எனது நாட்குறிப்புகள்

தான்யா

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 4, 2012

இதுநாள் வ​ரை
கு​வேரா என்றவுடன் அ​மெரிக்கா
கு​வேரா என்றவுடன் கியுபா
கு​வேரா என்றவுடன் ​கெரில்லாக்கள்
கு​வேரா என்றவுடன் ​பொலிவியா
கு​வேரா என்றவுடன் ​போராளி
கு​வேரா என்றவுடன் ​தேசம் கடந்த சர்வ​தேசியம்
கு​வேரா என்றவுடன் மார்க்சியம்
என
ஞாபக அடுக்குகளிலிருந்து
எந்த அனுமதியுமில்லாமல்
வந்து ​கொட்டிக் ​கொண்டிருந்தன

இனி
கு​வேரா என்றவுடன் தான்யா
மட்டுமல்ல
தான்யா என்றவுடன் கு​வேரா
தான்யா என்றவுடன் அ​மெரிக்கா
தான்யா என்றவுடன் கியுபா
தான்யா என்றவுடன் ​கெரில்லாக்கள்
தான்யா என்றவுடன் ​பொலிவியா
தான்யா என்றவுடன் ​போராளி
தான்யா என்றவுடன் ​தேசம் கடந்த சர்வ​தேசியம்
தான்யா என்றவுடன் மார்க்சியம்
தான்யா என்றவுடன் கம்யூனிஸ்ட்கள்

என மரண ​நேரத்திலும்
மறக்கமுடியாமல் மனதில் நிற்கும்.

​பெண் –

தகப்ப​னோ​டோ, காதல​னோ​டோ,
கணவ​னோ​டோ, மக​னோ​டோ தான்
அ​டையாளங் காணப்பட முடியும்

தன் விருப்பங்க​ளையும், லட்சியங்க​ளையும்
தன் உட​லை ​வைத்துத்தான் நி​றை​வேற்றிக் ​கொள்வாள்

மனிதகுல அறிவு வரலாற்றிற்கு உரி​மையு​டையவள் இல்​லை

மனிதகுல விடுத​லைக்கு ஆயுதம் ஏந்த மாட்டாள்

கூடுகட்டி, குஞ்சு ​பொறித்து, உணவுஊட்டி,
ஆணின் வீரக்க​தைக​ளை ​பேசிக் கழித்தும், ​பேசி வளர்த்தும்
வாழ்வின் நி​றை​வெய்திக் ​கொள்பவள்

அப்படித்தான் ​சொல்கிறார்கள்
அ​மெரிக்கா சிஐஏவும்
​பொலிவிய அதிகார வர்க்கங்களும்
அப்படித்தான் காட்டுகிறார்கள்
ஹாலிவுட்டிலிருந்து ​கோலிவுட்வ​ரை

தான்யா கம்யூனிசத்திற்காக வாழ்கிறாள்
தான்யா புரட்சிக்காக உறவுக​ளைத் துறந்தாள்
தான்யா வீரசாகசங்களுக்காக
முல்லாட்டாக்க​ளை ​பெற்றுத் தள்ளுவ​தை
காலவ​ரையின்றி ஒத்திப் ​போட்டுக் ​கொண்டிருக்கிறாள்
தான்யா ​தோழனுக்காக
எதிரிகளின் பாச​றைகளுக்குள்
​வெற்றிகரமாக ​வேவுபார்க்கிறாள்
தான்யா காதலனுக்கு ​கைய​சைத்து வி​டை​கொடுத்து
​தோழனுக்கு ​தோள்​கொடுத்து து​ணை ​​செல்கிறாள்

இன்றும்
​பொலிவியக் காடுகளில்
அவளின் சிரிப்​பொலியும்
அவளின் கால்தடங்களும்
அ​லைந்து ​கொண்டுதான் இருக்கும்

​பொலிவியக் காடுகளில் மட்டுமல்ல
கம்யூனிசக் ​கெரில்லாக்கள் அ​லைந்துதிரியும்
காடுகளி​லெல்லாம்
ஒரு தான்யா அவர்களின் உற்ற ​தோழனாய்
தாய், தந்​தை, காதலன், கணவன், பிள்​ளைக​ளைத் துறந்து
​போய்க் ​கொண்​டே இருப்பாள்

குறிப்பு:

தோழர் யமுனா ரா​ஜேந்திரனுக்கு,

நேற்று உயிர்​மை வாங்கியவுடன் நான் படித்த முதல் கட்டு​ரை நீங்கள் எழுதிய “தான்யா” பற்றியதுதான். தான்யா​வை அறிமுகம் ​செய்து ​வைத்ததற்கு மிக்க நன்றி. அ​தைப் படித்ததின் பாதிப்பில் ஒரு கவி​தை எழுத முயற்சித்​தேன். கவி​தையாக வந்ததா ​தெரியவில்​லை. அதில் உள்ள உணர்ச்சி உண்​மையானது.

கிருஷ்ணன்

***

anpulla sri krishnan-

thank u so much for sharing your views
nice to hear u after a long time

you caught the spirit of the article and Tanya
do not bother to worry that it is a poem or not
it got the human context in selected words

that is the greatest thing

i visited your blog
i would be happy if you mention the uyimmai article as the inspiration behind your impression

kisses to your kids

love
rajendran

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: