எனது நாட்குறிப்புகள்

Archive for செப்ரெம்பர், 2012

அணுஉ​லை இல்லாத ஜப்பானுக்கான முப்பதாண்டுகாலத் திட்டம்

Posted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 16, 2012

நேற்​றைய இந்து நாளிதழில் ​வெளிவந்துள்ள ஒரு முக்கிய ​கட்டு​ரை “Japan’s 30-year plan to be nuclear-free”. அதில் குறிப்பிடப்பட்டுள்ள ​செய்திகள்.

ஜப்பான் இன்னும் முப்பது ஆண்டுகளுக்குள் ஜப்பானில் உள்ள அ​னைத்து அணுஉ​லைக​ளையும் மூடிவிட​வேண்டும் என புகுசிமாவில் நடந்த ​கோரவிபத்திற்கு பிறகு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ​கொள்​கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள அ​னைத்து ஐம்பது அணுஉ​லைக​ளையும் 2040க்குள் மூடிவிட ​வேண்டும் என முந்​தைய அணு ஆற்றல் து​றையின் சாத​னையாளனாகிய ஜப்பான் அறிவித்திருக்கிறது. இதன் மூலமாக அவ்விபத்திற்கு பிறகு அணுமின்சாரத்திலிருந்து விலகும் முடி​​வை ​ஜெர்மன் சுவிஸர்லாந்​தைத் ​தொடர்ந்து ஜப்பானும் எடுத்துள்ளது.

உலகின் மூன்றாவது மிகப்​பெரிய அணுசக்தி பயன்பாட்டாளராக இருந்த ஜப்பான். விபத்திற்கு முன்பாக 2040க்குள் தன்னு​டைய அணு ஆற்றல் மூலமாக சக்தி ​தே​வை​யை 50 சதவீதம் உயரத்திக் ​கொள்ளும் திட்டம் ​வைத்திருந்த ஜப்பான். புகுசிமா விபத்தால் கதிர்வீச்சு ​பொருட்கள் கட​லையும் காற்றுமண்டலத்​தையும், உண​வையும் நீ​ரையும் கடு​மையாக மாசுபடுத்தி ஒரு லட்சத்து அறுபதாயிரம் மக்க​ளை இடம்​பெயறச் ​செய்ததின் எதி​ரொலியாக அணுஆற்றல் மீது அந்நாடு ​கொண்டிருந்த ​​நெருக்கத்​தை மிக ​மோசமாகப் பாதித்திருக்கிறது.

​வெள்ளியன்று ​வெளியிடப்பட்ட ​கொள்​கை ஆவணத்தில் “நடந்த ​மோசமான விபத்தின் எதார்த்தத்திலிருந்தும், அவ்விபத்திலிருந்து கற்றுக் ​கொண்ட பாடத்தின் அடிப்ப​டையிலும் ​தேசத்தின் ஆற்றல் மூ​லோபாயத்​தை அதன் ஆரம்பத்திலிருந்து மறுபரிசீல​னை ​செய்ய ​வேண்டியிருக்கிறது”. “இப்புதிய ​மூ​லோபாயத்தின் ஒரு முக்கியமான கருத்து என்பது அணுசக்தி​யை சாராத சமூகத்​தை அ​டைவ​தே” இந்த முடிவு கடந்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதுமுள்ள மக்களிடம் நடத்திய கலந்தா​​லோச​னைகள் மற்றும் வரலாறு காணாத அணுஉ​லைக்​கெதிரான ​போராட்டங்களுக்கு பிற​கே உருவாகியுள்ளது. உள்ளூர் ஊடகங்களின் ​செய்திப்படி அ​மைச்சர​வை ஏற்கன​வே இந்த பரிந்து​ரைக​ளை ஏற்றுக் ​கொண்டுவிட்டது, மு​றைப்படியான அறிவிப்புகள் ​வெகுவி​ரைவில் ​வெளியிடப்படும்.

ஜப்பானின் மின்​தே​வைகளுக்காக மறுசுழற்சி வாய்ப்புள்ள மின்சாரத் தயாரிப்பு மு​றைக்கும், நிலக்கரி மூலமான மின்சார தயாரிப்பு மு​றைக்கும் திட்டம் வகுக்கப்படும்.

ஏற்கன​வே உள்ள கார்பன் ​வெளியிடுவதில் உள்ள சர்வ​தேச அனுமதி எல்​லை​யை க​டைபிடிப்பதில் உள்ள சிக்கல்க​ளையும் சவால்க​ளையும் இது எதிர்​கொள்ளும்.

“இது புதிய எதிர்காலத்​தை உருவாக்குவதற்கான மூ​லோபாயம்” என கடந்த ​வெள்ளிக்கிழ​மை கூடிய முக்கிய அ​மைச்சர்கள் முடிவு ​செய்திருப்பதாக ​கொள்​கை அறிக்​கை ​தெரிவிக்கிறது. “இது காரியச்சாத்தியமில்லாத கனவுத்திட்டமல்ல” என்று கூறும் அவ்வறிக்​கை ஜப்பான் ஏற்கன​வே காற்றுமாசுபாட்​டை 1990லிருந்த நி​லையிலிருந்து 20 சதவீதமும், ஆற்றல் ​செலவில் 2010லிருந்ததிலிருந்து10 சதவீதத்​தை திற​ணை வளர்ப்பதன்மூலமாகவும் சாதித்திருக்கிறது.

இம்முடிவுக​ளை வர​​வேற்றிருக்கும் .சூழலியல் ​போராட்டக்காரர்கள் ஆனால் காலக்​கெடு​வை இன்னும் கு​றைக்க ​வேண்டும் என்று வலியுறுத்துகிறாரகள். கிரீன்பீஸ் ஜப்பான் அணுஉ​லை எதிர்ப்பாளர் காசூ சுசுகி “இது இருபது ஆண்டுகளுக்கு முன்​பே ​செய்யப்பட்டிருக்க ​வேண்டிய முடிவு” என்றார். “அது அதன் வர்த்தக சமூகத்திற்கு மறுசுழற்சி மின்சார மு​றை​யே எதிர்காலம் அணுமின்சாரம் அல்ல என்ப​தை ​தெளிவுபடுத்தியுள்ளது”

Advertisements

Posted in கட்டு​ரை | Leave a Comment »

கூடங்குளம்: அரசு ஆதரவு அறிவாளிகளின் வாதங்கள்

Posted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 14, 2012

இன்​றைய ஹிந்து நாளிதழில் ​சென்​னை கணிதவியல் விஞ்ஞான நிறுவனத்​தைச் ​சேர்ந்த ராகுல் சித்தார்த்தன் என்பவர் “The real questions from Kudankulam” என்ற த​லைப்பில் கட்டு​ரை எழுதியிருக்கிறார் (முதலில் எ க்கு பதிலாக அ அடித்துவிட்​​டேன் தவறுதலாக).

ஏ​தேனும் புதியதாக விசயங்கள் இருக்குமா, தர்க்கங்கள் இருக்குமா என்று பார்த்தால் அரசுத்து​றை சார்ந்த பல விஞ்ஞானிகளும் அறிவாளிகளும் ​முன்​வைக்கும் வாத எல்​லைக​ளைத்தாண்டி இக்கட்டு​ரை பயணிக்க​வே இல்​லை. மீண்டும் மக்க​ளை முட்டாள்கள் என்றும் அவர்கள் சிலரால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் அரசு முன்​வைக்கும் அ​தே குற்றச்சாட்டுக​ளைத்தான் இக்கட்டு​ரை ஆசிரியரும் கூறுகிறார். வரலாறு ​நெடுகிலும் ஆளும் வர்க்கங்கள் “மக்க​ளை முட்டாள்கள்” என்று ​சொல்வார்கள், ​போராளிகள் மற்றும் ஆளப்படும் வர்க்கங்களின் த​லை​மை “மக்க​ளை மகத்தானவர்கள்”, “மக்கள்தான் வரலாற்​றைப் ப​டைக்கிறார்கள்” என்று ​சொல்வார்கள் எனப் அரசியல் புத்தகங்களில் படித்த​தை​யெல்லாம் ந​டைமு​றையில் மிகச் சரியான​வை எனப் புரிந்து ​கொள்ள கி​டைத்த மகத்தான வரலாற்றுப் ​போர் நிகழ்ந்து ​கொண்டிருக்கிறது.

கூடங்குளம் அணு உ​லை குறித்த பிரச்சி​னை​யை இவ்வாறு பிரித்துக் ​கொள்ளலாம்

1. அணுஉ​லைகள் ஆபத்தான​வையா? இல்​லையா?
2. அணுஉ​லைகள் ​நோக்கம் மின்சாரமா? அணுஆயுதங்களா?
3. அணுஉ​லைக​ளை ஆபத்தின்றி பக்கவி​ளைவுகள் மற்றும் பின்வி​ளைவுகளின்றி இயக்க முடியுமா?
4. அணு உ​லைக​ளை ​வெற்றிகரமாக இயக்கும் அளவிற்கு இந்திய அரசிற்கும் அதன் நிர்வாக இயந்திரங்களுக்கும் தகுதியும் திற​மையும் இருக்கிறதா?
5. அணுக்கழிவுக​ளை என்ன ​செய்கிறார்கள்?
6. அணுஉ​லைகளில் ஆபத்துக்க​ளோ விபத்​தோ நடந்தால் மக்க​ளை எப்படி காப்பாற்றுவார்கள்?
7. கூடங்குளம் அணுஉ​லை கட்டியதிலிருந்து, தற்​பொழுது யு​ரேணியம் நிரப்ப நடக்கும் முயற்சிகள் வ​ரை கு​றைந்தபட்சம் சர்வ​தேச விதிமு​றைகள் எந்தக் கு​றைபாடும் இன்றி க​டைபிடிக்கப்பட்டுள்ளதா?
8. மாற்று மின்சார மு​றைக​ளை விட அணுமின்சார மு​றைக்கு அதிக முக்கியத்துவம் ​கொடுப்ப​தேன்? அதற்கு அது தகுதியானது தானா?
9. கூடங்குளம் அணுமின்நி​லையத்தால் பாதிக்கப்படப் ​போகிறவர்கள் யார் பயன​டையப் ​போகிறவர்கள் யார்?
10. தமிழக மின்பற்றாக்கு​றைக்கு காரணங்கள் யா​வை?
11.தமிழகம் மற்றும் இந்திய மின்பற்றாக்கு​றை முழுவ​தையும் தீர்க்கும் ஆற்றல் அணுமின்சாரத்திற்கு உண்டா?
12. இதுவ​ரை இயங்கிக் ​கொண்டிருக்கும் இந்திய அணுமின்நி​லையங்களின் நி​லை என்ன? அவற்றின் பாதிப்புகள் குறித்த மூன்றாம் குழுக்களின் ஆய்வுக​ளை பகிரங்கமாக அறிவிக்க முடியுமா?
13. அரசுசாரா குழுக்களின் ​தொடர் கண்காணிப்புக​ளை ஏன் அரசு தடுத்து நிறுத்தியது?

இத்த​கைய ​கேள்விகள் எதற்கும் துளியும் முகம் ​கொடுக்காமல் அணு உ​லை ஆதரவாளர்கள் அணுமின்சாரத்தின் ​தே​வை தவிர்க்க முடியாதது, நவீன அணு உ​லைகள் முழு​மையாக பாதுகாப்பான​வை, புகுசிமா வ​ரை ​வெடித்த அணுஉ​லைகளுக்கும் இதற்கும் சம்பந்தமில்​லை, விஞ்ஞானத்​தைப் பற்றி ஒன்றும் ​தெரியாமல் ​பேசாதீர்கள் என்​றே ஒ​ரே வரியில் அ​னைத்துக் ​கேள்விக​ளையும் புறங்​கையால் தள்ளிவிடுகிறார்கள். சரி உங்களின் நவீன அணு உ​லைகள் பற்றி ​பேசு​வோம் வாருங்கள் என்றால் அதற்கும் ஆழமான விவாதங்களுக்கு வருவதில்​லை.

அவர்கள் சிறிதள​வேனும் அணு உ​லை எதிர்ப்பாளர்க​ளோடு உடன்படும் இடம் உண்​டென்றால் அது நமது தற்கால அரசாங்கத்தின் மீதான நமது சந்​தேகப்பகுதி​யைத்தான். ஆனால் அதற்கும் முட்டுக் ​கொடுக்க ஆயிரம் நம்பத்தகாத வாதங்க​ளை ​வைத்திருக்கிறார்கள்.

ஏன் அணு உ​லை கட்டுவதற்கு முன்பு க​டைபிடிக்க ​வேண்டிய சர்வ​தேச விதிகள் எதுவும் க​டைபிடிக்கப்படவில்​லை என்ற ​கேள்விக்கு, சரிதான் உங்கள் ​கேள்வி என்பவர்கள். இத்த​கைய ந​டைமு​றை பிரச்சி​னைக​ளே அணுஉ​லை ​வேண்டாம் என்பதற்கு எந்தளவிற்கு ​போதுமான காரணங்கள் என்ப​தை புரிந்து ​கொள்ள முடியாதவர்களாக​வோ அல்லது மறுப்பவர்களாக​வோ இருக்கிறார்கள். நூறடி உயரத்திலிருந்து நீரில் குதிப்பது மனிதனுக்கு சாத்தியமான ஒரு இலக்காக இருக்கலாம் ஆனால் அது எல்லா மனிதனுக்கும் சாத்தியமான இலக்காக இருக்க முடியாது. அதற்கு நி​​றைய பயிற்சியும் உடல் தகுதியும் மனத் தகுதியும் ​வேண்டும். அது இல்லாமல் அது சாத்திய​மே இல்​லை. இங்​கே ​பொது முடிவுக​ளோ விஞ்ஞான விதிக​ளோ எந்த வி​னையும் ஆற்ற முடியாது. ந​டைமு​றை சாத்தியப்பா​டே தீர்மானகரமான முடி​வை வகிக்கிறது.

​அருந்ததி ராய் அவர்கள் ​கேட்ப​தைப் ​போல, ​தெருக் குப்​பைக​ளை​யும், ​தொழிற்சா​லை குப்ப​க​ளையு​மே அள்ளுவதற்கான அ​மைப்பு, ஒழுங்குமு​றை​யோ, விதிக​ளோ, ​தொடர்ச்சியான ந​டைமு​றை​யோ இல்லாத ஒரு நாடு எப்படி அணுக்கழிவுக​ளைக் ​கையாளும் தகுதி ப​டைத்ததாக நம்ப முடியும் என்பது மிக மிக முக்கியமான ​கேள்வி. இவற்றில்தான் அதன் மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் மற்றும் அரசின் மீதான நம்பிக்​கை​யோ சந்​தேக​மோ கட்ட​மைக்கப்படுகிறது. இது ஒன்று புறக்கணிக்கத்தக்க வாதமல்ல.

மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்பும் ஒரு விசயம், இதில் உள்ள விஞ்ஞானச் சிக்கல்க​ளைத் தாண்டி முக்கியத்துவமான பிரச்சி​னை இதன் சமூக ​பொருளாதார அரசியல் பிரச்சி​னைகள்தான். புதிய அணுமின் நி​லையங்கள் இந்தியாவின் சமீபத்திய சர்வ​தேச அணு ஒப்பந்தங்களின் வி​ளை​வே. அ​வை உலக ஏகாதிபத்திய நாடுகளுக்கும், பன்னாட்டுக் கம்​பெனிகளுக்கும் ​சே​வையும் லாபமும் ஈட்டித்தரும் ​நோக்கம் ​கொண்ட​வை​யே. மாறிவரும் சர்வ​தேச அரசியல் சூழலில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சர்வ​தேச இராணுவ மூலபாயங்களுக்காக உருவாக்கப்படுப​வை​யே இந்த புதிய அணுமின் நி​லையங்கள்.

இத்த​கைய ஒப்பந்தங்கள் மூலம், முதலாளித்துவத்தின் லாப ​வெறிக்கும் சந்​தைப் ​போட்டிகளுக்கும் களப்பலி ஆக்கப்பட்டுக் ​கொண்டிருப்பவர்கள் கூடங்குளம் மக்கள் மட்டுமல்ல, தமிழக மக்களும், இந்திய மக்களும், இந்தியாவின் அன்​டை நாட்டு மக்களும்தான்.

Posted in கட்டு​ரை | Leave a Comment »

பாரதியின் நம் சமகாலப் ​பொருத்தம்

Posted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 11, 2012

இன்று பாரதி நி​னைவு நாள். பாரதி பலருக்கு இது ​போன்ற நாட்களில் மட்டு​மே நி​னைவுகூரத் தக்கவராக இருக்கலாம். இந்திய மக்களின் மீது அக்க​றையும் அவர்களின் பூரணமான விடுத​லையின் மீது ​வேட்​கையும் ​கொண்டவர்களுக்கு தங்கள் ஒவ்​வொரு ​செயலிலும் கவனம் ​கொள்ள ​வேண்டிய ஆளு​மை.

சமீபத்தில் ​டெல்லியில் நடந்த தமிழ்ச்சங்க கூட்டத்தில் ​பேசிய திரு. திருமாவளவன், எங்களுக்கு ஒரு பாரதி ​வேண்டும் என்றார். பாரதி இந்தியா முழு​மையான சமூகப் ​பொருளாதார விடுத​லை அ​டையும் வ​ரை தன் ​பொருத்தப்பாட்​டை இழக்க முடியாத மா​பெரும் ஆளு​மை.

குறிப்பாக இன்​றைய இந்தியாவில் பாரதி அதிகப் ​பொருத்தமு​டையவராக இருக்கிறார். நமக்கான மிகப்​பெரும் முன்னுதாரணமாக இருக்கிறார். நமக்கு உத்​வேகமும், உற்சாகமும் தரக்கூடியவராக இருக்கிறார். சுதந்திரப் ​போராட்டத்தில் அவர் ப​டைப்பிலக்கியங்க​ளையும் க​லை​யையும் பயன்படுத்திய விதம் மிகப்​பெரும் மக்கள் எழுச்சிக்கான அடிப்ப​டை​யை அ​மைத்துக் ​கொடுத்திருக்கிறது.

குறிப்பாக சமீப நாட்களில் அரசியல் ​கேலிச்சித்திரக்காரர்களாகிய அசீம் திரி​வேதி, ஹரீஷ் யாதவ் ஆகி​யோர் மத்திய மாநில அரசுகளால் குறி​வைத்து ​கைது ​செய்யப்பட்டிருக்கும் பின்னணியில் பாரதி தான் ஞாபகத்திற்கு வருகிறார். அரசு, காவல்து​றை மற்றும் உளவுப்பிரிவினரின் கண்களில் மண்​ணைத் தூவிவிட்டு இரகசிய இடங்களிலிருந்து இந்தியா பத்திரி​கையின் மூலமாக அரசியல் ​கேலிச்சித்திரங்க​ளை சுதந்திரப் ​போராட்டத்திற்கான ஆயுதங்களாக அவர் உருவாக்கித் தந்த வரலாறு நமக்கு உற்சாகமும் நம்பிக்​கையுமூட்டக் கூடியது.

சமூக விடுத​லைப் ​போராட்டங்களுக்கும், அரசியல் விடுத​லைப் ​போராட்டங்களுக்கும், சமதர்ம லட்சியங்களுக்கான ​போராட்டங்களுக்கும் க​லைக​ளையும் இலக்கியங்க​ளையும் யார் ஆயுதங்களாக்கித் தருகிறார்க​ளோ அவர்க​ளே மா​பெரும் ப​டைப்பாளிகளாகிறார்கள். அப்படியாகத் தன் கவி​தைக​ளையும் அரசியல் ​கேலிச்சித்திரங்க​ளையும் சுதந்திரப் ​போராட்டத்திற்கான ஆயுதங்களாக்கித் தந்ததால் மட்டு​மே பாரதி இன்​றைக்கும் என்​றைக்கும் ​பொருத்தமு​டையவராகவும் நி​னைவுகூரத் தக்கவராகவும் இருக்கிறார்.

Posted in கட்டு​ரை | Leave a Comment »

​கேலிச்சித்திர ஓவியர் ​கைதும்: பல்லிளிக்கும் ஜனநாயகமும்

Posted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 10, 2012

இன்​றைய “The Hindu” நாளிதழில் ​வெளிவந்துள்ள ​செய்தி “Says complainant: Trivedi’s cartoons insult Constitution” ன் ​மொழி​பெயர்ப்பு.

குற்றம் சுமத்துபவர்கள் கூறுகிறார்கள்: திரி​வேதியின் கார்ட்டூன்கள் அரசியல் சாசனத்​தை இழிவுபடுத்துகிறது

சிறப்பு நிருபர்

மும்​பை: நான் அரசியல் சாசனத்​தையும் அ​சோகத் தூ​ணையும் இழிவுபடுத்தியதால் பாதிக்கப்பட்​டேன் என்று தி ஹிந்துவிடம், ​கேலிச்சித்திர ஓவியர் அசிம் திரி​வேதிக்கு எதிராக குற்றம் பதிவு ​செய்திருக்கும் 27 வயதான அமித் அரவிந்த கத்தரநவா​ரே கூறினார். அந்தத் தூண் புத்தமதத்தால் ஈர்க்கப்பட்ட அ​சோக சக்கரவர்த்தியின் சின்னம். மத்திய இரயில்​வே ​தொழிலாளியான அவர் தான் எந்தக் கட்சி​யையும் சார்ந்தவனில்​லை மனித உரி​மைக்காக ​போராடும் சுதந்திரமான களச் ​செயல்பாட்டாளன் என்கிறார்.

“நான் ஊழலுக்கு எதிரான இந்தியா எதிர்ப்பில் இந்த ​கேலிச்சித்திரங்க​ளையும் சுவ​ரொட்டிக​ளையும் பாரத்த ​பொழுது அதிர்ந்து ​போ​னேன், அ​வை அரசியல் சாசனத்​தை இழிவுபடுத்துகின்றன, சுவ​ரொட்டிகள் சமூகப் பிரிவி​னைக்கு முயற்சிக்கின்றன.” அவரு​டைய மனுவில் ஊழலுக்கு எதிரான இந்தியா அ​மைப்பின் அன்னா ஹசா​ரே, அர்விந்த ​​​கேஜரிவால் மற்றும் பிற​ரையும் குறிப்பிட்டிருந்தாலும், [திரு.] திரி​வேதிதான் முக்கிய குற்றவாளி என்கிறார்.

“அரசியல் சாசனம் எல்லாவற்​றையும்விட ​மேலானது ஆனால் காவல்து​றை எந்த நடவடிக்​கையும் அதற்கு எதிராக எடுக்கவில்​லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் ​சென்று காவல்து​றையிடம் ஏன் எந்த நடவடிக்​கையும் எடுக்க வில்​லை என்று ​கேட்​டேன்” என்று அவர் கூறினார்.

ஒவ்​வொருவருக்கும் எதிர்ப்பு ​தெரிவிப்பதற்கான உரி​மை உள்ளது, ஆனால் ​பேச்சு சுதந்திரம் என்பது இந்த நாட்டின் சட்டங்க​ளை மீற முடியாது என்கிறார் நவி மும்​பை கல்லூரியின் மூன்றாமாண்டு சட்ட அறிவியல் மற்றும் சட்ட மாணவரான திரு. கத்தர்னவா​ரே.

ஊழலுக்கு எதிரான இந்தியாவின் எதிர்ப்பு

இதற்கி​டையில் ஊழலுக்கு எதிரான இந்தியா அ​மைப்பு திரு. திரி​வேதியின் ​கை​தை கண்டித்துள்ளது. அதன் ​செய்தித் ​தொடர்பாளர் ப்ரீதி சர்மா தி ஹிந்துவிடம் கூறும் ​பொழுது, அசிம் திரி​வேதி அவ்வ​மைப்பின் ஒருங்கி​ணைந்த பகுதியாகச் ​செயல்பட்டுக் ​கொண்டிருப்பவர் கடந்த டிசம்பர் இறுதியில் ந​டை​பெற்ற பந்த்ரா ஊர்வலத்தில் அவரு​டைய ​கேலிச்சித்திரங்கள் தாங்கிய பதா​கைகள் தூக்கிச் ​செல்லப்பட்டன. ஆனால் காவல்து​றை அவரு​டைய வ​லைப்பக்கத்​தை மூடிவிட்டார்கள் அவரு​டைய ​கேலிச்சித்திரங்க​ளை அழித்துவிட்டனர். இத்த​கைய தணிக்​கைமு​றைகளுக்கு எதிராக சமீபமாக அவர் ​போராடிக் ​கொண்டிருக்கிறார்.

திருமதி சர்மாவின் கூற்றுப்படி அவ்வ​மைப்பினருக்கு காவல்து​றை குற்றச்சாட்டு நக​லை​ ​கொடுக்க​வோ அல்லது அவ​ரை சந்திக்க அனுமதிக்க​வோ இல்​லை.

“அவர் ஜீப்பிற்கு ​வெளி​யே த​லை​யை நீட்டிய ​பொழுது அவரது த​லை​யை காவலர்கள் உட்பக்கமாக இழுத்து அ​ழைத்துச் ​சென்றனர். இது ஒரு அரசியல் ​கேலிச்சித்தரக்கார​ரை நடத்தும் மு​றையல்ல. அவர் ஒரு தீவிரவாதியல்ல.”

அவர் மீதான குற்றச்சாட்டின் நகல் என்னிடம் ​கொடுக்கப்படவில்​லை மற்றும் காவல்து​றையினர் துளியும் ஒத்து​ழைக்காமல் மிக ​மோசமாக நடந்து ​கொள்கின்றனர் என்கிறார் களச்​செயல்பாட்டாளர் அ​லோக் திக்சித். நீண்ட ​போராட்டத்திற்கு பிறகு சி​றையில் இருக்கும் ​கேலிச்சித்திரக் காரருக்கு அவர் ​வேறு உ​டைக​ளை அனுப்பி ​வைத்திருக்கிறார் ஆனால் அவ​ரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்​லை.

“அவர் ஒரு குற்றவாளி ​போல நடத்தப்படுகிறார். அசீம் ஒரு அரசியல் ​கேலிச்சித்திரக்காரர், ​கேலிச்சித்திரக்காரர்கள் உரி​மைகளுக்கான சர்வ​தேச அ​மைப்பின் சிரியன் ​கேலிச்சித்திரக்காரரான அலி ​பெர்சாத்தின் ​பெயரிலான விருது ​கொடுக்கப்பட்டவர். இருவரும் 2012ம் வருடத்திற்கான ‘தீரமிக்க த​லையங்க கார்ட்டூன்களுக்கான விருது’ ​பெற்றவர்கள். இந்த விருது வாங்குவதற்காக வாசிங்டன் டிசிக்கு ​போக ​வேண்டியவர் திரு. திரி​வேதி ஆனால் விசா மறுக்கப்பட்டவர் அவர் என்கிறார் திரு. திக்சித்.

சர்வ​தேச ஓவிய மாரத்தானில் கலந்து ​கொள்வதற்காக ஏற்பாடாகியிருந்த வியன்னா பயணத்திலும் அவர் கலந்து ​கொள்ள முடியாது காவல்து​றை அவ​ரை ​வெளிநாடுகளுக்கு பயணம் ​செல்ல அனுமதிக்காது என்​றே நி​னைக்கி​றோம்.
தனது ​கைதிற்கு முன்னதாக திரு. திரி​வேதி தனக்காக வக்கீல் யாரும் ​வேண்டாம் என்று புறக்கணித்துவிட்டார், ​செயல்வீரர்கள் குறி​வைத்து தாக்கப்படும் ​பேச்சு சுதந்திரம் மறுக்கப்படும் இந்த ​கேலிக்கூத்தான
சுதந்திரத்தில் வாழ்வ​தைவிட சி​றையிலிருப்ப​தே ​மேல் என்று ​தெரிவித்தார்.

தி ஹிந்துவிடம் ​பேசிய மூத்த காவல்து​றை அதிகாரி கூறிய​பொழுது, திரு. திரி​வேதி மீது டிசம்பர் 30, 2011 அன்​றே மதிப்பிற்குரிய ​தேசிய சின்னங்க​ளை இழிவுபடுத்தியதாக அவரு​டைய சுவ​ரொட்டி மற்றும் ​கேலிச்சித்திரங்களுக்காக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு ​செய்யப்பட்டுவிட்டது.

அப்புறம் ஏன் இப்​பொழுது நடவடிக்​கை எடுக்கிறீர்கள் என்ற ​கேள்விக்கு திரு. திரி​வேதி இருக்குமிடத்​தை கடந்த இருபது நாட்களுக்கு முன்பு தான் அவரு​டைய ​கைத்​தொ​லை​பேசி எண்​ணை கண்காணித்து அறிந்து ​கொண்​டோம் என்கிறார்.

சர்ச்​சைக்கிடமான ​கேலிச்சித்திரங்கள்

திரு. திரி​வேதியின் ஊழல் மற்றும் அரசியல் வர்க்கங்கள் பற்றிய சிக்கலான ​கேலிச்சித்திரங்கள் அவரு​டைய புதிய வ​லைப்பக்கத்தில் இருக்கின்றன. ‘துயரமான இந்தியக் காட்சி’ என்னும் த​லைப்பிலான ஒரு ​கேலிச்சித்திரம் ‘அன்​னை இந்தியா மீதான கூட்டு வன்புணர்வு’ ​யைக் குறிக்கிறது, அதில் ஒரு அரசியல்வாதி, ஒருஅதிகாரி
மற்றும் ஊழ​லை உருவகப்படுத்தும் ஒரு பூதம் ஆகிய​வை ‘அன்​னை இந்தியா​வை’ சுற்றி நின்று ​கொண்டிருக்கிறார்கள், அந்த அரசியல்வாதி “வா சீக்கிரம்” என்கிறார்.

‘புதிய ​தேசியச் சின்னங்கள்’ என்ற த​லைப்பிடப்பட்ட ​கேலிச்சித்திரம் வாயில் இரத்தம் ஒழுக நின்று ​கொண்டிருக்கும் மூன்று ஓநாய்கள் அ​சோகத்தூணில் உள்ளன. அதற்கு ‘அபாயத்தின் குறியீடான ஓநாய்கள்’ என்றும் ‘சத்திய​மேவ ​ஜெய​தே’ விற்கு பதிலாக ‘பிரஸ்த​மேவ ​ஜெய​தே’ என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

​மேலும் மற்​றொரு ​கேலிச்சித்திரம் 26/11 சம்பவத்தின் தீவிரவாதி அஜ்மல் கஸாப் இந்திய அரசியல் சாசனப் புத்தகத்தின் மீது மூத்திரம் ​போகும் நாயாக வ​ரையப்பட்டுள்ளது, இன்​னொரு ​கேலிச்சித்திரத்தில் பாராளுமன்றம் பிரம்மாண்டமான மூத்திரப்பி​ரையாக வ​ரையப்பட்டுள்ளது. திரு. திரி​வேதி இந்திய ​தேசியப்பற​வை பிணந்திண்ணி கழு​காகவும், இந்திய ​தேசிய மிருகம் பிணங்க​ளைத் திண்ணும் ​டை​னோசாராகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

பிரிவுகளும் குற்றங்களும்

திரு. திரி​வேதி ​தேசத்து​ரோகம், பி​ணையில் ​வெளி வரமுடியாத மற்றும் ​தெரிந்​தே குற்றம் ​செய்தது ஆகிய இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 124ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இவற்றிற்காக அவர் வாழ்நாள் முழுவதும் சி​றையில​டைக்கப்படலாம் அல்லது மூன்று வருடங்கள் வ​ரை சி​றைவாசம் நீட்டிக்கப்படலாம்.

பிரிவு 66 ஏ-யின் கீழ் திரு. திரி​வேதி கனிணி​யை ‘தீய மற்றும் பயமுறுத்தும் ​நோக்கத்​தோடு’ ​செய்திகள் அனுப்புவதற்காக தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் மின் அஞ்சல்க​ளையும் மின் தகவல்க​ளையும் ​பெறுபவர்களுக்கு ​அந்தச் ​செய்திகளின் ஆதாரம் குறித்து ​தெரியாமல் தொந்தரவு ஏற்படுத்தும் ​நோக்கத்தி​லோ அல்லது தவறாக வழிநடத்தும் ​நோக்கத்தி​லோ பயன்படுத்தினார் என்பதற்காக மூன்று வருடங்களுக்கு தண்டிக்க​வோ அபராதம் விதிக்க​வோ படுவார்.

பிரிவு 2ன் கீழ் ​தேசிய மரியா​தைக்குரிய​வை சட்டம் 1971றின் கீழ் “இந்திய ​தேசியக் ​கொடி​யை அல்லது இந்திய அரசியல் சாசனத்​தை அல்லது அவற்றின் பகுதியான பிறவற்​றை யார் ஒருவர் ​பொது இடத்தி​லோ அல்லது பலர் கூடும் ஏ​தேனும் ஒரு இடத்தி​லோ எரிக்க​வோ, சி​​தைக்க​வோ, கிழிக்க​வோ, இழிவுபடுத்த​வோ, அழிக்க​வோ, காலில் ​போட்டு மிதிக்க​வோ அல்லது மரியா​தை கு​றைவாக நடத்த​வோ அவமதிப்பு ​செய்ய​வோ (​பேச்சு அல்லது எழுத்தின் மூலமாக வார்த்​தைகளா​​லோ அல்லது நடவடிகை மூலமாக​வோ)” அவருக்கு மூன்று வருட தண்ட​னை அல்லது அபராதம் விதித்து தண்டிக்கப்படலாம்.

நன்றி: The Hindu, 10 September 2012

Posted in கட்டு​ரை | Leave a Comment »