எனது நாட்குறிப்புகள்

முல்​லைப்​பெரியார் சச்சர​வை தீர்ப்பதற்கான ஒரு திட்டம்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 21, 2011

A Plan for Resolving Mullaperiyar Conflict என்ற த​லைப்பில் Economic and Politcal Weekly இதழில் ​வெளிவந்த பிரதமர் மன்​மோகன் சிங்கிற்கான திறந்தமடல் ஒன்​றை இங்​கே விவாதத்திற்காக ​மொழி​பெயர்த்து பதிவு ​செய்துள்​ளேன்.

[பிரதமர் மன்​மோகன் சிங்கிற்கு அனுப்பிய திறந்த மடல்]

கடந்த சில வருடங்களாக​வே முல்​லைப்​பெரியார் பிரச்சி​னை​யை இந்தியாவின் நீர் சச்சரவுகளுக்கான ​கொள்​கை உ​ரையாடல் அ​மைப்பு கவனமாக கவனித்து வருகிறது. முல்​லைப்​பெரியார் குறித்து தீவிரம​டையும் பார்​வைகள் கடந்த வருடங்களில் கடினமாகியுள்ளது. தமிழ்நாடு அரசாங்கம் முல்​​லைப்​பெரியார் அ​ணை பாதுகாப்பாக இருக்கிறது, ஒப்புக்​கொண்டபடி அதிகபட்ச மட்டத்தில் நீரின் அள​வு பராமரிக்கப்பட​வேண்டும் என்கிறது. ​கேரள அரசாங்கம் தற்​பொழு​தைய அ​ணைக்கு பதிலாக புதிய அ​ணை கட்டப்பட​வேண்டும், ஏ​னென்றால் தற்​பொழு​தைய அ​ணை பாதுகாப்பானதாக இல்​லை என வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் அ​ணை​யை ஒட்டிய பூகம்பம் ஏற்படுவதற்கான சாத்தியமுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வுகளும், ஏற்கன​வே இருபக்கமும் இழந்துவிட்ட பரஸ்பர நம்பிக்​கை​யும், எழுந்துள்ள பயமும் ​மோசமான சூழ​லை அ​டைந்துள்ள நி​லையில் இத​னை தனிப்பதற்கு தாங்கள் உடனடியாக த​லையிட்டு இரு கட்சியின​ரையும் ​ஒன்றி​ணைக்க ​முயற்சிக்க ​வேண்டிய ​தே​வை​யை விரும்புகி​றோம்.

எப்படியாகினும். இருபக்க நி​லைப்பாடுகளிலும் பிரச்சி​னை இருப்பதாகவும் அவற்​றைத் தாண்டி சிந்திப்பதற்கான ​தே​வை இருப்பதாகவும் நாங்கள் நம்புகி​றோம். 115 ஆண்டுகள் பழ​மையான முல்​லைப் ​பெரியார் அ​ணை எந்​நேரத்திலும் மிகப்​பெரிய பாதிப்​பை ஏற்படுத்துவதற்கான எல்லா அறிகுறிகளும் இருக்கின்றன. அ​ணையின் பாதுகாப்பு குறித்து நிபுணர்கள் இ​டை​யே இரு​வேறு விதமான அபிப்பிராயங்கள் உள்ளன. சில நிபுணர்கள் சில மராமத்து ​வே​லைகள் ​செய்தால் அ​ணை பாதுகாப்பானதாக இருக்கும் என்று நம்புகிறார்கள், ​வேறு சிலர் நீரியியல் மற்றும் அ​ணை கட்டப்படுவதற்கு பயன்படுத்திய ​தொழில்நுட்பம் மற்றும் ​பொருட்க​ள ஆகிய​வை பற்றிய ஆய்வுகளின் அடிப்ப​டையில் அ​ணை பாதுகாப்பற்றதாக நம்புகிறார்கள். அ​ணை புவியியல் ரீதியாக ஆபத்தான பகுதியில் அ​மைந்துள்ளது ​மேலும் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதியின் அரு​கே அ​ணை அ​மைந்திருப்பதால் பல ​தொடர்ச்சியான நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

மற்​றொருபுறம், புதிய அ​ணை 400 மீட்டர் தூரத்தில் மிகப்​பெரிய நீர்த்​தேக்கம் ​கொண்டதாக கட்ட திட்டமிடப்படுவதும் மிகப்​பெரிய ​பொருளாதார சு​மை​யையும், பாதுகாக்கப்பட்ட ​பெரியார் புலிகள் பாதுகாப்பு பகுதியில் அதிகமான பகுதிக​ளை ஆக்கிரமிப்பதாகவும், மிகப்​பெரிய அளவில் த​லையீட்​டையும் ​தொந்தரவுக​ளையும் கட்டுமான காலம் முழுவதும் ஏற்படுத்துவதாகவும், அ​தே நிலஅதிர்வு பிரச்சி​னைக்கு இலக்காகக் கூடியதாகவும் தான் அ​மையும். இது தமிழ்நாட்டின் ​தே​வை​யை நி​றை​வேற்றுவதற்காக கூடுதலான சுற்றுப்புறச்சுழல் பாதிப்​பைத்தான் ​கேரளாவிற்கு ஏற்படுத்தும்.

தீவிரமான பயத்திற்கும் பாதுகாப்பற்ற மனநி​லைக்கும் உள்ளாகியுள்ள இறங்குமுகப் பகுதியில் உள்ள மக்க​ளையும், நீரின் அள​வை அதிகரிக்கும் ​பொழுது அ​ணையின் பாதுகாப்பு குறித்து ​வெவ்​வேறு விதமான அபிப்பிராயங்க​ளை கூறும் நிபுணர்க​ளையும் கணக்கி​லெடுத்துக் ​கொண்டு, ​முன்​னெச்சரிக்​கை அடிப்ப​டையில் நீரின் அள​வை 120 அடி அளவி​லே​யே பராமரிக்க ​வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு ​தே​வையான அளவு நீ​ரை 120 அடி அளவிலிருந்​தே ம​டைமாற்றி வழங்குவதற்கு ​தே​வையான நடவடிக்​கைக​ளை ஊக்குவித்து அந்த நீர் தமிழகத்தின் உள்​ளே உள்ள நீர்த்​தேக்க பகுதிகளிலும் மற்ற நீர் ​தேக்க வடிவங்களிலும் ​தேக்கி ​வைத்துக் ​கொள்ள ​வேண்டும்.

கீழ்க்கண்ட விசயங்களில் நீண்டகால நடவடிக்​கைகள் ​தே​வைப்படுகிறது: (i) தற்​பொழு​தைய அளவி​லே​யே நீ​ரை வழங்குவது குறித்த ​கேரளாவின் வாக்குறுதி​யை மறுஉறுதி ​செய்ய ​வேண்டும். ஏற்கன​வே ​கேரள அரசு ​வெளிப்ப​டையாக இவ்வாக்குறுதி​யை உறுதி ​செய்துள்ளது. (ii) முல்​லைப்​பெரியார் அ​ணை​யைப் ​பொறுத்தவ​ரை அது ஒரு ம​டைமாற்ற அ​ணைதான் (diversion dam), நீர்த்​தேக்க அ​ணை (storage capacity) அல்ல ​என்ற பொதுப்புரித​லை ஏற்படுத்திக் ​கொள்ள​வேண்டும். மத்திய அரசின் ​தே​வையான ஒத்து​ழைப்புடன் நீர்த்​தேக்க தகுதி​யை தமிழ்நாடு அந்த மாநிலத்தின் உள்​ளே உருவாக்கிக் ​கொள்ள ​வேண்டும்; (iii) உடனடியாக பின்வரும் ஆய்வுக​ளை ​மேற்​கொள்ள ​வேண்டும் (அ) தமிழ்நாட்டிற்கு ​தே​வையான அள​வையும், (ஆ) ம​டைமாற்றுவதற்கும் ​கொண்டு​செல்வதற்குமான மறுவடிவ​மைப்பு மு​றை​யையும், (இ) ஆ வின் அடிப்ப​டையில், ​முடிந்தவ​ரை தே​வையான கு​றைநதபட்ச ஒழுங்குமு​றை நீர்​தேக்க அளவிற்கு மட்டுமாக அ​ணைக்கு பின்புற நீர்த்​தேக்கத்​தை கு​றைக்க ​வேண்டும், (ஈ) அ​ணை​யை பலப்படுத்துவதற்கான முயற்சிக​ளை ​மேற்​கொள்ள ​வேண்டும், (உ) அ​ணையில் நீர்வரத்து குறித்த நீரியியல் ஆய்வும் ஒழுங்குமு​றை நீர்த்​தேக்க அட்டவ​​ணை​யையும் மற்றும் (ஊ) மாறுகாலகட்டத்திற்கான ந​டைமு​றை ஏற்பாடுகள்; (எ) அ​ணை ​தொடர்ந்து தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டி​லே​யே ​வைத்துக் ​கொண்டு, தமிழ்நாடு அரசாங்கம், ​கேரள அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கம் ​கொண்ட மூன்றுபிரிவும் ​சேர்ந்த அ​மைப்​பை (துங்கபத்ரா அ​மைப்பு வழியில்) ஏற்படுத்தி ஆண்டுமுழுவதும் நீர்த்​தேக்க நடவடிக்​கைத் திட்டத்​திற்கான தயாரிப்புக​ளை கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் நாங்கள் ஆ​​லோச​னை வழங்குகி​றோம்.

இது​வே நியாயமான மற்றும் நல்ல தீர்வு என்றும் ​பொருளாதார மற்றும் சிக்கனரீதியில் அதிக சாத்தியமான​தென்றும் நம்புகி​றோம். ​மே​லே ​சொன்ன விசயங்க​ளெல்லாம் இந்த சச்சர​வை தீர்ப்பதற்கான கு​றைந்தபட்ச ​தே​வைகளுக்கான அடிப்ப​டை என நி​னைக்கி​றோம். ​மேலும் சிறப்பானதாக ​செய்வதற்கான பல்​வேறு வழிகளுக்கான சாத்தியங்களும் உள்ளன. உதாரணத்திற்கு உள்ளுர் நீர்​சேகரிப்பு ​செயல்திட்டம் மற்றும் விவசாய மு​றை​யை அதிக திறனு​டையதாக ஆக்குவது ​போன்ற விசயங்களின் மூலமாக படிப்படியாக முல்​லைப்​பெரியா​ரை சார்ந்திருப்ப​தை கு​றைக்கலாம். உண்​மையில் நாம் சுற்றுப்புறச்சுழல் சார்ந்த நதித் திட்டங்க​ளை ​நோக்கி பயணிப்ப​தை இலக்காக ​கொள்ள ​வேண்டும்.

நீரின் அள​வை கு​றைத்து ​வைத்துக் ​கொள்வது மற்றும் தற்​பொழு​தைய அ​ணை​யை பலப்படுத்துவ​தன் வழியாக நதியின் கீழ்ப்பகுதியில் இருக்கும் மக்களின் பயத்​தை ​போக்கி அ​ணை குறித்த பாதுகாப்புணர்​வை ஏற்படுத்துவதும், புதிய அ​ணைத்திட்டத்​தை தடுப்பதும், முன்​னெச்​செரிக்​கை நடவடிக்​கை மற்றும் நம்பிக்​கை​யை வளர்ப்பது என்கிற இரண்டு அடிப்ப​டைகளிலும் முக்கியமானது என நி​னைக்கி​றோம்.

அமிதா பவிஸ்கர், பாரத் பதன்கர், பிக்சம் குஜ்ஜா, சந்தன் மகந்தா, துலால் சந்திர ​கோஸ்வாமி, ஏகலாவிய பிரசாத், ​​ஜெயந்தா பண்​டோபாத்யாயா, ​கே ​ஜே ஜாய், ​மேதா பட்கர், பார்த்தா தாஸ், பிலிப்பி குல்லட், பிரணாப் ​செளத்ரி, எம் ​கே பிரசாத், ​ரோகினி நீல​கேணி, ஸ்ரீபத் தர்மதிகா​​ரே, ஸூருதி விஸ்பு​தே, சுனிதா நாதமுனி, வி​நோத் ​கெளத், ஒய் ​கே அழகு, ஏ ​வைத்தியநாதன், பி என் யு​கேந்தர்

(Amita Baviskar, Bharat Patankar, Biksham Gujja, Chandan Mahanta, Dulal Chandra Goswami, Eklavya Prasad, Jayanta Bandopadhyaya, K J Joy, Medha Patkar, Partha Das, Philippe Cullet, Pranab Choudhury, M K Prasad, Rohini Nilekani, Shripad Dharmadhikary, Shruti Vispute, Sunita Nadhamuni, Vinod Gaud, Y K Alagh, A Vaidyanathan and B N Yugandhar)

(For Forum for Policy Dialogue on Water Conflicts in India)

நன்றி: Economic and Politcal Weekly, Vol XLVI No.51 December 17, 2011

Advertisements

2 பதில்கள் to “முல்​லைப்​பெரியார் சச்சர​வை தீர்ப்பதற்கான ஒரு திட்டம்”

 1. d.velazhagan said

  you are given solution to keralites alone
  who said that dam is not safety? its safer one
  first of all implement supreme court order

  • நண்ப​ரே, இக்கட்டு​ரை​யை சற்று ​பொறு​மையுடன் படித்து ​பொருள் புரிந்து ​கொள்ள முயற்சியுங்கள். இது ​மேதா பட்கர் ​போன்றவர்கள் உள்ள நீர்ஆதாரங்கள் குறித்து ஆய்வுகள் ​செய்யும் ஒரு அ​மைப்பின் இந்தியப் பிரதமருக்கான கடிதம். தமிழர்களாக நமக்கு இதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் அத​னை ​கேரளத்துக்கு ஆதரவாக​வோ தமிழகத்திற்கு ஆதரவாக​வோ ​சொல்லவில்​லை.

   அவர்கள் ​கேரளம் தமிழகம் இரண்டின் நி​லைப்பாட்​டையும் ​கேள்விக்குள்ளாக்கி, ​இருபக்க மக்களின் பயம் மற்றும் ​தே​வைக​ளை கருத்தில் ​கொண்டு சில ஆ​லோச​னைக​ளை தருகிறார்கள். இது ​போன்ற நடுநி​ல​மையாளர்க​ளின் நி​லைப்பாடுக​ளை கவனமாக ஆய்வு​செய்து ஆழமாக விவாதிக்க ​வேண்டும். எல்லாவற்​றையும் கண்​ணை மூடிக்​கொண்டு எதிர்ப்பது அறிவுட​மை ஆகாது.

   அக்கடிதம் என்னு​டைய நி​லைப்பாடு அல்ல. ஆனால் இப்பிரச்சி​னை குறித்த மாற்றுப் பார்​வைக​ளை நாம் புரிந்து ​கொள்வதற்காக​வே இ​தை ​மொழி​பெயர்த்​து பதிவு ​செய்​தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: