எனது நாட்குறிப்புகள்

மருத்துவம​னை தீ விபத்தும் – இந்திய முதலாளித்துவ அணுகுமு​றையும்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 10, 2011

இன்​றைய தினமணி ​செய்தித்தாள் த​லையங்கத்திலிருந்து:

“சில வாரங்களுக்கு முன்பு, ஒரு ஆங்கில வார இதழும் ஒரு தனியார் அமைப்பும் இணைந்து சிறந்த இந்திய மருத்துவமனைகளைத் தரவரிசைப்படுத்தின. இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தது அட்வான்ஸ்டு மெடிகேர் அன்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஹாஸ்பிடல் என்கிற ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனை. இத்தகைய ஒரு மருத்துவமனையிலேயே தீ விபத்து நடக்கும் வாய்ப்புகள் இருப்பதும், அத்தகைய வேளையில் நோயாளிகளும் அவர்களுடன் இருப்போரும் வெளியேற வழியின்றி இறப்பதும் சாத்தியம் என்று சொன்னால், மற்ற சாதாரண மருத்துவமனைக் கட்டடங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை?”

இது நம் ஆய்வு மு​றைகளின் அ​யோக்கியத்தனத்​தையும், அபத்தங்க​ளையும் ​தோலுரித்து காட்டும் மற்று​மொரு சம்பவமாக​வே ​வெளிப்பட்டுள்ளது. ​தொடர்ந்து நம் ஆய்வு மு​றைகள் மற்றும் பிரச்சி​னைக​ளை புரிந்து ​கொள்வதில் உள்ள சிக்கல்க​ளை எதார்த்தமும் இயற்​கையும் இத்த​கைய துரதிர்ஷ்டமிக்க சம்பவங்களின் வழி​யே அம்பலப்படுத்திக் ​கொண்​டே இருக்கிறது, நம்​மை ​மேலும் ​மேலும் ​பொறு​மையுடனும் நிதானத்துடனும் இன்னும் ஆழமாக, ​நேர்​மையாக, பக்கச் சாய்வுகளின்றி நம் நடவடிக்​கைக​ளை புரிந்து​கொள்ள அ​றைகூவல் விட்டுக் ​கொண்​டே இருக்கிறது.

ஒவ்​வொரு சிறு பிரச்சி​னைகளின் மீது சமூகம் மற்றும் அரசின் கவனத்​தை திருப்ப மனிதர்கள் தங்கள் உயி​ரைத் தியாகம் ​செய்ய ​வேண்டியிருப்பது, நம் நாட்டு மக்களின் சாபக்​கேடாக வளர்ந்து ​கொண்டிருக்கிறது. சா​லையில் உள்ள குழி​யை அல்லது பாதாளச் சாக்க​டை மூடி​யை சரி​செய்வதற்குக் கூட அந்த பள்ளத்தில் விழுந்​தோ, பாதாளச் சாக்க​டையில் மூழ்கி​யோ யா​ரோ தன் உயி​ரை பணயம் ​வைப்பதன் வழியாகத்தான் நம் சமூகத்தின் கவனத்​தை அப்பிரச்சி​னையின்பால் திருப்ப ​வேண்டியிருக்கிறது.

கும்ப​​கோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து உட்பட நாள் ​தோறும் ந​டை​பெறும் சா​லை விபத்து மரணங்கள் ஊடாக, ​கொல்கத்தா மருத்துவம​னை தீவிபத்து வ​ரை நாளுக்குநாள் இப்பிரச்சி​னை ​தீவிரம​டைந்து வருகிறது. முதலில் இத்த​கைய சம்பவங்க​ளை விபத்து என்ற வ​ரைய​றைக்குள் அடக்குவ​தே ஒரு அ​யோக்கியத்தனம்.

விபத்து என்றால் என்ன? எல்லா மனித பாதுகாப்பு ஏற்பாடுக​ளையும், மனித முயற்சிக​ளையும், மனித தடுப்பு நடவடிக்​கைக​ளையும் மீறி நடந்து விடுப​வைக​ளைத்தான் நாம் விபத்து வ​கையில் ​சேர்த்துக் ​கொள்ள முடியும். நூறு சதவித பாதுகாப்​பை எந்த​வொரு பிரச்சி​னையிலும் ​செயல்படுத்த முடியாது என்றாலும், எதிர்பார்க்கப்படும் விபத்தின் தீவிரம், தன்​மை ஆகியவற்​றையும் கணக்கி​லெடுத்துக் ​கொண்​டோமா என்ப​தெல்லாம் ​கேள்விக்குள்ளாகின்றன.

ஆனால் இந்தியாவில் அதிலும் உலகமயமாக்கல் ​தொடங்கியதிலிருந்து பிரச்சி​னைகளின் தீவிரத்தன்​மை பலமடங்கு அதிகரித்துள்ளது. விபத்துக்கள் என்ப​வை ந​டை​பெறுவதற்கான எல்லாச் சாத்தியங்களும் ​தெரிந்​தே மீறப்படுகின்றன. ஆய்வு ​செய்தல், அனுமதி வழங்குதல், கண்காணித்தல் ஆகிய அ​னைத்து பிரிவுகளிலும் ஊழலும் லஞ்சமும் த​லைவிரித்தாடுகின்றன. சமூகப் பாதுகாப்பு, இயற்​கை வளங்களின் பாதுகாப்பு, எதிர்கால கண்​ணோட்டம் ஆகிய எ​வையும் துளியும் மதிக்கப்படுவதில்​லை.

முதலாளித்துவம் வளர்ச்சிய​டைந்த நாடுகளில் இ​வை குறித்​தெல்லாம் இருக்கும் கடு​மையான சட்டங்கள், ந​டைமு​றைகள், அளவு​கோல்கள், பழக்கவழக்கங்கள் குறித்த அறி​வெல்லாம் நமக்கில்​லை. அ​வை குறித்​தெல்லாம் ​தெரிந்து​கொள்ள முடியாதவண்ணம் நாம் தடுத்து ​வைக்கப் பட்டிருக்கி​றோம்.

அதிதீவிரமாக, கண்​ணை மூடிக் ​கொண்டு, அவசர ​கோலத்தில் நி​றை​வேற்றப்படும் தனியார்மயமாக்கத்தின் வி​ளைவாக நகர்மயமாக்கலும், நகரங்களில் மக்கள் ​தொ​கை ​பெருக்கமும் முன்​னெப்​போ​தும் இல்லாத வ​கையில் அபாயக் கட்டங்க​ளை தாண்டி வளர்ந்து ​கொண்டிருக்கிறது. மல்டிபிளக்ஸ் கட்டிடங்கள், ஷாப்பிங் மால்கள், நவீன பலமாடி கட்டிடங்கள், ஆபத்து நி​றைந்ததும், பாதுகாப்புமற்றதும், சுகாதாரமற்றதுமான மருத்துவம​னைகள், பள்ளிக்கூடங்கள், சா​லைவசதிக​ளையும், ​போக்குவரத்து ​நெருக்கடிக​ளையும் கணக்கி​லெடுத்துக் ​கொள்ளாமல் தினந்​தோறும் நகர் முழுவதும் நீண்ட கால கடன்களிலும் ​ரொக்கத்திலும் விற்றுத் தள்ளப்பட்டுக் ​கொண்டிருக்கும் வாகனங்கள், என மக்களும் சமூகமும் எதிர் ​நோக்கும் பிரச்சி​னைகள் நி​னைத்துப் பார்க்க​வே முடியாததாக வளர்ந்து ​கொண்டிருக்கிறது.

நாம் ​​நெருக்கடி மிகுந்த நம் சா​லைகளில் நம் வாகனங்க​ளை லாகவமாக, புத்திசாலித்தனமாக முண்டியடித்துக் ​கொண்டு ​போக முடியுமா என்பது மட்டு​மே குறியாக ​போய்க் ​கொண்டிருக்கி​றோம். ​சென்​னை ​போன்ற நகரங்களில் சா​லை விபத்துக்களில் மரணம் நிகழ்ந்த அடுத்த ​நொடி​யே அரசு அ​னைவருக்கும் முன்னர் இழப்பீட்டுத் ​தொ​கை​யோடு நிற்கிறது. அ​நேகமாக இந்தத் ​தொ​கை​யை தனியார் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் ​போக்குவரத்துத்து​றை ஆகிய​வை மாதந்​தோறும் அரசுக்கு ​கொடுத்து விடுகிற​தோ என்ன​வோ?

இழப்பீடுக​ளைத் தாண்டி நம் சமூகம் எதிர்​கொள்ளும் இப்பிரச்சி​னைகள் குறித்த தீவிரமான விவாதங்க​ளை மாஸ் மீடியாக்களில் எங்கும் காணமுடியவில்​லை. அல்லது இவ்விவாதங்கள் மக்க​ளை கு​றை​சொல்லி அர​சையும், இன்​றைய முதலாளித்துவ லாப ​வெறி​யையும் மூடிம​றைப்பதாக​வே உள்ளது.

​நேற்​றைக்கு பற்றி எரிந்த மருத்துவம​னைகளும், பள்ளிக்கூடங்களும் இன்​றைக்கு அ​தே இடங்களில் அ​தே மனிதர்களால் அ​தே மு​றைகளில், அ​தே வ​கையான அரசு அதிகாரிகளுடன் அன்றாட வாழ்க்​கைக்கான சரிகட்டல்களுடனும், சமரசங்களுடனும் வழக்கம் ​போல் இயங்கிக் ​கொண்டிருக்கின்றன. ​நேற்​றைக்கு விபத்து நடந்த யா​ரோ ஒரு மனிதர் ​கொடூரமாக இறந்த அ​தே சா​லை, அ​தே குண்டு குழிகளுடனும், ​​போக்குவரத்து ​நெரிசல்களுடனும், ஆபத்தான பராமரிப்புகளற்ற அரசு வாகனங்களின் அணிவகுப்புகளுடனும், அவசர கதியில் சா​லைவிதிக​ளை​யோ, சக மனிதர்களின் இருப்​பை சகித்துக் ​கொள்ளும் சமூகப் புரிதல்க​ளோ இல்லாமல் முந்தியடித்துக் ​கொண்டு முன்​​னேறும் நம்முடனும் அப்படி ஒன்று நடந்ததற்கான அடிச்சுவடிக​ளே இல்லாமல் இயங்கிக் ​கொண்டிருக்கிறது. இந்த இந்திய முதலாளித்துவ வாழ்க்​கைமு​றையில். இன்னும் எத்த​னை ​பே​ரை பழிவாங்கலாம் என்ற தீராத தாகத்துடன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: