எனது நாட்குறிப்புகள்

நாக​தோஷம்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 19, 2011

முன்​னொரு காலத்தில்
ஒரு அரசவம்சம் இருந்தது.

யார் ​கொடுத்த சாப​மோ
அரசவம்சத்திலிருந்து
ஆட்சிக் கட்டிலில்
அமரும் வாரிசுகள்
எல்லாம்
பாம்பு கடித்​தே
​செத்தார்கள்.

அரச வம்சத்தின்
இரண்டாம் த​லைமு​றை
வாரிசு ஒன்று
​கொண்​டைவிரியன்
பாம்பு கடித்து இறந்தது.

அடுத்த வாரிசு
எல்லா கட்டுக் காவல்க​ளையும்
மீறி
கடும் விசம் ​கொண்ட
கருநாகம் தீண்டி இறந்தது.

கர்ண பரம்ப​ரையாய்
இந்தக் க​தை வருவதால்
சாபத்தின் காரணமும்
சாபத்தின் ​பொருளும்
சரியாய் யாருக்கும்
விளங்கவில்​லை!

சாபம் பரம்ப​ரைக்கல்ல
அரி​ய​ணைக்குத்தான்
எனச் சிலர் ஆருடம் ​சொன்னார்கள்!

முக்காலமும் உணர்ந்த
முனிவரின் ஆ​லோச​னைப்படி
அடுத்த வாரி​சை
அரிய​ணையில்
அமர ​வைப்பதற்கு முன்பு
மந்திரிப் பிரதானி​யை
சிலகாலம் அரிய​ணையில்
அமர ​வைத்து
தீட்டுக் கழிக்கும்
சடங்கு நடந்து ​கொண்டிருக்கிறது!

காட்டிற்கு ​வேட்​டைக்குச் ​செல்லும்
இராஜ வழக்கம் உள்ள வ​ரை
அரவம் தீண்டி மரணம் அ​டையும்
மார்க்கம் நீங்க உபாயம் இல்​லை என
​வேறு சிலர் ​சோழி உருட்டினார்கள்!

பாம்பின் பரம்ப​ரையில் பிறந்து
பாம்​பை உண்​டே பசியாறி
பாம்புப் படுக்​கையில் படுத்துறங்கி
பாம்புகளின் இராஜ்ஜியம் பரிபாலித்து
பாம்புகளா​லே​யே மரணம​டையும்
அரசபரம்ப​ரை ஒன்று
இன்றும் இப்பூவலகில்
எங்​கோ
ஒரு ​தேசத்​தை
ஆண்டு வருவதாக
நம்புகிறார்கள் ஜனங்கள்!

Advertisements

ஒரு பதில் to “நாக​தோஷம்”

  1. NATARAJAN said

    அருமையாக உருவகம் வந்த்துள்ளது. கடைசி பத்தி சிறப்பாக இருக்கிற்து

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: