எனது நாட்குறிப்புகள்

காலமும்-இடமும்: ​தோழர் சிங்கார​வேலரின் தத்துவக் குறிப்புகள் பற்றி

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 11, 2011

தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் என்ற ​தோழர் ம. சிங்கார​வேலரின் கட்டு​ரைத் ​தொகுப்பு ஒன்று படிக்கக் கி​டைத்தது. “புது உலகம்” என்ற பத்திரி​கையில் அவர் எழுதிய கட்டு​ரைக​ளை எடுத்துப் பாகுபடுத்தி ​தொகுத்துள்ளவற்றில் இது மூன்றாம் பிரிவாகும் என இத​னை ​தொகுத்துள்ள ஸி. எஸ். சுப்பிரமணியம் மற்றும் ​கே. முரு​கேசன் ஆகி​யோர் தங்கள் முன்னு​ரையில் குறிப்பிட்டுள்ளனர்.

இத்​ தொகுப்பில் முதலாவதாக ​வெளிவந்துள்ள “தத்துவஞானக் குறிப்புகள்” கட்டு​ரை​யை படித்த ​பொழுது ​தோன்றிய கருத்துக்க​ளை இங்​கே பதிவு ​செய்து ​​வைத்துக் ​கொள்ளலாம் என்ற முயற்சி​யே இப்பதிவு.

தோழர் சிங்கார​வேலர் 1860 – 1946 காலகட்டத்​தைச் ​சேர்ந்தவர். அதாவது இந்தியா சுதந்திரம் அ​டைவதற்கு ஒரு ஆண்டு முன்பாக ம​றைந்துள்ளார். அக்காலகட்டத்தில் இத்த​னை ஆழமாக மார்க்சியத்தின் விஞ்ஞானக் ​கோட்பாடுக​ளை முதன்மு​றையாக தமிழ்ச் சமூகத்தில் அறிமுகப்படுத்தியவர் என்ற வ​கையில் அவரு​டைய வரலாற்று முக்கியத்துவமும், சிறப்பும் யாராலும் கு​றைத்து மதிப்பிட முடியாத​வை. அக்காலகட்டத்தின் பின்னணியில் அ​வை மிக புரட்சிகரமான​வையும் சிறப்புவாய்ந்த​வையு​மேயாகும்.

1935களில் எங்கள் முன்​னோர் மார்க்சியத்​தை புரிந்து ​கொண்டதற்கும் இன்​றைக்கு எங்கள் புரிதல்களுக்கும் இ​டையிலான வளர்ச்சி (அல்லது வீழ்ச்சி​யை) ஒப்பிட்டுப் பார்ப்பதான ஒரு முயற்சி​யே, நாம் புரிந்து ​கொண்டவற்​றை எழுதிப் பார்ப்பதான ஒரு பயிற்சி​யே இப்பதிவு.

இடம் என்றால் என்ன? காலம் என்றால் என்ன? ​பொருட்க​ளையும் நிகழ்வுக​ளையும் இடம் காலம் என்பவற்றுக்குள் ​வைத்துத்தான் விவாதிக்கவும், ஆய்வு ​செய்யவும் முடியும் என்ப​தை இக்கட்டு​ரையில் 1935 சமயத்தி​லே​யே தமிழகச் சூழலில் ​தோழர். சிங்கார ​வேலர் விளக்கியுள்ளார். ஆனால் இக்கட்டு​ரையில் சில வரிகள் இயக்கவியல் ​பொருள்முதல்வாதத்திற்கு (நாம் புரிந்து ​கொண்ட அளவில்) முரணாக உள்ளதாகப்படுகிறது. அதற்கு காரணம் நாத்திக, மூடநம்பிக்​கை எதிர்ப்பு ஆகியவற்​றை விளக்கும் முயற்சியாக இந்த விஞ்ஞானக் கண்​ணோட்டத்​தை விளக்க முயற்சிப்பதில் ஏற்பட்ட ஒரு பி​ழையாக உணர​வேண்டியுள்ளது.

“ஆடு மாடு முதலிய மிருகாதிகளுக்கு காலமுமில்​லை, இடமுமில்​லை. மனித​ரைத் தவிர மற்ற உயிர்களுக்கு கால​தேச ​மென்பது கி​டையா. மனிதன் பா​ஷை​யை உண்டாக்கின ​போது தான் இந்தத் ​தோற்றங்களுக்குப் ​பெயர் ​கொடுத்தான்.”

“பிரபஞ்சத்தில் இன்று ஒருவருமில்லாவிடில் இட​மென்பது கி​டையா”

என்ற வரிகள் வருகின்றன. பார்க்க தத்துவ ஞானக் குறிப்பு

இடமும் – காலமும் மனிதனின் சிந்த​னைக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களின் இயற்​கை குறித்த புரிதல்களுக்கும் ​வெளியாக​வே உள்ளது. அ​வை மனிதன் இல்லாவிட்டாலும், இந்த அண்டத்தில் இருக்கக்கூடிய​வை. மனிதன் தன் சுற்றுப்புறத்​தை உற்று ​நோக்கி, அவற்றின் இயக்கங்க​ளையும், தன்​மைக​ளையும், இயக்கங்களின் அடிப்ப​டை விதிக​ளையும் புரிந்து ​கொள்ள முயற்சிக்கிறான். அவற்​றை தனக்குச் சாதகமாக மாற்ற​வோ, பயன்படுத்த​வோ முடியுமா என்ற ​நோக்கில் அத​னோடு வி​னைபுரிகிறான்.

ஆக​வே இடம் – காலம் ​தொட்டு அ​னைத்தும் மனித சிந்த​னையில் ​நேர்ம​றையாக​வோ, எதிர்ம​றையாக​வோ, பகுதியாக​வோ, முழு​மையாக​வோ, அவரவர் புறஉலகு குறித்த அறிவின் மட்டத்திற்கும், சிந்த​னை வளர்ச்சி நி​லைகளுக்கு ஏற்ப பிரதிபலிக்கின்றன. மனிதன் என்ற வளர்ச்சிய​டைந்த உயிரினம் இவ்வண்டத்தில் இல்​லை​யென்றாலும், இ​வை யா​ரொருவராலும் சிந்திக்கப்படாமலும், விவாதிக்கப்படாமலும், இ​டையீடு ​செய்யப்படாமலும் இருந்து ​கொண்டும், இயங்கிக் ​கொண்டும் தான் இருக்கும்.

ஆடு மாடுகளுக்கும் காலமும் இடமும் உண்டு. அவற்​றை அ​வை பிரக்​ஞைப்பூர்வமாக உணர்ந்து ​செயல்படுவதில்​லை தங்களுக்குள் ​பேசிக்​கொள்வதில்​லை, ஆனால் தங்களு​டைய உள்ளுணர்வால் பாரம்பரிய அறிவால் அவற்​றை கடந்து​கொண்டும் அவற்றில் ​செயல்பட்டுக் ​கொண்டும் தான் உள்ளன. ஆடும் மாடும் புல்லிற்காகவும், நீருக்காகவும், நிழலுக்காகவும் இடத்​தை கடந்து ​கொண்​டேதான் உள்ளன. அ​வையும் பிறந்து, வளர்ந்து, இள​மைப் பருவம் அ​டைந்து முது​மைய​டைந்து இறக்கின்றன. அ​வையும் ​கோ​டைகாலம், ம​ழைக்காலம், இ​லையுதிர்காலம், பனிக்காலம் என காலத்திற்கு ஏற்ப தன் வாழ்க்​கைமு​றை​யை மாற்றிக் ​கொண்டுதான் வாழ்கின்றன.

​ தோழர் சிங்கார​வேலர் சரியாகக் குறிப்பிடுவ​தைப் ​போல அ​வை இயற்​கையின் மீது யதார்த்தத்திற்கு புறம்பான கற்ப​னைக​ளையும், மூடநம்பிக்​கைக​ளையும் வளர்த்துக் ​கொள்ளவில்​லை. ஆனால் இயற்​கையின் மாறுபாடுக​ளையும், கால இட ​வெளிக​ளையும் தங்கள் உள்ளுணர்வால், தன்னிச்​சையான ​செயல்பாடுகளால் புரிந்து நடந்து ​கொண்டுதான் ​செயல்படுகின்றன.

காலம் – இடம் என்னும் ​மொழியின் ​சொற்க​ளை ​வைத்துப் ​பேசுவதாக இருந்தால் இச்​சொற்கள் ஆட்டிற்கும் மாட்டிற்கும் மட்டுமல்ல ​வேற்று ​மொழிக்காரர்களுக்கும் ​பொருந்துவதல்ல. இ​தே ​பொரு​ளை குறிக்க ஒவ்​வொரு ​மொழியிலும் ​வேறு ஏ​தோ ​சொற்கள் இருக்கின்றன. ​மொழி மனிதனுக்கு அளப்பரிய ஆற்ற​லை வழங்குகிறது. அது அவனு​டைய உணர்வுக​ளை, புரிதல்​க​ளை தன் சமூகத்தின் தன்னிச்​சையான ​செயல்பாடுகளிலிருந்து பிரக்​ஞைபூர்வமான ​செயல்பாடுக​ளை ​நோக்கி முன்​னேறுவதற்கான மிகப்​பெரிய வாய்ப்புக​ளையும், வளர்ச்சி​யையும் சாத்தியமாக்கிக் ​கொண்டிருக்கிறது.

மிருகங்கள் தங்களால் புரிந்து ​கொள்ளா முடியாதவற்றின் முன்னால் சிந்த​னையற்று பணிந்து ​போய்விடுகின்றன. மனிதன் புரிந்து ​கொள்ள முடியாதவற்றின் முன்பு பணிந்து ​போக ​நேரிட்டாலும் சிந்த​னையற்றுப் ​போய்விடுவதில்​லை. விஞ்ஞானப்பூர்வமாக புரிந்து ​கொள்ள முடியாத இடங்க​ளை கற்ப​னைகளினால் இட்டு நிரப்புகிறான். விஞ்ஞானப்பூர்வமாக ​கடக்க முடியாத இடங்க​ளை மூடநம்பிக்​கைகளின் மூலமாக கடக்க நி​னைக்கிறான். இது​வே மனிதனின் பலமும் பலவீனமுமாகும். இது​வே மனிதனின் ​வெற்றியும் ​தோல்வியுமாகும். இது​வே மனிதனின் வளர்ச்சியும் வீழ்ச்சியுமாகும்.

​தோழர் சிங்கார​வேலரின் கட்டு​ரையில் காணும் முரணுக்கு என்ன காரணம் என்று புரியவில்​லை? ஒரு ​வே​ளை அது எழுதப்பட்ட சூழ​லோடும் ​பொரு​ளோடும் புரிந்து ​கொண்டால் ​வேறு அர்த்தம் தரு​மோ அதுவும் ​தெரியவில்​லை?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: