எனது நாட்குறிப்புகள்

Archive for ஜூலை, 2012

‘சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்’ நூல் குறித்து

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 31, 2012

சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்‘ நூ​லை படித்து முடித்துவிட்​டேன். தங்களு​டைய இச்சிறுநூல் சிந்த​னை​யைத் தூண்டுவதாக அ​மைந்திருந்தது. தங்களு​டைய எதிர்பார்ப்பின் படி​யே மூலநூல்க​ளை மீண்டும் படிக்க ​வேண்டும் என்ற ஆர்வத்​தை தூண்டும் வ​கையில் அ​மைந்திருந்தது.

இதில் ​பேசப்படும் பல மார்க்சிய அடிப்ப​டை விசயங்கள் சர்வ​தேச அளவிலும் குறிப்பாக தமிழகத்திலும் காலாவதியாகிவிட்ட​வை, அ​வை ​செல்லாது என்ற குரல் விவாதத்தளங்களில் ஓங்கி ஒலித்துக் ​கொண்டிருக்கும் சூழலில், அத்த​கைய கருத்துக்களின் உண்​மையான ​நோக்கத்​தையும் தாண்டி அத்த​கைய கருத்துக்க​ளை முன்​வைப்பவர்களின் மார்க்சிய மூல நூல்கள் மீதான நுண்மான் நு​ழைபுழம் இல்லா​மை​யை சுட்டிக் காட்டுவதாக அ​மைகிறது.

எனக்கு ​பெரும்பாலும் ஏற்கன​வே ​படித்தவற்​றை மீண்டும் மீண்டும் வாய்ப்புக் கி​டைக்கும் ​பொழு​தெல்லாம் வாசித்து வளர்ச்சி நி​லைகளுக்​கேற்ப அவற்​றை உள்வாங்கிக் ​கொள்ள ​வேண்டியதன் அவசியத்​தை உணர்த்தியது. குறிப்பாக பண்பாடு குறித்து ​பேசும் பக்கங்களும், கிராம்சி குறித்து ​பேசும் பக்கங்களும் அதிகம் கவனத்​தை கவர்வதாக இருந்தது. படித்த​வை குறித்து மீண்டும் ​யோசித்துப் பார்க்கும் ​பொழுது இ​வை இரண்டும் தற்​பொழு​தைய வாசிப்பில் உடனடியாக கவனத்திற்கு வருவதாக அ​மைந்திருந்தது.

கிராம்சி குறித்த உங்களு​டைய ஒட்டு​மொத்தமான கண்​ணோட்டத்தின் பகுதியாக அவரு​டைய ​மேற்​கோள்களின் மீதான உங்களு​டைய முரண்பாடு உருவாக்கப்பட முயற்சிக்கப்படுவதாகத் ​தோன்றுகிறது.

​மேற்கட்டுமானம் அடிக்கட்டுமானம் என்ற வார்த்​தைகள் உடனடியாக ஒரு தமிழனின் சிந்த​னையில் ஒரு கட்டிடத்தின் வழியாக​வே உள்வாங்கிக் ​கொள்ளப்பட முடியும். ஆனால் அவற்​றையும் அவற்றிற்கு இ​டையிலான உற​வையும் அத்த​கைய வடிவில் புரிந்து ​கொள்ளத் துவங்குவது தவறானதாக​வே அ​மையும் என்று கருதுகி​றேன்.

வடிவம்-சாரம், ​தோற்றம்-உள்ளடக்கம், ​மேற்கட்டுமானம்-அடிக்கட்டுமானம் ​போன்ற விசயங்கள் மிகவும் நுட்பமான​வை, அவற்றிற்கி​டையிலான உறவு மிகவும் சிக்கலான பல்​வேறு நுட்பமான இ​ழைகளால் பின்னிப்பி​ணைக்கப்பட்டிருப்ப​வை. அ​வை ஒரு டப்பாவும் அதற்குள் இருக்கும் ​பொருளுக்குமான உற​வைப் ​போன்றதல்ல அல்லது கட்டிடத்திற்கும் அதன் அஸ்திவாரத்துக்குமான உற​வைப் ​போன்றதல்ல.

அது முட்​டையின் ஓட்டிற்கும் அதற்குள் இருக்கும் ​வெள்​ளை மற்றும் மஞ்சள் கருவிற்கும் இ​டையிலான​தைப் ​போன்ற​தாகவும், மரத்திற்கும் அதன் ​வேரிற்குமான உற​வைப் ​போன்றதாகவும். மனிதனின் புறத்​தோற்றத்திற்கும் அவனின் உள் உடல் கட்ட​மைப்பிற்கும் இ​டையிலான​தைப் ​போன்றதாகவு​மே அ​மையும். உ.ம் ​தொப்​பை என்பது ​வெறும் மனித உடலின் வடிவப் பிரச்சி​னை அல்ல அது அவனது உள்ளிருப்புகளின் பிரச்சி​னையின் அல்லது தன்​மையின் ​வெளிப்புற வடிவம். அது ​போல கருப்பு நிறம், சிவப்பு நிறம், மாநிறம், மங்​கோலிய மஞ்சள் நிறம் ​போன்ற​வை சிக்கல்வாய்ந்த மனித இன பரிணாம வளர்ச்சி மற்றும் உடலின் உள்ளார்ந்த இயங்கு மு​றையின் அம்சங்கள். இயற்​கை​யோடு அம்மரபினங்கள் ​கொண்டிருந்த தீர்மானகரமான உறவின் ​வெளிப்பாடு (எச்சம் என்று ​சொல்லலாமா ​தெரியவில்​லை).

​மேலும் கிராம்சி குறிப்பிடுவ​தைப் ​போல “அர​சியல் அ​மைப்புகளுக்கும் ​பொருளாதார அ​மைப்புக்கும் இ​டையிலான உற​வை ​நேரடியானதாக ​கொச்​சையாக புரிந்து ​கொள்ள முடியாது அல்லது கூடாது என்​றே நி​னைக்கி​றேன். காங்கிரஸ் என்னும் கட்சி​யை சராசரி மனிதனால் ​நேரடியாக அது இந்த ஆளும் வர்க்க பிரிவின் நலன்களுக்கான கட்சி என்று எளிதாக புரிந்து ​கொண்டு விட முடியாது. அ​தேப் ​போல அது எடுக்கும் எல்லா முடிவுக​ளையும் அந்த ஒரு வர்க்கத்தின் நலனிலிருந்துதான் எடுக்கிறது என்றும் வரி​சைப்படுத்த முடியாது. ஆனால் கிராம்சி ​சொல்வ​தைப் ​போல சிக்கலான ஆய்வுகளின் வழி அதன் சாராம்சத்​தை ​வெளிப்படுத்த முடியும் அதுவும் கூட 2 + 2 = 4 என்ற கணக்கு ​போல் ​வெளிப்படுத்த முடியாது. அப்படி முடியு​மென்றால் இந்தியா​வைக் குறித்த வ​ரைய​றையில் இத்த​னை மாறுபட்ட கண்​ணோட்டங்க​ள் இருப்பது ந​டைமு​றைச் சாத்தியமல்ல. காங்கிரஸ் எந்த வர்க்கத்தின் நல​னை பிரதிபலிக்கிறது? பாஜக எந்த வர்க்கத்தின் நல​னைப் பிரதிபலிக்கிறது? இரண்டுக்கும் அடிப்ப​டையில் என்ன வித்தியாசம்? ஏன் இத்த​னை வ​கை கட்சிகள் ஒ​ரே மாதிரி ஒரு சில வர்க்கங்களின் நல​னை பிரதிபலிக்கிறது? இவற்றிற்கான சமூகத் ​தே​வை என்ன? என்ற ​கேள்விகள் பல சிக்கலான வழிமு​றைகளில்தான் தீர்வுக​ளை ​நோக்கி இட்டுச் ​செல்கிறது. அதுவும் கூட குழுவிற்கு குழு பல்​வேறு வழிகளில் மாறுபடுகிறது.

‘வரலாற்றுப் ​பொருள்முதல்வாதம்’ என்ற விசயத்​தை படிக்கும் ​பொழுது அது எந்த​தெந்த காரணங்கள் ​சொல்லி தற்காலத்தில் மறுக்கப்படுகிறது என்ற விசயங்கள் ​தெளிவாக உங்கள் சிறு நூலில் முன்​வைக்கப்பட வில்​லை. ​பொதுவாக மார்க்சிய அணுகுமு​றை என்பது, தான் மறுப்புக் கூறும் எதிராளியால் கூடத் தன் தரப்பு ​தெளிவாக ​வைக்காமல் முன்​வைக்கப்படும் புள்ளிகள் மார்க்சிய ஆசான்களால் மிகத் ​தெளிவாக முன்​வைக்கப்பட்டு அது குறித்து விவாதிக்கப்படும்.

‘வரலாற்றுப் ​பொருள்முதல்வாதம்’ ஏற்றுக் ​கொள்ளத்தக்கதல்ல என வாதிப்​போர் இரண்டு காரணங்களால் அது நிராகரிக்கிறார்கள் எனக் கருதுகி​றேன். ஒன்று அது முன்​வைக்கும் நான்கு வ​கையான அடிப்ப​டை சமூக அ​மைப்புகளின் ​தோற்றம் வளர்ச்சி முடிவு என்பது, இது எல்லா நாடுகளுக்கும் எல்லா ​தேசங்களுக்கும் ​பொதுவானதல்ல என்ற அடிப்ப​டையில் மறுக்கப்படுகிறது. இரண்டாவது அது அந்த ஆய்வின் அடிப்ப​டையில் ​வெளியிடும் முடிவு அதாவது ‘​சோசலிசம்’ அல்லது  ‘கம்யூனிசம்’ என்னும் வருங்கால சமூகம்.

எனக்கு இவ்விடத்தில் ஒரு சந்​தேகம். மார்க்​சோ எங்க​ல்​சோ எந்த நூலில் அல்லது கடிதத்தில் நாம் ​தொகுத்துக் கூறும் அந்த நான்கு வ​கையான சமூக அ​மைப்பு படிநி​லைகள் பற்றிக் கூறுகிறார்கள்? அ​வை அவர்களின் வார்த்​தைகளில் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது?

நான் ‘வரலாற்றுப் ​பொருள்முதல்வாதத்​தை’ இவ்வாறு புரிந்து ​கொள்கி​றேன். உயிரிணம் அல்லது மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி​யைப் ​போல மனித சமூகமும் பரிணாம வளர்ச்சி அ​டைகிறது. அது எளிதான, அதிக நுட்ப​மோ சிக்க​லோ இல்லாத வடிவங்களிலிருந்து படிப்படியாக அதிக சிக்கலானதும் நுட்பமானதுமான வடிவங்களின் வழியாக ​மேல்​நோக்கி வளர்கிறது. இந்த வளர்ச்சி​யை உருவாக்குவதில் அடிப்ப​டையான அம்சமாக வர்க்க ​போராட்ட​மே அ​மைகிறது. இத்த​கைய வளர்ச்சிப் ​போக்கு குறித்த தத்துவத்​தை ​​பெரும்பாலும் மனித குல வரலாற்​றை படிக்கும் எந்த​வொரு மாணவனும் சந்​தேகத்திற்கிடமின்றி ஒத்துக் ​கொண்​டே தீருவான். அத​னை ஒத்துக் ​கொள்ளும் ​பொழுது அதன் வழியாக இன்னும் நுட்பமாக மனித குல வரலாற்​றை பார்ப்பதற்கான பார்​வை கி​டைக்கிறது, அப்பார்​வை இந்தப் ​போக்கு எதிர்காலத்தில் எத்த​கைய ஒரு இடத்திற்கு ​போகும் என்பதற்கான ஊகங்க​ளை ஆதாரப்பூர்வமாக வழங்குகிறது என்​றே கருதுகி​றேன்.

அ​தே ​போல கிட்டத்தட்ட புராதன ​பொதுவுட​மைச் சமூகம் என்பது எல்லா பகுதியில் வாழ்ந்த மனித பிரிவுகள் மத்தியில் இருந்திருந்தாலும், ஆண்டான் அடி​மைச் சமூகம் என்பது அதன் ​செவ்வியல் விளக்கத்தின் ஓரிரு அம்சங்கள் தவிர்த்து பிற அம்சங்களில் இந்தியா ​போன்ற நாடுகளிலும் இருந்துதான் இருந்திருக்கிறது. வருணாசிரமம் அல்லது சாதி என்பது குறித்தான தீவிரமான பார்​வைகள் ஆண்டான் அடி​மை மு​றையின் பல்​வேறு கூறுக​ளை இனம் காட்ட​வே ​செய்கிறது. கி​ரேக்கத்தின் அடி​மைகளுக்கான ​​கொட்டடிகளின் ஒரு வடிவ​மே ​சேரிகள். ஆண்டான்களின் ​கேள்வி ​கேட்பாடு இல்லாத முழுக்கட்டுப்பாட்டில் அடி​மைகள் இருந்தது ​போலத்தான் தலித்துகள் என்று ​இன்​றைக்குச் சொல்லப்படக்கூடியவர்களின் பல்​வேறு பிரிவினர் ​வைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள். இ​வை கூறித்து இன்னும் விரிவாக நாம் ​பேசலாம்.

பூமியின் சில பகுதிகளில் வாழ்ந்த மனித சமூகங்கள் வி​​ரைவாக வளர்ச்சி அ​டைந்தன. அவற்றில் இந்த படிநி​லைச் சமூகங்கள் ​வேகமாக ​தோன்றி ம​றைந்தன. வி​​ரைவாக புதிய​வை ப​ழையனவற்றின் இடத்​தை மாற்றீடு ​செய்தன. சில பகுதிகளில் ஒரு சமூக அ​மைப்​பே ஒப்பீட்ளவில் நீண்டகாலம் ​தொடர்ந்து ​கொண்டிருந்திருக்கிறது. இதற்கு காரணமாக கீழ்க்கண்ட ஒரு கருது​கோ​ளையும் சிந்தித்துப் பார்க்கலாம். அதாவது மிகச் சிறிய நிலப்பகுதியில் கு​​றைவான இயற்​கை வளங்களுடன் அதிகமான மக்கள் வாழ்ந்த பகுதிகள் வி​​ரைவாக அடுத்தடுத்த சமூக அ​மைப்புக​ளை ​நோக்கி முன்​னேறின. மிகப் ​பெரிய நிலப்பகுதியில் அதிகமான இயற்​கை வளங்களுடன் கு​றைவான மக்கள் வாழ்ந்த பகுதிகளில் புதிய சமூக அ​மைப்புகள் ​வேகமாக ​தோன்றி வளர​வோ ப​ழையனவற்​றை மாற்றீடு ​செய்ய​வோ ​தே​வையின்றி ​போயிருந்திருக்கலாம் (இன்​றைக்கு வளர்ச்சி அ​டைந்த நாடுகள் ​பெரும்பாலும் மிகச் சிறிய பிர​தேச அளவுக​ளைக் ​கொண்ட நாடுகளாக​வே உள்ளன உம் இங்கிலாந்து, ஐ​ரோப்பிய நாடுகள், ​ஜெர்மன், பிரான்ஸ், ​போன்ற​வை, வளரும் நாடுகள் ​பெரும்பாலும் மிகப் ​பெரிய பிர​தேச அளவுக​ளைக் ​கொண்ட நாடுகளாக​வே உள்ளன இந்தியா, 1940களுக்கு முன்பான சீனா, ஆப்பிரிக்கா, ​போன்ற​வை).

இவ்வாறு இயற்​கையின் ​நெருக்கடி இல்லாது ​தேங்கிப் ​போன சமூகங்களில் அவற்​றை பாதுகாத்து பராமரிப்பதற்கான மதம், தத்துவம், க​லை இலக்கியங்கள் ஆகிய​வை மிகப்​பெரிய அளவில் பல்கிப் ​பெருகி வளர்ச்சி ய​டைந்ததால் கலாச்சாரரீதியாக அச்சமூகங்கள் இறுக்கம​டைந்தன. அதன் ​மேல்​தோல் தடிமனாகிப் ​போனது. உள்ளிருந்து ​பெரியளவில் மாற்றம் காண முடியாத நி​லைக்கு உள்ளாகின. உள்ளுக்குள்​ளே​யே அத​னை மாற்ற நி​னைத்த​வை அத​னோடு ​மோத முடியாமல் அழிந்து பட்டன அல்லது தன்​னைத் காத்துக் ​கொள்ள இச்சமூக அ​மைப்பிற்கு ​வெளி​யே ஓடின. அதனால் அ​தை உ​டைக்கும் அளவிற்கு திராணியு​டைய​வை ​வெளியிலிருந்து அ​தை ​நோக்கி வரும்வ​ரை அதன் மீது ​மோதிய​வை அ​னைத்தும் உ​டைந்து தூள்தூளாகின அல்லது அதனால் உள்ளிலுத்துக் ​கொள்ளப்பட்டன.

வரலாற்றுப் ​பொருள்முதல்வாதம் – அந்ததந்த பகுதிகளின் மனித சமூக வளர்ச்சி​யை அதன் சு​யேச்​சையான வடிவங்களில் மட்டு​மே மூலவர்களால் தத்துவ ​பொது​மை ​செய்யப்பட்டன. உலகமய ​போக்கில் ​செவ்வியல் மு​றைகளில் வளர்ச்சிய​டைந்த சமூகங்கள் பிற வளர்ச்சிய​டையாத சமூகங்க​ளை ​வெளியிலிருந்து தாக்கி உ​டைத்து தன்னு​டைய ஒரு பகுதியாக்கி ​மேல்​நோக்கி ​கொண்டு ​சென்றன. ‘இந்தியா குறித்த’ மார்க்சின் கட்டு​ரைகள் இத்த​கைய ​போக்​கை விவாதத்திற்கு எடுத்துக் ​கொள்கின்றன. ஆனால் வரலாற்றுப் ​பொருள்முதல்வாத தத்துவத்தில் இத்த​கைய ​போக்குகள் ​பொது​மைப்படுத்தப்படவில்​லை (கருதுகி​றேன்). அவற்​றைச் ​செய்யக்கூடிய சாத்தியங்கள் மூலதனம் குறித்த ஆய்வுகளில் தன்​னை முழு​மையாக ஈடுபடுத்திக் ​கொண்ட மார்க்சால் முடியாமல் ​போய்விட்டது. ​லெனின் ​போன்றவர்கள் ந​டைமு​றையில் ​செலுத்திய தீவிர கவனத்தால் அவர்களாலும் அது சாத்தியமற்றதாகப் ​போய்விட்டது. அது குறித்து ​பேசிய பிற மார்க்சிய அறிஞர்கள் ப​டைப்புகள் குறித்​தெல்லாம் நமக்கு ​தெளிவான ஒன்றுதிரட்டல் இல்லாததினால் அதிலும் குறிப்பாக தமிழில் நாம் பின்ன​டைந்​தோ அல்லது கவனமின்றி​யோ இருக்கி​றோம் எனக் கருதுகி​றேன்.

நல்ல​தொரு தீவிர சிந்த​னைக்கும், படிப்பிற்கும் விவாதத்திற்குமான வழிக​ளை ஏற்படுத்திக் ​கொடுத்துள்ளீர்கள். என்னளவில் தங்கள் நூலின் முக்கியத்துவத்​தை தங்க​ளோடு பகிர்ந்து ​கொள்வதில் மகிழ்ச்சி அ​டைகி​றேன்.

பிகு. நான் தங்கள் புத்தகத்திலிருந்து வரிக​ளை எடுத்துப் ​போட்டு ​பேசவில்​லை. படித்த அனுபவத்திலும் ஞாபகத்திலும் எழுதியுள்​ளேன். விவாதிப்​போம்.

Posted in கட்டு​ரை | 1 Comment »

Whose problem is this ‘Aram’?

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 27, 2012

In Writer Indira Parthasarathy’s blog, he has posted a small writeup on Jeyamohan’s Aram Series short stories. For this I have posted a long comment on his blog. Below i have republished my comment and his reply for this.

Whose problem is this ‘Aram’? Either those who are not trying to understand the evils of the society in the failure of its system or those who are interested or faith in the existing system. Those are trying to categorize the base of the evils only under the problems of ‘Aram’.

Indian story tellers from the beginning itself, trying to analyze – the contradictions between the individuals, contradiction between an individual and the society and base of all evils – in the characters of the individuals and the decline of their moral values. But in the earlier stages of the development of societies and epistemology such an idea, itself a great advancement in the process of understanding the contradictions.

But in the later stages of the development of society, it has proven that such a simple logics fail to capture the real problems of our society, their solutions never turned as a life style in the prevailing societies. Here only we came to analyze all the way of our life through some advanced logics such as system failures, Development of society Vs. ideas, Development of society Vs. culture, etc.

Feelings of ‘Aram’ in an individual’s mind never play over or supersede the contradictions of the society and system failures. Individuals can only be allowed to live under the Terms & Conditions given by the existing societies. Those who trying to solve the issues purely on the base of ‘Aram’ is only an exception to the society, such exceptions never became a way of life anywhere around the world. This is the reality we are seen and learnt from the Life and History of mankind.

At the time, when the Aram series of short stories published in Jayamohan’s website, I have written some criticisms about the first three short stories of this series in my blog (https://naatkurippugal.wordpress.com/2011/02/11/criticismonjeyamohnshortstories/). I knew very well most of the people not agreed with my views. But my suggestion is, it should also has been taken into account as one of the alternate view. Those criticisms are all written by me as a ‘Aram’ of mine towards my society.

indiraparthasarathy

I agree with you. There cannot be any ethical absolutism in regard to any concept. The ultimate yardstick is how does it benefit the disadvantaged.

 

 

 

Posted in ​ஜெய​மோகன், விமர்சனம் | Leave a Comment »

கொடிதினும் கொடியது – நடராசனின் சிறுக​தை குறித்து

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 19, 2012

கொடிதினும் கொடியது” சிறுக​தை​யைப் படித்​தேன். நாளுக்கு நாள் உங்களின் க​தை ​சொல்லும் பாங்கும் சு​வையும் கூடிக் ​கொண்​டே ​போகிறது. நம்​மைச்சுற்றி ந​டை​பெறும் சிறுசிறு விசயங்க​ளையும் நீங்கள் உண்ணிப்பாக கவனிப்பதும், அவற்​றைச் சு​வைபட விவரிப்பதிலும் உங்கள் க​தைகளில் ​தேர்ச்சி கூடி வருவ​தைக் காண்கி​றேன்.

க​தையின் ஆரம்பத்தில் “கத்திரி ​வெயில்” என்று ​சொல்லிவிட்டு க​தையின் இறுதியில் “சித்தி​ரை நிலவு” என்று ​சொல்லும் ​பொழுது ஏ​தேனும் தகவல் பி​ழை இருக்கு​மோ என்று சந்​தேகப்பட்​டேன். சிறுசிறு விசயங்களிலும் நன்கு க​தை கவனப்பட்டு வந்துள்ளது. தகவல் பி​ழைகள் இல்லாமல் க​தைகள் வருவதற்கு மிக முக்கிய காரணம் அதிகமும் கற்ப​னைக​ளை சார்ந்து இல்லாத க​தைகளுக்கு இயல்பாக அ​மையும் பாங்கு என்​றே ​தோன்றுகிறது.

“​போலீஸ் நாய்” குறித்து ஆரம்பத்தில் வரும் சில விவர​னைகள், எனக்கு ஏ​னோ ராமாயணக் க​தை​யை கம்பர் தன் காலகட்டத்தின் சமூக முரண்க​ளை மனித குணாம்சங்க​ளை ​வெளிப்படுத்த பயன்படுத்தியுள்ளார் என்பதாக நாவா முன்​வைக்கும் கருது​கோள்க​ளை ஞாபகப்படுத்துகிறது. ​போலீஸ் நாய் குறித்த வருண​னை கூட ​போலீஸ் குறித்த ம​றைமுக வருண​னை​யோ என்று ​தோன்றச் ​செய்கிறது.

கார்க்கி ​சொல்வார் ஒரு எழுத்தாளனாக இருப்பதற்கு ​தே​வையான சலிப்பூட்டும் விசயம் ​பேச்சுக்க​ளையும் சம்பவங்க​ளையும் மட்டும் ​​கேட்டுக் ​கொண்டும் பார்த்துக் ​கொண்டும் இருப்பதல்ல, அதில் ​வெளிப்படும் பல்​வேறு பட்ட மனித குணாம்சங்க​ளிலிருந்து, சிறுசிறு மனித ​மேனரிசங்கள், உ​டைகள், நளினஙகள் என எண்ணற்றவற்​றை ஆழ்ந்து கற்றுக் ​கொண்​டே இருக்க ​வேண்டியிருக்கிறது என. தங்களு​டைய ​தெருநாய் குறித்த வருண​னையும், அதன் ​​செயல்களுக்கும் மனநி​லைகளுக்குமான உற​வை அதன் வாழ்​வை ​நெருங்கிப் பார்த்து ​வெளிப்படுத்தும் பாங்கும் ஆச்சரியமூட்டுகிறது.

காவல்து​றை​யைச் சுற்றி​யே க​தை பிண்ணுவது தான் தங்கள் லட்சியம் என முடிவு ​செய்து விட்டீர்கள் ​போலும். தங்கள் மனதின் ஆழத்தில் ஏற்படுத்தியிருக்கும் ஆழமான பாதிப்​பை புரிந்து ​கொள்ள முடிகிறது. அந்த ரயிலில் பயணம் ​செய்த சிறுவனின் ​கை​யை ​போலீஸ் நாய் கடித்துவிட்ட​தே, அப்பிரச்சி​னையில் அச்சிறுவனிடமும், அவனின் ​பெற்​றோரிடமும் காவல்து​றை எப்படி நடந்து ​கொண்டது என்ப​தை உங்கள் எழுத்தால் ​தெரிந்து​கொள்ள ​வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ​தெருநாயின் க​தைக்கு ​தே​வையில்லாத கி​ளைக்க​தை அது என விட்டுவிட்டிருப்பீர்கள்.

​தொடர்ந்து எழுதுங்கள். க​தை மிகவும் சுவாரசியமாகவும் நன்றாகவும் அ​மைந்துள்ளது.

Posted in கட்டு​ரை | Leave a Comment »

மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 16, 2012

தங்களுடைய டேவிட் ஹார்வியின் தமிழ் மொழிபெயர்ப்பு “மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” நூலுக்கான விமர்சனக் கட்டுரையைப் படித்துவிட்டேன். மார்க்சியத்தை உறுதியாக நம்புபவர்கள், பாட்டாளி வர்க்க விடுதலைக்கான ஆயுதம் அது என்ற உணர்வோடும், நம்பிக்கையோடும், லட்சியத்தோடும் கூடியவர்கள் அத்தகைய புத்தகங்களை படிக்கிறார்கள், அதற்கான விமர்சனங்களை கொடுக்கிறார்கள் என்பது தான் அக்கட்டுரைக்கான முக்கியத்துவம்.

நூலைப் படிக்காமல் விமர்சனத்தை மட்டும் படிப்பதால், விமர்சன ஆசிரியரின் பார்வையில் தான் மூலநூலைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது மார்க்சின் விசயத்தில் ஹார்வியின் புத்தகத்திற்கு பொருந்தும், ஹார்வியின் விசயத்தில் உங்களுடைய கட்டுரைக்குப் பொருந்தும். ஆனால் உங்களுடைய நேர்மை ஹார்வியிடம் இல்லை. நீங்கள் விமர்சனம் என்று சொல்லிவிட்டுச் செய்வதை ஹார்வி “மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” எனச் சொல்லி செய்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

தங்களை மார்க்சியவாதிகள் என்றும் தங்களுடைய கட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சொல்லிக் கொள்பவர்கள் எப்படி இந்தப் புத்தகத்தை எத்தகைய விமர்சனரீதியான முன் குறிப்பும் இன்றி வெளியிடுகிறார்கள் என்பதைத்தான் தங்களுடைய கட்டுரை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

தற்பொழுது புத்தக நிறுவனங்கள் முழுவதும் வியாபார ரீதியாக விற்கச் சாத்தியமான அனைத்தையும் விற்பதற்கு தயாராகிவிட்டன. அநேகமாக டேவிட் ஹார்வி என்ற ஆங்கிலப் பெயரும் “மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” என்ற புத்தகத் தலைப்பும் மட்டுமே போதும் அதன் விற்பனை உத்திரவாதத்துக்கு என்று பாரதி புத்தகாலயம் முடிவு செய்திருக்கக் கூடும்.

ஒரு முறை ஒரு தோழருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் கூறினார். என்சிபிஎச் தலைமை நிர்வாகியிடம் ஒரு நேர்காணலுக்கு போயிருந்தாராம். அதில் அவர் கேட்ட கேள்வி ஒட்டு மொத்த சூழலையும் தர்ம சங்கடமாக்கிவிட்டதாம். அந்தத தோழர் கேட்ட கேள்வி, “முன்பு தெருவில் விற்கப்பட்டுக் கொண்டிருந்த புத்தகங்களெல்லாம் தற்பொழுது என்சிபிஎச்சின் தயாரிப்பில் வெளிவருகிறது, முன்பு என்சிபிஎச்சின் தயாரிப்பில் வெளிவந்த புத்தகங்களெல்லாம் இன்றைக்கு தெருவில் விற்கப்படுகிறது, இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்?” என்று நேரடியாக தலையிலடித்தாற்ப்போல கேட்டாராம்.

நன்கு சிரித்துக் கொண்டே வழக்கம் போல சாஸ்தோத்ரமான கேள்விகளோடு சென்று கொண்டிருந்த ஒரு நேர்காணலில், சற்றும் எதிர்பாராத ஒரு நொடியில் குண்டைத் தூக்கி மடியில் வீசியதைப் போல் வந்த இந்தத் தடாலடிக் கேள்வியால் வாயடைத்துப் போன அந்த நிர்வாகி, தன்னைச் சுற்றியிருந்த சகலரையும் ஒரு சில நொடிகள் சுற்றிச்சுற்றிப் பார்த்துவிட்டு, நீண்ட யோசனைக்குப் பிறகு,  “இவ்வளவு பெரிய நிறுவனம், எவ்வளவு ஊழியர்கள் வேலை செய்கிறார்கள், வேறு என்ன செய்வது?” என்று பதிலை கேள்வியாக்கி மையமாகக் கேட்டாராம்.

ஒரு புத்தக நிறுவனத்திற்கே இந்த கதியென்றால், அவ்வளவு பெரிய தொழிற்சங்கங்களை என்ன செய்வது? அவ்வளவு பெரிய கட்சியை என்ன செய்வது? இப்படியாக விடைகிடைக்காத கேள்விகள் அனைத்துக்குமான விடையையும் இந்தப் புள்ளியிலிருந்து புரிந்து கொள்ளத் துவங்கலாம்.

இருக்கட்டும்.

நீங்கள் குறிப்பிட்டதைப் போல மார்க்சின் மூலதன நூலில் பொருளடக்கத்தைக்கூட – உள்ள கம்யூனிச உற்பத்தி முறை, சமூகம் பற்றிய – படிக்காமலா ஹார்வி போன்றவர்கள் மார்க்ஸ் மூலதனத்தில் கம்யூனிசம் பற்றி எதுவும் பெரிதாக பேசவில்லை என்று கூறுகிறார் என்பதை ஆச்சரியத்தையும், பலமான சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.

மூலதனத்தை படிப்பதற்கான உண்மையான ஒரு வழிகாட்டி நூல் தற்கால அடிப்படையில் வேண்டும் என்ற தேடலோடு இருந்த நான், இணையத்தில் டேவிட் ஹார்வியின் “A Companion to Marx’s Capital” என்ற புத்தகத்தை பார்த்த நாள் முதல் அவர் குறித்து மேலதிகமான தகவல்களையும், அவருடைய நேரடி வகுப்புக்களின் காணொளிகளையும் யூடியூப் போன்றவற்றில் பார்க்க முயற்சித்தேன். பாரதி புத்தகாலயம் அதனை தமிழில் கொண்டு வந்திருப்பது அறிந்து வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

தங்களுடைய விமர்சனம் அந்த நூலை மிகக் கவனமான விமர்சனப் பார்வையோடு படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. நன்றி.

Posted in கட்டு​ரை | 1 Comment »