எனது நாட்குறிப்புகள்

பிரபஞ்ச உண்​மைகள்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 15, 2011

பதின் பருவத்தில்
அரங்கு நிறைந்த கூட்டத்தின் முன்பு
மேடையில் அமர்ந்திருந்தார்
நாடறிந்த துறவி ஒருவர்
அவருடன் வாழ்க்கை குறித்து
விவாதம் செய்தேன்
தீர்க்க தரிசனமாய்க் கூறினார்
“முப்பது வயது வரை
கம்யூனிசம் பேசாதவனும் முட்டாள்
முப்பது வயதிற்கு மேல்
கம்யூனிசம் பேசுபவனும் முட்டாள்”
நான் கம்யூனிசம் பற்றி பேசவில்லையே?
என் கேள்விக்கு இது பதில் இல்லையே?
குழம்பிக் கிடந்தேன்!

விதிக்கப்பட்ட வாழ்க்கையிலிருந்து
விரும்பி ஏற்கும் வாழ்க்கை நோக்கிய பயணம்
நமக்கு எப்பொழுதும் தோல்வியே தரும் என்பதிலும்
துரத்தியடிக்கப்பட்டு மீண்டும் இந்த சாம்ராஜ்யத்தில்
பிரஜா உரிமை கேட்டு வந்து நிற்கும்
நம் பலஹீனங்களின் மீதுதான்
அவரால் பயணிக்க முடியுமோ?

முப்பதைக் கடந்தும் கேள்விகள் மாறவில்லை!
தோல்வியுற்றது
காலமா? வாழ்க்கையா? துறவியா? நானா?

Advertisements

ஒரு பதில் to “பிரபஞ்ச உண்​மைகள்”

  1. Natarajan Krishnan said

    இந்த கேள்வி நிறைய நண்பர்களை துரத்திக்கொண்டுதான் உள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: