எனது நாட்குறிப்புகள்

Archive for ஏப்ரல், 2012

அ​மெரிக்க ​யோக்கிய​தை பாரீர்

Posted by ம​கேஷ் மேல் ஏப்ரல் 19, 2012

அமெரிக்கா தான்தான் உலகத்திலேயே ஜனநாயகத்தையும், மனிதாபிமானத்தையும் கட்டிக் காப்பதில் தலைமை வகிப்பதாய் பீற்றிக் கொள்கிறது. தன்னுடைய நீதி நியாயங்களும், சமூக அமைப்பு முறையும்தான் உலகத்தின் வளர்ச்சியடைந்த நாகரீகத்திற்கான எடுத்துக்காட்டு என டம்பமடித்துக் கொள்கிறது. ஆனால் உண்மை நிலமை என்னவென்பதை, மேலுமொரு புள்ளிவிபரம் புரியவைக்கிறது. இதோ:

தங்கள் மக்களையே சிறையில் தள்ளுவது என்ற விசயத்தில், அமெரிக்காவிற்கு மிஞ்சிய தலைமை உலகில் வேறெந்த நாடும் இல்லை. அமெரிக்கச் சிறைகளில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 2.2 மில்லியன் இது உலக மக்கள் தொகையில் 5% உலகம் முழுவதும் சிறையில் இருப்போர் தொகையில் 25%. சீனா 1.5 மில்லியன் மக்களை சிறையலடைத்து இரண்டாவது இடத்தையும், 870,000 மக்களை சிறையிலடைத்து ரஷ்யா மூன்றாவது இடத்தையும் வகிக்கிறது.

Posted in கட்டு​ரை | Leave a Comment »

இந்தியாவின் ஊழல் பட்டியல்

Posted by ம​கேஷ் மேல் ஏப்ரல் 19, 2012

இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து நடைபெற்ற ஊழல்கள் அனைத்தும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமே அல்ல. இவை மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவை. இத்தொகை கிட்டத்தட்ட ரூபாய். 910,603,234,300,000 இது அமெரிக்க டாலரில் 20.23 டிரில்லியன். இத்தனை பெரிய தொகையை வைத்து, இந்தியா ஓர் இரவில் மிகப்பெரும் வல்லரசாக மாறிவிடமுடியும், அனைத்து சமூகப் பிரச்சினைகளையும் முக்கியமாக வறுமையையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் நிரந்தரமாக ஒழித்துவிடலாம்.

Posted in கட்டு​ரை | 3 Comments »