எனது நாட்குறிப்புகள்

ஏழாம் அறிவு

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 1, 2011

படத்​தைப் பற்றி ​பெரிய அளவில் எந்த முன்க​தைச் சுருக்கத்​தையும் ​கேட்கவில்​லை. ஏன் விளம்பரங்க​ளை​யோ, விமர்சனங்க​ளை​யோ எ​தையும் படிக்கவில்​லை. ஞாயிறு மா​லை ​பேபி ஆல்பர்ட்டிற்கு குடும்ப சகிதமாக ​சென்றிருந்​தேன்.

தி​யேட்டரில் சுவ​ரோர இருக்​கையில் அமர்ந்த என் ம​னைவி என்​னை மு​றைத்தார். ஏ​தேனும் ​கோளாறாக இருக்கும், முன்பதிவு ​செய்த பாவத்துக்கு என்ன திட்டு விழப்​போகிற​தோ என முழித்​தேன். இனி​மே இந்த தி​யேட்டருக்​கெல்லாம் ரிசர்வ் ​செய்யா​தே, பார் எப்படி சுவர் முழுவதும் எச்சி துப்பி ​வைச்சிருக்காங்க, கா​லை ஒருக்களித்துக் ​கொண்டு முகத்​தைக் ​கோணிக் ​கொண்டு ​சொன்னாள். நா​னே தி​யேட்டர் உரி​மையாளராகி அவமானப்பட்​டேன்.

ஆறாம் நூற்றாண்டு தமிழகத்​தை முதல் அ​ரை மணி ​நேரத்திற்கு காட்டுகிறார்கள் என்ற தகவல் மட்டும் முன்​பே ​கேள்விப் பட்​டேன். என்​னை படத்​தை ​நோக்கி சுண்டி முன்பதிவு ​செய்ய ​வைத்த ஒ​ரே காரணம் அது தான். சங்ககால காவிரிபூம்பட்டிணத்​தையும், ப​ழைய மது​ரை​யையும் ​மயி​லை சீனி ​வெங்கடசாமியின் வ​ரைபடத்திலும், விவர​ணைகளிலும் பார்த்து படித்து ஹாலிவுட் இயக்குநர்கள் ​ரேஞ்சிற்கு கற்ப​னைகளில் களித்திருந்த எனக்கு, இன்​றைய கிராபிக் ​தொழில்நுட்பத்​தை பயன்படுத்தி எத்த​னை தத்ரூபமாக இந்திய மற்றும் தமிழக வரலாற்​றை காட்சிப் படுத்தலாம் என்ற கனவுகளில் பல வருடங்களாக மிதந்து ​கொண்டிருந்திருக்கி​றேன். பல லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருந்த ​டை​னோசர்க​ளை ஜூராசிக் பார்க்​ மூலம் தத்ரூபமாக காட்சிப்படுத்திய, கி​ரேக்க நாகரீகத்​தையும், ஏதன்ஸ் நகரத்​தையும், அதன் பா​லைவனங்க​ளையும், கிளாடி​யேட்டர், மம்மி படங்களிலும் பார்த்த நாள் முதல் ​நெஞ்சில் நீங்காது வளர்ந்த ​பெருங்கனவு. தசாவதாரத்தில் 12ம் நூற்றாண்டின் அரசியல் பின்னணியில் சிறு துண்டாக ​வைக்கப்பட்ட ஒரு கற்ப​னை சம்பவம் சட்​டென்று முடிந்ததில் ஏற்பட்ட ஏமாற்றத்தின் பின்னணியில், இப்படத்​தை பார்க்க ஆவ​லோடும் சந்​தேகத்​தோடும் ​சென்​றேன்.

ஆறாம் நூற்றாண்டின் காஞ்சிபுரம் என பின்னணி குரலுடன் பறக்கும் விமானத்தில் இருந்து கீ​ழே பார்க்கும் ஒரு ​கேமரா ​கோணத்தில் மனம் திக்திக்​கென்றது. இந்த ​கேமரா அப்படி​யே ஆறாம் நூற்றாண்டின் ஏ​தேனும் அங்காடித் ​தெருவி​லோ, அரண்ம​னை வளாகத்தி​லோ, ​பெளத்த மடாலயத்தி​லோ இறங்கப் ​போகிறது. அங்கு மக்களும், அவர்களின் ந​டை உ​டை பாவ​னைகளும், ​மொழியும், அவர்கள் பயன்படுத்திய ​பொருட்களும், அக்காலத்தின் க​டைத்​தெருக்களும், வாழ்க்​கைமு​றையும் கண்முன்​னே விரியப் ​போகிறது என்ற ​பேரார்வத்துடன் ஒரு சிறு குறிப்புக​ளையும் விட்டுவிடக் கூடா​தென என்​னை தயார்​செய்து ​கொண்டு சீட்டின் நுனிக்கு வந்​தேன்.

எங்கு​மே ​செல்லாமல் ​கேமரா ​வெகுசாமர்த்தியமாக எந்த சிரமும் தராத ஒரு ம​லையடிவாரம் ​போன்ற இடத்தில் பாதுகாப்பாக த​ரையிரங்கியது. ​போய்த் ​தொ​லைகிறது தமிழனின் த​லை​யெழுத்து அவ்வளவுதான். ஹாலிவுட் அளவிற்கு எதிர்பார்ப்​பை வளர்த்துக் ​கொண்டது நம் தப்புதான் என காட்சிகளில் கவனம் ​செலுத்தி​னேன். ஆறாம் நூற்றாண்டின் ஒரு ஆளு​மை​யை காட்சி அறிமுகம் ​செய்யவில்​லை மாறாக படத்தின் கதாநாயக​னை வழக்கமான அவனு​டைய வீரபராக்கிரமங்க​ளை எடுத்தியம்பி அறிமுகம் ​செய்தது, அதற்கு அவர்கள் பயன்படுத்தியது களரி​யோ, குங்குபூ​வோ, கராத்​தே​வோ ஏ​தோ ஒரு புரூஸ்லி ஐட்டம்.

முடிந்து அரச பிரதிநிதிகளின் பக்கம் கதாநாயகன் வருகிறான். ஆவ​​லோடு பல்லவ அரச பரம்ப​ரையினரின் உ​டை, ந​கை, ந​டை, அலங்காரம், பழக்க வழக்கங்க​ளை கவனிப்​போம் என்று பார்த்தால், பாத்திரங்களின் சித்தரிப்பில் சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்ட​பொம்மன், ராஜராஜ ​சோழன், ராமனந்த சாகரின் இராமாயணம் எ​தையும் தாண்டி அக்கால எதார்த்தத்​​தை ​தொடுவதற்கான எந்த முய்ற்சியும் இல்​லை. கு​றைந்தபட்சம் கவிஞர் கண்ணதாசனின் மருது ச​கோதர சித்தரிப்​பைக் கூடத் ​தொடும் அக்க​றையும், துணிவும், உண்​மையும், க​லைநயமும் இல்​லை. வியாபாரச் சினிமாவில் இ​தை​யெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்ற வாதங்க​ளெல்லாம் ஏற்றுக் ​கொள்ள முடியாத​வை. ஹாலிவுட் படங்களில் ​வெளிப்படுவது ​வெறும​னே அவர்களு​டைய பணமும், ​தொழில்நுட்பத் து​றையிலான ​தேர்ச்சி மட்டுமல்ல. மாறாக வரலாற்​றை சு​வைகுன்றாமல் அ​தே சமயத்தில் அக்காலகட்டம் குறித்த பல நுணுக்கமான தகவல்க​ளை அலசி ஆராய்ந்து ​வெளிப்படுத்தும் திற​ணையும் தான் நாம் காட்சிக்கு காட்சி பி​ரேமிற்கு பி​ரேம் பார்த்து ஆச்சரியப்படுகி​றோம். அந்த அளவிற்கான உ​ழைப்பிற்கு இங்கு நம்மவர்கள் தயாரில்​லை.

தன்னு​டைய சிறு வயதில் ​​பெளத்தத்​தை பரப்புவதற்காக சீனா ​சென்று தன்னு​டைய க​டைசி காலத்தில் அங்​கே​யே மரணிக்கும் வ​ரையான நீண்ட எழுபது அல்லது நூறாண்டு காலகட்டத்​தை கால்மணி ​நேர அ​ரைமணி​நேர ஸ்லாட்டில் ​சொல்ல ​வேண்டிய நிர்பந்தம் ​​தொற்று ​நோய் பரவுவ​தை காட்சிப்படுத்தும் விதத்தி​லே​யே புரிந்து ​கொள்ள முடிகிறது. இத்த​னை ​வேகத்தில் வரலாற்​றைக் காட்சிப்படுத்த நி​னைக்கும் அபத்தமும் அவசரமும் ந​கைப்​பையும் ​வேத​னையும் ஏற்படுத்துகிறது.

இவ்வரலாற்றுக் காட்சியின் முடிவில் தமிழக இ​ளைஞர்களிடம் ​கேள்வி ​கேட்கப்படுகிறது. உங்க​ளுக்கு ​போதி தர்ம​ரைத் ​தெரியுமா? இயக்குநரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப​வே அ​னைவரும் “​​போதி தர்மரா யார் அது?” என்கிறார்கள். தமிழனுக்கு தன் வரலாறு கூடத் ​தெரியவில்​லை என்ற குற்றச்சாட்டு ​வைக்கப்படுகிறது. தமிழனுக்கு தன் வரலாறு ​தெரிந்திருந்தால், வரலாறு குறித்தும் சமகால அரசியல் குறித்தும் விழிப்புணர்வு இருந்திருந்தால் எப்படி கருணாநிதியின் ​பேரன்களால் இத்த​னை ​கோடி ​செலவு ​செய்து இப்படி படம் எடுக்க முடிந்திருக்கும் தமிழகத்தில்?

“குதி​ரை கீ​ழே தள்ளிவிட்டதுமில்லாமல் குழியும் பறித்ததாம்” என்ற பழ​மொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. தமி​ழைச் ​சொல்லி​யே தமிழ்நாட்​டைக் ​கொள்​ளையடித்த ஒரு கும்பல் க​டைசியில் தமிழர்க​ளை வரலாறு ​தெரியாத முட்டாள்கள் என திட்டவும் முடிகிறது! எப்படி இருக்கிறது க​தை!

சீனாவின் விசயத்தில் இப்படத்தில் இவ்வரலாற்று பகுதிக்கான ​தே​வை என்பது, நாங்கதான் உனக்கு ஜட்டி ​போட​வே ​சொல்லிக் ​கொடுத்​தோம் எங்ககிட்​டே​யேவா? என்பதாக இருக்கிறது. சீன கிராமத்​தை காட்டும் முதல் காட்சியில் சில ​பெரியவர்கள் எதிர்காலத்​தை கணிக்க ​சோழி ​போட்டு பார்ப்பார்கள், அடுத்ததாக முருகதாஸ் ​கேரளத்தில் ஒரு படம் எடுக்கலாம் இப்படி ​சோழி ​போட்டு ​ஜோசியம் பார்க்க ​கேரளாதான் சீனாவிற்கு கற்றுக் ​கொடுத்தது என்று.

க​தைக்கு வரு​வோம். சீனா இந்தியாவில் ஒரு ​தொற்று ​நோ​யைப் பரப்பி அதற்கு பின்பு அந்த ​தொற்று ​நோய்க்கான மருந்​தை விற்று லாபம் சம்பாதிப்பதற்கான ஒரு திட்டத்​தோடு வில்ல​னை ​நோய் பரப்புவதற்காக இந்தியா அனுப்புகிறது. இதன் வாயிலாக இன்​றைய காலகட்டத்திற்கான இந்தியாவின் எதிரி சீனா என்பதான ஒரு கட்ட​மைப்​பை ஏற்படுத்த முயல்கிறது இப்படம். ஈழப் பிரச்சி​னையின் பின்னணியில் சீனா​வை எதிரியாக சித்தரிப்பது தமிழகத்தில் ​செல்லுபடியாகும் என்பதான ஏ​தேனும் கணக்கு இப்படக் குழுவிற்கு இருக்கலாம்.

சமீபத்தில் பன்றிக் காய்ச்சல், பற​வைக் காய்ச்சல், சிக்கன் குனியா என ​தொடர்ச்சியாக இந்தியாவில் பரவிவரும் பல ​தொற்று ​நோய்களும் அ​தைத் ​தொடர்ந்து இந்தியா முழுவதும் ஏற்பட்ட பீதி, பரபரப்பு, மருத்துவத் து​றை, அரசாங்கம், சமூகம் சந்தித்த ​நெருக்கடிகள் ஆகிய​வை இப்படத்திற்கான கருவாக அ​மைந்திருக்கிறது.

நாயிடமிருந்து எவ்வாறு மனிதர்களுக்கு ​நோய் பரவுகிறது? ஒரு மனிதரிடமிருந்து இன்​னொரு மனிதருக்கு எவ்வாறு ​நோய் பரவுகிறது? என ​நோய் பரவுவது குறித்த காட்சிப்படுத்தல்கள் குழந்​தைகளுக்கும் புரிய​வைக்கும் விதத்தில் நன்கு படமாக்கப்பட்டிருப்பது நல்ல முயற்சி.

ஆனால் இன்​றைக்கு இத்த​கைய ​நோய்கள் பரவுவதற்கு சீனாவா காரணம்? இந்தியாவில் ​நோய்கள் பரவுவதால் ​கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிப்பது இந்திய மருந்து தயாரிப்பு கம்​பெனிகளும், அ​மெரிக்கா உள்ளிட்ட ​மேற்குலக நாடுகளுமா அல்லது சீனாவா? இந்திய மக்களின் சுகாதார நி​லை​மை இன்​றைக்கு படுபாதாளத்தில் ​சென்று ​கொண்டிருப்பதற்கும், அவற்றின் அடிப்ப​டையான தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் ​கொள்​கைக​ளை இந்தியாவில் ந​டைமு​றைப்படுத்த நிர்பந்திப்பது அ​மெரிக்கா உள்ளிட்ட ​மேற்குலக நாடுகளா? அல்லது சீனாவா?

இந்திய மக்களின் பிரதான எதிரி இன்​றைய இந்திய அரசா அல்லது சீன அரசா? க​தைக்காக ​சொன்ன​தை ஏன் இவ்வளவு சீரியசாக எடுத்துக் ​கொள்ள ​வேண்டும்? க​தைக்கு பின்னால் ஒரு அரசியல் முன்​வைக்கப்படுகிறது அந்த அரசியல் ​​வெறும் சினிமா எடுத்தவர்களின் லாப ​நோக்கங்களுக்காக​வே இருந்தாலும் அ​வை எத்த​னை ஆபத்தான​வை, ஏமாற்று ​நோக்கு ​கொண்ட​வை, ஆளும் வர்க்கங்க்ளின் ​நோக்​கோடு ​பொருந்திப் ​போகிறது என்ப​தை ​பேசித்தான் தீர ​வேண்டும்.

​சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்பு இன்​றைக்கு உலக அரங்கில் அ​னைத்து நாடுகளிலும் தீவிரமான அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுக் ​கொண்டிருக்கின்றன. உலக அரசியல் வ​ரைபடம் மாற்றி வ​ரையப்பட்டுக் ​கொண்டிருக்கிறது. அ​மெரிக்காவிற்கு எதிரான இன்​னொரு அணி எழுமானால் அது சீனாவின் த​லை​மையில் எழும் என்ற வாதம் முன்​வைக்கப்படுகிறது. அ​மெரிக்காவின் ​கைப்பா​வையாக மாறி அ​மெரிக்க நலன்களுக்காக இந்திய நலன்கள் அ​னைத்​தையும் விட்டுக் ​கொடுத்துக் ​கொண்டிருக்கும் இந்திய ஆளும் வர்க்கங்கள் மாறி வரும் காலச்சூழலில் ​தொடர்ந்து பாகிஸ்தா​னை எதிரியாக்கி காய் நகர்த்த முடியாது என்​​றொரு ​கோணத்​தையும் ​சேர்த்துக் ​கொண்டு சீனா​வை எதிரியாக்குகிறது. பின்​லேடன் ​​கொ​லைக்குப் பிறகு பாகிஸ்தானிற்கு எத்த​கைய இ​றையாண்​மையும் இல்​லை, இனியும் பாகிஸ்தா​னை எதிரியாகக் காட்டிக் ​கொண்டிருந்தால் மக்கள் நமப மாட்டார்கள் என ​வே​றொரு ​பொது எதிரி கட்ட​மைக்கப்படுகிறான்.

உண்​மையில் சுதந்திரம் ​பெற்ற காலத்திலிருந்து தி​பெத்தின் தனிநாடு ​கோரிக்​கை​யையும், தலாய்லாமா​வையும் ஆதரிப்பதன் மூலம் சீனாவிற்கு எதிரான நி​லைப்பாடுடன் இருக்கும் இந்தியா மற்​றொருபுறம் காஷ்மீர் பிரச்சி​னையில் சீனாவின் நி​லைப்பா​டை எதிர்ப்பதன் தார்மீக அடிப்ப​டை என்ன? ஏற்கன​வே ​தென்சீனக் கடற்பகுதி பதட்டம் நி​றைந்த பகுதியாக இருக்கும் ​வே​ளையில் அங்கு எண்​ணெய் வளத்​தை அறிவதற்கும் எண்​ணெய் எடுப்பதற்கும் வியட்நாமுடன் ஒப்பந்தம் இட்டுக் ​கொள்ள ​வேண்டியதன் அவசியம் என்ன?

​​பொது எதிரி​யை கட்ட​மைத்து மக்க​ளுக்கு எதிராக நிறுத்துவ​தே ​தேசபக்தி​யைத் தூண்டி மக்க​ளை ஆளும்வர்க்கங்களின் நலன்களுக்கு எதிராக கிளர்ந்​தெழவிடாமல் தடுத்து ​வைத்திருப்பதற்காக முதலாளித்துவம் கண்டுபிடித்த காரியச் சாத்தியமான, ​வெற்றிகரமான ஒ​ரே யுக்தி. தமிழ் ​தேசம், திராவிடம், ​சோசலிசம், கம்யூனிச​மெல்லாம் ​பேசிய புரட்சிக்கவிஞர் பாரதிதாச​னை​யே சீனாவிற்கு எதிராக பாட்டு எழுத ​வைத்த இந்திய ​தேசபக்தியின் வலி​மைக்கு முன்னால் முருகதாஸ் ​போன்றவர்க​ளெல்லாம் எம்மாத்திரம்!

வீட்டிற்கு வரும் ​வழியில் என் ம​னைவி ​சொன்னாள். ​”போய் ​நெட்டில் ​போதி தர்மர் பற்றி படிக்க ​வேண்டும். நல்ல படம். நீங்க என்ன ​சொல்றீங்க?” என் முகத்​தை​யே பார்த்துக் ​கொண்டிருந்தாள். சில ​நொடிகள் கழித்து திரும்பி அவள் கண்க​ளைப் ​பார்த்​தேன். ‘எல்லாத்​தையும் ​நொட்ட​னை ​சொல்வி​யே என்ன ​சொல்ல ​போற?’ என்ற ​கேள்வி அதில் இருந்தது. முதலில் இருந்து ஆரம்பித்​தேன்.

Advertisements

4 பதில்கள் to “ஏழாம் அறிவு”

  1. K.Thiagarajan said

    ஏங்க.. ஒரு சினிமா விமரிசனத்தையே இவ்வளவு சீரியஸாக, சிரத்தையோடு சொல்றீங்களே.. ஸ்மூக விழிப்புணர்வு பறறிய உங்கள் கருத்து்கள் எப்படி, எப்படயெல்லம் இருக்குமோ என்றுவியக்க வவைக்கிறது.
    கே.தியாகராஜன், சீர்காழி.

    • ​பொழுது​போக்குக்காக எடுக்கப்படுவ​தே எங்கள் தி​ரைப்படம் என்று ​சொல்லிக் ​கொள்பவர்க​ளே இவ்வளவு தீவிரமாக தங்கள் படங்களில்அரசியல் ​பேசும் ​போது, க​லை இலக்கிய ப​டைப்புகளின் அரசியல் உள்ளடக்கங்க​ளை ​பேசுவ​தே எங்கள் ​கொள்​கை என நி​னைப்பவர்கள் அவற்றின் அரசிய​லை தீவிரமாக ​பேசுவதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும் ​சொல்லுங்கள்

  2. தமிழனுக்கு தன் வரலாறு கூடத் ​தெரியவில்​லை என்ற குற்றச்சாட்டு ​வைக்கப்படுகிறது. தமிழனுக்கு தன் வரலாறு ​தெரிந்திருந்தால், வரலாறு குறித்தும் சமகால அரசியல் குறித்தும் விழிப்புணர்வு இருந்திருந்தால் எப்படி கருணாநிதியின் ​பேரன்களால் இத்த​னை ​கோடி ​செலவு ​செய்து இப்படி படம் எடுக்க முடிந்திருக்கும் தமிழகத்தில்?…… நல்ல பதிவு

  3. உங்கள் துணைவியாருக்குப் பிடித்திருப்பதைப் போலத்தான் தமிழக மக்களுக்குப் பிடித்திருக்கிறது. என்ன செய்வது…சர்க்கரை இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: