எனது நாட்குறிப்புகள்

Archive for ஓகஸ்ட், 2012

இந்தியாவில் அணுமின்நி​லையங்கள் குறித்த பவர்பாயின்ட்

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 28, 2012

[இங்​கே தரவிறக்கம் ​செய்யுங்கள்]

Posted in பொது | 1 Comment »

எது அவதூறு?

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 22, 2012

​ஜெய​மோகனின் அறம் வரி​சைக் சிறுக​தைகளில் மூன்று சிறுக​தைகள் குறித்து நான் கடந்தாண்டு விமர்சனங்கள் எழுதி​னேன். இன்​றைக்கும் ​தொடர்ந்து அ​​வை பலரால் என்னு​டைய வ​லைப்பூவில் படிக்கப்படுகின்றன. சமீபத்தில் அத​னைப் படித்த நன்ப​ரொருவர், இது குறித்து ​ஜெய​மோகன் அவரு​டைய இ​ணைய தளத்தில் “அவதூறு ஏன்?” என்ற த​லைப்பில் எழுதிய ஒரு கடிதத்துக்கான பதி​லை படித்தீர்களா? என்றார். பிப்ரவரி 13, 2011ல் ஆத்திரத்தின் உச்சத்தில் அவரால் எழுதப்பட்ட அந்தக் கடிதத்திற்கும் ​சேர்த்​தே என்னு​டைய பின்னூட்ட பதில்களில் அப்​பொழு​தே விளக்கம் ​கொடுத்துள்​ளேன்.

அக்கடிதத்தில் அவர் என்னு​டைய விமர்சனம் குறித்து எழுதிய​வை, கீழ்க்கண்ட வரிகள் மட்டு​மே:

“கீழே உள்ள இணைப்பை படியுங்கள். என் சென்ற மூன்று கதைகளைப்பற்றி ஒருவர் எழுதியது https://naatkurippugal.wordpress.com/2011/02/11/criticismonjeyamohnshortstories/
ஒரே சொல்லில் mean என்றுதான் இந்த மனதைப்பற்றிச் சொல்லமுடியும். எந்த மானுட உணர்ச்சிகளையும் உச்சங்களையும் உணர முடியாத, சதிகளை தவிர வேறெதையுமே சிந்திக்க முடியாத, ஒருவகையில் பரிதாபத்திற்குரிய மனம். இத்தகைய மனங்கள் எந்த ஒரு கருத்தியல் சூழலிலும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கும். ஆனால் தமிழில் இந்தக்குரல்கள் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கின்றன.”

அவரது ப​டைப்புக்கள் குறித்த எதிர்ம​றையான விமர்சனங்கள் எ​தையும் ஏற்றுக்​கொள்ளக்கூட முடியாத இந்த மனநி​லை குறித்து ​சொல்வதற்கு என்ன இருக்கிறது.

அதில் நான் எழுப்பும் ​கேள்விகள் மிக முக்கியமான​வை என்​றே கருதுகி​றேன். சமூகச் சிக்கல்கள் ​வெறும் தனிமனித அற மதிப்பீடுகளின் வீழ்ச்சியின் வி​ளைவானதாக மட்டு​மே கருதமுடியுமா? சமூகச் சிக்கல்களுக்கான தீர்வு என்பது தனிமனித அற உணர்வின் எழுச்சி​யோடு மட்டு​மே சம்பந்தப்பட்டதா? நல்​லொழுக்கம், நற்சிந்த​னை, அற விழுமியங்கள் எங்கிருந்து எப்​பொழுது ​தோன்றுகின்றன? சமூகச் சிக்கல்களுக்கும் இவற்றின் வீழ்ச்சிக்கும் இ​டையிலான உறவு என்ன? நம்பிக்​கை சார்ந்த சமூகங்களுக்கும் அறத்தின் முக்கியத்துவத்திற்குமான உறவு என்ன? சட்டம் சார்ந்த சமூகங்கள் எவ்வாறு நம்பிக்​கை சார்ந்த மத்தியகால வாழ்க்​கைமு​றையிலிருந்து ​மேம்பட்டது? நமக்குத் ​தே​வைப்படும் சமூகங்கள் என்பது எவ்வாறு முதலாளித்துவ சமூகங்க​ளையும் தாண்டியதாக இருக்க ​வேண்டும். அதற்கு மாற்று என்பது அ​தைவிட ​மோசமான மத்தியகால விழுமியங்க​ளோ, சமூக உறவுக​ளோ, அ​மைப்புக​ளோ அல்ல என்ப​தை எழுப்புவதாக​வே அவ்விமர்சனம் கட்ட​மைக்கப்பட்டிருந்தது.

​வெறும் இந்துத்துவ மனநி​லையிலிருந்து இந்திய சமூகத்தின் ​வெற்றி ​தோல்விக​ளை அலசுகிறார்கள் இந்த ப​டைப்பாளிகள். இந்துத்துவ அடிப்ப​டையிலிருந்து உலகத்தின் அறிவு ​செல்வங்கள், இயக்கப் ​போக்கு, வரலாறு, தனிமனிதர்கள் என அ​​னைத்​தையும் பார்க்கிறார்கள். கிணற்றுத் தவ​ளைகளாக, ​வெறும் சுய​பெரு​மைகளின் அடிப்ப​டையில், பாம்பு படுக்​கையில் படுத்துக் ​கொண்​டே உலகளந்த ​பெருமாளாக நி​னைக்கும் இந்த விஷ்னுக்கள் குறித்து ​வருத்தப்படத்தான் முடியும். அவர்கள் உருவாக்க நி​னைக்கும் தத்துவப் ​போக்குகள் உள்முரண்பாடுகள் நி​றைந்ததாக உள்ளன. அ​வற்​றை புறநி​லை எதார்த்தங்க​ளோடு ​பொருத்திப் பார்க்கும் ​பொழுது அப்பட்டமாக தற்​பொழு​தைய ​தேச மற்றும் சர்வ​தேச ஆளும் வர்க்கங்களுக்கு ​சே​வை ​செய்யும் ​நோக்கம் ​கொண்ட​வையாக உள்ளன. அவர்களின் பின்னால் இடறிவிழும் இடதுசாரி எண்ணம் ​கொண்டவர்களின் தத்துவத் ​தெளிவற்ற ​போக்குக​ளை புரிய​வைக்க முயற்சிப்பது மட்டு​மே நாம் ​செய்யக் கூடியதாக இருக்க முடியும்.

Posted in ​ஜெய​மோகன், விமர்சனம் | Leave a Comment »