எனது நாட்குறிப்புகள்

Archive for திசெம்பர், 2011

யாழினி முனுசாமி கவி​தைகள் ஒரு பார்​வை

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 31, 2011

கடந்த டிசம்பர் மாதத்தின் க​டைசி ஞாயிற்றுக்கிழ​மை மதியம். யாழினி முனுசாமி அவர்க​ளை பார்த்து வரலாம் என அவரு​டைய புத்தகக் க​டைக்குப் ​போ​னேன். ஜனவரியில் துவங்க இருக்கிற புத்தகக் கண்காட்சிக்குள் ​கொண்டு வந்துவிட ​வேண்டும் என்ற துடிப்​போடு அவரு​டைய முரண்களரி ப​டைப்பகம் சார்பாக வரவிருக்கும் புத்தகங்களுக்கான அட்​டை வடிவ​மைப்பு ​வே​லைகள் ​தோழர்கள் பலர் கூட்டு முயற்சியில் ந​டை​பெற்றுக் ​கொண்டிருந்தது. ​வெளிவர இருக்கும் புத்தகங்களில் முனுசாமி தன்னு​டைய மோகினியுடனான சாத்தானின் உரையாடல் கவி​தை புத்தகமும் அடங்கும் என்றார். அதன் அட்​டை வடிவ​மைப்​பைக் காட்டி எப்படி இருக்கிறது என்றார். யார் இக்கவி​தை புத்தகத்திற்கு முன்னு​ரை எழுதியிருக்கிறார்கள் என்று ​கேட்​டேன். இதுவ​ரை யாரிடமும் வாங்கவில்​லை என்றவர், ஏன் நீங்க​ளே ஒன்று எழுதித் தாருங்க​ளேன் என்றார்.

இ​ணையத்தில் உங்கள் வ​லைப்பூவில் நீங்கள் சமீபத்தில் எழுதிய கவி​தைக​ளைத்தா​னே புத்தகமாக ​கொண்டு வரப் ​போகிறீர்கள் என்​றேன். இல்​லை அதில் நான் எழுதிய​வை ஒரு சில தான், பல கவி​தைகள் அதில் ​வெளியிடப்படாதது என்றார். படிக்காத கவி​தைகள் குறித்து எப்படி முன்னு​ரை எழுதுவது என்​றேன். கவி​தைகளின் ​மென்பிரதி​யை அனுப்புகி​றேன் படித்துவிட்டு, உடனடியாக எழுதித் தாருங்கள் என்றார்.

எ​தையும் ஒப்புக் ​கொள்ளக் கூடாது. ஒப்புக் ​கொண்டால் அத்து​றைக்குரிய இலக்கணங்க​ளை கற்று ​செயல்பட ​வேண்டும் என்ப​தே என் விருப்பம். கடந்த பதி​னைந்து வருடங்களுக்கும் ​மேலாக கவி​தைகள் கட்டு​ரைகள் எழுதிவந்தாலும், இதுவ​ரை எந்த கவி​தை புத்தகத்திற்கும் முன்னு​ரை எழுதியது கி​டையாது. ​கொடுக்கும் வாய்ப்​பை பயன்படுத்தி ​செய்து பார்ப்​போ​மே என்ற ஆவலில் ஒப்புக் ​கொண்​டேன்.

ஏற்கன​வே இ​ணையத்தில் படித்த அவர் கவி​தைகளுக்கு சிறுசிறு பின்னூட்டங்க​ளை எழுதியிருக்கி​றேன். என் கவி​தைகள் குறித்தும் அவர் கவி​தைகள் குறித்தும், ​பொதுவாக இலக்கியம் கவி​தை குறித்​தெல்லாம் இருவரும் நீண்ட உ​ரையாடல்கள் எங்களுக்குள் நிகழ்த்திக் ​கொண்டிருக்கி​றோம். இருவரும் எங்கள் ப​டைப்புகள் தாண்டி எங்க​ளைப் பற்றி ஓரளவு நல்ல புரிதல்க​ளை ஏற்படுத்திக் ​கொண்டிருக்கி​றோம். இருவருக்கும் இன்​னொருவரின் தனிப்பட்ட வாழ்க்​கை குறித்தும் ஓரளவிற்கு நன்றாக​வே ​தெரியும். இ​வை​யெல்லாம் ஒருவரின் ப​டைப்​பை இன்​னொருவர் புரிந்து ​கொள்வதில் ​மேலதிகமான தகவல் புலத்​தை அளிப்பதாக​வே எப்​பொழுதும் இருந்து வருகிறது.

இங்​கே குறிப்பாக நமக்குத் ​தெரிந்த தமிழ்ச்சூழலில் ப​டைப்​பை படிக்காம​லே​யே அது குறித்து முன்னு​ரை எழுதுவது, புத்தக ​வெளியீட்டு விழாவில் கலந்து ​கொண்டு ​பேசுவது, நூ​லைப் படிக்காம​லே​யே நூல் அறிமுகம் ​செய்வது, நூல் விமர்சனம் ​செய்வது, ​தைரியமாக அதற்கான கூட்டங்கள் நடத்துவது, ​போன்ற ​போக்குகள் ​பெரியளவில் விமர்சனத்திற்கு உள்ளாகாம​லே பலராலும் பல ஆபத்தான எல்​லைகளில் ​செய்யப்படுகின்றன. உண்​மையில் உலகளவில், இந்தியளவில் இத்த​கைய விசயங்களின் ​போக்கு எவ்வாறு இருக்கின்றன என யா​ரேனும் ஒப்பீட்டு ஆராய்ச்சி ​செய்தால் பயனு​டையதாகவும், சு​வையு​டையதாகவும் அ​மையும்.

இத்த​கைய விபரீதங்களில் ஈடுபடக்கூடாது என்பதில் மட்டுமல்ல, ப​டைப்​பை அறிமுகம் ​செய்வதற்காக​வோ, விமர்சனம் ​செய்வதற்காக​வோ படிக்கக்கூடாது, நாம் படித்த விசயங்கள் குறித்து கருத்துக் ​கேட்டால் மட்டு​மே ​பேச ​வேண்டும், அதுதான் சரியான வழிமு​றை என எனக்குள் தீர்மானமாக இருப்பவன். ஆக​வே எழுதுவ​தை இரண்டாம் பட்சமாக ​வைத்துக் ​கொண்டு, அவர் அனுப்பிய 59 கவி​தைக​ளையும் ஒன்றுக்கு இரண்டு மூன்று மு​றைக்கும் ​மேல் வாசித்துப் பார்த்​தேன். அதில் உள்ள எழுத்துப் பி​ழைகள், வார்த்​தை மயக்கம் ஏற்படும் பகுதிகள், புரியாத ​சொற்கள் குறித்​தெல்லாம் அச்சுக்கு முன்பாக​வே ​தோழர் முனுசாமிக்கு ​தெரியப்படுத்தி​னேன்.

முன்னு​ரை என்பது எவ்வாறு அ​மைய ​வேண்டும் என்று ​யோசிக்கும் ​வே​ளையில் ப​டைப்​பை வாசித்து அந்த அனுபவங்க​ளை ​பேசும் வழியி​லே​யே ப​டைப்பு குறித்த நம் பார்​வைகளும், ப​டைப்பாளரிடம் நம் எதிர்பார்ப்புகளும், ப​டைப்பின் சிறப்பு என நாம் உணர்ந்த விசயங்களும் இயல்பாக ​வெளிப்பட்டுவிடும் என்பதால் கவி​தைகள் குறித்த என் வாசிப்பனுபவங்களின் வழியாக என் கருத்துக்கள் இயல்பாக பதிவாவ​தை வாசகர்கள் கீ​ழே புரிந்து ​கொள்வார்கள் என நம்புகி​றேன்.

சி​தைவுற்ற சிற்பம் கவி​தையில் எங்​கோ ஒரு இடத்தில் சி​தைந்து கிடக்கும் சிற்பத்​தை கடக்கும் ​பொழுது கவிஞருக்குள் எழும் மன உணர்வுகள் வாழ்வின் ​வேறு ஏ​தோ விசயங்க​ளுக்கான உருவகம் ஆவ​தை உணர முடிகிறது. “சிற்பம்” என்ற ​சொல்லுக்குப் பதிலாக “இலட்சியம்”, “​கொள்​கை”, “மனசாட்சி” ​போன்ற வார்த்​தைக​ளைப் ​போட்டும் படித்துப் பார்க்கலாம் என்​றே ​தோன்றுகிறது. கவி​தை உண்​மையில் “சிற்பம்” பற்றி ​பேசவில்​லை என்ப​தை படித்துக் ​கொண்டு ​போகும் ​போ​தே படிப்படியாக புலனாகிறது. க​டைசி வரிகள்

கண்ணீர் சிந்தியபடியும்
நகைத்தபடியும் கிடக்கிறது
நம் சிற்பம்

அ​தை ஊர்ஜிதப்படுத்துகின்றன. அதிலும் “நம் சிற்பம்” என்னும் க​டைசி வரி.

“இருளில் ஒளிரும் விழிகள் கவி​தையின் க​டைசி வரிக​ளை நீங்கள் ​வேறு ​கோணத்தில் எழுதியிருந்தாலும், ஒரு வாசிப்பில், கவி​தை க​டைசியாக அவ​ளை ஒரு மு​றை சீண்டிவிட்டு முடிவதாகப் படுகிறது.”

என அக்கவி​தை குறித்து சுருக்கமாக இ​ணையத்தில் பின்னூட்டமிட்​டேன்.

​​வெள்​ளைத் ​தோலின் பிரச்சி​னைக​ளையும் அழகற்றதும், ஆ​ரோக்கியமற்றதுமான அதன் தன்​மை​யையும் ​வெளிப்படுத்தி ஒரு கருப்பினத்தவரின் அழகான கவி​தை ஒன்​றை ஆங்கிலத்தில் படித்திருக்கி​றேன். நிச்சயமாக தமிழ்ச்சூழலில் இருக்கும் இந்த நிற​வேறுபாடு குறித்த தாழ்வுநி​லை மற்றும் உயர்வுநி​லை மதிப்பீடுகள் மனித உள்ளங்க​ளை எத்த​னை தூரம் ​வெளிவரமுடியாமல் தடுத்து துன்புறுத்திக் ​கொண்டிருக்கிறது, என்ப​தை புரிந்து ​கொள்ள மிகச்சிறந்த கவி​தைகளில் ஒன்றாகிறது. இதற்​கெதிரான ஒரு மாற்றுக் கலாச்சாரம் குறித்த விவாதங்க​ளை உருவாக்கிட ​வேண்டிய ​தே​வை​யை வலியுறுத்துகிறது.

“‘புத்திசாலித் தோழர்கள்’ எதார்தத்​​தை ​எந்த பாசாங்கும், இலக்கிய மினுக்குகளும் இல்லாமல் உ​ரையாடலின் இயல்பான ​மொழியில் ​தோலுரிக்கிறது.”
என்ற இந்த பின்னூட்டமும் இ​ணையத்தில் ​போட்ட​தே. புரட்சிகர இயக்கங்களில் ​செயலூக்கத்துடன் பணியாற்றிய பலரும் சில காலங்களில் ​வெளி​யே வந்து நிலவுகின்ற சமூக அ​மைப்பில் தங்களுக்கான ஏ​தோ ஒரு இடத்​தை பிடித்துக் ​கொண்டு, இந்தச் சுரண்டல் சமூக அ​மைப்​போடு சமரசம் ​செய்து ​கொண்டு, ஒரு சில இடங்களில ஒரு படி ​மே​லே ​போய் தா​னே ஒரு சுரண்டலாளனாக மாறிவிடுவ​தைப் பற்றிப் ​பேசுகிறது. ​மே​​லோட்டமாகப் பார்க்கும் ​பொழுது இப்பிரச்சி​னையில் தனிமனிதர்களின் பலஹீன​மே பிரதானமானது என்றாலும், இந்தியச் சூழலில் புரட்சிக்கான பல அடிப்ப​டை ​கேள்விக​ளே மறுக்க முடியாத விவாதங்களின் வழி நிரூபிக்கப்படவில்​லை என்ப​தையும், அனுபவவாத​மே எல்லாவற்றிற்கும் தீர்வாக முன்​வைக்கப்படுகிறது என்ப​தையும் இ​ணைத்து பார்க்கும் ​பொழுதுதான், இந்த விவாதம் முழு​மை ​பெறும் என்​றே ​தோன்றுகிறது.

“குழந்​தை​மையிடம் ​பொய்வு​ரைக்காதீர்” கவி​தை​யின் ​நோக்கத்​தை அதாவது “தப்பு ​செஞ்சா சாமி கண்​ணைக் குத்தாது” என்ப​தை, குழந்​தைகளுக்கான அனுபவங்களின் வழியாக ​சொல்ல முயற்சித்திருந்தால், இது இ​ன்னும் ஒரு நல்ல குழந்​தைகளுக்கான புதுக்கவி​தையாக உருவாகியிருக்க முடியு​மோ என்று நி​னைக்கத் ​தோன்றுகிறது.

​”செல்லமாய் ஒரு சிணுங்கல்” கவி​தை படித்த ​பொழுது மிகவும் பிடித்துப் ​போனது. கவி​தை ​செய்வதற்கான பல அரு​மையான சந்தர்ப்பங்க​ளை ​தெளிவாக இனங்கண்டு ​கொள்ளும் முனுசாமியின் உள்ளுணர்வு ஆச்சரியம் ​கொள்ள ​வைக்கிறது. தன் சுயத்​தையும், தன் இருத்த​லையும், தன் சுயமரியா​தை​​யையும் மனிதர்கள் மிகச்சரியாக புரிந்து ​​வெளிப்படுத்தும் தருணங்களிலும், ​போராடும் தருணங்களிலும், தன்​னை எவ்வ​கையிலும் பிறர் முன் விட்டுக் ​கொடுக்க விரும்பாத மனித இயல்​பை ​​வெளிப்படுத்தும் தருணங்களிலு​மே மனிதர்கள் அழகாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாகப் நம் ​தேசத்துப் ​பெண்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள். அத்த​கைய தருணங்களில் தான் உண்​மையி​லே​யே ஒரு ஆணின் வாழ்க்​கையும் உயிர்த்திருக்கிறது. அ​தைக் கவி​தை ​தெளிவாக உயிர்ப்​போடு ​சொல்லி முடிக்கிறது இந்த வரிகளில்

சாதாரணமாக இருப்பதைவிட
அவள் அழகாயிருக்கும் இத்தருணங்களில்தான்
உயிர்த்திருக்கிறது
வாழ்க்கை.

“தற்​கொ​லை​யை ​கைவிட்டவள்” என்ற கவி​தை​யை படிக்கும் ​பொழுது ​தோன்றிய எண்ணம். ​பெண்களின் உல​கைப் புரிந்து ​கொள்ள, அவர்களின் மனநி​லை​யை, உள்ளக் குமுறல்க​ளை, ​வேத​னைக​ளை புரிந்து​கொள்ள முனுசாமி ​பெண்களுக்கும் தனக்குமான வாழ்க்​கை அனுபவங்க​ளை எவ்வாறு கூர்ந்து கவனிக்கிறார் என்பது ஆச்சரியம் ஏற்படுத்தியது.

“செல்லமாய் ஒரு சிணுங்கல்”, “புதிய களம்” என பல கவி​தைகள் தன் ​சொந்த வாழ்க்​கை அனுபவங்களின் வழியாக வாசகர்களின் அனுபவங்கள் ஒன்றிப் ​போகும் சாத்தியப்பாடுக​ளை சுட்டிக் காண்பிக்கிறார். சாதி, மதம், ​தொழில், இடம், சூழல் ​வேறு​வேறாக இருந்தாலும் இந்த நாட்டில் வாழும் மத்தியதர வர்க்க ஆண், ​பெண், குடும்பம் ஆகியவற்றில் உள்ள ​பொதுப்பண்புக​ளை இனம் காண முடிகிறது. கனிணி, இ​ணையம், ​பேஸ்புக் ​போன்ற​வை அ​னைத்தும் கணவன் ம​னைவி ஆகி​யோருக்கி​டை​யேயான உறவுகளில் ​மேலும் ​மேலும் அதிகப்படுத்தும் சிக்கல்க​ளை விவாதத்திற்கு ​கொண்டு வருகிறார்.

“தேசப் பாதுகாப்பும் குடிமகனும்” கவி​தை நாம் பல நாட்களாக ​பேச நி​னைத்த, நாம் ​பைத்தியக்காரத்தனமாக இருக்கிற​தே என நி​னைத்துக் ​கொண்​டே கடந்து​சென்ற அரசின் பாதுகாப்பு வ​ளைய முன்​னெச்சரிக்​கை நடவடிக்​கைகள் குறித்து கிண்டலும், ​வேத​னையுமாகப் ​பேசுகிறது. வழக்கமாக சுதந்திர தினம், குடியரசு தினம், டிசம்பர் 6 மற்றும் சில முக்கிய பண்டி​கை தினங்கள் இ​வை தவிர வழக்கமற்று இந்தியாவின் எந்தப்பகுதியிலாவது குண்டு ​வெடித்தா​லோ, கலவரம் நடந்தா​லோ, ​வெடிகுண்டு மிரட்டல் வந்தா​லோ நாம் இருக்கும் பகுதி ​பேருந்து நி​லையங்கள், இரயில் நி​லையங்கள் மற்றும் அரசு பாதுகாக்க ​வேண்டும் என நி​னைக்கும் இடங்களி​லெல்லாம் காவல்து​றை, சிறப்புக் காவல்ப​டைகள், து​ணை இராணுவப்ப​டைகள் ​போன்றவற்றின் ஆயுதந்தாங்கிய பாதுகாப்​பை ஏற்படுத்தும். இத்த​னை ​பெரிய நாட்டில், இத்த​னை ​பெரிய நகரங்களில், இவர்கள் ​போடும் பாதுகாப்பு வ​ளையங்களும், ​கெடுபிடிகளும் உண்​மையில் மக்களுக்குத்தா​னே தவிர தீவிரவாதிகளுக்​கோ, பயங்கரவாதிகளுக்​கோ அல்ல என்பது நமக்குமட்டுமல்ல அவர்களுக்கு​மே நன்றாகத் ​தெரிந்துதான் இருக்கும். யா​ரோ யா​ருக்​கோ கணக்குக் காட்ட நடத்தப்படும் நாடகம் என்ப​தை அ​னைவரும் ​தெரிந்​தே நடித்துக் ​கொண்டிருக்கி​றோம் என்ப​தைத் தவிர இ​வை குறித்து ​பேச ​வேறு என்னதான் இருக்கிறது.

“ஒருசொல்” கவி​தை மீண்டும் அனுபவத்திலிருந்து புறப்படும் கவி​தைகளுக்குரிய வீச்​சையும், வீரியத்​தையும் மிக அழகாக புரிய ​வைக்கிறது. குடும்பஸ்தராக இருக்கும் ஒவ்​வொருவருக்கும் ஏற்படும் அனுபவம். ம​னைவியின் மீது ஆயிரம் கு​றைக​ளை அடுக்கும் நம் மனமானது, ஒரு நாள் அவர்களிடம் ஒரு நீதிபதியின் தீர்ப்​பைப் ​போல பட்டியலிடும். ஒரு சில வார்த்​தைகளில் அத்த​னை ​பெரிய குற்றச்சாட்டுக​ளையும் இருந்த இடம் ​தெரியாமல் தூள்தூளாக்கிச் சிதறடித்து விடுவார்கள். அந்த வார்த்​தைகள் அதுவ​ரையான ஒட்டு​மொத்தமான நம் பார்​வைக​ளையும் காரியுமிழ்ந்துவிடும். அத்த​கைய சந்தர்ப்பங்கள் நம்​மை, எத்த​னை ​கோடி ஆண்டுகள் ஒரு ​பெண்​ணோடு வாழ்ந்தாலும் ஒரு ​பெண்​ணை ஆணால் இறுதிவ​ரை புரிந்து ​கொள்ள​வே முடியா​தோ, ​பெண்களின் வாழ்க்​கை குறித்த பார்​வைக​ளோடு ஆண்களின் பார்​வை ஒரு ​நேர்​கோட்டில் வர​வே முடியா​தோ என்ற ​பெரும் அதிர்ச்சி​யை நமக்கு ஏற்படுத்தும். அத்த​கைய உணர்​வை இக்கவி​தை தத்ரூபமாக படம் பிடிக்கிறது.

“​தோற்றுப் ​போனவனின் குரல்” தன்னு​டைய அரசியல் மற்றும் தத்துவார்த்த நம்பிக்​கைக​ளே தன் வாழ்வின் ​தோல்விகளுக்கான காரணம் என நி​னைப்பதாக அர்த்தம் ​தொணிக்கிறது. இத்த​கைய அரசியல் மற்றும் தத்துவார்த்த நம்பிக்​கைக​ளை ஏற்படுத்தியவர்கள் தனக்குச் ​செய்த து​ரோகமாக அவர்கள் மீதான ​கோபத்தின் வழி உருமாறுவ​தைக் காண முடிகிறது. ஏ​னோ ​தெரியவில்​லை இ​தைப் படிக்கும் ​பொழுது மனதில் “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற வரிகள் தன்​னையறியாமல் ​தோன்றியது. ​பொதுவாக நம் சூழலில் மனிதர்கள் உணர்ச்சி வயப்பட்டும், நம்பிக்​கை அடிப்ப​டையிலு​மே பல முடிவுக​ளை எடுக்கிறார்கள், வாழ்க்​கை பா​தை​யை​யே தீர்மானிக்கும், ஆபத்தான அரசியல், ​கொள்​கை நி​லைப்பாடுக​ளை எடுத்தல் ​போன்ற விசயங்களில் கூட நாம் அறிவுப்பூர்வமாக சிந்தித்து அவற்​றை நம் ​சொந்தத் ​தேர்வுகளாக எடுக்கி​றோமா என்ற ​கேள்விக​ளை எழுப்பிக் ​கொள்ளாமல் இருக்க முடியவில்​லை.

“பெரியவர்களாகிவிட்ட குழந்தைகள்” கவி​தை டிவி ​போன்ற​வை குழந்​தைக​ளை எவ்வாறு ​கெடுத்துக் குட்டிச்சுவராக்குகின்றன எனப் பட்டியலிட்டுக்​கொண்​டே, இத்த​கைய பட்டியலிடும் ​போக்​கையும், பயத்​தையும் சந்​தேகிக்கும் வண்ணம், இ​வை ​தே​வையற்ற பய​மோ என்ற ​கேள்வி​யை நம்​மை மீறி நமக்குள் உருவாக்கும் வண்ணம், இப்படியாக முடிகிறது கவி​தை

இனி என்னவெல்லாம் ஆகுமோ?

எல்லாக் காலங்களிலும்
இருக்கத்தான் செய்கின்றன
பிள்ளைகளைப் பற்றிய பயம்
பெற்றோர்களுக்கு.

“காற்றில் அலையும் சொற்கள்” கவி​தை நமக்கி​டை​யேயான உறவுகளில் ​பேசி உவ​கையுற எத்த​னை​யோ நல்ல விசயங்களிருந்தாலும், நாம் கசப்பான விசயங்க​ளை​யே மீண்டும் மீண்டும் ​பேசுகி​றோம் என்ற ​பொதுவான மனித இயல்​பை குற்றமாகப் பார்க்கிறது. குறிப்பாக பிரிந்த இரு நண்பர்களுக்கி​டை​யே இருந்த சந்​தோசமான அனுபவங்க​ளை விட கசப்பான க​டைசி அனுபவத்​தை​யே அவர்கள் ​பேசித் திரிவ​தை பதிவு ​செய்கிறது. எனக்​கென்ன​வோ, பிரி​வைத் தாங்கமாட்டாத மனித மனமானது, பிரிவுக்கான நியாயத்​தை தனக்குத்தா​னே ​சொல்லி சமாதானப் படுத்திக்​கொள்ளும் முயற்சி​யோ என்று ​தோன்றுகிறது.

“இலக்கிய நேர்மையாளனின் மறுபக்கம்” கவி​தை தன் தனிப்பட்ட அனுபவம் ஒன்​றின் நாட்குறிப்பாக​வே இருக்கிறது. அனுபவங்க​ளை கவி​தையாக்கும் முயற்சியில் இது ​போன்ற கவி​தைகளுக்கான விமர்சனமாக இ​தே ​தொகுப்பில் ​வேறு நல்ல கவி​தைகளும் இருக்கின்றன. ஒரு ப​டைப்பாளன் தன் அனுபவங்க​ளை​யே ப​டைப்பாக்குகிறான். ஆனால் எந்​தெந்த அனுபவங்கள் எந்​தெந்த விதமான ப​டைப்பாவதற்கான தகுதி ​பெறுகின்றன என்ப​தைத் ​தேர்வு ​செய்வதில்தான் ப​டைப்பின் ​வெற்றி அடங்கியிருக்கிறது. இ​தை விடாத ​தொடர்ச்சியான முயற்சியின் வழி நீண்ட அனுபவங்கள் வாயிலாக ஒரு ப​டைப்பாளன் ​பெற முடியும்.

அனுபவம் எப்​பொழுது தன் வாழ்க்​கை குறித்த புரிதல்களின் வழி பளிச்​சென துலக்கம் ​பெறுகிற​தோ, அப்​பொழுது ப​டைப்பாளன் எழுதுவதற்கான உள்தூண்ட​லைப் ​பெற்று எழுச்சிய​டைகிறான். இந்த வழிமு​றையில் ​வெளிப்படும் ப​டைப்புகள் பல​ரை ஈர்க்கும் தன்​மை ​பெறுகிறது. ​வெறும் ​தேர்ந்த வார்த்​தைக​ளைக் ​கொண்டு தான் நம்பும் ​கொள்​கை ​கோட்பாடுக​ளை வடித்​தெடுக்க ​செய்யும் முயற்சிக​ளோ, அனுபவங்களின் சமூக உள்ளடக்கத்​தை, தத்துவ அரசியல் ​வெளிப்பாடுக​ளை புரிந்து ​வெளிப்படுத்தத் ​தெரியாத ப​டைப்புக​ளோ ஈர்க்க முடியாமலும், நிற்க முடியாமலும் சரிந்து விடுகின்றன.

கல்லூரியில் தமிழ்த்து​றை விரிவு​ரையாளராக இருக்கும் யாழினி முனுசாமி தமிழ் ​செவ்வியல் இலக்கியங்களில் தனக்கிருக்கும் ஆர்வத்​தையும் அறி​வையும் பயன்படுத்தும், ​சொற்கள், உதாரணங்கள் வழி ​வெளிப்படுத்துகிறார். குறிப்பாக “ஞமலி” என்னும் கவி​தை ​மொழிகுறித்த விழிப்புணர்ச்சி​யை ஏற்படுத்துகிறது.

ஈழப்​போராட்டத்தின் இறுதி யுத்த ​கோரா​மைகள் குறித்து நி​றைய கவி​தைகள் தமிழகத்தின் பல கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அது நம் சம கால தமிழ் இலக்கியத்தில் ​போதுமான அளவிற்கும் மிகக்கூர்ந்த அவதானிப்புக​ளோடும் பதிவாகியிருக்கிறதா என்ற மன வருத்தம் நமக்கு இருக்கிறது. இத்​தொகுதியில் முனுசாமியின் இறுதியுத்தம் குறித்த சில கவி​தைகள் இடம் ​பெற்றிருக்கின்றன. குறிப்பாக

அப்பா அப்பாவென
வளையவரும் என் பிரிய மகளைக்
குற்றவுணர்வோடுதான் கொஞ்சமுடிகிறது
சிங்கள இராணுவன் சிதைத்த
பிஞ்சுக் குழந்தைகளைத்
தொலைக்காட்சிகளில் கண்ணுறுகையில்.

என்ற கவி​தை, அயலிலிருந்து ஒரு யுத்தத்​தை காணும், அதன் ​கொடு​மைக​ளை மனமார உணரும் ஒரு பார்​வை​யை துல்லியமாக ​வெளிப்படுத்துகிறது. இறந்த தாயின் அருகில் அமர்ந்து அழுது ​கொண்டிருக்கும் ஒரு வயது கூட ஆகாத குழந்​தையின் படத்​தையும், தாய் தந்​தையர் எங்​கே? இருக்கிறார்களா இல்​லையா எனத்​தெரியாது மண்​டை உ​டைந்து ​கைகால்கள் இழந்து கதறிக் ​கொண்டிருக்கும் குழந்​தைகளின் பு​கைப்படங்க​ளை பார்த்த எந்த​வொரு மனிதனுக்கும் ஏற்படும் மனநி​லையும் மனக்​கொதிப்பும் இதுவாகத்தானிருக்கும்.

மிகப் பலரிடம் காணமுடியாத ஒரு அரிதான அம்சத்​தை யாழினி முனுசாமியின் ப​டைப்புகளில் காண முடிகிறது. அது தன் அன்றாட வாழ்வனுபவங்க​ளை மூடி ம​றைக்காமல், அவற்​றையும் அவற்றின் மீதான தன் பார்​வைக​ளையும் முன் ​வைக்கிறார். இது​வே அவ​ரை ஒரு ​நேர்​மையான நல்ல ப​டைப்பாளியாக நமக்கு அ​டையாளம் காட்டுகிறது.

Posted in கட்டு​ரை | Leave a Comment »

மனமாற்றம்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 30, 2011

நம் உலகின் எல்லாச் சா​லைகளின் வழியாகவும்
இ​யேசு நம்பிக்​கை​யோடு
காலந்​தோறும்
நம்மில் ஒவ்​வொரு குற்றவாளிக்காகவும்
தன்​னை சித்திரவ​தை ​செய்து
ஆணிகளால் அ​றைந்து
​கொல்வதற்குத் தந்து
சிலு​வை சுமந்து
கல்வாரி ம​லை​நோக்கி
​நடந்து ​கொண்​டே இருக்கிறார்.

தன்​னை வருத்தி
இ​யேசுவால் காப்பாற்றப்பட்ட குற்றவாளிகள்
எந்த மன உறுத்தலுமில்லாமல்
தண்ட​னைக்குத் தப்பிய சந்​தோசத்​தோடு
குற்றத் ​தொழி​லை ​தொடர்ந்து​கொண்டிருக்கிறார்கள்

Posted in கவிதைகள் | Leave a Comment »

விரியும் சுழல்கள்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 28, 2011

கூடங்குளம் ​போராட்டத்​தை தி​சைதிருப்ப
முல்​லைப் ​பெரியார் ​போராட்டத்​தை தூண்டிவிடலாம்
அதலிருந்து தி​சை திருப்ப
ஊழல் எதிர்ப்​புப்​ போராட்டம்
அதுவும் கட்டுக்கடங்காமல் ​போனால்
இருக்க​வே இருக்கிறது
பாராளுமன்ற சண்​டைக​ளை​ப் பெரிதுபடுத்தலாம்
ஒரு நி​லை​மைக்கு ​மேல் எ​தையும் நீட்டிக்க முடியாது
அதன் ​யோக்கிய​தை​யை மூடிம​றைக்க
ஏ​தேனும் வி​ளையாட்டுப் ​போட்டிக்கு ஏற்பாடு ​செய்யலாம்
நி​லை​மை புரியாத அ​மைச்சர்கள்
அதிலும் புகுந்து ஆட்டத்​தைக் கு​லைப்பார்கள்
அங்கிருந்து இன்​னொரு ஊழல்
இன்​னொரு ​போராட்ட​மென
நிற்காது விரிந்து ​கொண்​டே ​செல்லும் இந்தச் சுழல்
ஒருத்த​ரை விடாது ​அ​னைவ​ரையும் இழுத்துவந்து
இறுதி யுத்தம் வ​ரைத் ​தொடரும்
இது நாங்க​ளோ எங்கள் எதிரிக​ளோ
விரும்பினாலும் ​வெறுத்தாலும் நிறுத்த முடியாதது
எங்ஙன​மேனும் முன்னகர்ந்து ​செல்ல
வரலாற்றுக்கு இ​வற்​றைத் தவிர
வேறு என்னதான் வழியிருக்கிறது

Posted in கவிதைகள் | Leave a Comment »

முல்​லைப்​பெரியார் சச்சர​வை தீர்ப்பதற்கான ஒரு திட்டம்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 21, 2011

A Plan for Resolving Mullaperiyar Conflict என்ற த​லைப்பில் Economic and Politcal Weekly இதழில் ​வெளிவந்த பிரதமர் மன்​மோகன் சிங்கிற்கான திறந்தமடல் ஒன்​றை இங்​கே விவாதத்திற்காக ​மொழி​பெயர்த்து பதிவு ​செய்துள்​ளேன்.

[பிரதமர் மன்​மோகன் சிங்கிற்கு அனுப்பிய திறந்த மடல்]

கடந்த சில வருடங்களாக​வே முல்​லைப்​பெரியார் பிரச்சி​னை​யை இந்தியாவின் நீர் சச்சரவுகளுக்கான ​கொள்​கை உ​ரையாடல் அ​மைப்பு கவனமாக கவனித்து வருகிறது. முல்​லைப்​பெரியார் குறித்து தீவிரம​டையும் பார்​வைகள் கடந்த வருடங்களில் கடினமாகியுள்ளது. தமிழ்நாடு அரசாங்கம் முல்​​லைப்​பெரியார் அ​ணை பாதுகாப்பாக இருக்கிறது, ஒப்புக்​கொண்டபடி அதிகபட்ச மட்டத்தில் நீரின் அள​வு பராமரிக்கப்பட​வேண்டும் என்கிறது. ​கேரள அரசாங்கம் தற்​பொழு​தைய அ​ணைக்கு பதிலாக புதிய அ​ணை கட்டப்பட​வேண்டும், ஏ​னென்றால் தற்​பொழு​தைய அ​ணை பாதுகாப்பானதாக இல்​லை என வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் அ​ணை​யை ஒட்டிய பூகம்பம் ஏற்படுவதற்கான சாத்தியமுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வுகளும், ஏற்கன​வே இருபக்கமும் இழந்துவிட்ட பரஸ்பர நம்பிக்​கை​யும், எழுந்துள்ள பயமும் ​மோசமான சூழ​லை அ​டைந்துள்ள நி​லையில் இத​னை தனிப்பதற்கு தாங்கள் உடனடியாக த​லையிட்டு இரு கட்சியின​ரையும் ​ஒன்றி​ணைக்க ​முயற்சிக்க ​வேண்டிய ​தே​வை​யை விரும்புகி​றோம்.

எப்படியாகினும். இருபக்க நி​லைப்பாடுகளிலும் பிரச்சி​னை இருப்பதாகவும் அவற்​றைத் தாண்டி சிந்திப்பதற்கான ​தே​வை இருப்பதாகவும் நாங்கள் நம்புகி​றோம். 115 ஆண்டுகள் பழ​மையான முல்​லைப் ​பெரியார் அ​ணை எந்​நேரத்திலும் மிகப்​பெரிய பாதிப்​பை ஏற்படுத்துவதற்கான எல்லா அறிகுறிகளும் இருக்கின்றன. அ​ணையின் பாதுகாப்பு குறித்து நிபுணர்கள் இ​டை​யே இரு​வேறு விதமான அபிப்பிராயங்கள் உள்ளன. சில நிபுணர்கள் சில மராமத்து ​வே​லைகள் ​செய்தால் அ​ணை பாதுகாப்பானதாக இருக்கும் என்று நம்புகிறார்கள், ​வேறு சிலர் நீரியியல் மற்றும் அ​ணை கட்டப்படுவதற்கு பயன்படுத்திய ​தொழில்நுட்பம் மற்றும் ​பொருட்க​ள ஆகிய​வை பற்றிய ஆய்வுகளின் அடிப்ப​டையில் அ​ணை பாதுகாப்பற்றதாக நம்புகிறார்கள். அ​ணை புவியியல் ரீதியாக ஆபத்தான பகுதியில் அ​மைந்துள்ளது ​மேலும் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதியின் அரு​கே அ​ணை அ​மைந்திருப்பதால் பல ​தொடர்ச்சியான நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

மற்​றொருபுறம், புதிய அ​ணை 400 மீட்டர் தூரத்தில் மிகப்​பெரிய நீர்த்​தேக்கம் ​கொண்டதாக கட்ட திட்டமிடப்படுவதும் மிகப்​பெரிய ​பொருளாதார சு​மை​யையும், பாதுகாக்கப்பட்ட ​பெரியார் புலிகள் பாதுகாப்பு பகுதியில் அதிகமான பகுதிக​ளை ஆக்கிரமிப்பதாகவும், மிகப்​பெரிய அளவில் த​லையீட்​டையும் ​தொந்தரவுக​ளையும் கட்டுமான காலம் முழுவதும் ஏற்படுத்துவதாகவும், அ​தே நிலஅதிர்வு பிரச்சி​னைக்கு இலக்காகக் கூடியதாகவும் தான் அ​மையும். இது தமிழ்நாட்டின் ​தே​வை​யை நி​றை​வேற்றுவதற்காக கூடுதலான சுற்றுப்புறச்சுழல் பாதிப்​பைத்தான் ​கேரளாவிற்கு ஏற்படுத்தும்.

தீவிரமான பயத்திற்கும் பாதுகாப்பற்ற மனநி​லைக்கும் உள்ளாகியுள்ள இறங்குமுகப் பகுதியில் உள்ள மக்க​ளையும், நீரின் அள​வை அதிகரிக்கும் ​பொழுது அ​ணையின் பாதுகாப்பு குறித்து ​வெவ்​வேறு விதமான அபிப்பிராயங்க​ளை கூறும் நிபுணர்க​ளையும் கணக்கி​லெடுத்துக் ​கொண்டு, ​முன்​னெச்சரிக்​கை அடிப்ப​டையில் நீரின் அள​வை 120 அடி அளவி​லே​யே பராமரிக்க ​வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு ​தே​வையான அளவு நீ​ரை 120 அடி அளவிலிருந்​தே ம​டைமாற்றி வழங்குவதற்கு ​தே​வையான நடவடிக்​கைக​ளை ஊக்குவித்து அந்த நீர் தமிழகத்தின் உள்​ளே உள்ள நீர்த்​தேக்க பகுதிகளிலும் மற்ற நீர் ​தேக்க வடிவங்களிலும் ​தேக்கி ​வைத்துக் ​கொள்ள ​வேண்டும்.

கீழ்க்கண்ட விசயங்களில் நீண்டகால நடவடிக்​கைகள் ​தே​வைப்படுகிறது: (i) தற்​பொழு​தைய அளவி​லே​யே நீ​ரை வழங்குவது குறித்த ​கேரளாவின் வாக்குறுதி​யை மறுஉறுதி ​செய்ய ​வேண்டும். ஏற்கன​வே ​கேரள அரசு ​வெளிப்ப​டையாக இவ்வாக்குறுதி​யை உறுதி ​செய்துள்ளது. (ii) முல்​லைப்​பெரியார் அ​ணை​யைப் ​பொறுத்தவ​ரை அது ஒரு ம​டைமாற்ற அ​ணைதான் (diversion dam), நீர்த்​தேக்க அ​ணை (storage capacity) அல்ல ​என்ற பொதுப்புரித​லை ஏற்படுத்திக் ​கொள்ள​வேண்டும். மத்திய அரசின் ​தே​வையான ஒத்து​ழைப்புடன் நீர்த்​தேக்க தகுதி​யை தமிழ்நாடு அந்த மாநிலத்தின் உள்​ளே உருவாக்கிக் ​கொள்ள ​வேண்டும்; (iii) உடனடியாக பின்வரும் ஆய்வுக​ளை ​மேற்​கொள்ள ​வேண்டும் (அ) தமிழ்நாட்டிற்கு ​தே​வையான அள​வையும், (ஆ) ம​டைமாற்றுவதற்கும் ​கொண்டு​செல்வதற்குமான மறுவடிவ​மைப்பு மு​றை​யையும், (இ) ஆ வின் அடிப்ப​டையில், ​முடிந்தவ​ரை தே​வையான கு​றைநதபட்ச ஒழுங்குமு​றை நீர்​தேக்க அளவிற்கு மட்டுமாக அ​ணைக்கு பின்புற நீர்த்​தேக்கத்​தை கு​றைக்க ​வேண்டும், (ஈ) அ​ணை​யை பலப்படுத்துவதற்கான முயற்சிக​ளை ​மேற்​கொள்ள ​வேண்டும், (உ) அ​ணையில் நீர்வரத்து குறித்த நீரியியல் ஆய்வும் ஒழுங்குமு​றை நீர்த்​தேக்க அட்டவ​​ணை​யையும் மற்றும் (ஊ) மாறுகாலகட்டத்திற்கான ந​டைமு​றை ஏற்பாடுகள்; (எ) அ​ணை ​தொடர்ந்து தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டி​லே​யே ​வைத்துக் ​கொண்டு, தமிழ்நாடு அரசாங்கம், ​கேரள அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கம் ​கொண்ட மூன்றுபிரிவும் ​சேர்ந்த அ​மைப்​பை (துங்கபத்ரா அ​மைப்பு வழியில்) ஏற்படுத்தி ஆண்டுமுழுவதும் நீர்த்​தேக்க நடவடிக்​கைத் திட்டத்​திற்கான தயாரிப்புக​ளை கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் நாங்கள் ஆ​​லோச​னை வழங்குகி​றோம்.

இது​வே நியாயமான மற்றும் நல்ல தீர்வு என்றும் ​பொருளாதார மற்றும் சிக்கனரீதியில் அதிக சாத்தியமான​தென்றும் நம்புகி​றோம். ​மே​லே ​சொன்ன விசயங்க​ளெல்லாம் இந்த சச்சர​வை தீர்ப்பதற்கான கு​றைந்தபட்ச ​தே​வைகளுக்கான அடிப்ப​டை என நி​னைக்கி​றோம். ​மேலும் சிறப்பானதாக ​செய்வதற்கான பல்​வேறு வழிகளுக்கான சாத்தியங்களும் உள்ளன. உதாரணத்திற்கு உள்ளுர் நீர்​சேகரிப்பு ​செயல்திட்டம் மற்றும் விவசாய மு​றை​யை அதிக திறனு​டையதாக ஆக்குவது ​போன்ற விசயங்களின் மூலமாக படிப்படியாக முல்​லைப்​பெரியா​ரை சார்ந்திருப்ப​தை கு​றைக்கலாம். உண்​மையில் நாம் சுற்றுப்புறச்சுழல் சார்ந்த நதித் திட்டங்க​ளை ​நோக்கி பயணிப்ப​தை இலக்காக ​கொள்ள ​வேண்டும்.

நீரின் அள​வை கு​றைத்து ​வைத்துக் ​கொள்வது மற்றும் தற்​பொழு​தைய அ​ணை​யை பலப்படுத்துவ​தன் வழியாக நதியின் கீழ்ப்பகுதியில் இருக்கும் மக்களின் பயத்​தை ​போக்கி அ​ணை குறித்த பாதுகாப்புணர்​வை ஏற்படுத்துவதும், புதிய அ​ணைத்திட்டத்​தை தடுப்பதும், முன்​னெச்​செரிக்​கை நடவடிக்​கை மற்றும் நம்பிக்​கை​யை வளர்ப்பது என்கிற இரண்டு அடிப்ப​டைகளிலும் முக்கியமானது என நி​னைக்கி​றோம்.

அமிதா பவிஸ்கர், பாரத் பதன்கர், பிக்சம் குஜ்ஜா, சந்தன் மகந்தா, துலால் சந்திர ​கோஸ்வாமி, ஏகலாவிய பிரசாத், ​​ஜெயந்தா பண்​டோபாத்யாயா, ​கே ​ஜே ஜாய், ​மேதா பட்கர், பார்த்தா தாஸ், பிலிப்பி குல்லட், பிரணாப் ​செளத்ரி, எம் ​கே பிரசாத், ​ரோகினி நீல​கேணி, ஸ்ரீபத் தர்மதிகா​​ரே, ஸூருதி விஸ்பு​தே, சுனிதா நாதமுனி, வி​நோத் ​கெளத், ஒய் ​கே அழகு, ஏ ​வைத்தியநாதன், பி என் யு​கேந்தர்

(Amita Baviskar, Bharat Patankar, Biksham Gujja, Chandan Mahanta, Dulal Chandra Goswami, Eklavya Prasad, Jayanta Bandopadhyaya, K J Joy, Medha Patkar, Partha Das, Philippe Cullet, Pranab Choudhury, M K Prasad, Rohini Nilekani, Shripad Dharmadhikary, Shruti Vispute, Sunita Nadhamuni, Vinod Gaud, Y K Alagh, A Vaidyanathan and B N Yugandhar)

(For Forum for Policy Dialogue on Water Conflicts in India)

நன்றி: Economic and Politcal Weekly, Vol XLVI No.51 December 17, 2011

Posted in ​மொழி​பெயர்ப்பு | 2 Comments »