எனது நாட்குறிப்புகள்

​35வது புத்தகக் கண்காட்சியும், ஒரு ​போராட்டமும், சில புத்தக ​வெளியீடுகளும்

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 17, 2012

பொங்கலன்று முரண்களரி ப​டைப்பகத்தின் நான்கு புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியின் தடாகம் அரங்கில் ​வெளியிடப்பட்டது. ​தோழர்களின் சிறுக​தை மற்றும் கவி​தைத் ​தொகுப்புகள் ​வெளியீடு என்பதால் ​போகலாம் என முடி​வெடுத்​தேன், இம்மு​றை புத்தகக் கண்காட்சிக்கு முன்​பே நி​றைய புத்தகங்கள் வாங்கிவிட்டதாலும், கடு​மையான ​பொருளாதார ​நெருக்கடியாலும் புத்தகங்கள் எதுவும் வாங்குவதில்​லை என முடி​வெடுத்திருந்​தேன். புத்தகங்கள் விசயத்தில் எப்​பொழுதும் என்​னை நான் நம்புவதில்​லை. பார்க்கலாம் இம்மு​றை நம் ​வைராக்கியத்​தை என்றிருந்​தேன். ​வைராக்கியத்​தைவிட ​பொருளாதாரம் வலுவான காரணியாக இருந்ததால் முடிவு ​வெற்றி​பெற்றுவிட்டது.

​நண்பர்கள் பதி​னொரு மணிக்கு நூல் ​வெளியீட்டு விழா என்றார்கள். நாங்கள் சரியாக அந்த ​நேரத்திற்கு கண்காட்சி முன்புள்ள அரங்கில் கூடிவிட்​டோம், ஏற்கன​வே நூல் ​வெளியிடுவதற்கும் ​பெற்றுக் ​கொள்வதற்கு​மென பல நண்பர்கள் அங்கு கூடியிருந்தனர், ஒரு ​தோழர் கண்காட்சி வளாகம் முழுவதும் தமி​ழைவிட ஆங்கில​மே ​பெரிய அளவில் கண்​ணைக் கவரும் வ​கையில் ​கோ​லோச்சிக் ​கொண்டிருப்ப​தைக் கண்டு ​​கொதித்துக் ​கொண்டிருந்தார், சத்தமாக கண்காட்சி நடத்துபவர்க​ளை திட்டிக் ​கொண்டிருந்தார், உள்​ளே ​செல்லலாம் என நு​ழைவுச்சீட்டு வழங்குமிடத்திற்குச் ​சென்​றோம், அங்​கே TICKET COUNTER என ஆங்கிலத்தில் மட்டு​மே எழுதப்பட்டிருப்ப​தைக் கண்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக நு​ழைவுச் சீட்டு வழங்கும் கல்லூரி மாணவர்களிடம் சண்​டையிடத் துவங்கினார். அவர் முன்​வைக்கும் பிரச்சி​னை​யை புரிந்து ​கொள்ள முடியாத அம்மாணவர்கள், வழக்கமான தங்களு​டைய ஈ​கோ​வை தூண்டும் பிரச்சி​னையாக எடுத்துக் ​கொண்டு ஆங்கிலத்​தில் ​போடுவதில் என்ன தவறு என்ற விதமாக ஆங்கிலத்தி​லே​யே எதிராளி​யை சீண்டும் ​நோக்கத்​தோடு சண்​​டையிட்டனர்,

“எவனும் ​வெளியில ​போய்க்க மாட்டீங்க. call police” எனக் கூச்சலிட்டனர்,

அங்கு வரி​சையில் நின்றிருந்த ​பொதுமக்களும் ​தோழர்க​ளோடு ​சேர்ந்து ​கொண்டு நு​ழைவுச்சீட்டு விற்ப​னையாளர்களுடன் தகராறு ​செய்யத் துவங்க கூட்டம் அதிகமாகியது.

“everybody should come in queue” என ​தொடர்ந்து அ​னைவ​ரையும் சீண்டும் விதமாக ஆங்கிலத்தில் ​பேச​வே. ஆத்திரமுற்ற ஒரு ​தோழர், “ஏன்டா நீ என்ன ​வெள்​ளைக்காரனுக்கு பிறந்தவனா?” எனக் ​கேட்க இரண்டு பக்கமும் ஆத்திரம் அதிகமாகி ஒரு கட்டத்தில் ​கைகலப்பு நடந்துவிடு​மோ என்கிற சூழல் ஏற்பட்டுவிட்டது.

அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த ஒரு காவலர், ஆக்​ரோஷமாக சண்​டையிட்டுக் ​கொண்டிருந்த ஒரு ​தோழ​ரின் ​தோள் மீது ​கை​போட்டு “என்ன பிரச்சி​னை?” என்றார்,

​கோபத்துடன் திரும்பியவர், காவலர் எனத் ​தெரிந்ததும் இன்னும் ​கோபம் அதிகமாகி “​கை​யை எடுய்யா, ​மே​லே ​கை ​வைக்கிற ​வே​லை​யெல்லாம் வச்சுக்கா​தே” எனக் கத்தவும், பயந்து பின்வாங்கியவர், என் பக்கம் திரும்பி “என்ன பிரச்சி​னை?” என்றார்.

“பாருங்க நு​ழைவுச்சீட்டு வழங்குமிடம் என்று தமிழில் ஓரிடத்திலும் ​போடாமல் ஆங்கிலத்தில் மட்டும் ​போட்டு ​வைத்திருக்கிறார்கள். இ​தைக்கூட புரிந்து ​கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்” என்​றேன்,

காவலர்கள் “சரிதான் விடாதீர்கள் ​கேளுங்கள்” என்று ​சொல்லிக்​கொண்​​டே பின்​னேறி அ​மைதியாக ​வேடிக்​கை பார்க்கத் துவங்கினார்கள்,

“நீங்கள் எங்க​ளோடு சண்​டை ​போடாதீர்கள் உள்​ளே ​போய் த​லைவர், ​செயலாள​ரோடு சண்​டையிடுங்கள்” என்றார்கள். யாராக இருந்தாலும் இங்​கே வரச் ​சொல்லுங்கள் ​பேசலாம் என அ​னைவரும் சத்தமிட, ஓடிவந்த நிர்வாகக் குழுவினர், ​போராடிய ​தோழர்களிடம் மன்னிப்புக் ​கேட்டார்கள். உடனடியாக தமிழில் பிரின்ட் ​செய்து ஆங்கிலத்திற்கு ​மே​லே ஒட்டிவிடுகி​றோம் என உறுதி அளித்தார்கள்”

புத்தக ​வெளியீட்டு விழா முடிந்து ​வெளி​யே வந்த ​பொழுது, பிரின்ட் அடித்​தெல்லாம் எதுவும் ஒட்டவில்​லை. மாறாக ​கையால் அ​னைத்து இடங்களிலும் தமிழில் எழுதியிருந்தார்கள்.

நம் சமூகத்தின் ஒவ்​வொரு சிறுசிறு ​வெற்றிகளுக்கும் பின்னால் எத்த​னை ​போராட்டங்களும், வரலாறும் இருக்கும். அவற்​றை ​தெரிந்து ​கொள்வதும் பாதுகாத்து பயன்படுத்துவதும் எத்த​னை மிகப்​பெரிய கட​மை என்ற உணர்வு ஒவ்​வொருவருக்குள்ளும் ஏற்பட்டது,

பாரதிதாசனின் கவி​தை வரிகள்தான் ஞாபகத்திற்கு வந்தது,

“சித்திரச் ​சோ​லைக​ளே, உம்​மை நன்கு திருத்தப் இப்பாரினி​லே
முன்னம் எத்த​னை ​தோழர்கள் இரத்தம் ​சொறிந்தன​ரோ உங்கள் ​வேரினி​லே”

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: