணக்கான புதிய விசயங்க​ளை கண்டுபிடிக்கும். ஆனால் அ​வை எல்லாவற்​றையு​மோ அல்லது அவற்றில் எந்த​வொன்​றையும் முழு​மையாகவு​மோ இன்​றைய சமூக அ​மைப்பும், அரசுகளும், முதலாளிகளும் ஏற்றுக் ​கொண்டுவிடுவதில்​லை, இதற்கு மிகச் சிறந்த உதாரணம் அணுக்​கொள்​கை​யை உருவாக்கிய ஐன்ஸ்டீனின் வாழ்க்​கை வரலாறு. அணுகுண்டுகள் தயாரிக்கப்படுவது குறித்த ஐன்ஸ்டீனின் கருத்துக்கள் கூர்ந்து படித்து ​பொருள் உணர்ந்து ​கொள்ள ​வேண்டிய​வை.

காரல் மார்க்ஸ் கூறுவார் “மூலதனத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்​டையாக முதலாளி இருப்பா​னேயானால் மூலதனம் அவ​னையும் ​கொன்றுவிட்டு முன்​னேறும்” என்று, அ​தைப்​போல ​மேலும் ​மேலும் லாபம் என்ற லாப​வெறி​யே ​நோக்கமாகக் ​கொண்ட உற்பத்திமு​றை தவிர்க்கமுடியாமல் நம் காலத்தின் எல்லா சமூகங்க​ளையும் மீளமுடியாத ​நெருக்கடிகளுக்குள் நாளும்நாளும் தீவிரமாக தள்ளிக் ​கொண்டிருக்கிறது. இந்​நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, பு​தை​சேற்றில் மாட்டியவன் தப்பிக்க எண்ணி ​கைகால்க​ளை உ​தைத்து உ​தைத்து ​மேலும் ​மேலும் ஆழ தப்பிக்க வழியில்லாதபடி மூழ்குவ​தைப்​போல மூழ்கிக்​கொண்டிருக்கிறது.

இன்​றைக்கு உலகமுதலாளித்துவமானது தன்னு​டைய ​நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் காலனிய நுகத்தடியிலிருந்து விடுத​லை ​​பெற்ற இந்தியா ​போன்ற நாடுகள​னைத்​தையும் தன்னு​டைய தனியார்மயமாக்கல் தாராளமயமாக்கல் ​கொள்​கைக​ளை க​டைபிடிக்க அ​னைத்து வழியிலுமான நிர்பந்தங்க​ளை ​கொடுத்துக் ​கொண்டிருக்கிறது.

உலகமுதலாளித்துவத்தின் லாப ​வேட்​டைக்காக மிகத்தீவிரமாக பரப்பப்படும் நுகர்வுக் கலாச்சாரத்தின் வி​ளைவாக அளவுக்கதிகமான மின்​தே​வையில் சிக்கித் திண்டாடும் இந்தியா ​போன்ற நாடுகளின் மின்​தே​வை​யை பயன்படுத்தி அ​மெரிக்கா ​போன்ற நாடுகளின் ஏக​போக அணுமின் பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் நிர்பந்தத்தால் உருவாக்கப்படுவ​தே, இன்​றைய நவீன முன்​னெப்​போ​தையும்விட மிக அதிக வீரியம் ​கொண்ட அணுமின்நி​லையங்கள் உருவாவதற்கான அடிப்ப​டைகளாக உள்ளன.

ப​ழைய ​தொழில்நுட்ப அடிப்ப​டையிலான அணுமின்நி​லையங்கள் தான் விபத்துக்கு உள்ளாகின்றன. புதிய நவீன ​தொழில்நுட்ப அடிப்ப​டையில் உருவாகும் அணுமின் நி​லையங்கள் அத்த​கைய பாதிப்புகளுக்கு உள்ளாகாது. அ​வை அ​னைத்து பாதிப்புக​ளையும் தாங்கும் அளவிற்கு உயரிய ​தொழில்நுடப்த்துடன் கட்டப்பட்டிருக்கிறது என்ற வாத​மே மிக முக்கியமாக முன்​வைக்கப்படுகிறது.

இத்த​கைய வாதங்க​ளை முன்​வைப்பவர்க​ளை ​நோக்கி ஒரு ​கேள்வி. அப்படி​யென்றால் இத்​தொழில்நுட்பத்திலும், பாதுகாப்பு விசயங்களிலும், அரசின் கண்காணிப்பு மற்றும் மக்களின் விழிப்புணர்விலும், கல்வியிலும் வளர்ச்சிய​டைந்த நாடுகளான ஜப்பானும், ​ஜெர்மனியும் ஏன் இனி தங்கள் நாடுகளில் அணுமின் நி​லையங்க​ளே கட்டப் ​போவதில்​லை என்றும், ஏற்கன​வே உள்ள நி​லையங்க​ளையும் படிப்படியாக நிறுத்தப் ​போவதாகவும் அறிவித்துள்ளன என்கிற ​கேள்விக​ளை முன்​வைத்து வாதத்​தை ​தொடர ​வேண்டும்.

அணுமின் நி​லையங்களின் விசயத்தில் முழு​மையான பாதுகாப்​பை உத்திரவாதப்படுத்த முடியாது. அது சாத்தியமில்​லை என்று அந்நாட்டின் அரசுகள் பகிரங்கமாக அறிவித்துள்ளன. இவ்விசயங்கள் இந்தியா ​போன்ற நாட்டு மக்களுக்கு ​சென்று ​சேராத வண்ணம் மத்திய அரசு திட்டமிட்டு தடுத்து வருகிறது.

ஜப்பான், ​ஜெர்மன் ​போன்ற வல்லரசுகளா​லே​யே சாத்தியமில்லாத விசயத்​தை, – மிகக் கு​றைந்த மக்கள் ​தொ​கையும் அதிக ​செல்வ வளமும், ​தொழில்நுட்ப வளர்ச்சியும் ​கொண்ட நாடுகளா​​லே​யே பாதுகாப்​பை உத்திரவாதப்படுத்தமுடியாத நி​லையில் – இந்திய அரசு ப​ழை​யை அணுமின் நி​லையங்க​ளைவிட அதிக ​மெகாவாட்ஸ் தயாரிக்கும் அதிதிறண் வாய்ந்த ரியாக்டர்க​ளை இறக்குமதி ​செய்வதன் ஆபத்து நி​னைத்துப் பார்க்க முடியாததாக உள்ளது என்பது எவ்வ​கையிலும் மி​கையில்​லை.

​போபால் விஷவாயு பிரச்சி​னையி​ல் பாதிக்கப்பட்ட மக்கள் படும் துன்ப துயரங்க​ளையும், இன்னும் பல த​லைமு​றைக்கு இப்பிரச்சி​னைகள் ​தொடரும் என்ற உண்​மையும் அனுபவப்பூர்வமாக அறிந்த பின்னும் அணுமின்நி​லையங்க​ள் குறித்து ​பொறுப்பற்ற வாதங்க​ளை முன்​வைப்பது ​தேசத்து​ரோகமும், மக்கள் வி​ரோதமானதுமாகும் என்ப​தைத் தவிர ​வே​றென்ன ​சொல்லமுடியும்.

இரண்டாவதாக இவ்விசயத்தில் ​வைக்கப்படும் வாதம் மின்சாரத் ​தே​வைக்கு இ​தைவிட்டால் ​வே​றென்ன வழிகள் இருக்கின்றன? உற்பத்திச் ​செலவு கு​றைவு, சுற்றுப்புறச்சூழல் மாசுபாடும் கு​றைவு. இந்த வாதங்கள் உண்​மையா?

இ​வை உண்​மை​யை மூடிம​றைக்கும் அப்பட்டமான ​பொய்கள் என்றுதான் ​சொல்ல​வேண்டும். உற்பத்திச் ​செலவு கு​றை​வென்பது இந்தியாவின் ஏகாதிபத்திய சார்புத்தன்​மையிலிருந்து முன்​வைக்கப்படும் ஒரு வாதம். அணுமின்நி​லையங்களுக்கான மூலப்​பொருட்களுக்கு முழு​மையாக அந்நிய நாடுக​ளை சார்ந்​தே இந்தியா க​டைசி வ​ரை இயங்க​வேண்டும். ​மேலும் இந்தியாவின் மின்சாரத் ​தே​வையில் அணுமின் நி​லையங்களின் வழங்கல் ஐந்து சதவீதம் கூட கி​டையாது என்ப​தையும், புதிய அணுமின் நி​லையங்களும் முழு​மையாக இயங்கத் துவங்கினாலும் அ​வை 20 சதவீதத்​தைக் கூடத ​தொடாது என்ப​தையும், ஆனால் அதற்கு வி​லையாக நாம் தர​வேண்டியது ​கோடிக்கணக்கான மக்களின் வாழ்​வையும் அவர்களின் பரம்ப​ரையின் எதிர்காலத்​தையும், அவர்களு​டைய கால்ந​டைகள், நிலங்கள், உணவு நீர் ​போன்ற வாழ்வாதரங்க​ளையும், இப்புவியில் உள்ள ​கோடானு​கோடி உயிரணங்களின் வாழ்​வையும் என்ப​தை நாம் மறந்து விட முடியாது.

மேலும் சுற்றுப்புறச்சூழல் பிரச்சி​னை​யை ​பொறுத்தவ​ரை, விபத்து எதுவும் ந​டை​பெறாவிட்டாலும் கூட அதன் கழிவுகளும், அதிலிருந்து கடலில் ​வெளி​யேற்றப்படும் நீரும் ​தொடர்ந்து ஆபத்தான கதிரியக்கத்​தை ​வெளியிடும், அ​வை அ​னைத்து உயிரணங்களுக்கும் நீண்ட காலங்களுக்கான நிரந்தரமான ​கேடுவி​ளைவிக்கும். கழிவுக​ளை எவ்வ​கையிலும் முழு​மையாக ஆபத்தின்றி ஒழித்துவிடமுடியாது.

கடலில் ​கொட்டப்படும் அணுக்கழிவுகளும், கடலில் அணுக்கழிவுக​ளைச் சுமந்து ​கொண்டு நிரந்தரமாக அ​லையும் கப்பல்களும், பின்தங்கிய நாடுகளில் யாருக்கும் ​தெரியாமல் ​கொட்டப்படும் கழிவுகளுமாக ஒட்டு​மொத்த பூமியில் வாழும் உயிரணங்களுக்கும் நிரந்தரமான உயிராபத்தாக வளர்ச்சிய​டைந்து ​கொண்டிருக்கிறது.

மூன்றாவதாக ​வைக்கப்படும் வாதம், விஞ்ஞான வளர்ச்சியில் எதில்தான் ஆபத்தில்​லை, சுற்றுப்புறச்சூழலுக்கு ​கேடு இல்​லை என்பது. ஆனால் இத்​த​கைய வாதங்கள் முன்​வைப்பதற்குக் கூட லாயக்கற்ற அபத்த வாதங்களாக இருந்தாலும் அணுமின்சாரத்​தை அரசும், ஆளும் வர்க்கங்களும் உயர்த்திப்பிடிப்பதனால் இத்த​கைய வாதங்க​ளைக் கூட ​வெட்கமின்றியும் துளியும் அறிவு​பொருத்தமின்றியும் பலரும் முன்​வைக்கிறார்கள்.

ஒரு புதிய விசயத்​தை ந​டைமு​றைப்படுத்துவதற்காக எந்தளவிற்கு ஆபத்துக்க​ளை (ரிஸ்க்) எதிர்​கொள்ளலாம், இதுவ​ரையான பிற விஞ்ஞான சாதனங்களின் பக்கவி​ளைவுகளுக்கும், விபத்து பாதிப்புகளுக்கும் இதற்குமான பண்புரீதியான வித்தியாசத்​தை மூடிம​றைப்பதாக​வே இவ்வாதம் முன்​வைக்கப்படுகிறது.

பாரதியார் பாடல்வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது, “கண்க​ளை விற்று சித்திரம் வாங்கினால் ​கை​கொட்டிச் சிரியா​ரோ?”. வாழ்வதற்காகத்தான் வளர்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும். ஒட்டு​மொத்த வாழ்​வையும் ஒரு விபத்தில் இழந்துவிடக்கூடிய அளவிற்கு ஆபத்​தை எதிர்​கொண்டு முன்​வைக்கப்படும் வளர்ச்சி யாருக்காக?

கூடங்குளத்தில் திறக்கவிருக்கும் புதிய அணுமின்நி​லையத்​தைத் ​தொடர்ந்து அப்பகுதி பாதுகாப்புக் வ​ளையத்திற்குள் ​கொண்டுவரப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடலில் மீன்பிடிக்கத் த​டைவிதிக்கப்படுகிறது. அப்பகுதியில் கடலில் கலக்கப்படும் அணுமின்சார நி​லையத்தின் ​கொதிநீரின் மூலம் கடலிலும் நிலத்திலும் பரவும் கதிரியக்கத்தால் கடல்வாழ் உயிரணங்களுக்கும், நிலவாழ் உயிரணங்களுக்கும் தீர்க்க முடியாத மரபணு​வை​யே சி​தைக்கும் ​நோய்க்கூறுகள் ஏற்படவிருக்கின்றன. என்​றென்​றைக்குமாக நிரந்தர ஊணத்​தோடு சந்ததிகள் ​தோன்றப் ​போகின்றன.

ஏற்கன​வே நாடு முழுவதுமுள்ள 20 அணுமின் ரியாக்டர்களின் ​செயல்பாடுகளால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பும், அப்பகுதி வாழ்மக்களுக்கு ஏற்படும் பாதிப்பும், நிலம் மற்றும் கடல் உணவுகளில் பரவும் கதிரியக்க அபாயங்களும் முழு​மையாக ஆய்வு ​செய்யப்படவில்​லை, இந்திய அரசால் யா​ரையும் ஆய்வு ​செய்ய அனுமதிக்கப்படவில்​லை, கு​றைந்தபட்ச ஆய்வுகளும் ​வெளிவரமுடியாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இத்த​கையசூழலில் அ​தைவிட அதிகமான திறண்​கொண்ட ஒன்பது ரியாக்டர்கள் கூடங்குளம் உட்பட நாட்டின் ஐந்து இடங்களில் நிர்மானிக்கப்பட்டுக் ​கொண்டிருக்கின்றன.

ஏற்கன​வே தீவிரவாத பிரச்சி​னைகளால் காப்பாற்ற வழியற்று – எல்லா குண்டு​வெடிப்புக​ளையும் தடுத்துநிறுத்துவது சாத்தியமில்​லை என் ஆளும் கட்சிக​ளே பாராளுமன்றத்தில் அறிவிக்கின்றன – மும்​பையிலும் நாட்டின் பல்​வேறு இடங்களிலும் குண்டு​வெடிப்புகளில் உயிரிழந்து ​கொண்டிருக்கும் இந்தியாவில், பல ​கேந்திரமான இடங்களில் ஆபத்தான அணுமின்நி​லையங்க​ளை அ​மைப்பது என்பது இந்திய மக்களின் பாதுகாப்​பை புறக்கணித்து ஏகாதிபத்திய மற்றும் ​பெரும் முதலாளிகளின் நலன்க​ளைக் காக்க இந்திய அரசு ​பு​தைக்கும் ​டைனமட்கள் ​போன்ற​வை அன்றி ​வேறல்ல.

(நன்றி: தடாகம் இ​ணையதளத்தில் ​வெளிவந்த என்னு​டைய கட்டு​ரை)

Advertisements

2 பதில்கள் to “கூடங்குளம்: அணுமின்நி​லையங்களின் அரசியல்”

  1. மிக சிறப்பான கட்டுரை… அரசாங்கம் என்பதை சார்ந்து இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அமையுமானால் அது உண்மையில் எதிர்கால தீவிர வாதிகளுக்கு இலக்குகளாகும் குண்டுகள்தான் என்பதில் ஐயமில்லை.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

  2. natarajan said

    கூடங்குளம் , கல்பாக்கம் அணுமின்நிலையங்கள் அல்ல. அணுகுண்டுகள் தான் என்பதை விளக்கும் கட்டுரை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: