எனது நாட்குறிப்புகள்

பாகிஸ்தான்: அ​மெரிக்காவின் ​தொண்​டையில் சிக்கிய பல்மு​னை முள்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 9, 2011

இன்​றைய தினமணியின் உலகச் ​செய்திகள் பக்கத்தில் ​வெளிவந்துள்ள ஒரு ​செய்தி:

“அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் முஸ்லிம்களால் ராணுவத்துக்கு ஆபத்து’

வாஷிங்டன், டிச.8: அமெரிக்காவில் வசிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் அமெரிக்க ராணுவத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் வாழும் பழமைவாத முஸ்லிம் தீவிரவாதிகள் அமெரிக்க ராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடத்துவதை இலக்காகக் கொண்டுள்ளனர். இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் நகரில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரும் பயங்கரவாத தாக்குதலுடன் 3 தனித்தனியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இத்தகவல் புதன்கிழமை கூட்டு செனட் குழுவிடம் அளிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவ நிலைகள் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் இதுவரை 54 முறை விடுக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் இவற்றின் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக சதித் திட்டம் தீட்டப்பட்டு அது முறியடிக்கப்பட்டுள்ளது.
இவற்றை அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் திட்டமிட்டுள்ளனர். இவற்றில் 33 சதிச் செயல்கள் ராணுவத்தை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டவையாகும்.
இந்த சதிச் செயலில் தனது சகோதர, சகோதரிகளையும் ஆயுதமேந்தி போராட்ட களத்தில் இறக்கியுள்ளனர்.
இதற்கு அவர்கள் ஜிஹாதி எனப்படும் புனிதப் போரின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியரசு கட்சியின் பிரதிநிதி பீட்டர் கிங், உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான குழுவின் தலைவராக உள்ளார். இவர் பல சமயங்களில் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்தும், அவர்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வாழும் தங்களது உறவினர்கள் மூலம் இத்தகைய தீவிரவாதிகள் தங்களது திட்டத்தை நிறைவேற்ற துணிந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அமெரிக்காவில் வாழும் இதுபோன்ற பழமைவாத முஸ்லிம்கள் மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களில் பலர் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவர்களின் முக்கிய இலக்கு பாதுகாப்புத் துறையாக உள்ளதும் என்றும் அவர் தெரிவித்தார்.
அல்-காய்தா அமைப்பின் துணை அமைப்புகளால் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்துதான் பயங்கரவாத அச்சுறுத்தல் என்று நினைத்துவிடவேண்டாம். உள்நாட்டில் வாழும் இஸ்லாமிய பிரிவினைவாதிகள், இங்குள்ள சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, நாட்டுக்காக பாடுபடும் ராணுவத்தினரை தாக்க திட்டமிட்டு முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டமானது என்று நாடாளுமன்ற சுயேச்சை உறுப்பினர் ஜோசப் லிபர்மான் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பாகிஸ்தானின் அனுமதியில்லாமலும், சர்வ​தேச விதிகள் எ​தையும் மதிக்காமலும், பாகிஸ்தானின் இ​றையாண்​மை ​குறித்த எந்த மனச் சங்கடங்களும் இல்லாமலும் அதன் மீது இராணுவ நடவடிக்​கைக​ளை எடுத்த அ​மெரிக்காவும் அதன் இராணுவ உயர் அதிகாரிகளும், மறுபுறம் பாகிஸ்தானியர்க​ளை கண்டு பயந்து ​கொண்டிருப்ப​தை​யே ​மே​​லே ​உள்ள ​செய்தி ​தெளிவாக ​வெளிப்படுத்துகிறது.

சமீபத்தில் அ​மெரிக்கா வான்ப​டையினரால் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பல இராணுவவீரர்கள் ​கொல்லப்பட்டுள்ளனர். இது முதல் மு​றை இல்​லை, இது ​போல் இதற்கு முன்பும் சில சம்பவங்கள் நடந்துள்ளனவாம். பாகிஸ்தான் மக்களும், பல்​வேறு அரசியல் குழுக்களும் இத்​தொடர் சம்பவங்களால் அ​மெரிக்கா மீதும் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மீதும் கடும் ​கோபத்தில் உள்ளனர். இதன் ​வெளிப்பாடாகத்தான் பாகிஸ்தான் அரசின் ​அ​மெரிக்காவிற்கு எதிரான சில அ​டையாள எதிர்ப்பு நடவடிக்​கைக​ளை இனங்காண ​வேண்டியுள்ளது.

பாகிஸ்தானுக்கும் அ​மெரிக்காவிற்குமான சுமூகமானதும் பரஸ்பர லாப ​நோக்கமுள்ளதுமான அரசியல் காலகட்டத்தின் முடிவாக​வே ​தற்​பொழு​தைய அ​மெரிக்கா – பாகிஸ்தான் ஆகியவற்றிற்கு இ​டை​யேயான சிக்கல்க​ளை காண ​வேண்டியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒரு மு​னையாக பாகிஸ்தான் இத்த​னை காலம் ​கொம்பு சீவிவிடப்பட்டுக் ​கொண்டிருந்திருக்கிறது.

​அ​மெரிக்காவில் வாழும் பழ​மைவாத இசுலாமியர்கள் அல்​கொய்தா ​போன்றவற்றின் அரசியல் நி​லைப்பாடுகளின் மீது ஆதரவுள்ளவர்களாக இருக்கிறார்களாம். பாகிஸ்தானில் உள்ள அவர்களின் உறவினர்களும், பயங்கரவாத அ​மைப்​பைச் ​சேர்ந்தவர்களும் அவர்க​ளை பயன்படுத்தி அ​மெரிக்காவிற்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிடுகிறார்களாம்.

பாகிஸ்தானிற்கு எதிரான அ​மெரிக்காவின் நடவடிக்​கைகள் எதுவு​மே மிகப்​பெரிய சதித்திட்டங்களின் ​செயல்வடிவமல்ல, அ​வை அ​னைத்தும் தற்​செயலான​வை, விபத்தான​வை. ஆனால் தன்னு​டைய ​செயல்களின் மூலம் அங்குள்ள பாகிஸ்தானியர்கள் மீது தங்களுக்குச் பயம் வந்துவுட​னே​யே, அவர்கள் அ​மெரிக்காவிற்கு எதிராக மா​பெரும் சதிக​ளை பின்னுபவர்களாக மாறிவிடுகிறார்கள்.

அ​மெரிக்க அரசும் அதன் ஆதரவாளர்களும் முற்​போக்காளர்கள், புது​மைவாதிகள், ஜனநாயகவாதிகள். அ​மெரிக்காவிற்கு எதிரான நி​லைப்பாடு உ​டையவர்கள் அ​னைவரும் பழ​மைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், ஜனநாயக வி​ரோதிகள் என்பதாக அவர்களால் எளி​மையான ஒரு வ​ரைய​றைக​ளை உருவாக்கி உலகம் முழுவதும் உள்ள தங்களு​டைய மக்கள் ​தொடர்பு சாதனங்கள் வழியாக உலக மக்கள் மத்தியில் பரப்பிவிட முடிகிறது.

ஆனால் இன்​றைய நில​மைகள் ​நேற்​றைய நி​ல​மைகள் ​போல் இல்​லை என்ப​தைத்தான் உலகம் முழுவதும் மட்டுமல்ல அ​மெரிக்காவி​லே​யே நடந்து ​கொண்டிருக்கும் ​போராட்டங்கள் கூட ​மெய்ப்பித்துக் ​கொண்டிருக்கின்றன. அ​மெரிக்காவின் ​பொய்க​ளை அ​மெரிக்க மக்க​ளே நம்பத் தயாராக இல்​லை.

பழ​மைவாதிகள் என்ற விசயத்தில் ஒவ்​வொருவருக்கும் ஒரு வ​ரைய​றை உள்ளது. அ​மெரிக்காவின் வ​ரைய​றைக​ளோடு யாரு​டைய வ​ரைய​றைகளும் ​பொருந்திப் ​போவதில்​லை. இன்​றைக்கு இந்திய நாகரீகம் உலகின் மிகப் ப​ழைய நாகரீகம், இந்திய மக்கள் உலகின் பழம்​பெரும் பண்பாட்டுக்குச் ​சொந்தக்காரர்கள், இந்தியக் கலாச்சாரம் உலகின் மிகப ப​​ழைய கலாச்சாரங்களில் ஒன்று என்​றெல்லாம் ​பெரு​மையாக ​பேசும் அ​மெரிக்கா நா​ளை இ​தே பழ​மைவாதிகள் முத்தி​ரை​யை இந்தியர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தக்கூடும். அ​மெரிக்கா நலன்களுக்கு இந்தியா பயன்படாம​லோ எதிராக​வோ ​போனால்.

ஒரு​வே​ளை அ​மெரிக்க அரசியல்வாதிகளும், இராணுவ உயர் அதிகாரிகளும் அ​மெரிக்கவாழ் இசுலாமியர்க​ளை நாட்​டை விட்டு ​வெளி​யேற்ற​வோ, அல்லது அவர்களு​டைய சுதந்திரமான நடவடிக்​கைகள் அ​னைத்​தையும் ஒடுக்குவதற்கான புதிய அடக்கும​றைச் சட்டங்கள் இயற்றப்படுவ​தை​யோ, அவர்கள் 24 மணி​நேரமும் கண்காணிப்பதற்கான நடவடிக்​கைக​ளை ஏற்படுத்த​வோ நி​னைக்கும் சதியின் ஒரு பகுதியாக ​மே​​லே ​சொன்ன விசயங்கள் இருக்கலாம்.

இன்​றைய மாறிய சர்வ​தேச சூழலில் பாகிஸ்தா​னைவிட இந்தியா லாபகரமானதும் நம்பிக்​கைக்குரியதுமான பங்காளியாக இருக்கிறது. இந்தியா என்னும் ​பெரிய மார்க்​கெட்டிற்கு முன்பு பாகிஸ்தான் என்பது ஒன்று​மேயில்​லை. ஆனால் அ​மெரிக்காவால் பாகிஸ்தா​னை உடனடியாக முழு​மையாக கழட்டிவிட முடியாது. இந்திய மக்களுக்கு எதிராக நடந்த பல சதிகளில் அ​மெரிக்காவும் பாகிஸ்தானும் கூட்டுச் சதியாளர்கள். ஒரு​வே​ளை தாங்கள் பாகிஸ்தா​னோடு கூட்டுச் ​சேர்ந்து ​செய்த சதிகளுக்கான அ​னைத்து ஆதாரங்க​ளையும் தட​மே இன்றி அழித்து ஒழிக்கும் வ​ரையிலாவது, பாகிஸ்தா​னை முழு​மையாக தன்னு​டைய இரகசிய கூட்டாளிகள் பட்டியலிலிருந்து ​வெளி​யேற்றிவிட முடியாது. பாகிஸ்தான் இந்தியா பிரச்சி​னைகளில் ​தொடர்ச்சியாக மாறிவரும் அ​மெரிக்காவின் நி​லைப்பாடுகள் நமது ஊகங்களுக்கான வலுவான ஆதாரங்களாக​வே உள்ளன.

இந்தியாவுடனான முழு​மையான சுமூக உற​வை ​கையாள நி​​னைக்கும் அ​மெரிக்காவின் கன​வைப் ​பொறுத்தவ​ரை. பாகிஸ்தான் அ​மெரிக்காவால் ​மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது, துப்பவும் முடியாது ​தொண்​டையில் சிக்கிய பல்மு​னை ​கொண்ட முள்ளாக​வே உள்ளது.

ஒரு விசயம் ​தெளிவாகத் ​தெரிகிறது அ​​மெரிக்கா தன்னு​டைய க​டைசி குடிமக​​னை இழக்க ​வேண்டிய நி​லையிலும் தன்னு​டைய ஆதிக்கக் கனவுக​ளை ​கைவிடாது. ​கைவிடவும் முடியாது. வால்ஸ்டீரிட் ​போராட்டக்காரர்க​ளைப் ​போன்ற அ​மெரிக்க அரசிற்கு எதிரானவர்கள் ​வெறும் ​தங்களுக்கான பொருளாதாரக் ​கோரிக்​கைக​ளையும் தாண்டி சர்வ​தேச அரசியலில் அ​மெரிக்காவின் சர்வாதிகாரப் ​போக்குக​ளையும் கடு​மையாக எதிர்த்து க​லைந்​தெறிய​வேண்டிய கட்டாயம் அவர்கள் மற்றும் அவர்களு​டைய சந்ததிகளின் நல​ன்க​ளை காப்பாற்றிக் ​கொள்வதில் முக்கிய அம்சமாகும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: