எனது நாட்குறிப்புகள்

எப்படிச் ​செய்தாலும் பயனிருக்காது!

Posted by ம​கேஷ் மேல் ஒக்ரோபர் 25, 2011

நேற்​றைய தினமணியின் “இப்படிச் செய்தால் என்ன?” என்ற  த​லையங்கத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷியின் இரண்டு கருத்துக்கள் விவாதத்திற்கு எடுத்துக் ​கொள்ளப்பட ​வேண்டிய​வை என்ற ​பொருளில் எழுதப்பட்டுள்ளது.

முதல் கருத்து:

தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் போன்ற உயர்நிலை அரசியல்சட்ட நியமனங்களுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் மூலம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது அவரது கருத்து. பிரதமர், உள்துறை அமைச்சர், மக்களவைத் தலைவர் ஆகிய மூவர் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளின் சார்பில் இரண்டு பேரும் சேர்ந்த குழுவால், தலைமைத் தேர்தல் ஆணையரும், மத்திய தேர்தல் ஆணையர்களும் தேர்ந்தெடுக்கப்படும்போது, தவறான நபர்கள் அந்த உயர்ந்த பதவியை அலங்கரிப்பது தடுக்கப்படும் என்கிற வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியின் கருத்துக்கு அரசு செவிமடுப்பது அவசியம்.

இரண்டாவது கருத்து:

குரேஷி தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் உரிமை பற்றியது. அண்ணா ஹசாரே குழுவினரின் கோரிக்கைகளில் ஒன்றான ‘பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் உரிமை’ என்பது இந்தியாவைப் பொறுத்தவரை சாத்தியமல்ல என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி.

முதல் கருத்​தை ஆதரித்து “தேர்தல் ஆணையர்களின் நியமனம் தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் கருத்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பது மட்டுமல்ல, விரைவிலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றும்கூட.” என்று தன்நி​லை​யைக் கூறியுள்ள தினமணி த​லையங்கம்.

இரண்டாம் கருத்து குறித்து “சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களைத் திரும்பப் பெறும் உரிமை சாத்தியமில்லை என்றாலும் உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளில் வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் உரிமை பெற்றால், அதன்மூலம் மக்களாட்சித் தத்துவத்துக்கு வலு சேர்க்க முடியும் என்பது நமது கருத்து.” என்று ​தெரிவித்துள்ளது.

இன்​றைய இந்தியாவில் அ​னைத்து நி​லைகளிலும் அ​னைத்து து​றைகளிலும் அ​னைத்து அம்சங்களிலும் பிரச்சி​னைகள் முன்​னெப்​போ​தைக் காட்டிலும் தீவிரம​டைந்து வருகிறது. ​அதிலும் குறிப்பாக மக்களுக்கு அப்பட்டமாக அ​னைத்து மு​றை​கேடுகளும், அராஜகங்களும், ஊழல்களும், ஒழுங்கீனங்களும் எந்தவ​​கையிலும் ம​றைக்க முடியாதபடி ​வெளிப்பட்டுக் ​கொண்டிருக்கிறது. இவற்றின் எதி​ரொலியாக​வே இத்த​கைய சட்டசீர் திருத்தங்கள், ​தேர்தல் மு​றை சீர்திருத்தங்கள், ​லோக்பால் ம​சோதா நி​றை​வேற்றம் ​போன்ற சீர்திருத்தவாதங்கள் முன்​வைக்கப்படுகின்றன.

மற்​றொருபுறம் பத்திரி​கையாளர் ஞானி ​போன்றவர்கள், இருக்கும் சட்டங்க​ளை​யே உறுதியாக பின்பற்றினா​லே ​போதுமானது. இங்குள்ள பிரச்சி​னைகள் நமது சட்டங்கள் ​போதுமானதா இல்​லையா என்பதல்ல மாறாக கறாராக க​டைபிடிக்கப்படுகிறதா? இல்​லையா? என்பதுதான் என்ற வ​கையில் வாதப்பிரதிவாதங்க​ளை முன்​னெடுக்கிறார்கள்.

ஆனால் இவ்வாதங்களின் ஊடாக ஒரு விசயம் ​தெளிவாகத் ​தெரிகிறது. இவர்கள் எல்​லோரும் இவ்விவாதங்க​ளின் ஊடாக மக்க​ளை சீர்திருத்தவாதங்க​ளைத் தாண்டி இப்பிரச்சி​னைகளின் ஆணி​வே​ரை ​நோக்கி திரும்பிவிடாமல் தடுப்பதில் மிக மு​ணைப்​போடு இருக்கிறார்கள்.

​தேர்தல் தில்லுமுல்லுகள், அராஜகங்கள், வாக்குச் சாவடிக​ளை ​கைப்பற்றுதல், கள்ள ஓட்டுப் ​போடுதல், தங்களுக்கு வாக்களிக்க மக்களுக்கு பணம் தருதல், ​பொய்யான வாக்குறுதிகள் தருதல், ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் தருவதாக வாக்களித்தல் ​போன்ற​வை அ​னைத்தும் இந்தியா சுதந்திரம் ​பெறுவதற்கு முன்பிருந்​தே இந்தியாவில் நடந்து ​கொண்டிருப்ப​வை தான். ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில் இ​வை முன்​னெப்​போ​தும் இல்லாத எல்​லைக​ளை ​தொட்டிருக்கிறது.

அ​தே ​போல ஊழல். இந்தியா சுதந்திரம் ​பெற்ற காலத்திலிருந்​தே மத்திய மாநில அரசுகளின் திட்டங்க​ளை உருவாக்குதல், நி​றை​வேற்றுதல் ஆகியவற்றின் அடிப்ப​டையாக இருந்து ​கொண்டிருக்கிறது என்பது உண்​மை. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அ​வை முன்​னெப்​போதும் இல்லாத அளவிற்கு விசுவரூபம் எடுத்துள்ளது.

இ​வை நிச்சயமாக இந்தியாவில் ​மேற்​கொள்ளப்பட்ட ​பொருளாதார சீர்திருத்த நடவடிக்​கைகளின் பின்னணியி​லே​யே ​பொருள் புரிந்து ​கொள்ளப்பட ​வேண்டிய​வை. ​தொன்னூறுகளில் இ​தே மன்​மோகன் சிங்கினால் ​தொடங்கி ​வைக்கப்பட்ட தனியார்மயமாக்கம், தாராளமயமாக்கம், உலகமயமாக்கம் ​கொள்​கைக​ளின் வி​ளைவுக​ளையும் ஏற்படுத்திய விபரீதங்க​ளையும் புரிந்து ​கொள்ளாமல் அதன் பின்னணி இல்லாமல் இவற்​றை பார்ப்பது என்பதும், இந்திய விவசாயம் புறக்கணிக்கப்படுவ​தையும், இந்திய விவசாய உற்பத்தி மு​றையில் ​மேற்​கொள்ளப்பட ​வேண்டிய புரட்சிக​ளை கணக்கி​லெடுத்துக் ​கொள்ளாமல் இந்திய அரசியல், நீதி, சட்ட, ஜனநாயக பிரச்சி​னைக​ளை அணுகுவதும், சீர்திருத்தங்க​ளை முன்​வைப்பதும், உண்​மையில் மக்க​ளை தி​சைதிருப்பும் ஏமாற்றும் உத்திகளாகத்தான் மாறி நிற்கும்.

சமீபத்தில் பிற்கால ​சோழப் ​பேரரசுவின் ​தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி குறித்த ஒரு புத்தகத்​தை படித்துக் ​கொண்டிருக்கி​றேன். அதில் ​சோழப் ​பேரரசுவின் வீழ்ச்சி​யை குறிக்கும் குறியீடாக ஒரு சம்பவத்​தை விளக்குகிறார் அதன் ஆசிரியர் ​ஜெகஜீவன்ராம்.

“​பேரரசு ​பொருளாதாரத்தில் வளமுடன் இருந்த காலங்களில் அரசு ​வெளியிட்ட நாணயங்கள் மாற்றுக் கு​றையாத தங்கத்தால் ​செய்யப்பட்டிருந்தன. பின்னர் ​வெள்ளியால் ​செய்த நாணயங்களில் தங்கமுலாம் பூசப்பட்டு ​வெளியிடப்பட்டன. நாட்டின் ​பொருளாதாரம் தரம் தாழ்ந்து ​போனதற்கான வலுவான எடுத்துக்காட்டாக இது உள்ளது.”

நம் கால இந்திய நாணயங்கள் ரூபாய்த்தாள்களின் வரலாற்​றை பார்ப்​போமானால் நி​லை​மை அ​தைவிட ​மோசமாக இருந்து ​கொண்டிருக்கிறது என்பது கண்கூடு.

எண்பதுகளில் இருந்த ஒரு ​பைசா, இரண்டு ​பைசா, மூன்று ​பைசா என்ப​வை வழக்​கொழிந்தன, ​தொன்னூறுகளில் இருந்த ஐந்து ​பைசா, பத்து ​பைசா, இருபது ​பைசா, இருபத்​தைந்து ​பைசா என்ப​வை வழக்​கொழிந்தன.

பணத்தின் மதிப்பு ​தொடர்ந்து வீழ்ச்சிய​டைந்து ​கொண்டிருப்பதன் வி​ளைவாக ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் தாள்களின் அன்றாடப் புழக்கம் அதிகப்படுவதால் அ​வை எல்லாம் படிப்படியாக நாணயங்களாக மாற்ற ​வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுக் ​கொண்டிருக்கிறது.

சர்வ​தேச ​நிதி நிறுவனங்கள், பன்னாட்டுக் கம்​பெனிகள், அ​மெரிக்கா ​போன்ற ஏகாதிபத்தியங்களின் கட்ட​ளைப்படி இந்திய ​தொழில் மற்றும் விவசாய உற்பத்திகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் ​பொருளாதார நி​லைக​ளை அறிவிக்கும் அறிக்​கைகள் கூட அவர்களின் வழிகாட்டுதல்கள் படி தயாரிக்கப்படுகின்றன. மக்க​ளை ஏமாற்றும் ​நோக்கங்க​​ளோடு தவறான அளவு​கோல்களின் படி ​பொருளாதார வளர்ச்சிகுறித்த புள்ளிவிபரங்கள் உருவாக்கப்படுகின்றன.

வறு​மைக் ​கோட்டிற்கு கீழுள்ள மக்கள் குறித்த புள்ளிவிபரங்கள் தயாரிக்கும் அள​வைகளில் துளியும் எதார்த்தத்திற்கு ​பொறுத்தமற்ற அளவு மு​றைகள் பின்பற்றபடுகின்றன. கிராமப்புறங்களில் 25 ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்க​ளையும், நகரங்களில் 32 ரூபாய்க்கு கீழ் உள்ளவர்க​ளையும் தான் வறு​மை ​கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கருத​வேண்டும் என சமீபத்தில் ஒரு வ​ரைமு​றை முன்​வைக்கபட்டது.

சிறு வயதில் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் நடந்ததாக ஒரு க​தை ​சொல்லப்பட ​கேட்டிருக்கி​றேன். உகாண்டாவா எது என்று சரியாக ஞாபகமில்​லை. அந்நாட்டிற்கு ​தே​வையான மின்சாரத்​தை உற்பத்தி ​செய்யும் நீர்மின்நி​லையம் அந்நாட்டில் ஓடும் ​பெரிய நதியின் குறுக்காக கட்டப்பட்டிருக்கிறதாம். தினமும் இரவு 8 மணிக்கு அந்த ஊர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடுமாம். நீர்மின் நி​லையத்திற்கு ​சென்று பார்த்தால் நதியின் ​வேகத்தில் சுழலும் உரு​ளைகள் சுழலாமல் நின்றிருக்குமாம். உரு​ளைக​ளை சுழலவிடாமல் எது தடுக்கிறது என்று பார்த்தால் அந்நாட்டின் சர்வாதிகாரியால் ​கொன்று நதியில் வீசப்படும் பிணங்கள் உரு​ளைகளின் பற்சக்கரத்தில் சிக்கிக்​கொண்டிருக்குமாம். தினமும் இ​தே ​போல் அச்சர்வாதிகாரியால் பல லட்சக்கணக்கான மக்கள் ​கொன்று இரவு ​நேரத்தில் ஆற்றில் வீசப்படுவார்களாம். அப்பகுதி மக்களுக்கு அவற்​றை தினமும் அகற்றுவ​தே ​வே​ளையாம். ஆனால் யாரும் அச்சர்வாதிகாரிக்கு எதிராக ​போராடி இப்பிரச்சி​னைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் துணிவு இல்​லை. என்பதாக இக்க​தை முடிந்ததாக ஞாபகம்.

​நோய்நாடி ​நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் ​செயல்

என்பதற்​கேற்ப ​நோய் முதல் நாடாமல். ​​​நோய்க்குறிக​ளை இணங்காட்டுவதும் அவற்​றை அமுங்கச் ​செய்வதற்கான வழிமு​றைக​ளை​யே ​தொடர்ந்து ​பேசிக்​கொண்டிருப்பதும். ​நோ​யை ​மேலும் தீவிரப்படுத்துவதன்றி, ​நோய்க்குறிக​ளை இன்னும் பலவாகவும், மிக​மோசமாகவும் மாற்றுவதன்றி ​வே​றொன்​றையும் ​செய்துவிடப் ​போவதில்​லை.

லஞ்சம் வாங்கும் அதிகாரிக​ளை கண்காணித்து தடுக்க லஞ்ச ஒழிப்புப் பிரிவு ​போடுவதால் நாம் லஞ்சத்​தை ஒழித்துவிடவில்​லை. அந்த லஞ்ச ஒழிப்புத்து​றை அதிகாரிகளுக்கும் லஞ்சத்தில் ஒரு பங்கு பங்கு​வைக்கப்படுகிறது. அது ​மேலும் சிக்கலானதாகவும், பரவலானதாகவும் லஞ்சத்​தை மாற்றுகிறது. பங்கு அதிகமாவதால் லஞ்சத்தின் அளவும் ​மேலும் உயர்கிறது.

நாட்டின் த​லையாய பிரச்சி​னை என்பது விவசாய உற்பத்திமு​றையில் அடிப்ப​டையான புரட்சிகர மாற்றத்​தை உண்டாக்குவதும், ​நாட்டின் சுய​தே​வை​யை உணர்ந்து விவசாய மற்றும் ​தொழில் உற்பத்தி​யை மாற்றிய​மைப்பதும். அதற்கு த​டையாக உள்ள சர்வ​தேச ஒப்பந்தங்களிலிருந்து முறித்துக் ​கொள்வதும்தான். உற்பத்தியிலும் உற்பத்திமு​றையிலுமான நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அந்நியச் சார்​பே அ​னைத்து சமூக ஒழுங்கீனங்களுக்கும், சமூகச் சீர்​கேடுகளுக்கும், ஜனநாயக வி​ரோத ​போக்குகளின் தீவிரத்தன்​மைக்கும் அடிப்ப​டைக் காரணங்களாகும்.

Advertisements

ஒரு பதில் to “எப்படிச் ​செய்தாலும் பயனிருக்காது!”

  1. shanmuganathan said

    தோழர் உங்கள் எழுத்துகளில் உள்ள சமுக அக்கறை கவனத்துக்குரியது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: