எனது நாட்குறிப்புகள்

சட்டீஸ்கரில் படு​கொ​லை ​செய்யப்பட்டவர்கள் மா​வோயிஸ்ட்களா, கிராம மக்களா?

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 1, 2012

இன்றைய “The Hindu” நாளிதழில் வெளிவந்த “Villagers bury their dead as Maoists & forces trade charges” என்ற செய்தி இந்தளவிற்குக் கூட விரிவாக தமிழில் எந்த தினசரியிலும் வராததால் அதன் மொழிபெயர்ப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது:

சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் கோட்டேகுடா பஞ்சாயத்திற்கு உட்பட்ட சார்கேகுடா, கோட்டேகுடா மற்றும் ராஜாபெட்டா கிராமங்கள் முழுவதும் தகனத்தின் ஒப்பாரிகளாலும் புகையாலும் சங்கொலியாலும் கணத்துக் காணப்படுகிறது.

அப்பகுதியில் வாழ்பவரான, சங்கம் ரவியின் கூற்றுப்படி, “இந்த இறுதிச் சடங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக நடத்தப்படுகிறது, ஒரே நேரத்தில் பலருக்கும் செய்வதற்கு தேவையான மனிதர்கள் இல்லாததால்”.  “சிலர் புதைக்கப்படவேண்டியவர்கள், ஆனால் யார் அவர்களுக்காக குழிகளை வெட்டுவது? சிலர் எரிக்கப்படவேண்டியவர்கள், ஆனால் யார் அவர்களுக்காக விறகுகளை சேகரிப்பது?”.

மறுநாள் சட்டீஸ்கர் காவல்துறை 20 மாவோயிஸ்ட்களை பிஜப்பூர் மோதலில் கொன்றதாக அறிவித்தனர், ஆனால் கிராமவாசிகள் முற்றிலும் மாறாக அச்சம்பவம் குறித்து விவரிக்கின்றனர். கிராமத்தினரின் அமைதியான ஒரு கூட்டத்தில் புகுந்து பாதுகாப்புப் படையினர் 20 பேரை படுகொலை செய்துள்ளனர் என குற்றம் சாட்டுகின்றனர். இப்படுகொலையில் பலியானவர்களில் 12-15 வயதிற்குட்டபட்ட ஐந்து குழந்தைகளும், பாலியல் தாக்குதலுக்கு உள்ளான நான்கு பதின்பருவ பெண்களும் அடங்குவர்.

ராஜ்பெட்டாவைச் சேர்ந்த மத்காம் கண்பத்தின் கூற்றுப்படி, “அந்த இரவில் கூடியிருந்த கூட்டத்தில் மாவோயிஸ்ட்கள் யாரும் கிடையாது”. “நாங்கள் வருடாவருடம் விதைப்பு துடங்குவதற்கு முன்பு நடத்தும் விதைத் திருவிழா குறித்து விவாதிப்பதற்காக கூடியிருந்தோம்.” அவர் கூற்றுப்படி இக்கூட்டம் பல மணிநேரங்கள் நடந்திருக்கிறது, அச்சமயத்தில் அதில் பங்கு  கொண்டிருந்தவர்கள் மிகப் பெரிய பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.

கிராமத்தினர் கூற்றுப்படி, துப்பாக்கிச்சூடு பல நிமிடங்களுக்குத் தொடர்ந்திருக்கிறது, அதன் பிறகு படையினர் தங்களின் ரேடியோ தொலைத்தொடர்பு கருவிகளின் மூலம் டிராக்டர்களை வரவழைத்து பல உடல்களைத் தூக்கிச் சென்றுள்ளனர். தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 14 வயது பெண், “அதன் பிறகு படைகள் அக்கிராமத்திலேயே முகாமிட்டு என்னை வயல்வெளியில் தூக்கிவீசினர்” என்றும் “என்னை தரையில் தூக்கி வீசியெறிந்து, அடித்தனர், உதைத்தனர், என் ஆடைகளை கிழித்தெறிந்தனர், என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவோம் என மிரட்டினர்” என்றும் கூறியுள்ளார். இதே போல மேலும் மூன்று பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.

இர்பா ராஜூ என்பவர், “படைகள் மறுநாள் காலை வரை வயல்வெளிகளில் தங்கியிருந்தனர்” என்று கூறுகிறார். “என் மகன் ரமேஷ் கக்கூஸ் போவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த போது ஒரு காவலரால் சுடப்பட்டார். ரமேஷ் ‘ஐயோ ஐயோ (அம்மா, அம்மா)’ என கதறிக்கொண்டே வீட்டிற்குள் ஓடிவந்தார். ஆனால் படைகள் அவரைத் தொடர்ந்து எங்கள் வீட்டிற்குள் வந்து, என் கண் முன்னாலேயே என் மகனை கொலை செய்தனர்”. மேலும் ராஜூ தங்கள் குடும்ப கஜானாவைத் உடைத்து அதிலிருந்து ரூபாய் 5000த்தைத் திருடிச் சென்றுவிட்டனர் என காவலர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

கிராமத்தினர் அனைவரின் கூற்றுக்களும் ஒரே மாதிரியாக இருக்கும் அதே வேளையில், சனிக்கிழமை காலை ராஜபெட்டாவிற்கு ரோந்து வந்த சீருடைதரித்து குறைந்தபட்ச ஏழு மாவோயிஸ்ட்களை இச்செய்தியாளர் பார்த்துள்ளார், இது அக்கிராமத்திற்கு மாவோயிஸ்ட்கள் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருப்பதை உணர்த்துவதாக தெரிவித்தார். பெயர் வெளியிட விரும்பாத கிராமவாசி ஒருவர் மாவோயிஸ்ட்கள் சில சமயங்களில் திருவிழாக்கள், விதைப்பு, உழுதல், அறுவடை தொடர்பான வழக்கமான விசயங்கள் சம்பந்தமாக கிராம கூட்டங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள் என்று கூறுகிறார்.

இந்த செய்தித்தொடர்பாளர் வந்திருந்த சில மணிநேரங்களில், சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் தென் மண்டல பஸ்தர் கமிட்டியின் பொறுப்பாளர் கையெழுத்திட்ட ஒரு கையால் எழுதப்பட்ட கடிதத்தை ஒரு இளைஞர் கொண்டு வந்தார். அதில் இச்சம்பவம் ‘முற்றிலும் ஒரு போலி படுகொலை’ என்றும் இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் அப்பாவி பழங்குடியினர் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

“பசகுடாவில் உள்ள சிஆர்பிஎப் முகாமிற்கு 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள, சிலிகர் கிராமத்தில் முக்கிய மாவோயிஸ்ட்கள் பலர் கூடியுள்ளர் என படைகளுக்கு தகவல் வந்தது. கொட்டகுடா என்னும் மாவோயிஸ்ட் கிராமத்திற்கு மூன்று கிலோமீட்டர்களில் ரோந்து படையினர் சென்று கொண்டு இருக்கும பொழுது கேள்விப் பட்டோம்” என்று கூறிய முக்கிய காவல்துறை அதிகாரி மேலும் கூறியதாவது “நாங்கள் அதிர்ச்சி அடையத் தக்கவிதத்தில், எங்களுடைய வீரர்கள் ஐந்து பேர் காயம் அடைந்தார்கள்”.

ஆதாரங்களின் அடிப்படையில் இறந்தவர்களில் பெரும்பாலோர் குடிமக்களாகத்தான் இருப்பார்கள் என ‘கருதப்படுகிறது’.

“நாங்கள் அதிகபட்சம் மக்களை பாதுகாக்கவே முயற்சித்தோம் தற்பாதுகாப்புக்காக மட்டுமே துப்பாக்கிச்சூடு நடத்தினோம். நாங்கள் கிராமப் பகுதிகளில் நடவடிக்கை எடுக்கும் பொழுது மிக கவனத்தோடுதான் இருக்கிறோம்” என இந்நடவடிக்கையில் கலந்து கொண்ட ஒரு படைவீரர் குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் ஒரு பகுதியையே தாக்கும் எறிகுண்டுகளையோ ஏவுகணைகளையோ பயன்படுத்துவதில்லை. நாங்கள் அப்படி நினைத்திருந்தால். அந்த கிராமம் முழுவதையும் அழித்திருக்க முடியும்.”

Advertisements

2 பதில்கள் to “சட்டீஸ்கரில் படு​கொ​லை ​செய்யப்பட்டவர்கள் மா​வோயிஸ்ட்களா, கிராம மக்களா?”

  1. இதனை மொழிபெயர்க்க வேண்டுமெனக் கருதியிருந்தேன். மொழிபெயர்த்தமைக்கு நன்றி.

  2. எப்பொழுதும் மக்களை முட்டாள்களாகவே கருதுகின்றனர் காவல் துறையினரும் இராணுவத்தினரும். எதிரி நாட்டு இராணுவ வீரர்களையோ “தீவிரவாதி”களையோ கொல்வதைவிடச் சொந்தநாட்டு மக்களைக் கொல்வதுதான் இவர்களுக்குக் கைவந்த களையாகிவிட்டது. வாள்க பார்த்தம்! பார்த்தமாத்தாக்கீ ஜே….!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: