எனது நாட்குறிப்புகள்

நவம்பர் புரட்சியும் நம் காலத்தின் ​தே​வைகளும்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 7, 2011

“ஒ​ஹோ​வென் ​றெழுந்தது பார் யுகப் புரட்சி” என வாழ்த்தி வர​வேற்றார் பாரதியார். இரஷ்யப் புரட்சி ​வெற்றிகரமாக இப்பூமியில் நிகழ்ந்​தேறி இன்​றோடு 106 ஆண்டுகள் நி​றைவ​டைந்துவிட்டன. இன்​றைக்கு “ஓ​ஹோ​வென்று எழ​வேண்டிய” புரட்சிக​ளை உலக​​மே எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறது.

உ​ழைக்கும் வர்க்கத்தின் முதல் புரட்சியாகிய பி​ரெஞ்சு புரட்சி 70 நாட்க​ளே இப்பூமியில் தாக்குப்பிடிக்க முடிந்ததாம். இரஷ்யப் புரட்சி நிகழ்ந்த 1917 அக்​டோபரில் துவங்கி அந்த எழுபது நாட்கள் கடப்ப​தை உன்னிப்​போடும் பரபரப்​போடும் ​லெனின் கவனித்துக் ​கொண்டிருந்தார் என “இரஷ்யப் புரட்சியும் ​லெனினும்” குறித்த ஒரு ​மே​லைநாட்டவரின் நி​னைவுக்குறிப்புகளில் படித்த ஞாபகம். அவரு​டைய எதிர்பார்ப்புக​ளை​யெல்லாம் தாண்டி அது அதன் நி​றை கு​றைக​ளோடும், ​வெற்றி ​தோல்விக​ளோடும், ஏற்ற இறக்கங்க​ளோடும், சரி தவறுகளுக்கு இ​டையிலான கடும் ​போராட்டங்க​ளோடும் 70 ஆண்டுக​ளை ​வெற்றிகரமாக கடந்தது. ​தொன்னூறுகளில் ​சோவியத் யூனியன் வீழ்ந்தது. ஆனால் மனிதகுலத்தின் முன்​னேற்றத்தில அப்புரட்சியின் வரலாற்று முக்கியத்துவம் எவ்விதத்திலும் கு​றைந்துவிடாமல் முன்​னெப்​போ​தையும் விட அதிக பிரகாசத்துடன் நம் கால கட்டத்தில் ஒளிர்ந்து ​கொண்டுதான் இருக்கிறது.

​இரஷ்யப் புரட்சி​யை ஒரு ​கெட்ட கனவாக நி​னைத்து மனிதகுலம் மறந்துவிட ​வேண்டும். அது மிகக் ​கொடூரமானது, அது மனிதகுலத்திற்கு நீங்காத தீங்குக​ளை ஏற்படுத்தக் கூடியது என்பதாக முதலாளித்துவமும், முதலாளித்துவ பிரச்சாரகர்களும் பிரச்சாரம் ​செய்து ​கொண்டிருக்கிறார்கள். இரஷ்யப் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவத்​தை மூடி ம​றைப்ப​தையும், இரஷ்ய சீனப் புரட்சியின் புரட்சிகர காலகட்டத்திற்கும் திருத்தல்வாத காலகட்டத்திற்குமான குறுக்குக் ​கோட்​டை இல்லாது ஒழிப்ப​தையும், கம்யூனிசம் என்றா​லே ஒட்டு​மொத்த சர்வாதிகாரம்தான், ஒட்டு​மொத்த அடக்குமு​றைதான், கண்மூடித்தனமான இராணுவ மற்றும் காவல்து​றையின் காட்டாட்சி தான். சி​றைக் ​கொட்டடிகள்தான், உ​ழைப்பு வ​தைமுகாம்கள்தான், எல்லாவிதமான மாற்றுக் கருத்துக்களின் மீதான அடக்குமு​றைதான், என்பதான பிம்பங்கள் திட்டமிட்டு முதலாளித்துவத்தால் பரப்பப்படுகிறது.

​சோசலிசம் என்பதும், கம்யூனிசம் என்பதும், மார்க்சிசம் என்பதும் ஒரு ​வெளிநாட்டு சரக்​கை உள்நாட்டின் ​சொந்த கலாச்சாரம், பண்பாடு, வரலாறு ஆகியவற்​றை அழிக்கும் ​நோக்கத்​தோடு திணிக்கப்படும் ஒன்றாக உருவகப்படுத்தப்படுகிறது. ​சோசலிசம் என்பது கம்யூனிசம் என்பது பிரான்சுக்​கோ, ​​ஜெர்மனிக்​கோ, இங்கிலாந்திற்​கோ, இரஷ்யாவிற்​கோ அல்லது சீனாவிற்​கோ மட்டு​மே ​​பொருந்தக்கூடிய ஒன்றல்ல, அது மனிதகுலத்தின் மிக நீண்ட கனவு, அது உலகின் பல்​வேறு பகுதிகளிலும் ​தோன்றிய மிகச்சிறந்த அறிவுத்​தேட்ட வரலாற்றின் ​தொடர்ச்சி என்பதற்கான ஆதாரங்கள் அ​னைத்தும் இருட்டடிப்பு ​செய்யப்படுகின்றன.

இன்​றைய நம்மு​டைய உலகம் முதலாளித்துவத்தின் ஆகப் ​பெரிய ​நெருக்கடிக்குள் சிக்கிக் ​கொண்டு ​வெளிவர முடியாமலும், ​வெளிவருவதற்கான எந்த உருப்படியான உபாயமும் முதலாளித்துவ அறிவுஜீவிகளின் ​கைவசம் இல்லாமலும் விழித்துக் ​கொண்டிருக்கிறது. மற்​றொருபுறம் உலக முதலாளித்துவத்தின் த​லை​மை சக்திகளாக உள்ள ஏகாதிபத்தியங்கள். இந்​நெருக்கடியிலிருந்து தாங்கள் மட்டும் எப்படி​யேனும் ​வெளி​யேற முடிந்தால் ​போதும் என்ற நி​லையில் உலகின் அ​னைத்து நாடுக​ளையும் முன்​னெப்​போதும் இல்லாத அளவிற்கு தீவிரமாகவும், அடி​ஒட்டவும் சுரண்டுவதற்கான திட்டங்க​ளை தீட்டி இந்தியா ​போன்ற நாடுகளின் ஆளும் வர்க்கங்க​ளையும் அவற்றின் அரசியல் பிரதிநிதிக​ளையும் தங்கள் வ​லைக்குள் சிக்க​வைத்து நாடுக​ளை சூ​றையாடத் துவங்கியுள்ளன.

மறுபுறம் உலகம் முழுவதும் ​பேர​லை​யென மக்கள் எழுச்சி மிக வலுவான த​லை​மை சக்திகள் எதுவும் இல்லாம​லே​யே வீசத்துவங்கியுள்ளது. சமீபத்திய அரபு உலக எழுச்சி​யோடு துவங்கிய இப்​பேரழுச்சி இன்​றைக்கு ஏகாதிபத்தியத்தின் ​மையப்பகுதிக​ளை​யே ​நெருங்கிவிட்டது. “வால் ஸ்டீரீட் ஆக்கிரமிப்பு” ​போராட்டக்காரர்கள், அ​மெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இன்​றைக்கு ​கோ​லோச்சிக் ​கொண்டிருக்கும் கார்ப்​ரேட் நிறுவனங்களுக்கும், ஏக​போக முதலாளிகளுக்கும் எதிராக கம்யூனிஸ்ட்க​ளையும் விஞ்சும் கடு​மையான ​சொற்களால் சாடிக்​கொண்டிருக்கிறார்கள்.

மனிதகுலத்தின் இறுதி லட்சியம் முதலாளித்துவமல்ல. மனிதகுலத்தின் ஒ​ரே தீர்வு முலாளித்துவமல்ல. மனித குலத்தின் பிரச்சி​னைக​ளை முலாளித்துவத்தால் தீர்க்க முடியாது, மனிதகுலத்தின் ஒ​ரே பிரச்சி​னை முதலாளித்துவம் தான் என ஓங்கி ஒலித்து, நம் காலகட்டத்தின் அ​னைத்து மக்களின் காதுகளுக்கும் ​கொண்டு ​சென்று ​கொண்டிருக்கிறார்கள்.

இச்சூழல் 19 ம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி 20ம் நூற்றாண்டின் முதல் பாதி வ​ரையிலான புரட்சியுகத்​தை மீண்டும் ஏற்படுத்துவதற்காக  வரலாறு கருசூழத் துவங்கிவிட்டதற்கான அறிகுறிகளாக​வே படுகிறது. மாறும் சூழ​லை ​வெற்றிகரமாக எதிர்​கொள்வதற்கு நமக்கான கல்வி​யையும் ஆற்ற​லையும் தரும் மிகச்சிறந்த அறிவுப் ​பெட்டகமாகவும், வரலாற்று அனுபவமாகவும், உ​ழைக்கும் வர்க்கத்தின் சாத​னைச் சரித்திரமாகவும் இருப்பது இரஷ்ய சீன புரட்சி அனுபவங்க​ளே.

இரஷ்ய சீன அனுபவங்களின் வழி முதலாளித்துவமும், முதலாளித்துவ காலகட்டமும் இன்னும் ​தெளிவாக கூர்​மையாகக் கற்றுத் ​தேற ​வேண்டியுள்ளது. ​அதிகாரத்​தை ​கைப்பற்றுவதில் ​வெற்றி ​பெறுவதல்ல புரட்சியின் ​வெற்றி, ​சோசலிசத்​தை நிர்மானிப்பதிலும், அ​தை நிர்வகிப்பதிலும் ஒட்டு​மொத்த உ​ழைக்கும மக்களின் உண்​மையான விழிப்புணர்​வையும், ​செயல்பாட்​டையும் கட்டற்ற மு​றையில் திறந்துவிடுத​லையும், உத்திரவாதப் படுத்துத​லையும் எவ்வாறு ​வெற்றிகரமாக ​செய்து முடிப்பது என்ற அனுபவங்க​ளை இரஷ்ய சீனப் புரட்சி வரலாற்​றை ஆழ்ந்து கற்று ஆய்வு ​செய்யாமல் ​பெற முடியாது.

முதலாளித்துவத்​தை விட பல மடங்கு அதிகமாக உற்பத்தி​யை ​பெருக்க முடியும் என்ப​தையும், அ​தை முதலாளித்துவத்​தை விட சிறப்பாக வினி​யோகிக்க முடியும் என்ப​தையும் ஏற்கன​வே ஐயந்திரிபுற ​சோசலிச புரட்சி ​வெற்றி​பெற்ற நாடுகள் குறிப்பாக ரஷ்யாவும் சீனாவும் நிரூபித்துவிட்டன. ​
நம்முன் உள்ள ​கேள்விகள்

சோசலிசத்தின் இறுதி லட்சியங்கள் என்​னென்ன என்ற விசயங்க​ளை ​தொகுத்துக் ​கொள்வதும், அவற்றின் அடிப்ப​டையில்

சோசலிச நாடுகள் எதிர்​கொண்ட பிரச்சி​னைகள் என்​னென்ன?
​சோசலிச இறுதி லட்சியங்க​ளை அ​டைவதில் அ​வை எந்தளவிற்கு முன்​னேறின?
எத்த​கைய காரணங்கள் அச்சமூகங்க​ளை மீண்டும் முதலாளித்துவ பா​தைக்கு மீட்டன?
மார்க்சியத் தத்துவத்தின் எந்​தெந்த பகுதிகள் இவ்​வொளியில் வளர்த்​தெடுக்கப்பட ​வேண்டும்?

​போன்ற எண்ணற்ற ​கேள்விக​ளை எதிர்​கொள்ள ​வேண்டியதும் வி​டை​தேட ​வேண்டியதும், வி​டைகளின் அடிப்ப​டையில் புதிய புரட்சிகளுக்கான பா​தைக​ளை ஒழுங்கு படுத்துவது​மே நவம்பர் புரட்சிக்கான நம் காலகட்டத்தின் முக்கியத்துவமாக உணரப்பட ​வேண்டியுள்ளது.

​சோசலிச நாடுகளின் ​தோல்விக்கான காரணங்க​ளை ​வெறும் தனிமனிதர்களிடம் மட்டும் ​தேடுவ​தோ, சுற்றியிருந்த முதலாளித்துவ உலகத்திடம் மட்டும் ​தேடுவ​தோ, மார்க்சியத் தத்துவத்தின் ​தோல்வி என்று வ​ரையறுப்ப​தோ, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் ​தோல்வி என்று வ​ரையறுப்ப​தோ ​சோசலிச நாடுகளின் வளமான அனுபவங்க​ளை கு​றைத்து மதிப்பிடுவதிலும், வருங்காலத்திற்கான ​வெற்றிகரமான நடவடிக்​கைக​ளை தடுத்தாட் ​கொள்வதற்கு​மே இட்டுச் ​செல்லும்.

மார்க்​சே கூறியபடி “மார்க்சியம் ஒரு வறட்டுச் சூத்திரமல்ல அது ​செயலுக்கான வழிகாட்டி” அது அ​னைத்​தையும் முற்றுமுழுவதுமாக ஆய்ந்து முழுமுற்றான உண்​மைகள் எ​தையும் தன்னால் ​வைக்க முடியும் என்​றோ, ​வைத்து விட்டதாக​வோ கூறவில்​லை. அது வரலாற்றின் ​போக்​கை கூர்ந்து கவனிக்கவும் அவற்​றை ஆளும் சர்வப் ​பொதுவான விதிக​ளை புரிந்து ​கொள்ளவும், மனிதகுலம் ​தொடர்ந்து முன்​னேறிக் ​கொண்டிருப்ப​தையும், ஒரு லட்சிய சமூகத்​தை ​நோக்கிய ஒரு பயணத்திற்கான அறிகுறிகள் அதன் வரலாற்​றை பார்க்கும் ​போது புரிந்து ​கொள்ள முடிவ​தையும் உணர்த்துகிறது.

மார்க்சியம் ​வெறும் மனிதாபிமானத்​தை​யோ, காரியச் சாத்தியமற்ற வறட்டு லட்சியவாதத்​தை​யோ, வரலாற்றின் வீரபுருஷர்க​ளைச் சார்ந்​து இயங்குவ​தைப் பற்றி​யோ ​பேசவில்​லை. வரலாற்றின் இயக்கப்​போக்​கை புரிந்து ​கொண்டு அதன் தி​சைவழி​யை உள்வாங்கிக் ​கொண்டு கம்யூனிஸ்ட்க​ளை ஒரு ஊக்குவிப்பானாக ​செயல்பட​வே அ​ழைக்கிறது.

எழுபது நாட்களில் முடிந்த ஒரு புரட்சி​யைக் குறித்து ​விரிவாகச் செய்யப்பட்ட குறிப்பான ஆய்வுகள், அடுத்த புரட்சி​யை 70 அண்டுகளுக்கு தாக்குப்பிடிக்க முடிந்ததாக உருவாக்க முடிந்தது. இந்த 70 ஆண்டுகளின் ஒரு புரட்சி குறித்த குறிப்பான அதிவிரிவான ஆய்வுகள் 700 ஆண்டுகள் அல்ல மனிதகுலத்​தை தன் வயிற்றுப்பாட்டுக்கான ​போராட்டத்திலிருந்து விடுத​லை ​பெற ​வைத்து, ஏற்றதாழ்வான, மனித​னை மனிதன் சுரண்டும், ​ஒருவனின் அழிவில் இன்​னொருவன் வாழ ​வேண்டிய இழிநி​லைகளிலிருந்து மீட்டு, மனிதகுலத்தின் தங்குத​டையற்ற முழு​மையான விடுத​லை​​யையும், வளர்ச்சி​யையும் ஏற்படுத்தும் ஒரு புரட்சி​யை உண்டாக்கும்.

அப்புரட்சி இந்த அண்டத்​தை ஆளும் விதிக​ளையும், மனித இனத்​தை தன் உயிர்வாழ்தலுக்காகவும், இனப்​பெருக்கத்திற்காகவும் இயற்​கை​யை சீரழிக்காமல் இயற்​கையின் விதிகள் அ​னைத்​தையும் விளங்கிக் ​கொண்டு, இயற்​கை​யை ​வென்று இவ்வண்டம் முழுவதும் விரிந்து பரவச் ​செய்யும். உண்​மையான மனித ஆற்றலின் முழு​மையான ​வெளிப்பாட்டிற்கு கம்யூனிச​மே தீர்வு.

ஒரு பதில் to “நவம்பர் புரட்சியும் நம் காலத்தின் ​தே​வைகளும்”

  1. கட்டுரை நன்றாக இருக்கிறது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: