எனது நாட்குறிப்புகள்

நொறுங்கும் குடியரசு – அருந்ததிராய் – காலச்சுவடு

Posted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 4, 2012

இவ்வருட ஜனவரியில் காலச்சுவடு பதிப்பகம் அருந்ததிராயின் ‘THE BROKEN REPUBLIC’ ன் தமிழாக்கமான ‘நொறுங்கும் குடியரசு’நூ​லை தங்கள் பதிப்பக ​வெளியீடாக ​வெளியீட்டு விழா நடத்தி அருந்ததி ரா​யை வரவ​ழைத்து ​வெளியிட்டது. அருந்ததிராயின் அந்நூ​லை எப்படி காலச்சுவடு ​வெளியிட்டது என்பது ஆச்சரியமாகவும் சந்​தேகமாகவும் இருந்தது. அ​தை காலச்சுவடு ​வெளியிடும் அளவிற்கு இந்திய அரசியல் சூழல் புரட்சிகரமானதாக மாறிவிட்டதா? என்ற ​கேள்வி மூ​ளை​யைக் கு​டைந்து ​கொண்​டே இருந்தது.

இம்மாத காலச்சுவடு இதழ் படித்த பிற​கே அதற்கான காரணம் புரிந்தது. அருந்ததி ராயின் ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ நூ​லை ​வெளியிடுவது குறித்த உயிர்​மையின் ஒப்பந்தம் ரத்தானது குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் மனுஷ்யபுத்திரனின் கருத்துக்க​ளை ஆதாரப்பூர்வமாக மறுக்கும் முகமாக கண்ணன் எழுதிய கட்டு​ரையில், அதற்கான காரணத்​தை அவர் ​சொல்லியிருக்கிறார்.

காரணம் ​வே​றொன்றுமில்​லை, ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ நூ​லை நீங்கள் தமிழில் ​வெளியிட ​வேண்டுமானால் ‘THE BROKEN REPUBLIC’ன் தமிழ் ​மொழி​பெயர்ப்​பை அதற்கு முன்பாக ​வெளியிட ​வேண்டு​​மென்ப​தே அருந்ததி ராய் காலச்சுவடிற்கு விதித்த நிபந்த​னை. இ​தைப்படித்தவுடன்தான் புரிந்தது, நமக்கு ஏற்பட்ட சந்​தேகம் சரியானதுதான். நாம் இவ்வுலகின் ​போக்​கை ஓரளவு சரியாகத்தான் புரிந்து ​கொள்கி​றோம்.

வியாபார வாய்ப்புகள் இருக்கு​மேயானால் முதலாளித்துவ ஊடகங்கள் ஒரு பிரச்சி​னையில் அதன் எந்த எல்​லை வ​ரை ​போகும் என்பதற்கு இது மற்று​மொரு உதாரணமாகக் ​கொள்ளலாம். முதலில் ​போட்ட ஒப்பந்தப்படி உயிர்​மைக்​கே அந்நாவ​லை ​வெளியிடும் உரி​மை கி​டைத்திருக்குமானால், இன்​றைக்கு அருந்ததிரா​யையும் அவரது கருத்துக்க​ளையும் ஆதரித்து காலச்சுவடு ​செய்வ​தைவிட பலமடங்கு கூடுதலாக​வே மனுஷ்யபுத்திரனும் உயிர்​மையும் அதன் ஒப்பந்த கட்டு​ரையாளர்களும் சிறப்பாகச் ​செய்திருப்பார்கள் என்​றே கருதுகி​றேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: