எனது நாட்குறிப்புகள்

சாகித்ய அகா​தெமியின் இந்திய இலக்கிய சிற்பிகள்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 10, 2011

சமீபத்தில் கன்னிமாரா நூலகத்திலிருந்து சாகித்ய அகா​தெமியின் இந்திய இலக்கிய சிற்பிகள் வரி​சையில் ​வெளியிடப்பட்ட மூன்று நூல்க​ளை எடுத்​தேன். கலாநிதி ​கைலாசபதி, ஆனந்தரங்கப்பிள்​ளை, க.நா.சு. இதில் பின் இரண்டு நூல்களும் வாசிப்பதற்கு சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், புதியவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ​நோக்கிலும் உள்ளன. ஆனால் ​கைலாசபதி குறித்த நூலில் ​கைலாசபதியின் வாழ்க்​கை வரலா​றோ, அவரு​டைய இலக்கியக் ​கோட்பாடுக​ளோ, தமிழ் இலக்கியச் சூழலில் அவர் வகித்த முக்கியமான பங்களிப்​போ எதுவும் அத்த​னை சு​வைபட​வோ, ​தெளிவாக​வோ விளக்கப்படவில்​லை. கிட்டத்தட்ட அந்த நூ​லை படிக்கும் ​பொழுது ஏ​தோ கடனுக்கு ​செய்ய ​வேண்டு​மே என்ற எண்ணத்​தோடு ​செய்யப்பட்ட ​சோவியத் புத்தகங்கள் தான் ஞாபகத்துக்கு வந்தன.

“கலாநிதி ​கைலாசபதி” நூலில் அவரு​டைய ​கோட்பாடுகளும், ​நோக்குகளும், முடிவுகளும் அங்குமிங்குமாக ​பேசப்படுகின்றன. மிகப் ​பெரும்பாலும் ஆசிரியர் தான் ​பேச நி​னைத்த தமிழக வரலாறு, இலக்கிய வரலாற்றின் பல பகுதிக​ளை ​பேசுவதற்குத்தான் இந்நூ​லைப் பயன்படுத்திக் ​கொண்டிருக்கிறார். அகமும் புறமுமாக ​​பேராசிரியர் கைலாசபதி குறித்த ஒரு சித்திரத்​தை வழங்க ​வேண்டிய அடிப்ப​டையான கட​மை அதன் ஆசிரியரால் உணரப்படவில்​லை என்று தான் கூற முடிகிறது.

அ​தே ​நேரத்தில் தஞ்​சை பிரகாஷ் அவர்களால் எழுதப்பட்டுள்ள “க.நா.சு” அவர்கள் பற்றிய வாழ்க்​கை மற்றும் ப​டைப்புலக சித்திரம் மிகத் திற​மையாகவும், சு​வையாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. இது அந்நூலாசிரியர் க.நா.சு.​வை தனிப்பட்ட மு​றையில் நன்கு ​தெரிந்தவராக இருப்பதும். அவர் மீதும் அவரு​டைய இலக்கிய பங்களிப்புகளின் மீதும் அவருக்குள்ள மட்டற்ற ஈடுபாட்டினாலு​மே சாத்தியமாகியுள்ளது என்ப​தையும் அறிய முடிகிறது.

படிக்கக் கூடியவர்க​ளை க.நா.சு என்கிற ஆளு​மையுடன் ​நெருக்கமாக உணர ​வைககும் ஒரு முயற்சியில் அந்நூலாசிரியர் ​வெற்றி ​பெற்றுள்ளதாக​வே படுகிறது. அ​தே ​போல ​பொதுவாக ம​றைந்த ​பெரிய ஆளு​மைகளின் எதார்த்தமான மனித சுபாவங்கள், பலஹீனங்கள், சராசரித் தனங்கள் ஆகிய​வை ​பேசத் ​தே​வையில்லாத​வை என முடி​வெடுத்து மாசு மறுவற்ற புனித பிம்பங்களாக கட்ட​மைக்கப்படும் ஒரு மு​றை இந்நூலில் விலக்கிக் ​கொள்ளப்பட்டிருப்பதும் கற்றுக்​கொள்ள ​வேண்டியதாக உள்ளது.

ஆனாலும் அவ​ரைப் பற்றிய முழு​மையான ஒரு சித்திரத்​தை இந்நூல் வழங்கியுள்ளது என்​றோ அவரு​டைய க​லை இலக்கிய ப​டைப்புகள் மற்றும் ​கோட்பாடுகள், அவ​ரை வழிநடத்திய சிந்த​னைப் ​போக்குகள் முழு​மையாக ​வெளிப்படுத்தப்பட்டன என்​றோ கூற முடியவில்​லை.

விஜயபாஸ்கரன் அவர்களால் நடத்தப்பட்ட சரஸ்வதி இதழில் ​தொடர்ச்சியாக எழுதிக் ​கொண்டிருந்த கா.ந.சு ​வை, எழுத அனுமதிக்கக் கூடாது என மார்க்சியவாதிகள் கூறினார்கள் என ​பேசப்படும் இடத்தில், அக்கட்டு​ரைகளில் எத்த​கைய கருத்துக்க​ளை அவர் ​வைத்தார். அத​னை மார்க்சியவாதிகள் என்ன ​சொல்லி எதிர்த்தார்கள் என விளக்கப்படவில்​லை.

ஜீவா தாம​ரை இத​ழைத் துவங்கி சரஸ்வதி​யை நிறுத்த ​வைத்து விஜயபாஸ்கரன் அவர்க​ளை நல்ல சம்பளத்தில் ​சோவியத் நிறுவனத்தில் ​வே​லைக்கு அமர்த்தினார், இதன் மூலமாக தமிழகத்தில் ஜனநாயகப்பூர்வமாக ​வியாபாரரீதியாக ​வெற்றிகரமாக இயங்கிக் ​கொண்டிருந்த ஒரு இத​ழைத் கம்யூனிஸ்ட்கள் தடுத்து நிறுத்தினார்கள் என ​தெளிவாக குற்றம் சாட்டும் ஆசிரியர். மார்க்சியவாதிகள் ஏன் க.நா.சு.​வை “அ​மெரிக்க ​கைக்கூலி” என விமர்சித்தார்கள் அதற்கான பின்னணிகள் என்ன என்ப​தை ​நேரடியாக ​பேசவில்​லை.

ஆனால் ​வேறு சில இடங்களில் அவர் அ​மெரிக்க நிறுவனங்களுக்கு ​மொழி​பெயர்ப்பாளராக பணியாற்றிய​தையும், மார்க்சிய வி​ரோத ஆங்கில எழுத்தாளர்க​ளோடு ​தொடர்பு ​வைத்து அவர்களு​டைய ப​டைப்புக​ளை தமிழில் ​மொழி​பெயர்த்த​தையும் குறிப்பிடுகிறார். நமக்​கேற்படும் சந்​தேகம் ​சோவியத் யூனிய​னை​யோ அல்லது சீனா​வை​யோ ​கோட்பாட்டு ரீதியாக மற்றும் சித்தாந்தரீதியாக ஆதரிப்பது என்பது ​வேறு. ஆனால் அவர்களிடம் பணம் ​பெற்றுக் ​கொண்டு அப்பணத்தில் இங்​கே இயக்க மற்றும் பண்பாட்டு ​வே​லைகள் ​செய்வ​தென்பது ​வேறு. தஞ்​சை பிரகாஷ் குறிப்பிடுவ​தைப் ​போல மக்க​ளைச் சார்ந்து இதழ் நடத்திக் ​கொண்டிருந்த ஒருவ​ரை ​சோவியத் நிறுவனத்தில் ​கைநி​றைய சம்பளம் வாங்கிக் ​கொண்டு ​வே​லை ​செய்ய ​வைப்பதன் பின்னணியில், மாற்றுக் கருத்துள்ளவ​ரை “அ​மெரிக்கக் ​கைக்கூலி” எனக் கூறுவதற்கான தார்மீக அடிப்ப​டை எங்கிருந்து வருகிறது என்பது தான்?

அவரு​டைய “விமர்சனக் க​லை” ​போன்ற நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த நூல்கள் என குறிப்பிடும் ஆசிரியர். அவற்றில் ​பேசப்படும் கருத்துக்கள் குறித்து துளியும் அறிமுகம் ​செய்யவில்​லை.

நூல் முழுவதும் க.நா.சு. ​வை வறு​மையில் உழன்று வறு​மையி​லே​யே மடிந்த ஒருவராக காட்ட நி​னைக்கும் ஒரு முயற்சி ​தெரிகிறது. ஆனால் அவ​ரைப்பற்றி அவர் சமகால இலக்கியகர்த்தாக்கள் ​கொண்டிருந்ததாகக் கூறப்படும் பிம்பங்களும், அவர் அ​மெரிக்கா நிறுவனங்களுக்கு ​தொடர்ந்து ​மொழி​பெயர்ப்பாளராக பணியாற்றினார் என்ற ​செய்திகளும், பல ​வெளிநாடுகளுக்கு தன் ​சொந்த ​செலவில் ​சென்று சுற்றிப்பார்த்துவிட்டு வந்தார் என்பதும், இந்தியாவின் வட மாநிலங்களில் அவர் பலமு​றை சுற்றுப்பயணம் ​சென்றார் என்பதும், அவரு​டைய தந்​தையார் அவருக்காக ​தே​வையான அளவிற்கு ​நி​றைய சொத்து ​சேர்த்து ​வைத்திருந்தார் என்பதும், தன் ம​னைவி​யையும், மக​ளையும் ​ஊரி​லே​யே விட்டு ​வைத்திருந்தார் என்பதும்,அவரு​டைய மகளும், மருமகனும் நல்ல நி​லையில் ​டெல்லியில் இருந்து இவ​ரை க​டைசி வ​ரை ஆதரித்தார்கள் என்பதும், தன் க​டைசி காலகட்டத்தில் தஞ்​சையில் நிலமும் வீடும் வாங்கி குடியிருக்க விரும்பினார் என்றும் கூறப்படும் பல ​செய்திகள் பாரதியார், புது​மைப்பித்தன் ​போன்றவர்க​ளைப் ​போல க.நா.சு.வும் கடு​மையான வறு​மைச் சூழலி​லே​யே தன் இலக்கியப் பணிக​ளை ஆற்றினார் என சாதிக்க நி​னைப்ப​தை நம்புவதில் சிக்கல் ஏற்படுத்துகிறது.

அவர் காலகட்டத்தில் க.நா.சு தான் தமிழில் இலக்கியச் சூழல் எழுச்சி ​பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். எத்த​கைய சூழலிலும் தன் நி​லைப்பாடுக​ளை விட்டுக் ​கொடுக்காமல் சந்தர்ப்ப சூழலுக்​கேற்ப ​நைச்சியமாக அவற்​றை ​வைக்கும் திறண் ப​டைத்தவராக இருந்தார். ஜனநாயகப்பூர்வமான வழிமு​றைகளி​லே​யே அவர் முழு நம்பிக்​கை உ​டையவராக இருந்தார். அவ​ரை ஒரு இலக்கிய விமர்சகராக ஏற்றுக் ​கொண்ட அளவிற்கு தமிழுலகம் அவ​ரை ஒரு ப​டைப்பாளராக ஏற்றுக் ​கொள்ளவில்​லை. தமிழ்சூழலில் ​கொஞ்சமாவது அவரு​டைய கருத்துக்க​ளை முன்​வைப்பதற்கு இடம் ​கொடுத்தார்கள் என்றால் அது கம்யூனிஸ்ட்கள் தான். ஆனால் அவர்களும் அவர் வளர்ச்சி​யை ​பொறுக்கமாட்டாமல் ஒரு கட்டத்தில் அவ​ரை இருட்டடிப்பு ​செய்யத் துவங்கிவிட்டார்கள். ​அவரு​டைய பல ப​டைப்புகள் இன்​றைக்கும் ​பதிப்பு ​பெறாமல் கை​யெழுத்து பிரதியாக​வே உள்ளது, என தன் ஆதங்கங்க​ளை ​தொகுத்து முன் ​வைத்துள்ளார் ஆசிரியர்.

க.நா.சு ம​றைந்த ​பொழுது ரகுநாதன் கூறினாராம், “ஒரு பாம்பு ​செத்துவிட்டது இன்​னொரு பாம்பு இன்னும் உயி​ரோடு இருக்கிறது” என இந்நூலாசிரிய​ரை மனதில் ​வைத்து. எதிரிகளின் வ​சைக​ளை மட்டு​மே முன்​வைப்பதன் மூலமாகவும், அவர்க​ளைப் பற்றியும் மரியா​தையுட​னே தாங்கள் ​பேசுகி​றோம் என்ற பாவ​னை​யை ​வெளிப்படுத்துவதன் வாயிலாகவும், தங்கள் தரப்​பை ​எழுத்துத் தொழில்நுட்பரீதியாக ஆழமாக வாசகனின் மனதில் ஏற்படுத்துவதில் தஞ்​சை பிரகாஷ் இந்நூலில் ​வெற்றி ​பெற்றிருக்கிறார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: