எனது நாட்குறிப்புகள்

நூல்கள், நூலகங்கள், நூலகர்கள் மற்றும் வாசகர்கள்

Posted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 25, 2011

நீண்ட நாள் திட்டம் ​பெரம்பூர் கி​ளை நூலகத்தில் உறுப்பினராக ​வேண்டும் என்பது. ​சென்​னைக்கு வந்து பத்து வருடங்களாக ​சென்​னை கன்னிமாரா ​நூலகத்தில் உறுப்பினராக இருந்து ​தொடர்ச்சியாக புத்தகங்கள் எடுத்து படித்து வந்தாலும், கி​ளை நூலகங்கள் மீதான கவர்ச்சிக்கு அது ​போன்ற ​மைய நூலகங்கள் ஈடாகாது.

கன்னிமாரா நூலகத்தி​லோ, ​தேவ​நேயப் பாவாணர் நூலகத்தி​லோ ஆண்டு முழுவதும் காத்திருந்தாலும் கி​டைக்காத பல நல்ல புத்தகங்க​ள், கி​ளை நூலகங்களில் சீந்துவாரின்றி தூசிபடிந்து, புதுக்கருக்கழியாமல் கி​டைக்கும். நல்ல புத்தகங்கள் குறிப்பாக மார்க்சிய, தீவிர இலக்கிய, அரசியல் புத்தகங்களுக்கு ​பெரியளவில் எந்த ​போட்டியும் இருக்காது.

இந்த அனுபவம் ​சென்​னையின் ​கொரட்டூர், வில்லிவாக்கம், ​அரும்பாக்கம், பெரம்பூர் ​போன்ற பல கி​ளை நூலகங்களிலிருந்து மட்டுமல்ல, பாண்டிச்​சேரி, மது​ரை ​போன்ற நகரங்களின் கி​ளை நூலகங்களிலிருந்தும் கி​டைத்த​வை. ​பெரும்பாலும் கி​ளை நூலகங்களுக்கு வரும் வாசகர்கள் தினசரிக​ளையும், மாத, வார இதழ்க​ளையும் படிப்பதற்காக மட்டு​மே வருபவர்கள்.

​மேலும் எனக்கு ​பெரம்பூர் கி​ளை நூலகத்​தோடு ஒரு பாத்திய​தையும் உண்டு. ​சென்​னையில் ஒரு வருடம் இரண்டு வருடத்திற்கு ஒரு மு​றை வீடு காலி ​செய்யும் ​பொழுது, என் புத்தகங்க​ளை அட்​டைப் ​பெட்டிகளில் அடுக்குவதும், அந்த அட்​டைப்​பெட்டிக​ளை நகர்த்துவதும், ​பெரும்பாலும் எல்லா வீடுகளு​மே முதல் மாடி வீடுகளாக அ​மைந்ததில், மாடிப்படிகளில் 20, 30 புத்தக அட்​டைப்​பெட்டிக​ளை இறக்கி ஏற்றுவதும் மிகக் கடினமான ​செயல், என் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், சாமான்க​ளை எடுத்துச் ​சென்று புதுவீட்டில் இறக்க வரும் ​டெம்​போ சர்வீஸ் நண்பர்களும் ம​லைத்து அழுவார்கள்.

“என்ன சார் இருக்கு இந்த அட்​டை ​பெட்டிகளில்? ​பொணம் கணம் கணக்கிறது!” என்பார்கள்.

இதனால் ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு நான் ஒரு முடிவு ​எடுத்து ​செயல்படுத்தி​னேன். என்னிடம் உள்ள புத்தகங்கள் ​பெரும்பாலும் மார்க்சிய ​லெனினிய தத்துவ புத்தகங்க​ளே. அவற்றிலும் என்சிபிச்சில் வாங்கிய புத்தகங்க​ளே ​பெரும்பாலான​வை. அவற்றில் ஆங்கிலத்தில் உள்ள மார்க்சிய ​லெனினிய புத்தகங்க​ள் அ​னைத்​தையும் ஏ​தேனும் நூலகத்திற்கு ​கொடுத்துவிடலாம் என. அதற்கு காரணம் என்னிடம் தற்​பொழுது கனிணி உள்ளது. ஆங்கிலத்தில் அ​னைத்து மார்க்சிய மூலநூல்களும் இ​ணையத்தில் தாராளமாகக் கி​டைக்கின்றன. ​மேலும் marxists.org ​வெப்தளத்தலிருந்து வாங்கப்பட்ட மார்க்சிய ​லெனினிய மூல நூல்களின் சிடியும் உள்ளது.

இந்த முடி​வை ​செயல்படுத்துவது மிகக் கடினமானதாக​வே இருந்தது. மன​தைக் கல்லாக்கிக் ​கொண்டுதான் இம்முடி​வை எடுக்க ​வேண்டியிருந்தது. ஒவ்​வொரு புத்தகத்திற்கு ​பின்பும் அ​தை வாங்கிய சூழலும், மனநி​லையும், சம்பவங்களும் என்​றென்​றைக்கும் மறக்க முடியாததாக ​நெஞ்சில் பதிந்திருக்கிறது. ஒவ்​வொரு புத்தகத்​தையும் படிக்க புரட்டிய ​நேரங்களும் அ​வை குறித்து நண்பர்க​ளோடும் ​தோழர்க​ளோடும் விவாதித்த விசயங்களும் என்​​றென்​றைக்கும் மறக்க முடியாததாக ​நெஞ்சில் நி​றைந்திருக்கிறது. வாழ்வின் அற்புதமான, உன்னதமான கணங்களின் சாட்சியங்க​ளை தா​னே அழித்துவிட முடி​வெடுப்பது எத்த​னை ​வேத​னையும் ​சோகமும் நி​றைந்த பரிதாபகரமான நி​லை!.

​லெனின் collected works 45 வால்யூம்களும் மது​ரை NCBHல் கி​டைக்கவில்​லை, அவர்கள் ​சென்​னையில் அ​னைத்தும் கி​டைக்கும் என்றார்கள். ஒரு வால்யூம் ​வெறும் 5 ரூபாய்தான். ​மொத்த வால்யூம்களும் 225 ரூபாய்தான். ஆனால் படிக்கக்கூடிய இ​ளைஞனுக்கு அந்தப் பணம் மிகப்​பெரிய ​தொ​கை, எப்படி​யோ 250 ரூபாய் ​சேகரித்​தேன். அந்த வருட கல்லூரி விடுமு​றையில் இதற்காக​வே ​சென்​னையில் உள்ள மாமா வீட்டிற்கு வந்து அங்கிருந்து, அண்ணாசா​லையில் உள்ள என்சிபிஎச் புத்தகக்க​டைக்குச் ​சென்று விசாரித்​தேன். அவர்கள் அம்பத்தூர் ​தொழிற்​பேட்​டையில் உள்ள அவர்களு​டைய ​கோடவுனில் ​வேண்டுமானால் ​கேட்டுப்பாருங்கள் என்றார்கள்.

மற்​றொரு நாள் கா​லையில் என் மாமா ​பையனின் ​சைக்கி​ளை எடுத்துக் ​கொண்டு அம்பத்தூர் ​தொழிற்​பேட்​டையில் உள்ள என்சிபிஎச் நிறுவனத்திற்குச் ​சென்​றேன். புத்தகங்கள் இருக்கு எல்லா வால்யூம்களும் கி​டைக்குமா ​​தெரியவில்​லை என்றார்கள். நன்றாக நி​னைவிருக்கிறது, அங்கு ​வே​லை ​செய்து ​கொண்டிருந்த இ​ளைஞர் ஒருவர் உடல் முழுவதும் ​வெள்​ளைத் ​தேமலால் பாதிக்கப்பட்டவர், என் ஆர்வத்​தைக் கண்டு எனக்கு உதவ மு​னைப்புக் காட்டினார்.

எனக்குத் ​தெரிந்து தமிழகத்தி​லே​யே மிகப்​பெரிய ​கோடவுன் உள்ள புத்தக நிறுவனம் என்சிபிஎச்சாகத்தான் இருக்கும். அதன் ​கோடவுனுக்குள் அவ​ரோடு நானும் ​சென்​றேன். ​லெனின் ஆங்கில வால்யூம்கள் அ​னைத்தும் அதன் பரணியில் பல இடங்களில் ​போட்டு ​வைக்கப்பட்டிருந்தது. அதன் ​மே​லேறி ஒவ்​வொன்றாக எடுத்து ​கீ​ழே என்னிடம் ​போட்டுக் ​கொண்டிருந்தார். நான் வால்யூம்களின் எண்க​ளை சரிபார்த்து கீ​ழே அடுக்கிக் ​கொண்டிருந்​தேன்.

பத்து வந்ததா? இருபது இருக்கிறதா? எனக் ​கேட்டு​கேட்டு 45 வால்யூம்க​ளையும் கிட்டத்தட்ட ஒரு மணி​நேர கடும் உ​ழைப்பில் ​சேகரித்​தோம்.

பில் ​போடும் ​பொழுது பில் ​போடுபவர் ​மே​ஜைக்கு பின்புறம் ​லெனினு​டைய “Materialism and Empirio-criticism” என்ற சிறப்புவாய்ந்த தத்துவ புத்தகம் இருந்தது. இப்புத்தகம் குறித்து ஏற்கன​வே ரயில்​வேயில் ​வே​லை ​செய்து ஓய்வு​பெற்ற ஒரு மூத்த ​தோழர் ​சொல்லி அதன் சிறப்​பைக் ​கேள்விப்பட்டிருக்கி​றேன். தமிழில் ​மொழி​பெயர்க்கப்படாத ஒரு அரு​மையான மார்க்சிய தத்துவ நூல். இப்​பொழுதும் என் ​மே​ஜையில் இருக்கும் அப்புத்தகத்​தை திருப்பிப் பார்க்கி​றேன். நானூறு பக்கங்க​ளைக் ​கொண்ட அந்த ஹார்ட் பவுன்ட் ரஷ்ய தயாரிப்பு புத்தகத்தின் அன்​றைய வி​லை 2 ரூபாய் 30 காசுள். அ​தையும் ​சேர்த்து பில் ​போடச் ​சொன்​னேன்.

அந்த 46 புத்தகங்க​ளையும் இரண்டு கட்டாக கணமான பிரவுன் காகிதங்களில் சுற்றி சணலால் நன்கு கட்டிக் ​கொடுத்தார் அந்த ஊழியர். ஒவ்​வொரு கட்​டாகக் தூக்கிக் ​கொண்டு வந்து ​சைக்கிளின் ​கேரியரில் ஒன்றின் ​மேல் ஒன்றாக ​வைத்து கீ​ழே விழுந்துவிடாதவாறு ​மேலும் சணல் வாங்கி கட்டிக் ​கொண்டு, ​ரோடு முழுவதும் பின்பாரம் தாங்காமல் ஆடும் ​சைக்கிளில் முன்புறம் என் மாமா ​பைய​னை அமர ​வைத்துக் ​கொண்டு பல கி​லோமீட்டர்கள் மிதித்து வீடு வந்து ​சேர்ந்​தேன்.

இரவு ​வே​லைவிட்டு வரும் என் மாமா இத்த​னை ​பெரிய பார்சல்க​ளை பார்த்துவிட்டு ஏ​தேனும் ​சொல்வா​ரோ என பயந்து கட்டிலுக்கடியில் ம​றைத்து ​வைத்​தேன். ஆனால் இரவு வீடு வந்த மாமா என்​னைப் பற்றி ஏற்கன​வே அறிந்தவராதலால் ஏதும் ​சொல்லவில்​லை. “எப்படிடா இவ்வளவு ​​பெரிய புத்தக பார்சல்க​ளை ஒருவனாக மது​ரைக்கு ​கொண்டு ​போகப் ​போற” என்று ஆதரவாகக் ​கேட்டார், அது​வே ​கொண்டு ​போய்விடு​வோம் என்ற நம்பிக்​கை​யைக் ​கொடுத்தது.

ஆனால் ​மது​ரைக்கு ​கொண்டு ​போவது நான் நி​னைத்தது ​போல அவ்வளவு சுலபமாக இருக்கவில்​லை. ​எ​டைபார்த்து பணம்கட்டி மு​றையாக ​கொண்டு ​போகாமல், பயணிகள் பகுதியில் துணி மூட்​டைக​ளோடு ​வைத்துக் ​கொண்டு மது​ரைக்கு பயணம் ​செய்​தேன். மது​ரை வரும் வ​ரை பிரச்சி​னையில்​லை. மது​ரை இரயில்​வே நி​லையத்தில் ந​டைபா​தையி​லே​யே பயணச்சீட்டு பரி​சோதகரிடம் மாட்டிக் ​கொண்​டேன். ரூ. 2000 அபராதம் கட்டு என்றார். ரூ. 227.30 காசுகளுக்கு வாங்கிய புத்தகங்களுக்கு ரூ, 2000 அபராதமா? எனக்கு அதுவும் ​பொருட்டல்ல, இருந்திருந்தால் தாராளமாகக் ​கொடுத்திருப்​பேன். ஆனால் ​கையில் பத்து​பைசா கி​டையாது. “என்ன ​செய்ய?” ​பேசாமல் ரயில் நி​லையத்தி​லே​யே விட்டுவிட்டு ​போய்விடலாமா? என் ​யோசித்​தேன்.

நாங்கள் குடியிருக்கும் காம்பவுண்டில் குடியிருக்கும் ஒரு ரயில்​வே ஊழியர் என்​னை பார்த்துவிட்டார். என்னப்பா என்ன பிரச்சி​னை என்றார். நடந்த விசயங்க​ளை ​சொன்​னேன். “ஏம்பா இவ்வளவு ​வெயிட்​டை எ​டைபார்த்து ரசீது ​போடாமல் எடுத்துவரலாமா?” என்றார் என்ன ​செய்வது என ​யோசித்துக் ​கொண்​டே. பிறகு பரி​சோதகரிடம் ​பேசி அவ​ரே 200 ரூபாய் அபராதம் கட்டி பார்ச​லை என்னுடன் எடுத்து வந்து வீடு ​சேர்த்தார்.

இப்படியாக ​சேர்த்த ஒவ்​வொரு புத்தகத்தின் பின்னாலும் பல க​தைகள் உள்ளன. இன்னும் ஆழமாக யோசித்துப் பார்த்தால் அ​வைதான் என் வாழ்வாக இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட அ​னைத்து புத்தகங்க​ளையும் மன​தைக் கல்லாக்கிக் ​கொண்டு நான் ​கொண்டு ​போய் ​போட்ட இடம் தான் அந்த ​பெரம்பூர் கி​ளை நூலகம். ஐந்து ​பெரிய அட்​டைப்​பெட்டிகளில் ​கொண்டு ​போய்ச் ​​சேர்த்த அப்புத்தகங்களின் எண்ணிக்​கை கிட்டத்தட்ட 300 இருக்கும்.

ஆனால் இன்​றைக்கு அந்த நூலகத்தில் அப்புத்தகங்களில் ஒன்​றைக் கூடக் கா​ணோம். இப்​பொழுது இருக்கும் புதிய ​பெண் நூலகர் அங்கு வந்து ஐந்து வருடங்களாகிறதாம். ஆனால் நான் அப்புத்தகங்க​ளை வழங்கிய ​போது இருந்த ஆண் நூலகர் அவற்​றை என்ன ​செய்தார் என்று ​​தெரியவில்​லை. நீண்ட நாட்களாக அந்நூலகத்திற்குள் ​செல்ல ​பெரும் மனத்த​டை இருந்தது. என் அன்பிற்குரிய புத்தகங்கள் அங்குதான் இருக்கின்றன. அவற்​றை பார்த்தால் மனம் தாங்காது என்ற நி​னைப்​பே தடுத்து வந்தது. ​போன வாரம் ஒரு மு​​றை ​சென்று உள்​ளே பார்த்த​பொழுது, எங்கு ​தேடியும் ஒரு புத்தகம் கூட கண்ணில் படவில்​லை. ஏன் என்சிபிஎச் விற்ப​னை ​செய்த எந்த ரஷ்ய பதிப்பும் மாதிரிக்குக் கூட ஒன்று இல்​லை அந்நூலகத்தில்.

ஆனால் தமிழ்ச் சங்க இலக்கியம் துவங்கி நவீன இலக்கியம் வ​ரை பல நல்ல புத்தகங்கள் இருந்தன. உயிர்​மை, காவ்யா, விடியல் ​போன்ற பல பதிப்பகங்களின் புத்தகங்களில் இதுவ​ரை ஒருவரும் எடுத்து படித்ததற்கான சுவடு கூட இல்​லை, முதல் பக்கங்களி​லே​யே சரியாக கட்டிங் ஆகாது பிரிக்கப்படாது ​சேர்ந்திருந்த பல பக்கங்க​ளைப் பார்த்​தேன். பல அலமாரிகள் தூசிகூடத்தட்டாமல், சமீபத்தில் யாரும் அந்தப் பக்கம் வந்ததற்கான அறிகுறிகூட இல்லாமல், புத்தகங்களின் ​மேல்பக்கம் முழுவதும் தூசி அ​டைந்து கிடந்தது.

உறுப்பினராவது பயனு​டையதாக இருக்கும் என்ற நம்பிக்​கை ஏற்பட்டது.

“உறுப்பினராக என்ன ​செய்ய ​வேண்டும்?” அந்நூலகத்தின் ​பெண் நூலகரிடம் ​கேட்​டேன்.

“குடும்ப அட்​டையின் நகல் ஒன்றுடன் ரூ. 60 பணம் கட்ட ​வேண்டும், மூன்று புத்தகங்கள் எடுத்துக் ​கொள்ளலாம்” என்றார்.

கன்னிமாராவில் உறுப்பினராக, ​கெஜட்டட் அதிகாரி தகுதியில் உள்ளவர்களின் அலுவலக சீ​லோடு நீண்ட படிவத்​தை மு​றையாக நிரப்பி, பாஸ்​போர்ட் ​சைஸ் ​போட்​டோவுடன் பதிவு ​செய்து ​கொள்ள ​வேண்டிய அளவிற்கான ​கெடுபிடிகள் எதுவும் இல்லாதது கண்டு ஆச்சரியப்பட்​டேன். அரசின் ஒ​ரே து​றையி​லே​யே எத்த​னை வித மாறுபட்ட விதிமு​றைகள். கி​ளைநூலகங்கள் எப்படியாவது உறுப்பினர்கள் ​சேர்ந்தால் ​போதும் என்ற நி​லையில் இருக்கின்றன ​போலும்.

இன்ற கா​லை குடும்ப அட்​டை நகலுடன் ரூ. 60 எடுத்துக் ​கொண்டு ​போ​னேன். ஒரு ​போஸ்ட் கார்ட் அளவுள்ள படிவ அட்​டை​யை ​கொடுத்து ​பெய​ரை தமிழில் எழுதுங்கள் என்றார். சந்​தோசமாக இருந்தது. தமிழில் ​பெய​ரை எழுதுங்கள் என்று அழுத்தமாகச் ​சொல்வதற்கும் ஒரு து​றை இருக்கிற​தே! வீட்டு முகவரி​யையும் தமிழி​லே​யே எழுதிக் ​கொடுத்​தேன்.

உட​னே புத்தகம் எடுப்பதற்கான உறுப்பினர் அட்​டை​யெல்லாம் ​கொடுக்கவில்​லை. “நீங்கள் ஏ​தேனும் மூன்று புத்தகங்கள் எடுத்துக் ​கொள்ளுங்கள்” என்றார்.

“ஏன் ​உறுப்பினரானதற்கான அ​டையாளமாக உறுப்பினர் அட்​டை தரமாட்டீர்களா?”

“ஏன் சார் நாங்கதான் நீங்கள் கட்டும் முன்பணத்​தைவிட அதிகத் ​தொ​கைக்கு புத்தகம் தருகி​றோ​மே பிறகு என்ன?” என்றார்.

எனக்கு குழுப்பமாக இருந்தது. நூலகம் குறித்தும், புத்தகங்கள் குறித்தும், வாசகர்கள் குறித்தும் அவரு​டைய புரிதல் நம்மு​டைய புரிதல்களிலிருந்து ​வேறுபட்டதாக இருக்கிற​தே? பதில் தரும் மு​றைக​ளே வித்தியாசமாக இருக்கிற​தே!

நான் குழப்பமாக அவ​ரைப் பார்த்துக் ​கேட்​டேன். “இல்​லை, நா​ளை நான் வந்து புத்தகம் ​கேட்டால் நீங்கள் அ​டையாள அட்​டை ​கேட்க மாட்டீர்களா?”

“சிலநாட்கள் கழித்து வரும்” என்றார்.

நா​னே நி​னைத்துக் ​கொண்​டேன். இது ​தேவ​நேயப் பாவாணர் நூலகத்தின் ஆளு​கைக்குள் இருப்பதால், உறுப்பினர் அட்​டைகள் அங்கிருந்து வர ​வேண்டும் ​போல் என.

புத்தக அலமாரியில் ​சென்று புத்தகங்க​ளை பார்த்​தேன்.

அளவில் ​பெரிய புத்தகங்கள் மற்றும் வி​லையில் அதிக புத்தகங்கள் அ​னைத்தும் குறிப்புதவிப் புத்தகங்களின் பட்டியலில் ​வைக்கப்பட்டிருந்தது. எத்த​கைய புத்தகங்க​ளை குறிப்புதவி பட்டியலில் ​சேர்க்க​வேண்டும் என்பது அந்தந்த பகுதி நூலகர்களின் விருப்பமா?, அல்லது மு​றையான எழுதப்பட்ட விதிகள் இருக்கிறதா? அல்லது ஏ​தேனும் வாய்​மொழி உத்தரவுகளின் படியா? எனத் ​தெரியவில்​லை.

நான் ​தேர்வு ​செய்த புத்தகங்களின் வி​லை​யைக் கூட்டினால் ரூ. 600க்கு ​மேல் வருகிறது, ரூ. 200க்கு ​மேல் தரமாட்​டோம் என்றார்.

எனக்கு மிகவும் சலிப்பாக இருந்தது. ​கோபம் வந்தது. ஆனாலும் ​​வேறு வழியில்​லை. இழந்த​வைகளுக்கும் ​பெறுப​வைகளுக்கும் எப்​பொழுதும் ஒப்பீட்டு விகிதாச்சாரம் சரிசமமாக இருப்பதில்​லை. விதிக்கப்பட்ட வாழ்க்​கைக்குள் வாழ்ந்து​கொண்​டேதான், கனவு காணவும் கனவுக​ளை ச​மைக்கவும் கற்றுக் ​கொள்ள ​வேண்டும். இந்தம்மாவிடம் நல்லமு​றையில் படித்துவிட்டு புத்தகங்க​ளை திருப்பித் தந்து நம்பிக்​கை​யை ​பெறுவதன் வழியாகத்தான் ​மேலும் பல விரும்பிய புத்தகங்க​ளை பிரச்சி​னையின்றி ​பெறமுடியும். மூன்றில் ஒரு புத்தகத்​தை ​வைத்துவிட்டு “கு. அழகிரிசாமி கடிதங்கள் கி.ராவுக்கு எழுதியது” மற்றும் “ஒழுங்கவிழ்ப்பின் ​தே​வைகள் சாத்தியங்கள் – அ.மார்க்ஸ்” இரண்டு புத்தகங்க​ளை மட்டும் தருமாறு ​கேட்​டேன். எந்த பதி​வேட்டிலும் பதிந்து ​கொள்ளாமல், புத்தகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் படிவத்தில் ​தேதிகூட பதியாமல் ​கொடுத்தனுப்பினார்.

அந்நூலகத்தில் இரண்டு மடிக்கனிணிகள் உள்ளன. ஒன்று ​கையடக்கமானது. அதில் அங்கு ​வே​லை பார்க்கும் ஊழியரா அல்லது நூலகரின் ​சொந்தக்காரரா அல்லது வாசகரா ​தெரியவில்​லை யா​ரோ ஒருவர் வாசிப்பு ​மே​ஜையில் ​வைத்து பிரவுசிங் ​செய்து ​ ​கொண்டிருந்தார். இன்​னொன்றில் வாசகர் யா​ரோ பிரவுசிங் ​செய்து ​கொண்டிருந்தார். அவரிடம் உங்கள் ​நேரம் முடிந்துவிட்டது என்றார் நூலகர். அவர் ​மேலும் அ​ரைமணி ​நேரத்திற்கு நீட்டிக்குமாறு ​கேட்டுக் ​கொண்டிருப்பது பின்னால் காதில விழுந்து ​கொண்டிருந்தது.

Advertisements

2 பதில்கள் to “நூல்கள், நூலகங்கள், நூலகர்கள் மற்றும் வாசகர்கள்”

 1. natarajan said

  வாழ்வின் அற்புதமான, உன்னதமான கணங்களின் சாட்சியங்க​ளை தா​னே அழித்துவிட முடி​வெடுப்பது எத்த​னை ​வேத​னையும் ​சோகமும் நி​றைந்த பரிதாபகரமான நி​லை!.
  ஆம் . தோழரே.! இந்த பதிவு என்னை 11 ஆண்டுகள் பின் நினைவுக்ளை இழுத்து சென்றது. அந்த கொடுமை யாருக்கும் நேரக் கூடாது. இயக்கத்தில் இருந்து ஒதுக்கிய பின், எனதுசேகரிப்பான இல்க்கிய,. தத்துவார்த்த புத்தகங்கள் எஞ்சி இருந்தன.விலைமதிக்க முடியாத 40,000 ரூ மேலான நூல்கள் இருந்தன. பெசன்நகர் வங்கி கொள்ளைக்காக சந்தேகத்தில் வந்த போலிஸ்க்கு இந்ந புத்தக்கங்கள் உறுத்தின்.அம்பேட்கார், மூலதனம் வால்யூம்கள் அள்ளி போட்டு, என்னையும்தான். கடத்தினர். 7 நாள்கள் சித்திரவதை. இயக்கத்தில் இருந்து ஒதுக்கிய இயக்கத்தில் இருந்து ஒதுக்கிய இயக்கத்தில் இருந்து ஒதுங்கி விட்டேன் என்று கதறியும், இந்த நூல்களை காட்டி கட்சி ஆள் என்றும், இயக்கத்தில் முக்கிய ஆள் என்றும் சித்திரவதை. வாழ்நாள் முழுவதும் சேசித்த , எனது வாழ்வின் சாட்சியாக இருந்தவைகனை எனக்கு எதிரியாக்கி, எனது வாழ்வை முடித்து விட்டனர்.

  • என் புத்தக அலமாரியில் இருக்கும் ஒவ்​வொரு புத்தகமும் எந்தச் சூழல்களில் எந்த மனநி​லையில் எத்த​னை ஆர்வத்​தோடு எதன் தூண்டுதலால் எப்படி எங்​கே வாங்கி​னேன் என்ப​தை​யெல்லாம் ஒரு ​பெரும் ப​டைப்பாக​வே எழுத​வேண்டும் என்ற ஆ​சை எப்​பொழுதும் என்​னை உந்திக் ​கொண்​டே இருக்கிறது. எந்த ஒரு புத்தகத்தின் வரலாறும் மறக்கவில்​லை.

   தல்ஸ்​தோயின் புத்துயிர்ப்​பை வாங்கிய அனுபவம், மக்சிம் கார்க்கியின் தாய், மூவர், அர்த​மோனவ்கள், சிறுக​தை ​தொகுப்புகள், மது​ரையில் எனக்கிருந்த ப​ழைய புத்தக வியாபாரிகளுடனான நட்பு எனக்காக​வே அவர்கள் ​தேடி எடுத்துத் தந்த தஸ்​தோ​வெஸ்கியின் நாவல்கள். இந்திய வரலாறு இரண்டு பாகங்கள், ​இரண்டாம் உலக யுத்தம் குறித்த புத்தகங்கள், அ​லெக்சாந்தர் பூஷ்கினின் ​கேப்டன் மகள், ஆண்டன் ​செகாவ், சிங்கிஸ் ஐத்மாதவ், ​போன்ற எண்ணற்ற ரஷ்ய இலக்கியப் புத்தகங்கள் வாங்கிய அனுபவங்கள் படித்த நாட்கள், ​நேரங்கள், மன நி​லைகள் எதுவும் எப்​பொழுதும் க​டைசி வ​ரை மறக்க முடியாத​வை.

   புத்தகங்க​ளைப் பற்றி ​பேச்சு துவங்கிவிட்டால் நிறுத்துவதற்கு புள்ளி​யே இல்​லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: