எனது நாட்குறிப்புகள்

Archive for ஒக்ரோபர், 2011

எப்படிச் ​செய்தாலும் பயனிருக்காது!

Posted by ம​கேஷ் மேல் ஒக்ரோபர் 25, 2011

நேற்​றைய தினமணியின் “இப்படிச் செய்தால் என்ன?” என்ற  த​லையங்கத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷியின் இரண்டு கருத்துக்கள் விவாதத்திற்கு எடுத்துக் ​கொள்ளப்பட ​வேண்டிய​வை என்ற ​பொருளில் எழுதப்பட்டுள்ளது.

முதல் கருத்து:

தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் போன்ற உயர்நிலை அரசியல்சட்ட நியமனங்களுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் மூலம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது அவரது கருத்து. பிரதமர், உள்துறை அமைச்சர், மக்களவைத் தலைவர் ஆகிய மூவர் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளின் சார்பில் இரண்டு பேரும் சேர்ந்த குழுவால், தலைமைத் தேர்தல் ஆணையரும், மத்திய தேர்தல் ஆணையர்களும் தேர்ந்தெடுக்கப்படும்போது, தவறான நபர்கள் அந்த உயர்ந்த பதவியை அலங்கரிப்பது தடுக்கப்படும் என்கிற வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியின் கருத்துக்கு அரசு செவிமடுப்பது அவசியம்.

இரண்டாவது கருத்து:

குரேஷி தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் உரிமை பற்றியது. அண்ணா ஹசாரே குழுவினரின் கோரிக்கைகளில் ஒன்றான ‘பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் உரிமை’ என்பது இந்தியாவைப் பொறுத்தவரை சாத்தியமல்ல என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி.

முதல் கருத்​தை ஆதரித்து “தேர்தல் ஆணையர்களின் நியமனம் தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் கருத்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பது மட்டுமல்ல, விரைவிலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றும்கூட.” என்று தன்நி​லை​யைக் கூறியுள்ள தினமணி த​லையங்கம்.

இரண்டாம் கருத்து குறித்து “சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களைத் திரும்பப் பெறும் உரிமை சாத்தியமில்லை என்றாலும் உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளில் வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் உரிமை பெற்றால், அதன்மூலம் மக்களாட்சித் தத்துவத்துக்கு வலு சேர்க்க முடியும் என்பது நமது கருத்து.” என்று ​தெரிவித்துள்ளது.

இன்​றைய இந்தியாவில் அ​னைத்து நி​லைகளிலும் அ​னைத்து து​றைகளிலும் அ​னைத்து அம்சங்களிலும் பிரச்சி​னைகள் முன்​னெப்​போ​தைக் காட்டிலும் தீவிரம​டைந்து வருகிறது. ​அதிலும் குறிப்பாக மக்களுக்கு அப்பட்டமாக அ​னைத்து மு​றை​கேடுகளும், அராஜகங்களும், ஊழல்களும், ஒழுங்கீனங்களும் எந்தவ​​கையிலும் ம​றைக்க முடியாதபடி ​வெளிப்பட்டுக் ​கொண்டிருக்கிறது. இவற்றின் எதி​ரொலியாக​வே இத்த​கைய சட்டசீர் திருத்தங்கள், ​தேர்தல் மு​றை சீர்திருத்தங்கள், ​லோக்பால் ம​சோதா நி​றை​வேற்றம் ​போன்ற சீர்திருத்தவாதங்கள் முன்​வைக்கப்படுகின்றன.

மற்​றொருபுறம் பத்திரி​கையாளர் ஞானி ​போன்றவர்கள், இருக்கும் சட்டங்க​ளை​யே உறுதியாக பின்பற்றினா​லே ​போதுமானது. இங்குள்ள பிரச்சி​னைகள் நமது சட்டங்கள் ​போதுமானதா இல்​லையா என்பதல்ல மாறாக கறாராக க​டைபிடிக்கப்படுகிறதா? இல்​லையா? என்பதுதான் என்ற வ​கையில் வாதப்பிரதிவாதங்க​ளை முன்​னெடுக்கிறார்கள்.

ஆனால் இவ்வாதங்களின் ஊடாக ஒரு விசயம் ​தெளிவாகத் ​தெரிகிறது. இவர்கள் எல்​லோரும் இவ்விவாதங்க​ளின் ஊடாக மக்க​ளை சீர்திருத்தவாதங்க​ளைத் தாண்டி இப்பிரச்சி​னைகளின் ஆணி​வே​ரை ​நோக்கி திரும்பிவிடாமல் தடுப்பதில் மிக மு​ணைப்​போடு இருக்கிறார்கள்.

​தேர்தல் தில்லுமுல்லுகள், அராஜகங்கள், வாக்குச் சாவடிக​ளை ​கைப்பற்றுதல், கள்ள ஓட்டுப் ​போடுதல், தங்களுக்கு வாக்களிக்க மக்களுக்கு பணம் தருதல், ​பொய்யான வாக்குறுதிகள் தருதல், ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் தருவதாக வாக்களித்தல் ​போன்ற​வை அ​னைத்தும் இந்தியா சுதந்திரம் ​பெறுவதற்கு முன்பிருந்​தே இந்தியாவில் நடந்து ​கொண்டிருப்ப​வை தான். ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில் இ​வை முன்​னெப்​போ​தும் இல்லாத எல்​லைக​ளை ​தொட்டிருக்கிறது.

அ​தே ​போல ஊழல். இந்தியா சுதந்திரம் ​பெற்ற காலத்திலிருந்​தே மத்திய மாநில அரசுகளின் திட்டங்க​ளை உருவாக்குதல், நி​றை​வேற்றுதல் ஆகியவற்றின் அடிப்ப​டையாக இருந்து ​கொண்டிருக்கிறது என்பது உண்​மை. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அ​வை முன்​னெப்​போதும் இல்லாத அளவிற்கு விசுவரூபம் எடுத்துள்ளது.

இ​வை நிச்சயமாக இந்தியாவில் ​மேற்​கொள்ளப்பட்ட ​பொருளாதார சீர்திருத்த நடவடிக்​கைகளின் பின்னணியி​லே​யே ​பொருள் புரிந்து ​கொள்ளப்பட ​வேண்டிய​வை. ​தொன்னூறுகளில் இ​தே மன்​மோகன் சிங்கினால் ​தொடங்கி ​வைக்கப்பட்ட தனியார்மயமாக்கம், தாராளமயமாக்கம், உலகமயமாக்கம் ​கொள்​கைக​ளின் வி​ளைவுக​ளையும் ஏற்படுத்திய விபரீதங்க​ளையும் புரிந்து ​கொள்ளாமல் அதன் பின்னணி இல்லாமல் இவற்​றை பார்ப்பது என்பதும், இந்திய விவசாயம் புறக்கணிக்கப்படுவ​தையும், இந்திய விவசாய உற்பத்தி மு​றையில் ​மேற்​கொள்ளப்பட ​வேண்டிய புரட்சிக​ளை கணக்கி​லெடுத்துக் ​கொள்ளாமல் இந்திய அரசியல், நீதி, சட்ட, ஜனநாயக பிரச்சி​னைக​ளை அணுகுவதும், சீர்திருத்தங்க​ளை முன்​வைப்பதும், உண்​மையில் மக்க​ளை தி​சைதிருப்பும் ஏமாற்றும் உத்திகளாகத்தான் மாறி நிற்கும்.

சமீபத்தில் பிற்கால ​சோழப் ​பேரரசுவின் ​தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி குறித்த ஒரு புத்தகத்​தை படித்துக் ​கொண்டிருக்கி​றேன். அதில் ​சோழப் ​பேரரசுவின் வீழ்ச்சி​யை குறிக்கும் குறியீடாக ஒரு சம்பவத்​தை விளக்குகிறார் அதன் ஆசிரியர் ​ஜெகஜீவன்ராம்.

“​பேரரசு ​பொருளாதாரத்தில் வளமுடன் இருந்த காலங்களில் அரசு ​வெளியிட்ட நாணயங்கள் மாற்றுக் கு​றையாத தங்கத்தால் ​செய்யப்பட்டிருந்தன. பின்னர் ​வெள்ளியால் ​செய்த நாணயங்களில் தங்கமுலாம் பூசப்பட்டு ​வெளியிடப்பட்டன. நாட்டின் ​பொருளாதாரம் தரம் தாழ்ந்து ​போனதற்கான வலுவான எடுத்துக்காட்டாக இது உள்ளது.”

நம் கால இந்திய நாணயங்கள் ரூபாய்த்தாள்களின் வரலாற்​றை பார்ப்​போமானால் நி​லை​மை அ​தைவிட ​மோசமாக இருந்து ​கொண்டிருக்கிறது என்பது கண்கூடு.

எண்பதுகளில் இருந்த ஒரு ​பைசா, இரண்டு ​பைசா, மூன்று ​பைசா என்ப​வை வழக்​கொழிந்தன, ​தொன்னூறுகளில் இருந்த ஐந்து ​பைசா, பத்து ​பைசா, இருபது ​பைசா, இருபத்​தைந்து ​பைசா என்ப​வை வழக்​கொழிந்தன.

பணத்தின் மதிப்பு ​தொடர்ந்து வீழ்ச்சிய​டைந்து ​கொண்டிருப்பதன் வி​ளைவாக ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் தாள்களின் அன்றாடப் புழக்கம் அதிகப்படுவதால் அ​வை எல்லாம் படிப்படியாக நாணயங்களாக மாற்ற ​வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுக் ​கொண்டிருக்கிறது.

சர்வ​தேச ​நிதி நிறுவனங்கள், பன்னாட்டுக் கம்​பெனிகள், அ​மெரிக்கா ​போன்ற ஏகாதிபத்தியங்களின் கட்ட​ளைப்படி இந்திய ​தொழில் மற்றும் விவசாய உற்பத்திகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் ​பொருளாதார நி​லைக​ளை அறிவிக்கும் அறிக்​கைகள் கூட அவர்களின் வழிகாட்டுதல்கள் படி தயாரிக்கப்படுகின்றன. மக்க​ளை ஏமாற்றும் ​நோக்கங்க​​ளோடு தவறான அளவு​கோல்களின் படி ​பொருளாதார வளர்ச்சிகுறித்த புள்ளிவிபரங்கள் உருவாக்கப்படுகின்றன.

வறு​மைக் ​கோட்டிற்கு கீழுள்ள மக்கள் குறித்த புள்ளிவிபரங்கள் தயாரிக்கும் அள​வைகளில் துளியும் எதார்த்தத்திற்கு ​பொறுத்தமற்ற அளவு மு​றைகள் பின்பற்றபடுகின்றன. கிராமப்புறங்களில் 25 ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்க​ளையும், நகரங்களில் 32 ரூபாய்க்கு கீழ் உள்ளவர்க​ளையும் தான் வறு​மை ​கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கருத​வேண்டும் என சமீபத்தில் ஒரு வ​ரைமு​றை முன்​வைக்கபட்டது.

சிறு வயதில் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் நடந்ததாக ஒரு க​தை ​சொல்லப்பட ​கேட்டிருக்கி​றேன். உகாண்டாவா எது என்று சரியாக ஞாபகமில்​லை. அந்நாட்டிற்கு ​தே​வையான மின்சாரத்​தை உற்பத்தி ​செய்யும் நீர்மின்நி​லையம் அந்நாட்டில் ஓடும் ​பெரிய நதியின் குறுக்காக கட்டப்பட்டிருக்கிறதாம். தினமும் இரவு 8 மணிக்கு அந்த ஊர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடுமாம். நீர்மின் நி​லையத்திற்கு ​சென்று பார்த்தால் நதியின் ​வேகத்தில் சுழலும் உரு​ளைகள் சுழலாமல் நின்றிருக்குமாம். உரு​ளைக​ளை சுழலவிடாமல் எது தடுக்கிறது என்று பார்த்தால் அந்நாட்டின் சர்வாதிகாரியால் ​கொன்று நதியில் வீசப்படும் பிணங்கள் உரு​ளைகளின் பற்சக்கரத்தில் சிக்கிக்​கொண்டிருக்குமாம். தினமும் இ​தே ​போல் அச்சர்வாதிகாரியால் பல லட்சக்கணக்கான மக்கள் ​கொன்று இரவு ​நேரத்தில் ஆற்றில் வீசப்படுவார்களாம். அப்பகுதி மக்களுக்கு அவற்​றை தினமும் அகற்றுவ​தே ​வே​ளையாம். ஆனால் யாரும் அச்சர்வாதிகாரிக்கு எதிராக ​போராடி இப்பிரச்சி​னைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் துணிவு இல்​லை. என்பதாக இக்க​தை முடிந்ததாக ஞாபகம்.

​நோய்நாடி ​நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் ​செயல்

என்பதற்​கேற்ப ​நோய் முதல் நாடாமல். ​​​நோய்க்குறிக​ளை இணங்காட்டுவதும் அவற்​றை அமுங்கச் ​செய்வதற்கான வழிமு​றைக​ளை​யே ​தொடர்ந்து ​பேசிக்​கொண்டிருப்பதும். ​நோ​யை ​மேலும் தீவிரப்படுத்துவதன்றி, ​நோய்க்குறிக​ளை இன்னும் பலவாகவும், மிக​மோசமாகவும் மாற்றுவதன்றி ​வே​றொன்​றையும் ​செய்துவிடப் ​போவதில்​லை.

லஞ்சம் வாங்கும் அதிகாரிக​ளை கண்காணித்து தடுக்க லஞ்ச ஒழிப்புப் பிரிவு ​போடுவதால் நாம் லஞ்சத்​தை ஒழித்துவிடவில்​லை. அந்த லஞ்ச ஒழிப்புத்து​றை அதிகாரிகளுக்கும் லஞ்சத்தில் ஒரு பங்கு பங்கு​வைக்கப்படுகிறது. அது ​மேலும் சிக்கலானதாகவும், பரவலானதாகவும் லஞ்சத்​தை மாற்றுகிறது. பங்கு அதிகமாவதால் லஞ்சத்தின் அளவும் ​மேலும் உயர்கிறது.

நாட்டின் த​லையாய பிரச்சி​னை என்பது விவசாய உற்பத்திமு​றையில் அடிப்ப​டையான புரட்சிகர மாற்றத்​தை உண்டாக்குவதும், ​நாட்டின் சுய​தே​வை​யை உணர்ந்து விவசாய மற்றும் ​தொழில் உற்பத்தி​யை மாற்றிய​மைப்பதும். அதற்கு த​டையாக உள்ள சர்வ​தேச ஒப்பந்தங்களிலிருந்து முறித்துக் ​கொள்வதும்தான். உற்பத்தியிலும் உற்பத்திமு​றையிலுமான நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அந்நியச் சார்​பே அ​னைத்து சமூக ஒழுங்கீனங்களுக்கும், சமூகச் சீர்​கேடுகளுக்கும், ஜனநாயக வி​ரோத ​போக்குகளின் தீவிரத்தன்​மைக்கும் அடிப்ப​டைக் காரணங்களாகும்.

Posted in கட்டு​ரை | 1 Comment »

உள்ளாட்சித் ​தேர்தலும் மக்களின் அக்க​றையின்​மையும்

Posted by ம​கேஷ் மேல் ஒக்ரோபர் 20, 2011

இன்று கா​லை ராஜ் டிவியில், தமிழகத்தில் இதுவ​ரை நடந்து முடிந்த உள்ளாட்சித் ​தேர்தல் பற்றிய ​செய்திக​ளுக்கி​டை​யே, ​சென்​னையில் மிகக் கு​றைவாக 48 சதவீத​மே வாக்குப்பதிவு பதிவானதற்கான காரணங்க​ளை அலசினார்கள். ​பொதுமக்கள் பலரிடமும், சமூக ஆர்வலர்கள் சிலரிடமும் இது குறித்து கருத்துக் ​கேட்டார்கள்.

ஒருவர் கூறினார், “எல்லா கட்சிகள் மீதும் மக்களுக்கு அவநம்பிக்​கை ஏற்பட்டுவிட்டது. யாரும் ​நேர்​மையில்​லை என்ற மனநி​லை​யே ​தேர்தலில் பங்​கெடுக்காததற்கான காரணம்”

இன்​னொருவர் கூறினார், “பாராளுமன்ற, சட்டமன்ற ​தேர்தல்களின் முக்கியத்துவத்​தை அறிந்த அளவிற்கு மக்கள் உள்ளாட்சி மன்றங்களுக்கான ​தேர்தலின் முக்கியத்துவத்​தை அறியவில்​லை. அரசு இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ​வேண்டும்”

ஒரு ​பெண் கூறினார், “எந்த ​வேட்பாளரும் ​தெரிந்த முகமாக​வே இல்​​லை. யா​ரையும் மக்களுக்கு ​தெரியவில்​லை என்பதுதான் ஓட்டுப ​போட விருப்பமில்லாததற்கான காரணம்”.

இன்​னொரு ​பெண் கூறினார், “​யாருக்கு எந்த பூத், எந்த வார்டு, எந்த எண் ​வாக்கு அ​றை என்று பல ​பேருக்கு புரியவில்​லை. இங்கு ​போனால் அங்கு ​போ அங்கு ​போனால் இங்கு ​போ என்று அ​லையவிடுகிறார்கள், அது தான் வாக்கு சதவீத கு​றைவிற்கு காரணம்” என்றார்.

பத்திரி​கையாளர் ஞானி “பஞ்சாயத்து ராஜ் மூலமாக ​பேசப்படும் இந்த உள்ளாட்சி ​தேர்தல்களின் ​தோல்வி என்பது இவ்வ​மைப்புகளுக்கு எந்த அதிகாரமும் இல்லாத​தே காரணம். ​மைய அளவி​லே​யே அ​னைத்து அதிகாரங்க​ளையும் குவித்து ​வைத்துக் ​கொண்டு உள்ளாட்சிகளுக்கு அதிகாரத்​தை பரவலாக்கி ​கொடுக்காத​தே முக்கிய பிரச்சி​னை” என்றார்.

​தேர்தல் குறித்த மக்களின் பார்​வை​யை, அணுகுமு​றை​யை, எதிர்பார்ப்புக​ளை புரிந்து ​கொள்வதற்கு முதலில் ​தேர்தல்களுக்கும் நம் சமூக அ​மைப்பிற்கும் இ​டையிலான உற​வையும், நாளுக்குநாள் மிக ​மோசமாக சீரழிந்து ​கொண்டிருக்கும் நம் வாழ்வில் ​தேர்தல்கள் என்பது எவ்வாறு மக்க​ளை ஏமாற்றுவதற்கான ஒரு வழிமு​றையாக இருக்கிறது என்ப​தைக் குறித்து ​பேசாமல் புரிந்து ​கொள்ள முடியாது.

ஒரு ​பெண்மணி மிக அழகாக குறிப்பிட்ட​தைப் ​போல இன்​றைக்கு எந்த மன்றத்திற்கான ​தேர்தலில் நிற்கும் ​வேட்பாள​ரைப் பற்றியும் மக்களுக்கு ஒன்றும் ​தெரிந்திருக்கவில்​லை. இதன் அர்த்தம். இந்த ​வேட்பாளர்கள் யாருக்கும் தன் ​தொகுதிக்கு உட்பட்ட மக்களின் வாழ்க்​கை குறித்தும், ​தொகுதி பிரச்சி​னைகள் குறித்தும் எந்த அக்க​றையும் இருப்பதில்​லை. பதவிக்கு அப்பாற்பட்டு அம்மக்களின் அன்றாட பிரச்சி​னைகளுக்காக​வோ, ​தொகுதி பிரச்சி​னைகளுக்காக​வோ அவர்கள் எந்த​வொரு பிரச்சாரங்களிலும், ​போராட்டங்களிலும் கலந்து ​கொள்வதில்​லை, மக்க​ளோடு அவர்களுக்கு எந்த ​நெருக்கமான உறவும் இருப்பதில்​லை. அவர்களின் உறவு முழுவதும் முதலாளிகள், ​பெரும் வியாபாரிகள், ரியல் எஸ்​டேட் உரி​மையாளர்கள், தாதாக்கள், ரவுடிகள் ​போன்ற ஆதிக்க சக்திக​ளோடுதான் ஆண்டு முழுவதும் உள்ளது. தாங்கள் சார்ந்த கட்சிகளில் பல ​கோடி பணம் ​கொடுத்து ​தொகுதி​யை வி​லைக்கு வாங்கிக் ​கொண்டு ​தேர்தல் ​நேரங்களில் ஓட்டு வாங்குவதற்காக மட்டு​மே மக்க​ளை ​நோக்கி வருகிறார்கள். இந்த நம் சமூகத்தின் சிக்கலான பிரச்சி​னை​யைத்தான், முதலாளித்துவத்தின் அடிப்ப​டைச் சிக்க​லைத்தான் எளிய மக்கள் தங்கள் எளிய வாழ்வின் எதார்த்தத்​தோடு எளி​மையாகச் ​சொல்கிறார்கள்.

மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமான சமப்படுத்த முடியாத இந்த இ​டை​வெளி சுரண்டல் சமூக அ​மைப்பின் தவிர்க்கமுடியா விதியாகிறது. இப்பிரச்சி​னை​யை முதலாளித்துவம் தனக்​கே உரிய மு​றையில் – மக்கள் மத்தியில் பிரபலமானவர்க​ளையும், அல்லது மீடியாக்களின் வழி பிரபலமாக்கப்பட்டவர்க​ளையும் ​வைத்து – சமாளிக்கிறது. சட்டமன்ற பாராளுமன்ற ​தேர்தல்களில் சினிமா நட்சத்திரங்க​ளையும், கதாநாயகர்கள், கதாநாயகிக​ளை ​வைத்து அணுகுவது ​போல, இனி உள்ளாட்சி ​தேர்தல்களுக்கு குணச்சித்திர நடிகர்கள், சிரிப்பு நடிகர்கள், து​ணை நடிகர்கள் ​போன்றவர்க​ளை அனுப்பித்தான் சமாளிக்க ​வேண்டு​மோ என்ன​வோ!

இன்​றைய சர்வ​தேச ​நெருக்கடியின் ஒரு பகுதியாக நம் நாட்டில் ஏற்பட்டுள்ள ​நெருக்கடிகள் மற்றும் சீரழிவின் வி​ளைவாக ஆளும் வர்க்கத்​தைச் ​சேர்ந்த எல்ல பிரபலங்களும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுள்ளதால், இனி சினிமா கதாநாயகர்க​ளையும், கதாநாயகிக​ளையும் ​வைத்துக்கூட காலந்தள்ள முடியாத இக்கட்டில் மாட்டி முழித்துக் ​கொண்டிருக்கிறது, என்ப​தைத்தான் பல ​தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

​சென்​னை​யை ​பொறுத்தவ​ரை நாளுக்குநாள் நி​லை​மை படு​மோசமாகிக் ​கொண்டிருக்கிறது. ​சென்​னை நகரில் மக்கள் ​தொ​கை ​பெருக்கமும், வாகனப் ​பெருக்கமும் வரலாறு காணாத வ​கையில் பல்கிப் ​பெருகிக் ​கொண்டிருக்கிறது. இவற்​றை கட்டுப்படுத்த​வோ, இதற்​கேற்ப நகர வசதிக​ளை ​மேம்படுத்த​வோ அரசுகளிடம் எந்த உருப்படியான திட்டங்களும் ​செயல்பாடுகளும் இல்​லை. கு​றைந்தபட்ச அடிப்ப​டைக் கட்ட​மைப்புக​ள் பராமரிப்புக் கூட இல்லாமல் அன்றாடம் மக்கள் திண்டாடிக் ​கொண்டிருக்கிறார்கள்.

அடிப்ப​டைத் ​தே​வைக​ளையும், அடிப்ப​டைக் கட்டுமானங்க​ளையும் ஏற்படுத்துவ​தையும் பராமரிப்ப​தையும் முழு​மையாகக் ​கைவிட்டுவிட்ட ஆள்​வோர், ஆனால் மறுபுற​மோ கார்ப்ப​ரேட்க​ளையும், கார்ப்​ரேட் நிறுவனங்க​ளைச் ​சேர்ந்த மனிதர்க​ளைம் மகிழ்ச்சி படுத்தும் ஆடம்பர ​செலவுகளுக்கும் அலங்கார ​செலவுகளுக்கும், ​வெட்டி பந்தாக்களுக்கும் ​கோடிக்கணக்கில் பணம் ​செலவழித்துக் ​கொண்டிருக்கிறது.

குடிதண்ணீருக்கும், குடியிருப்புக்கும், மின்சாரத்திற்கும், கல்விக்கும், ​வே​லைவாய்ப்பிற்கும், சுகாதாரத்திற்கும், சா​லைவசதிகளுக்கும், ​போக்குவரத்திற்கும் திண்டாடும் ​கோடிக்கணக்கான மக்கள் ஆள்​வோரின் ஆடம்பரங்க​ளையும், அலட்டல்க​ளையும், அதிகார துஷ்பி​ரோயகங்க​ளையும், ஊழல்க​ளையும், அராஜகங்க​ளையும், அடாவடித்தனங்க​ளையும், மக்கள் வி​ரோத நடவடிக்​கைக​ளையும் உன்னிப்பாக கவனித்துக் ​கொண்டுதான் இருக்கிறார்கள்.

​நெஞ்சில் துணிவும் ​நேர்​மைத்திறமும் இருக்கும் எவர் ஒருவரால்தான் உரத்துக் கத்தாமல் இருக்க முடியும் “​தேர்தல் பா​தை திருடர் பா​தை” என்று.

Posted in கட்டு​ரை | Leave a Comment »

தமிழ் மென்பொருள், தமிழ் எழுத்துருக்கள் வித்தியாசம் என்ன?

Posted by ம​கேஷ் மேல் ஒக்ரோபர் 10, 2011

அழகி தமிழ்​மென்​பொருள் பயனாளர் குழுமத்தில் சமீபத்தில் ஒரு பயனாளர் பின் வரும் ​கேள்வி​யை ​​கேட்டிருந்தார்.

வணக்கம். எமக்கு ஒரு சின்ன சந்தேகம்
தமிழ் மென்பொருள், தமிழ் எழுத்துருக்கள் இரண்டும் ஒன்றா? இல்லை இரண்டும்
தனித்தனியா? தனித்தனியே என்றால் விளக்கம் தருக.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.

அக்​கேள்விக்கு நான் அளித்த பதில், அக்குழுமத்தில் அதன் உரி​மையாளர் உட்பட பலருக்கும் பிடித்திருந்தது. அது அ​னைவருக்கும் புரியும் வண்ணம் எளி​மையாக இருக்கிற​தென்று பலரும் பாராட்டியிருந்தார்கள்.

 
வணக்கம். … .. . தமிழக கிராமப்புற சிறுவர்கள் சிறுமியருக்கும் புரியும் வகையில் மிக எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள். மிகவும் சந்தோஷமாயுள்ளது. ஒருவேளை நீங்களும் ஒரு விரிவுரையாளரோ!

adiyen,
dasan,
T. Raguveeradayal

அக்​கேள்வி பதி​லை இந்த வ​லைப்பூவில் ​மறுபதிப்பு ​செய்வது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கு​மென்று கருதி ​வெளியிடுகி​றேன்.

முனைவர் துரை.மணிகண்டன் அவர்களுக்கு,

தமிழில் நீங்கள் கணினி பயன்படுத்தி ஏ​தேனும் எழுத விரும்பினால் முதலில் உங்களுக்கு ​தே​வைப்படுவது ஃபான்ட்ஸ் (Fonts) என ஆங்கிலத்தில் கூறப்படும் எழுத்துரு. நவீன கணினி இயங்குதளங்களில் (ஆப்பி​ரேட்டிங் சிஸ்டம்களில்) தமிழில் ​தட்டச்சு ​செய்ய இது ஒன்​றே ​போதுமானது.

எழுத்துரு என்றால் என்ன?

ஒரு ​மொழியில் உள்ள எல்லா எழுத்துக்க​ளையும் விருப்பபட்ட வடிவில் (style, design) வடிவ​மைத்து, கணினி ஏற்றுக் ​கொள்ளும் மு​றையில் உருவாக்கப்பட்ட ஒரு சிறு ​மென்​பொருளாகும். டி​ரெடில் அச்சுக்​கோர்க்கும் மு​றையில் கூறுவ​தென்றால் அஞ்ச​றைப்​பெட்டி வடிவத்தில் பல எழுத்துக்களின் பிளாக்குக​ளை ​போட்டு ​வைத்திருக்கும் சட்டகங்க​ளை ​போன்ற​தே எழுத்துரு எனப்படுவது.

​தமிழ் ​மென்​பொருள் என்றால் என்ன?

பல கணினி இயங்குதளங்கள் ​நேரடியாக தமிழில் உள்ளீடு ​செய்வ​தை ஏற்றுக்​கொள்ளும் வ​கையில் இருப்பதில்​லை. ஆங்கிலத்திற்கும் தமிழ் ​போன்ற ​மொழிகளுக்கும் கணினியில் ​கையாள்வதில் மிகப்​பெரிய வித்தியாசம் உள்ளது. எளி​மையாக கூறுவ​தென்றால், நாம் பயன்படுத்தும் வி​சைப்பல​கைகள் ஆங்கில ​மொழியில் உள்ளீடு ​செய்வதற்கு ஏற்றவாறு, ஆங்கில எழுத்துக்களின் அடிப்ப​டையில்தான் அ​மைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் ​மொத்தம் 26 எழுத்துக்கள்தான் ஆனால் தமிழில் 247 மற்றும் சில வட​மொழி எழுத்துக்க​ளை நாம் உள்ளீடு ​செய்யும் வ​கையில் வி​சைப்பல​கைகளின் அ​மைப்பு இல்​லை. இத்த​கைய பிரச்சி​னைக​ளை ​கையாள சில உத்திகள் ​மென்​பொருட்களின் மூலம் ​செய்யப்படுகின்றன. இத்த​கைய ​மென்​பொருட்களின் உதவி இல்லாமல் நம்மால் தமிழில் உள்ளீடு ​செய்ய முடியாது.
​மேலும் ஆங்கிலத்திற்கு ஒ​ரே உள்ளீட்டு மு​றைதான் உள்ளது (Typing method). ஆனால் தமிழுக்கு பல்​வேறு உள்ளீட்டு மு​றைகள் (typewriter, typewriter old, phonetic, transliteration, tamilnet99,  ​போன்ற​வை) உள்ளன. ஒரு மு​றையில் பழகியவர்களால் ​வேறு மு​றைகளில் உள்ளீடு ​செய்ய முடியாது. ஆக​வே இவற்றிற்கு ஏற்ப எழுத்துருக்க​ளை பயன்படுத்துவதற்கு ​மென்​பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
இ​வை தவிர ஆங்கில இலக்கணமும் தமிழ் இலக்கணமும் ​வேறான​வை என்பதால், பி​ழைதிருத்தி, பக்க வடிவ​மைப்பு ​போன்ற தமிழ்சார்ந்த கணினி ​வே​லைகளுக்​கென சிறப்பான ​மென்​பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

முடிவாக கூறுமிடத்து எழுத்துரு என்பதும் ஒரு வ​கையில் ஒரு சிறு ​மென்​பொருள்தான். அத​னை ​நேரடியாக பயன்படுத்துவதில் குறிப்பாக வின்​டோஸ் ஆப்​ரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்துவதில் உள்ள பல்​வேறு சிக்கல்க​ளை திற​மையுடன் ​கையாள்வதற்காகவும், ஆங்கில ​மொழியில் உள்ளீடு ​செய்யும் ​பொழுது ​அது தரும் ​மொழிசார்ந்த து​ணைக்கருவிக​ளைப் ​போல் (இலக்கணத் திருத்தி, ​சொல்திருத்தி, ​போன்ற​வை) தமிழுக்கும் உருவாக்கப்பட்ட​வை​யே தமிழ் ​​மென்​பொருட்கள்.

இவ்விளக்கம் தங்களுக்கு பயனு​டையதாக இருக்கு​மென்று நி​னைக்கி​றேன். ஏ​தேனும் புரியவில்​லை​யென்றால் என்​னை ​தொடர்பு ​​கொள்ள த​டை​வேண்டாம். தங்களுக்கு விளக்க ஆர்வமுடன் இருக்கி​றேன்.

Posted in கட்டு​ரை | Leave a Comment »

அ​மெரிக்கா வால்ஸ்டீரீட் ​போராட்ட பதா​கைகள்

Posted by ம​கேஷ் மேல் ஒக்ரோபர் 9, 2011

அ​மெரிக்காவின் வால்ஸ்டீரிட்டில் நடந்த ​போராட்டத்தில் இ​ளைஞர்கள் ​கையில் பிடித்திருந்த பதா​கை முழக்கங்கள்

Posted in அனுபவங்கள் | Leave a Comment »