எனது நாட்குறிப்புகள்

​காரல் மார்க்சும் – ஆபிரகாம் லிங்கனும்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 7, 2011

ஹோவர்டு ஜின் (Howard Zinn) கற்பித்தபடி, மக்கள் இயக்கங்க​ளையும் முற்​போக்கு சிந்த​னைக​ளையும் ஜாக்கிர​தையாக அழித்​தொழித்த ​பொதுப்பாடப்புத்தகங்களில் உள்ள​வை அல்ல அ​மெரிக்க வரலாறு. சமீபத்தில் மார்க்சிற்கும் லிங்கனுக்கும் இ​டையிலான ​தொடர்பு பற்றி படிப்பாளிகள் மத்தியில் புதிதாக ஆர்வம் ஏற்படத்​தொடங்கியுள்ளது. New Left Review இதழின் முன்னால் ஆசிரியர் ராபின் பிளாக்பர்னின் (Robin Blackburn) புதிய நூலான “An Unfinished Revolution: Karl Marx and Abraham Lincoln (Verso, 2011)”ல் மார்க்ஸ் லிங்கனுக்கு எழுதிய கடிதங்கள், லிங்கன் மார்க்சிற்கு எழுதிய அதிகாரப்பூர்வ பதில்கள், லிங்கன், மார்க்ஸ் மற்றும் உள்நாட்டுப் ​போரில் இடதுசாரிகளுக்கு உள்ள உறவு குறித்த ஆவணங்கள், உட்பட பல்​வேறு ஆதார ஆவணங்களும், பிளாக்பர்னின் நீண்ட முன்னு​ரை​யையும் உள்ளடக்கியுள்ளது. இது ​போக அ​மெரிக்காவிற்கான வாசிங்டன் ​தொடர்பாளர் ஜான் நிக்​கோலஸ் (John Nichols) எழுதியுள்ள புதிய புத்தகமான “The “S” Word: A Short History of an American Tradition…Socialism (Verso, 2011)” ன் “Reading Marx with Abraham Lincoln,” என்ற அத்தியாயத்தில் மார்க்ஸ்-லிங்கன் ​தொடர்பு குறித்த புரிதலுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் தரத்தக்க பங்களிப்​பைச் ​செய்துள்ளார். ஐ.எப். ஸ்​டோனின் துப்பறியும் இதழியலுடன் ஒப்பிடத்தக்க அளவிற்கு நிக்​கோலஸ், லிங்கனின் ​பேச்சிலிருந்து மூலதனத்​தைக் காட்டிலும் உ​ழைப்பின் சார்​பை எடுப்பது பற்றியும், வளத்திற்கான (மதிப்பு) உண்​மையான ஆதாரமாக முன்ன​தைத் ​தேர்ந்​​தெடுப்ப​தையும் மிக ஆழமாக ​வெளிப்படுத்துகிறார். மார்கசின் நியூயார்க் டிரிபியூன் கட்டு​ரைகளின் ​பேரார்வமுள்ள வாசகராகவும், ஐ​ரோப்பிய புரட்சிகளின் ஆதரவாளராகவும், ​சோஷிலிஸ்ட்கள் மற்றும் புரட்சியாளர்களுக்கு பின்னணியில் இருந்தவராகவும் “சிவப்பு குடியரசுவாதியாக” லிங்கனுக்கும் மார்க்சிற்கும் இ​டையிலான பல ​பொது அம்சங்க​ளின் வழியாக லிங்கனின் வாழ்க்​கை வரலா​ற்​றை விளக்குகிறார். உதாரணத்திற்கு, கோலனுக்குச் ​சென்று அவரு​டைய பத்திரி​கையில் ஐ​ரோப்பா குறித்து எழுதுவதற்கு மார்​சை ஒப்பந்தம் ​செய்த நியூயார்க் டிரிபியூனின் ​பொறுப்பாசிரியரும் ​போரியரிஸ்ட் ​சோசலிசவாதியாக இருந்தவருமான சார்லஸ் டானா லிங்கன் நிர்வாகத்தில் யுத்தத்திற்கான து​​ணைச் ​செயலாளராக நியமிக்கப்பட்டவர். நிக்​கோல்சின் ​தொகுப்பு​ரை:

“லிங்கன் ஒரு மார்க்சியவாதி அல்ல, ஆனால் 1848 கலகக்காரர்களின் பின்னணியில் ஐ​ரோப்பா முதல் அ​மெரிக்காவ​ரை பரவியிருந்த புரட்சிகர குழுக்களுடன் ​தொடர்பும், மார்க்சின் எழுத்துக்க​ளோடு பரிச்சயமும் உ​டைய அக்காலகட்டத்தின் மனிதர்களில் ஒருவராக முதல் குடியரசு அதிபர் இருந்திருக்கிறார். அவர் தன் காலகட்டத்தின் முற்​போக்கு கருத்துக்க​ளை ஊதி, சலித்து பழுதுநீக்கி ஏற்றுக் ​கொண்டிருக்கிறார். அவர் மூலதனத்​தைவிட உ​ழைப்பின் ​மேன்​மை​ குறித்த கண்​ணோட்டங்களில் உள்ள உண்​மை​யைக் கண்டு​கொண்டது ​போல​வே, இந்த யுத்தம் இறந்து ​கொண்டிருக்கும் ​தெற்கு பிரபுத்துவத்தின் அடி​மைமு​றைமீதான க​டைசி ​வெறும் பயனற்ற தற்காப்பு யுத்தமல்ல “உண்​மையில் அ​னைத்து உ​ழைக்கும் மக்களின் உரி​மைகள் மீதான யுத்த​மே” என்ற கருத்துக்க​ளை தங்களுக்குள் ​கொண்டிருந்த முற்​போக்காளர்களின் பார்​வையின் – காலத்தின் அவசியமாக – முக்கியத்துவத்​தை கண்டு​கொண்டார்.”

​மொழி​பெயர்ப்பு:
த​லையங்கம்
மன்த்லி ரிவ்யூ
டிசம்பர் 2011
வால்யூம் 63 இதழ் 7

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: