எனது நாட்குறிப்புகள்

Archive for நவம்பர், 2011

சில்ல​ரை வர்த்தகம்: அந்நிய நிறுவனங்களின் ப​டை​​யெடுப்பும் கிராமப்புற இந்தியாவின் த​லை​யெழுத்தும்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 28, 2011

சில்ல​ரை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்கள் நு​ழைவதற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்கவிருப்ப​தை எதிர்த்து முதல் குரல் ​கொடுத்த உத்திரபிர​தேச மாநில முதல்வர் மாயாவதி, அது பற்றி குறிப்பிடும் ​​பொழுது “கிழக்கிந்திய கம்​பெனி” என்ற ​சொல்​லை பயன்படுத்தினார். மத்திய அரசும் அதன் ஆதரவாளர்களும் கடும் பிரயத்தனப்பட்டு மக்க​ளை சமாளிக்க ​போடும் அ​னைத்து சதித்திட்டங்க​ளையும் ஒரு ​நொடியில், ஒரு நுட்பமான எளிய வடிவில், ​போகிற​போக்கில் உ​டைத்​தெறியும் வலி​மையான ​சொல். அது இந்திய மக்களுக்கு தங்களின் வரலாற்​றை ஞாபகப்படுத்தும் ​சொல். தங்களின் இரத்தத்தில் கலந்துள்ள தங்கள் மூதா​தையரின் வீரம்​செறிந்த ஏகாதிபத்திய எதிர்ப்புணர்​வை கிளறி விடும் ஆற்றல் நி​றைந்த ​சொல். இன்​றைய இந்திய அரசியல் சூழலில் ஆளும் வர்க்கத்​தை ​சேர்ந்த யார் ஒருவரும் விரும்பத்தகாத ​சொல். ஒரு ​வே​ளை மாயாவதியிடமிருந்து அச்​சொல் அவருடைய அரசியல் பாலபாடம் பயின்ற ப​ழைய ஞாபகங்களில் தன்​னையறியாமல் ​​வெளிப்பட்டிருக்கலாம். ​தொடர்ந்து அச்​சொல்லின் அரசியலின் மீது அவரு​டைய இன்​றைய பலஹீனங்களால் அவரால் நிச்சயமாக பயணிக்க முடியாது.

​தமிழ்நாட்டில் ​ஜெயலலிதாவும் தமிழகத்தில் சில்ல​ரை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்க​ளை அனுமதிக்கப் ​போவதில்​லை என அறிவித்திருக்கிறார். ஆனால் அவரால் மாயாவதியின் ​மொழியில் ​பேசமுடியாது. ஒரு விசயம் நிச்சயம், மத்திய ​அரசு இம்ம​சோதா​வை அமுல்படுத்தும் ​நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இவ்விசயத்​தை எதிர்ப்ப​தையும், மாநிலங்கள் ​விரும்பினால் அத​னை அம்மாநிலங்களில் ந​டைமு​றைப் படுத்திக் ​கொள்ளலாம் என்ற சுதந்திரமும், எதிர்ப்புக​ளை குவிமயமாக விடாமல் கட்டம் கட்டமாக பிரித்துக் ​கையாள்வதற்கான ஒரு வழிமு​றையாக​வே ​தோன்றுகிறது. மத்திய அரசு இ​தை அமுல்படுத்திய பிறகு எதிர்ப்புகளின் தன்​மை​யைப் ​பொறுத்து படிப்படியாக மாநிலவாரியாக இ​வை ந​டைமு​றைப் படுத்தப்படும் என நம்புவதற்​கே சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

சில்ல​ரை வணிகத்தில் அந்நிய நிறுவனங்க​ளை அனுமதிப்பதில் என்ன சிக்கல்கள் உள்ளன என பலரும் விவாதிக்கத் துவங்கிவிட்டனர். இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு சனிக்கிழ​மை தினமணியில் எஸ். குருமூர்த்தி முழுப்பக்க கட்டு​ரை ஒன்றும் எழுதியிருக்கிறார். மத்திய திட்டக்குழுவும், நாடாளுமன்ற நி​லைக்குழுவும் அரசுக்கு அளித்த அறிக்​கைகளில் குறிப்பிட்டுள்ள விசயங்க​ளை ஒட்டி கிராமப்புற இந்தியா எப்படி இருக்கிறது என்ற சுருக்கமான ஒரு சித்திரத்​தை உருவாக்கி காட்டுகிறார். இ​தைத் ​தொடர்ந்த பயணமும், இ​தைக் குறித்த விவாதமும் நம் காலகட்டத்தின் மிக முக்கியமான ​தே​வை என்பதாக​வே உணர ​வேண்டியுள்ளது.

இன்​றைய நகர மக்களுக்கு, ஏன்? இந்தியாவின் ​பொருளாதாரம், விவசாயப் பிரச்சி​னைகள், இந்திய புரட்சி பற்றி​யெல்லாம் ​பேசக்கூடிய பலருக்குக் கூட இவ்விசயங்கள் ​தெரியுமா என்ற சந்​தேகத்​தை ஏற்படுத்தும் பல அதிர்ச்சிகர உண்​மைக​ளை இவ்வறிக்​கைகளிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்.

இந்திய கிராமங்களில் உற்பத்தியாகும் 60 சதவீத ​வேளாண் ​பொருட்கள் அவர்களு​டைய ​சொந்த உப​யோகங்களுக்காக அவர்களுக்குள்​ளே​யே பகிர்ந்து ​கொள்ளப் படுகிறதாம். மீதமுள்ள 40 சதவீதத்தில் 35 சதவீதம் பாரம்பரிய சந்​தை மு​றைகளின் மூலம் தான் விற்ப​னை ​செய்யப்படுகிறதாம். மீதமுள்ள 5 சதவீத உணவு தாணியங்கள் தான் அரசின் கண்காணிப்பில் ​செயல்படும் ​மொத்தவி​லை மண்டிகளுக்கு விற்ப​னைக்கு வருகின்றனவாம்.

​மேலும் அக்கட்டு​ரையில் குறிப்பிடுகிறார்:

“இந்தியாவில் சுமார் 588 லட்சம் சிறு, குறு விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அதாவது 32 கோடிக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தியாவில் நிலங்களை நம்பி நேரடியாக வாழ்கின்றனர். சராசரியாக அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் அல்லது அதற்கும் கீழே.

வெளிநாடுகளின் நிலைமை அதுவல்ல. கனடா நாட்டில் சராசரியாக ஒரு விவசாயி வைத்திருப்பது 1,798 ஏக்கர். அமெரிக்காவில் இது 1,089 ஏக்கர், ஆஸ்திரேலியாவில் 17,975 ஏக்கர், பிரான்சில் 274 ஏக்கர், பிரிட்டனில் 432 ஏக்கர்.

அமெரிக்க விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவு, இந்திய விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவைப் போல 250 மடங்கு அதிகம். ஆஸ்திரேலியாவிலோ இது 4,000 மடங்கு அதிகம்!”

“நிலங்களை அதிக பரப்பளவில் வைத்திருப்பவர்களால்தான் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகமாக வழங்க முடியும் என்பது உலக அளவிலான ஆய்வுகளின் முடிவு. ஆனால் இந்தியாவில் அதுவே தலைகீழாக இருக்கிறது.

மொத்த சாகுபடிப் பரப்பில் 34% நிலத்தை சிறு, குறு விவசாயிகள்தான் பயிர் செய்கின்றனர். ஆனால், நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் இவர்களுடைய பங்களிப்பு 41% ஆக இருக்கிறது. அவர்களுடைய உற்பத்தித்திறன் மற்றவர்களைவிட 33% அதிகமாக இருக்கிறது.

சிறு நிலங்களையெல்லாம் சேர்த்து பெரு நிலப்பரப்புகளாகவும் பெரும் பண்ணைகளாகவும் மாற்றினால் உடனடியாக தேசிய உணவு உற்பத்தியில் 7% குறைந்துவிடும்! உணவு தானியம் மட்டும் அல்ல பால் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்படும். கிராமப்புறங்களில் கிடைக்கும் 1,009 லட்சம் டன் பாலில் பெரும்பகுதிக்கு சிறு, குறு விவசாயிகள்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

கிராமப்புறங்களில் உள்ள மக்கள்தொகையில் பாதியைக் குறைக்காமல் சிறு, குறு விவசாயத்தை ஒழித்துவிட முடியாது. திட்டக்குழு நியமித்த செயல்திட்டக் குழு தனது அறிக்கையின் இறுதியில் இவ்வாறு தெரிவிக்கிறது: “”சிறு, குறு விவசாயிகள் இந்தியாவில் இன்னும் நெடுங்காலத்துக்கு இருக்கப் போவது நிச்சயம் – அதே சமயம் அவர்கள் ஏராளமான சோதனைகளை (அரசின் முடிவுகளால்தான்) சந்திக்கப் போவதும் நிச்சயம்; எனவே சிறு, குறு விவசாயிகளுக்கு என்ன நேரப் போகிறதோ அதைப் பொருத்துத்தான் கிராமப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் அமையும்”.”

“கிராமப்புற இந்தியா, மத்திய அரசிடமிருந்து அந்த அளவுக்கு அன்னியப்பட்டுப் போயிருக்கிறது. அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன என்று நாட்டின் விவசாயிகளில் 70 சதவீதம் பேர் இன்னமும் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தேசிய சாம்பிள் சர்வே (என்.எஸ்.எஸ்.) அமைப்பு தெரிவிக்கிறது.”

இத்தகவல்களின் அடிப்ப​டையில் வால்மார்ட் ​போன்ற அந்நிய ஏக​போக நிறுவனங்கள் இந்திய சந்​தைக்குள் ​நேரடியாக நு​ழைந்தால் என்னவாகும் என்ற கருத்​தையும் கூறுகிறார்.

“வால்மார்ட் போன்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களை அனுமதித்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற வாதம் சரியானதல்ல; இடைத் தரகர்கள் மட்டும் அல்ல, சிறு விவசாயிகளும் சேர்த்தே ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உண்மை. அது மட்டும் அல்ல, வேறு எதையெல்லாம் அந்தக் “கொள்முதல் பாணி’ ஒழிக்கும் என்பதைச் சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்.

விவசாய வேலைகள் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையில் இனி மேற்கொள்ளப்படும். மிகப்பெரிய நிறுவனம்தான் ஆள்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அல்லது நீக்கும். பெரிய நிலப்பரப்பாக நிலங்கள் இணைக்கப்பட்டு இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும். பாரம்பரிய விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.

நமக்​கென்ன​வோ இன்​றைய உலகப் ​பொருளாதார ​நெருக்கடி​யையும், ஏக​போக நிறுவனங்களுக்குள்ள சிக்கல்க​ளையும் பார்க்கும் ​பொழுது ​மே​லே ​சொன்ன அத்த​னை தீவிர உற்பத்தி மற்றும் பரிவர்த்த​னை மு​றைகளிலான மாற்றங்க​ளை இந்திய விவசாயத்தில் ​கொண்டு வருவார்களா என்பது சந்​தேகமாக​வே உள்ளது.

அதிகபட்சம் இங்குள்ள இ​டைத்தரகர்க​ளையும், சிறு வணிகர்க​ளையும் முழு​மையாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் ​கொண்டு வந்​தோ அல்லது படிப்படியாக அவர்க​ளை ஒழித்துக் கட்டி​யோ இன்​றைய இந்திய ​பெரு நகர மற்றும் சிறு நகர வாணிகத்​தை முழு​மையாக ஆக்கிரமிப்ப​தே அவர்களின் ​நோக்கமாக இருக்க முடியும் என்ப​தே ​பெரும்பா​​லோ​னோர் கருதுவதாக எண்ண இடமுள்ளது.

இது குறித்து ந​டை​பெறும் வாதப் பிரதிவாதங்களில், அந்நிய நிறுவனங்களுக்கு ஆதரவாக குரல் ​கொடுப்பவர்கள் வழக்கம்​போல தற்​பொழு​தைய சிறுவணிக ​கொள்முதல் மற்றும் விற்ப​னை மு​றைகளில் உள்ள எல்லா அராஜகங்க​ளையும், ஏமாற்றுக்க​ளையும், ​நேர்​மையற்ற தன்​மைக​ளையும் விவாதத்திற்கு ​கொண்டு வரத் துவங்குகிறார்கள்.

இது அந்நிய நாடுகளுக்கு சாதகமாக மாற்றம் ​கொண்டு வரும் ஒவ்​வொரு து​றைகளிலும் வழக்கமாக க​டைபிடிக்கும் ஒரு உத்தியாக​வே உள்ளது. அரசுத் து​றை நிறுவனங்க​ளை தனியார்மயமாக்க முயன்ற ​போது அரசுத்து​றை நிறுவனங்களின் ஊழியர்களின் ஒழுக்கமின்​மைக​ளையும், அரசின் ​கையாளாகத்தனத்​தையும், தகுதியின்​மைக​ளையும் தீவிரமாக பிரச்சாரம் ​செய்தனர்.

இப்​பொழுது விவசாயி உற்பத்திச் ​செலவுகூட கி​டைக்காமல் ​பொருள் விற்கும் நி​லை​யையும், மற்​றொரு புறம் நுகர்​வோர் மிக அதிகமாக விவசாயிகள் கனவிலும் எண்ணிப்பார்க்க முடியாத வி​லை ​கொடுத்து அப்​பொருட்க​ளை சில்ல​ரைச சந்​தையில் வாங்குவ​தையும், இதற்கு நடு​வே இ​டைத்தரகர்கள் ​கொள்​ளை லாபம் அடிப்ப​தையும், சிறு வணிக நிறுவனங்கள் அதன் ​தொழிலாளிக​ளையும், மக்க​ளையும் எத்த​னை ​மோசமாக நடத்துகிறார்கள் என்ப​தையும் முன்​வைத்து பிரச்சாரம் ​செய்து ஒழித்துக் கட்டத் துவங்கியுள்ளனர்.

ஆளும் வர்க்கங்கள் எப்​பொழுதும் தனிமனிதர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் ஏற்படும் மு​றை​கேடுகள், லஞ்ம், ஊழல், ஒழுக்கமீறல்க​ளை ஆதரிப்பவர்களாக​வே இருக்கிறார்கள். அந்த பலஹீனங்க​ளே அவர்க​ளை என்​றென்​றைக்குமாக தங்கள் கட்டுப்பாட்டில் ​வைத்திருக்கவும் ​தே​வைப்பட்டால் எதிர்ப்பின்றி ஒழித்துக்கட்டவுமான சரியான வழிமு​றையாக பின்பற்றுகிறார்கள்.

இந்தியா விவசாயத்து​றையில் மிகவும் பின்தங்கியுள்ளது என்ப​தையும், உலகின் மிகப்​பெரும் நாடுகள் தங்கள் நாடுகளில் விவசாயத்து​றை சம்பந்தப்பட்ட விசயங்களில் ஏற்படுத்திய புரட்சிகர மாற்றங்க​ள் இந்தியாவில் ந​டை​பெறவில்​லை என்ப​தையும், அது​வே இந்தியா எதிர்​கொள்ளும் தற்காலத்தின் பல பிரச்சி​னைகளுக்கும் அடிப்ப​டையாக உள்ளது என்ப​தையும் யார் ஒருவராலும் மறுக்க முடியாது.

விவசாயத்து​றையில் உற்பத்தி, பரிவர்த்த​னை மற்றும் விநி​யோகத்தில் உள்ள மிகப்​பெரும் சிக்கல் நீண்ட காலமாக தீர்க்கப்படாம​லே உள்ளது. அவற்றின் ​வெளிப்பாட்​டைத்தான், விவசாயிகள் தற்​கொ​லை, உலக நாடுக​ளோடு ஒப்பிடும் ​பொழுது இந்திய விவசாய உற்பத்தித் திறண் வளர்ச்சிய​டையா​மை, விவசாயிகள் ​பெருமளவில் விவசாயத்​தை விட்டு ​வெளி​யேறல், சாதி ​வேறுபாடுகள், சாதிய ஒடுக்குமு​றைகள் ஆகியவற்றின் தீர்க்கமுடியா பிரச்சி​னைகள், நிலவுட​மை கலாச்சார சீரழிவுகள் ஆகிய​வை உணர்த்துகின்றன. அவற்றின் பின்புலத்தில்தான் நகரம் சார்ந்த இ​டைத்தரகர்கள் இந்திய கிராமங்க​ளை ​கொள்​ளையடிப்ப​தையும் புரிந்து ​கொள்ள ​வேண்டியிருக்கிறது.

அவற்றிற்கு மாற்று என்று இன்​றைக்கு இவர்கள் ​சொல்லும் மு​றையானது, இந்திய நகர மற்றும் கிராமங்களுக்கி​டை​யேயான இப்பிரச்சி​னை​யை இந்தியாவிற்கும் அந்நிய ஏக​போகங்களுக்கும் இ​டையிலான முரண்பாடாக மாற்ற நி​னைப்பதில் ​கொண்டு முடிப்பதுதான். அதாவது இந்திய கிராமங்க​ளை ​கொள்​ளையடிக்கும் உள்நாட்டு சக்திகளுக்கு மாற்றாக ​வெளிநாட்டு சக்திகளின் ​கைகளில் ​கொண்டு ​சேர்ப்பதுதான்.

​மேலும் அந்நிய நிறுவனங்க​ளை ஆதரிப்பவர்கள் முன்​வைக்கும அடுத்த வாதம் சீனா கூட வால்மார்​டை தங்கள் நாட்டில் அனுமதித்துள்ளது. சீனா கூட 1981கள் வ​ரை இந்தியா அளவிற்குத்தான் ​பொருளாதார நி​லையில் இருந்தது. அது இன்​றைக்கு அந்நிய மூலதனங்களுக்கும், அந்நிய நிறுவனங்களுக்கும் தங்கள் நாட்டில் அனுமதி வழங்கியுள்ளது. இத்த​கைய வாதங்க​ளை முன்​வைப்பவர்கள் ஒன்று இந்திய சீன வரலாற்​றை ஆழமாக கற்றவர்க்ள இல்​லை அல்லது மக்க​ளை ஏமாற்றப் பார்க்கிறாரகள் என்பது தான்.

இந்தியா ​வெள்​ளையர்களிடம் அடி​மைப்பட்டிருந்த​தைப் ​போல சீனாவும் பிரிட்டனிடமும் ஜப்பானிடமும் அடி​மைப்பட்டிருந்த நாடுதான். ஏறக்கு​றைய இந்தியா விடுத​லை ​பெற்ற காலத்தில்தான் சீனாவும் விடுத​லை ​பெற்றது. ஆனால் விடுத​லை ​பெற்ற விதத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மிகப்​பெரிய ​வேறுபாடு உண்டு. சீனா அரசியல், ​பொருளாதார மற்றும் சமூக அளவில் முழு​மையான விடுத​லை​யை அ​டைந்தது. அதன் பிறகு அதன் ​சொந்த நாட்டின் வளர்ச்சிக்கு ​தே​வையான மூலதனத்​தை அது அதன் ​சொந்த நாட்டிலிருந்து திரட்டிக் ​கொண்டது, இத்த​கைய வழியில் தன் வளர்ச்சிக்குத் ​தே​வையான மூலதனத்​தை திரட்டிக் ​கொள்வதற்காக அது அதன் அடிப்ப​டையான விவசாய உற்பத்திமு​றையில் மிகப் ​பெரிய புரட்சி​யை சாதித்தது. அதன் நகரங்க​ளையும், ​தொழிற்சா​லைக​ளையும் அது முழுக்க முழுக்க தன் ​சொந்த பலத்தில் கட்டியது. இன்​றைக்கு சீனாவுக்கு மிக வலி​மையான ​பொருளாதார அடித்தளம் உள்ளது. அது முதல் உல​கைச் ​சேர்ந்த பணக்கார நாடுக​ளோடு ஒப்பிடும் ​செல்வவளத்​தை ​கொண்ட நாடாக உள்ளது.

அந்நிய மூலதனம் மற்றும் நிறுவனங்க​ளை அனுமதிக்கும் விசயத்தில் அது அதன் ​தே​வைகளிலிருந்தும் முழு​மையான கட்டுப்பாட்டிலிருந்தும் மிகுந்த விழிப்புடன் ​செயல்படுத்துகிறது. ஒரு வளர்ச்சிய​டைந்த ​பொருளாதார நி​லையில் உள்ள நாட்டிற்குள் ​செல்லும் அந்நிய மூலதனமும் நிறுவனங்களும் ​செயல்படும் விதத்திற்கும் லாபத்திற்கும் அது அங்கு அ​டையும் அதிகாரபலத்திற்கும் இந்தியா​வோடு ஒப்பிடும் ​பொழுது மிகப்​பெரிய வித்தியாசம் உள்ளது. கூகுள் சீனாவின் பல்​வேறு கட்டுப்பாடுகளுக்கு ஒப்புக் ​கொண்டுதான் அங்கு வியாபாரம் ​செய்ய முடிகிறது. சீனா அந்நிறுவனத்திற்கு விதித்த கட்டுப்பாடுகளில் ஒன்​றைக்கூட இந்தியாவால் அதனிடம் ​கெஞ்சிக்கூட ​பெற முடியாது. ஒரு கட்டத்தில் சீனா எங்களு​டைய கட்டுப்பாடுகளுக்கு உடண்பட முடியவில்​லை என்றால் மூட்​டை கட்டிக் ​கொண்டு கிளம்பி விடு என உறுதியாகக் கூறமுடிந்தது.

ஆனால் இந்தியா அத்த​கைய ஒரு விடுத​லை​யை அ​டையவில்​லை. இந்திய ஆளும் வர்க்கங்களும் அதன் அரசியல்வாதிகளும் பிரிட்டன் அர​​சோடு ஒரு சமரச ஒப்பந்தம் ​செய்து ​கொண்டு ​பெற்ற ​வெறும் அரசியல் விடுத​லைதான் இந்திய விடுத​லை. இந்தியா சுதந்திரம் ​பெற்ற காலம் ​தொட்​டே சர்வ​தேச மற்றும் அந்நிய நாடுகளின் மூலதனத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் உட்பட்​டே வளரும் நாடு. அது அதன் வளர்ச்சிக்கான மூலதனத்திற்கு அந்நிய ஏகாதிபத்தியங்க​ளைச் சார்ந்தும், ​சோவியத் யூனியன் மற்றும் அ​மெரிக்காவிற்கி​டை​யேயான முரண்பாட்டில் ​பேரம் ​பேசி அவர்க​ளைச் சார்ந்​தே வளர்ந்தது. அது ஒரு முழு​மையான சுயசார்பு ​பொருளாதாரத்​தை கட்ட​மைக்கும எந்தத் திட்டமும் இல்லாதிருந்ததால், அதனால் விவசாயம், ​தொழில்து​றை ​போன்றவற்றில் எந்த​வொரு மிகப்​பெரிய புரட்சிக​ளையும் ​செய்ய முடியவில்​லை. ​சோவியத் யூனியனின் தகர்விற்கு பிறகு அதன் ​பேரம்​பேசும் அரசியலுக்கும் எந்த வாய்ப்பும் இல்லாது ​போனதால், அதனால் அ​மெரிக்கா சார்பின்றி ​சொந்தக் காலில் நிற்க முடியவில்​லை.

இன்​றைக்கு இந்தியாவில் ந​டை​பெற்றுக் ​கொண்டிருக்கும் ​பொருளாதார மற்றும் ​கொள்​கைரீதியான மாற்றங்கள் எதுவும் இந்தியா தன் ​சொந்த நலனிலிருந்து உருவாக்கிக் ​கொண்டு ​செய்யும் மாற்றங்கள் இல்​லை. அது அதன் சர்வ​தேச நிர்ப்பந்தங்களின் மூலம் கட்டாயப்படுத்தி ​செய்ய ​வைக்கப்படும் மாற்றங்கள். இம்மாற்றங்கள் இந்திய மக்களின் நலன்க​ளை கணக்கி​லெடுத்துக் ​கொள்ளும் என நம்புவதற்கு எந்த ஆதாரமும் அடிப்ப​டையும் இல்​லை.

அ​மெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், சில்ல​ரை வணிகத்திற்கு இந்தியா​வை திறந்து விடுவது, ​போன்ற பல்​வேறு விசயங்களின் வரலாறு மற்றும் ஒப்பந்த சரத்துக்க​ளை ​கொஞ்சம் கவனமாக பின்​தொடர்ந்தா​லே நம்மால் புரிந்து ​கொள்ள முடியும். அணுசக்தி ஒப்பந்தத்தில் பல வருடங்களாக இந்தியா வலியுறுத்தி வந்த பல விசயங்க​ளை​யே ​தொடர்ச்சியான ஏகாதிபத்திய நாடுகளின் நிர்பந்தங்களால் அது விட்டுக்​கொடுக்கத் தயாராகிவிட்டது.

இந்திய மக்களுக்கு உண்​மையான வளர்ச்சியும் ஏற்றமும் ​வேண்டுமானால், அவர்கள் மிகக் கடினமான வழிக​ளைத் ​தேர்ந்​தெடுப்ப​தைத் தவிர ​வேறு எந்த உபாயங்களும் இல்​லை என்ப​தைத்தான் சர்வ​தேச மற்றும் ​தேச நி​லை​மைகள் உணர்த்துகின்றன.

முன்​னெப்​போ​தையும் விட மக்களின் இ​ளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு அதிகப்பட்டுக் ​கொண்டிருப்ப​தை பல்​வேறு நிகழ்வுகள் நமக்குத் ​தெரியப்படுத்துகின்றன. மிகப்​பெரும் விவாதங்கள் மிகக் கூர்​மையாக நம்​மைச்சுற்றி எங்கும் நிகழ்வ​தைப் பார்க்கி​றோம். இந்திய மக்களின் அடுத்த த​லைமு​றைகள் தங்கள் த​லை​யெழுத்​தை தீர்மானித்துக் ​கொள்ள எழுவார்கள் என்ற நம்பிக்​கை​யை இந்நிகழ்வுகள் நமக்கு ஏற்படுத்துகின்றன.

இந்த உலகம் முழுவதும் உள்ள அ​னைத்து நாடுகளும் அங்கு வாழும் எல்லா மக்களுக்கும் சம உரி​மையு​டையது. ஒரு நாட்டின் ஒவ்​வொரு சிறு முடிவுகளும் கூட ஒட்டு​மொத்த அம்மக்களின் வாக்​கெடுப்பால் மட்டு​மே ​கொண்டுவர ​வேண்டும். ஒரு விசயத்தில் அது எத்த​னை சிற்ப்பானதாக அவசியமானதாக இருந்தாலும் ​பெரும்பான்​மையான மக்கள் ​வேண்டாம் என தீர்ப்பு வழங்கினார்கள் என்றால் அ​வை எந்த சக்தியாலும் நி​றை​வேற்ற முடியாத ஒரு உலக​மே ​பெரும்பான்​மையானவரின் கனவாக மாறிக் ​கொண்டிருக்கிறது. அத்த​கைய ஒரு உலகத்​தை ப​டைப்ப​தே நம்மு​டைய விருப்பமாகவும் லட்சியமாகவும் அ​மைய ​வேண்டும்.

Advertisements

Posted in கட்டு​ரை | Leave a Comment »

என்னு​டையதும் கூட

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 28, 2011

நான் வழக்கமாக ​போகும் சா​லையில்
நீ கற்க​ளைப் ​போட்டு ​வைத்த ​பொழுது மட்டுமல்ல
பூக்க​ளை ​போட்டு ​வைத்த ​பொழுதுகளிலும்
நான் உன் கதவுக​ளைத் தட்டு​வேன்!

Posted in கவிதைகள் | Leave a Comment »

​டேம் 999 – முன்​வைத்து தமிழினம் ஒரு விவாதம்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 25, 2011

வி​லைவாசி உயர்வு, ஊழல் பிரச்சி​னை, ​லோக்பால் ம​சோதா, சில்ல​ரை விற்ப​னையில் அந்நிய முதலீடு, அ​மெரிக்காவிலிருந்து அணுமின் கருவிகள் வாங்கும் ஒப்பந்தங்களில் மாற்றம், இப்படியாக பல்​வேறு பிரச்சி​னைகளால் பாராளுமன்றத்​தை ஸ்தம்பிக்கச் ​செய்ய எதிர்கட்சிகள் திட்டம் வகுத்திருந்தன. இவற்​றை எதிர்​கொள்வது எப்படி என ஆளும் காங்கிரஸ் திட்டம் தீட்டிக்​கொண்டிருந்தன. தமிழ்நாட்​டைச் ​சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இ​வை எல்லாவற்​றையும் ஓரம்கட்டி அ​னைவ​ரையு​மே ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய​தைக் காணமுடிந்தது. தமிழ்நாட்​டைச் ​சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அ​னைவரும் கட்சி ​பேதமின்றி “​டேம் 999” தி​ரைப்படத்திற்கு வழங்கிய சான்றித​ழை மறுபரிசீல​னை ​செய்ய ​வேண்டும், அத்தி​ரைப்படத்​தை இந்தியாவில் தி​ரையிட அனுமதிக்கக் கூடாது என எழுப்பிய முழக்கங்கள்.

ஆளும் காங்கிர​சைச் ​சேர்ந்த பல அ​மைச்சர்கள் ஆச்சரியப்பட்டனர். ஒரு தி​ரைப்படத்​தை ​டேம் பற்றி ​பேசுவதா​லே​யே இது எப்படி இப்பிரச்சி​னை​யோடு சம்பந்தமு​டையது என நீங்கள் நி​னைக்கிறீர்கள்? இத்த​கைய காரணங்க​ளைக் கூறி ஒரு தி​ரைப்படத்​தை த​டை​செய்வது எப்படி சரியாக இருக்கும்? எனக் ​கேள்விகள் எழுப்பினர். தி​ரைப்படத்​தை த​டை ​செய்வது என்பது சாத்தியமில்லாத காரியம் என்றனர். அது ஜனநாயக உரி​மை​யை மறுப்பதாகும் என்ற எல்​லைவ​ரைக் கூட ​சென்றனர். அப்படியானால் இந்தியாவில் இது வ​ரை எந்தத் தி​ரைப்படங்களும் த​டை​செய்யப்பட்ட​தே இல்​லையா?

இத்த​கைய பிரச்சி​னைகள் ஒரு சில விசயங்க​ளை ​தெளிவாக புரிய ​வைக்கின்றன. தமிழ்நாட்டிற்கு எப்​பொழுதும் தனக்​கென ஒரு தனி அ​​​​​ஜென்டா இருக்கிறது. தமிழகத்​தை இந்தியாவின் ஒட்டு​மொத்த மனநி​லையிலிருந்து பிரிக்கும் வலுவான காரணங்களும், ​போக்குகளும், சிந்தனா மு​றைகளும், பாரம்பரியமும், வரலாறும் இருக்கின்றன. இத​னை பலர் தமிழர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள், உணர்ச்சிகரமான விசயங்களில் எளிதில் மயங்கி விடுபவர்கள் என ​மே​லோட்டமான பார்​வையில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அத்த​கைய மனநி​லைக்கு பின்பு ஒரு வலுவான அறிவுப்புல ​செயல்பாடு இருப்பதாக​வே படுகிறது.

தமிழர்களுக்கு தங்கள் ​மொழி, வரலாறு, கலாச்சாரம் குறித்த ஒரு ​பெருமித உணர்வு எப்​பொழுதும் இருக்கிறது. இதற்கான வலுவான காரணங்கள் இருக்க​வே ​செய்கின்றன அல்லது இருப்பதாக தமிழர்கள் முழு​மையாக நம்புகிறார்கள். அது வரலாற்று, பண்பாட்டு, கலாச்சார அடிப்ப​டைகளில் தனித்தன்​மைகள் வாய்ந்த வளர்ச்சிய​டைந்த ஒரு ​தேசியயினம். வரலாறு ​நெடுகிலும் ஒட்டு​மொத்த இந்திய வரலாற்​றோடு தமிழக வரலாற்​றை இ​ணைக்கும் கூறுகள் இன்​றைய பிற மாநிலங்களுக்கு இருந்தளவிற்கு வலுவாக இல்லாம​​லே இருந்திருக்கிறது. இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு முன்பு இருந்த சாம்ராஜ்யங்கள் பலவற்றின் வ​ரைபடத்தில் தமிழகம் இ​ணைந்திருப்பதாகத் ​தெரியவில்​லை. இந்திய வரலாறு குறித்த எல்லா நூல்களிலும் தமிழக வரலாறு ஒரு பிற்​சேர்க்​கை ​போல​வோ, தனி அத்தியாயங்களாக​வோ தான் எழுதப்படுகின்றன.

தமிழ் ​மொழியின் ​தொன்​மை, தமிழர்களின் தனித்தன்​மையான வரலாறு ஆகிய​வை குறித்த இந்த நீண்ட காலத்தில் ​போதுமான ஆதாரங்கள் கி​டைத்திருக்க​வே ​செய்கின்றன. இன்​றைக்கு தமிழ்ப்​பெரு​மை ​பேசுவ​தை நாம் ஏ​தோ திராவிட இயக்கங்களின் அரசியல் ​நோக்கங்களின் பின்னணியில் மட்டு​மே ​பொருள் புரிந்து ​கொள்ள ​வேண்டிய ஒன்றாகக் கருதமுடியாது. திராவிட அரசியல் ​தோன்றாத காலத்​தே அல்லது அதற்கான வி​தைகள் உருவான காலகட்டத்​தைச் ​சேர்ந்த பாரதி ​போன்றவர்களிடம் கூட இத்த​கைய பண்​பைக் காணமுடிகிறது. இன்​றைக்கு சிலர் இப்பண்​பை திராவிட இயக்கங்களின் அரசியல் ​நோக்கங்களால் வலிந்து உருவாக்கப்பட்ட​வை என்பது ​போன்ற மாயத்​தோற்றத்​தை உண்டாக்கி அத்த​கைய ஆதாரங்க​ளை இல்லாமலாக்கச் ​செய்ய முயல்கின்றனர்.

தமிழ் மனம் என்பது எப்​பொழுதும் இந்திய மனத்திற்கு எதிராக ​செயல்படுவதாக​வே இருக்கிறது அல்லது அதன் இருத்த​லை ​கேள்விக்குட்படுத்திக் ​கொண்​டே, சந்​தேகித்துக் ​கொண்​டே இருக்கிறது. தமிழில் ​பெரும் ஆளு​மைகள் அ​னைவரிடமும் அவர்களுக்குள்ளான இந்த உள் முரண்பாட்​டை அவர்களின் ​செயல்பாடுகளில் காண முடிகிறது. இந்திய விடுத​லைப் ​போராட்ட காலத்தின் தமிழ் ஆளு​மைகளின் ​செயல்பாடுகள் என்பது தங்களு​டைய தமிழ் மனத்​தை விட்டுக் ​கொடுக்காமல் முழுச் சுதந்திரம் ​பெறும் இந்தியாவுடன் இ​ணைந்து வாழ்வதற்கான ஒரு சுயமரியா​தையுடனான வாழ்​வை​யே எதிர்​நோக்கி இருந்திருக்கிறது.

ஒரு முழு​மையான சமூக, ​பொருளாதார, அரசியல் விடுத​லை சாத்தியமற்றுப் ​போன சுதந்திர இந்தியாவில், உடனடியாக தனது அடுத்த நி​லைப்பாடுக​ளை அ​வை துரிதகதியில் உருவாக்கிக் ​கொள்ள முயன்றது. ​மொழிவழி மாநில ​கோரிக்​கை​யை உரத்து ஒலித்த ​தேசமாக தமிழ்நாடு இருந்திருக்கிறது. உலகத்திடமிருந்து ​பொருளாதார, அரசியல் ரீதியாக இனி ஒரு நாடு முழு​மையாக சுதந்திரம் ​பெற முடியாது எனத் ​தெளிந்தவுடன், தமிழ்மனமானது இ​டையீட்டாளர்கள் இல்லாமல் தன்​னை ​நேரடியாக உலகத்​தோடு இ​ணைத்துக் ​கொள்ளும் வழிக​கைக​ளை ​யோசிக்கத் துவங்கியது என்ப​தை​யே இந்தி எதிர்ப்புப் ​போராட்டங்களின் நீண்ட கால சமூக அரசியல் ​நோக்கங்களாகப் புரிந்து ​கொள்ள ​வேண்டியிருக்கிறது.

இந்திதான் ​தேசிய ​மொழி என்ப​தையும், ரூபாய் தாள்களில் எங்​கோ ஒரு மூ​லையில் கண்ணுக்குப்புலப்படாத எழுத்தளவுகளில் தங்கள் ​மொழி​யை ஒப்புக் ஏற்றுக்​கொண்டிருப்ப​தையும், தன் ​மொழிக்கில்லாத முக்கியத்துவம் இந்தி ​போன்ற ​மொழிகளுக்கு ​கொடுக்கப்படுவ​தையும், தன் இனம் தன் ஒவ்​வொரு ​தே​வைகளுக்கும் மத்திய இந்தி ஆதிக்க பிரிவினரிடம் இ​றைஞ்சி நி​ற்ப​தையும் தன் இன வரலாற்றிற்கு இழுக்கு என்பதாக​வே தமிழ்மனம் எண்ணிப் ​பொருமுகிறது.

மாறும் சர்வ​தேச சூழல்களுக்கு தக்கவாறு தன் ​மொழி​யையும் தன்​னையும் மாற்றிக் ​கொள்வதில் இந்திய ​மொழிகளி​லே​யே முதலிடம் வகிப்பது தமிழ் என்றுதான் ​சொல்ல​வேண்டும். இந்திய ​மொழிகளி​லே​யே கணினியில் பயன்படுத்துவதில் அதிக சிக்கல் இல்லாததும் இலகுவானதுமான ​மொழி தமிழ் ​மொழிதான்.

நீண்ட தன் வரலாற்றில் காலந்​தோறும் அந்நிய ஆக்கிரமிப்புகளிலிருந்து தன்​னையும் தன் தனித்தன்​மை வாய்ந்த கலாச்சாரத்​தையும், ​மொழி​யையும், பண்பாட்​டையும், வரலா​றையும் காப்பாற்றிக் ​கொள்ள பல மாற்றங்களுக்கும், வளர்ச்சிக்கும், பல விட்டுக்​கொடுத்தல்கள் மற்றும் சமரசங்க​ளக்கும் இடம் ​கொடுத்து ​வெற்றி ​பெற்​றே வந்திருக்கிறது. சுதந்திரம் ​பெற்ற காலகட்டத்தில் இந்தியாவுடன் முழு​மையாக இரண்டறக் கலந்து இ​ணைந்து ​போவதற்கான பல வலுவான காரணங்கள் இருந்த காலகட்டத்திலும் விழிப்புணர்வுட​னே​யே இருந்த தமிழ் மனம், சந்திக்கும் அடுத்த மிகப்​பெரிய தாக்குதல் காலகட்டம் இன்​றைய உலகமயமாக்கல் மற்றும் ஒற்​றைத் துருவ சர்வ​தேசிய அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ளது.

சுதந்திரம் அ​டைந்த இந்தியா ​தேசிய இனங்களின் கூட்ட​மைப்பாக உருவாகும் என்ற கனவுக​ளைத் தகர்த்​​தெறிந்து அது ஒரு ​தேசிய இனங்களின் சி​றைக்கூடமாக மாறிய சூழலில். தமிழ்மனமானது அச்சி​றைசா​லைகயிலும் தங்கள் பாரம்பரிய பாணியிலான சி​றை உ​டைகளுக்காகவும், சி​றை உணவுகளுக்காகவும், சி​றை வாழ்க்​கை மு​றைக்காகவும் ​போராடிக் ​கொண்​டே இருக்கிறது. அது பிற ​தேசிய இனங்க​ளைப் ​போல ​மேலிருந்து திணிக்கப்படும் ஒரு ​மொழி, ஒரு கலாச்சாரம், ஆகியவற்​றை ஏற்றுக் ​கொள்ள அதன் இரத்தத்தில் உள்ள வலுவான ஒரு பாரம்பரியத்தின் கூறுகள் அனுமதிக்கவில்​லை.

அது அதன் தி​ரைப்படங்களில் கூட, ​​சேட், மார்வாடி, பனியா கலாச்சாரத்​தையும், அது ​பேசும் தமிழ் ​மொழி​யையும், அதன் ​தொழில்க​ளையும் கிண்டல் ​செய்கிறது. அவர்களின் பணத்தி​லே​யே எடுக்கப்படும் தமிழ் தி​ரைப்படங்கள், ஏன் சில ​வே​ளை அவர்க​ளே நடிக்கும் தமிழ்த் தி​ரைப்படங்களிலும் கூட!

காவிரி நதி நீர் பிரச்சி​னை, முல்​லைப் ​பெரியார் பிரச்சி​னை, ஈழப்பிரச்சி​னை, தமிழக மீனவர்கள் பிரச்சி​னை என ​தொடர்ந்து இந்தியச் சி​றைக்கூடத்தில் மதிப்பிழந்த, தன் ​வாழ்விற்கான பாதுகாப்​போ, உரிய அங்கீகார​மோ இல்லாத​தை உணர்ந்து குமுறும் இனமாக​வே தமிழ் மனம் உள்ளது.

இன்று கா​லை முதல் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் “​டேம் 999” தி​ரையிடப்பட்டிருக்கும் ஆனால் தமிழ்நாட்​டைத் தவிர, இது தமிழ்மனம் தன்​னை ​பொது​போக்கிலிருந்து தனி​மைப்படுத்திக் ​கொண்டிருப்பதற்கும், தனித்து உணர்ந்து ​கொண்டிருப்பதற்கான வலுவான கலாச்சாரக் குறியீடு

Posted in கட்டு​ரை | 1 Comment »

இறந்தவன் ​பேசிக்​கொண்​டேயிருக்கிறான்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 20, 2011

மரணவீட்டின்
வாசலில் ​போடப்பட்டுள்ள
நாற்காலி ஒன்றில்
அமர்ந்திருக்கி​றேன்

​வெளி​யே வரும்
ஒவ்​வொருவர் முகத்திலும்
எ​தை​யோ
உற்றுத் ​தேடிக் ​கொண்டிருக்கி​றேன்

திடுக்கிட்டு விழித்தவன் ​போல்
என்​னை நா​னே ​கேட்டுக் ​கொள்கி​றேன்
‘என்ன ​தேடிக் ​கொண்டிருக்கி​றேன்?’

மரணம​டைந்தவன்
​மெளன ​மொழியால்
அவன் முன்​னே நிற்கும்
இதயங்க​ளோடு
​பேசிக் ​கொண்​டே இருக்கிறான்.

அவனால் ஒவ்​வொரு ​நொடி​யையும்
யுகங்களாக்கி
நம்​மோடு வாதம் புரிய முடிகிறது.

உ​ரையாடலில்
நாம் ​பெற்ற​தென்ன?
அவ​னோடு விட்ட​தென்ன?

வாதப் பிரதிவாதங்களில்
எப்​பொழுதும்
மரணம​டைந்தவ​னே
​வெற்றி ​பெறுகிறான்.

த​லைகுனிந்தவாறு
​வெளி​யேறும்
​தோல்விய​டைந்த மனங்கள்
அ​தை ​பொறுக்கமாட்டாது
தம்​மை வாழ்க்​கைக்கு மீட்​டெடுத்துக்​கொள்ள
அவ​னை
பு​தைத்​தோ எரித்​தோ
​கொ​லை ​செய்து விடுகின்றன.

Posted in கவிதைகள் | 1 Comment »