எனது நாட்குறிப்புகள்

மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 16, 2012

தங்களுடைய டேவிட் ஹார்வியின் தமிழ் மொழிபெயர்ப்பு “மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” நூலுக்கான விமர்சனக் கட்டுரையைப் படித்துவிட்டேன். மார்க்சியத்தை உறுதியாக நம்புபவர்கள், பாட்டாளி வர்க்க விடுதலைக்கான ஆயுதம் அது என்ற உணர்வோடும், நம்பிக்கையோடும், லட்சியத்தோடும் கூடியவர்கள் அத்தகைய புத்தகங்களை படிக்கிறார்கள், அதற்கான விமர்சனங்களை கொடுக்கிறார்கள் என்பது தான் அக்கட்டுரைக்கான முக்கியத்துவம்.

நூலைப் படிக்காமல் விமர்சனத்தை மட்டும் படிப்பதால், விமர்சன ஆசிரியரின் பார்வையில் தான் மூலநூலைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது மார்க்சின் விசயத்தில் ஹார்வியின் புத்தகத்திற்கு பொருந்தும், ஹார்வியின் விசயத்தில் உங்களுடைய கட்டுரைக்குப் பொருந்தும். ஆனால் உங்களுடைய நேர்மை ஹார்வியிடம் இல்லை. நீங்கள் விமர்சனம் என்று சொல்லிவிட்டுச் செய்வதை ஹார்வி “மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” எனச் சொல்லி செய்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

தங்களை மார்க்சியவாதிகள் என்றும் தங்களுடைய கட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சொல்லிக் கொள்பவர்கள் எப்படி இந்தப் புத்தகத்தை எத்தகைய விமர்சனரீதியான முன் குறிப்பும் இன்றி வெளியிடுகிறார்கள் என்பதைத்தான் தங்களுடைய கட்டுரை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

தற்பொழுது புத்தக நிறுவனங்கள் முழுவதும் வியாபார ரீதியாக விற்கச் சாத்தியமான அனைத்தையும் விற்பதற்கு தயாராகிவிட்டன. அநேகமாக டேவிட் ஹார்வி என்ற ஆங்கிலப் பெயரும் “மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” என்ற புத்தகத் தலைப்பும் மட்டுமே போதும் அதன் விற்பனை உத்திரவாதத்துக்கு என்று பாரதி புத்தகாலயம் முடிவு செய்திருக்கக் கூடும்.

ஒரு முறை ஒரு தோழருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் கூறினார். என்சிபிஎச் தலைமை நிர்வாகியிடம் ஒரு நேர்காணலுக்கு போயிருந்தாராம். அதில் அவர் கேட்ட கேள்வி ஒட்டு மொத்த சூழலையும் தர்ம சங்கடமாக்கிவிட்டதாம். அந்தத தோழர் கேட்ட கேள்வி, “முன்பு தெருவில் விற்கப்பட்டுக் கொண்டிருந்த புத்தகங்களெல்லாம் தற்பொழுது என்சிபிஎச்சின் தயாரிப்பில் வெளிவருகிறது, முன்பு என்சிபிஎச்சின் தயாரிப்பில் வெளிவந்த புத்தகங்களெல்லாம் இன்றைக்கு தெருவில் விற்கப்படுகிறது, இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்?” என்று நேரடியாக தலையிலடித்தாற்ப்போல கேட்டாராம்.

நன்கு சிரித்துக் கொண்டே வழக்கம் போல சாஸ்தோத்ரமான கேள்விகளோடு சென்று கொண்டிருந்த ஒரு நேர்காணலில், சற்றும் எதிர்பாராத ஒரு நொடியில் குண்டைத் தூக்கி மடியில் வீசியதைப் போல் வந்த இந்தத் தடாலடிக் கேள்வியால் வாயடைத்துப் போன அந்த நிர்வாகி, தன்னைச் சுற்றியிருந்த சகலரையும் ஒரு சில நொடிகள் சுற்றிச்சுற்றிப் பார்த்துவிட்டு, நீண்ட யோசனைக்குப் பிறகு,  “இவ்வளவு பெரிய நிறுவனம், எவ்வளவு ஊழியர்கள் வேலை செய்கிறார்கள், வேறு என்ன செய்வது?” என்று பதிலை கேள்வியாக்கி மையமாகக் கேட்டாராம்.

ஒரு புத்தக நிறுவனத்திற்கே இந்த கதியென்றால், அவ்வளவு பெரிய தொழிற்சங்கங்களை என்ன செய்வது? அவ்வளவு பெரிய கட்சியை என்ன செய்வது? இப்படியாக விடைகிடைக்காத கேள்விகள் அனைத்துக்குமான விடையையும் இந்தப் புள்ளியிலிருந்து புரிந்து கொள்ளத் துவங்கலாம்.

இருக்கட்டும்.

நீங்கள் குறிப்பிட்டதைப் போல மார்க்சின் மூலதன நூலில் பொருளடக்கத்தைக்கூட – உள்ள கம்யூனிச உற்பத்தி முறை, சமூகம் பற்றிய – படிக்காமலா ஹார்வி போன்றவர்கள் மார்க்ஸ் மூலதனத்தில் கம்யூனிசம் பற்றி எதுவும் பெரிதாக பேசவில்லை என்று கூறுகிறார் என்பதை ஆச்சரியத்தையும், பலமான சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.

மூலதனத்தை படிப்பதற்கான உண்மையான ஒரு வழிகாட்டி நூல் தற்கால அடிப்படையில் வேண்டும் என்ற தேடலோடு இருந்த நான், இணையத்தில் டேவிட் ஹார்வியின் “A Companion to Marx’s Capital” என்ற புத்தகத்தை பார்த்த நாள் முதல் அவர் குறித்து மேலதிகமான தகவல்களையும், அவருடைய நேரடி வகுப்புக்களின் காணொளிகளையும் யூடியூப் போன்றவற்றில் பார்க்க முயற்சித்தேன். பாரதி புத்தகாலயம் அதனை தமிழில் கொண்டு வந்திருப்பது அறிந்து வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

தங்களுடைய விமர்சனம் அந்த நூலை மிகக் கவனமான விமர்சனப் பார்வையோடு படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. நன்றி.

Advertisements

ஒரு பதில் to “மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி”

  1. சரியாக சொன்னீர்கள் கவனமான விமர்சனப் பார்வையோடு படிக்க வேண்டும் என்பதே எனது கருத்தும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: