விரியும் சுழல்கள்
Posted by மகேஷ் மேல் திசெம்பர் 28, 2011
கூடங்குளம் போராட்டத்தை திசைதிருப்ப
முல்லைப் பெரியார் போராட்டத்தை தூண்டிவிடலாம்
அதலிருந்து திசை திருப்ப
ஊழல் எதிர்ப்புப் போராட்டம்
அதுவும் கட்டுக்கடங்காமல் போனால்
இருக்கவே இருக்கிறது
பாராளுமன்ற சண்டைகளைப் பெரிதுபடுத்தலாம்
ஒரு நிலைமைக்கு மேல் எதையும் நீட்டிக்க முடியாது
அதன் யோக்கியதையை மூடிமறைக்க
ஏதேனும் விளையாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்யலாம்
நிலைமை புரியாத அமைச்சர்கள்
அதிலும் புகுந்து ஆட்டத்தைக் குலைப்பார்கள்
அங்கிருந்து இன்னொரு ஊழல்
இன்னொரு போராட்டமென
நிற்காது விரிந்து கொண்டே செல்லும் இந்தச் சுழல்
ஒருத்தரை விடாது அனைவரையும் இழுத்துவந்து
இறுதி யுத்தம் வரைத் தொடரும்
இது நாங்களோ எங்கள் எதிரிகளோ
விரும்பினாலும் வெறுத்தாலும் நிறுத்த முடியாதது
எங்ஙனமேனும் முன்னகர்ந்து செல்ல
வரலாற்றுக்கு இவற்றைத் தவிர
வேறு என்னதான் வழியிருக்கிறது
மறுமொழியொன்றை இடுங்கள்