எனது நாட்குறிப்புகள்

கூடங்குளம்: அரசு ஆதரவு அறிவாளிகளின் வாதங்கள்

Posted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 14, 2012

இன்​றைய ஹிந்து நாளிதழில் ​சென்​னை கணிதவியல் விஞ்ஞான நிறுவனத்​தைச் ​சேர்ந்த ராகுல் சித்தார்த்தன் என்பவர் “The real questions from Kudankulam” என்ற த​லைப்பில் கட்டு​ரை எழுதியிருக்கிறார் (முதலில் எ க்கு பதிலாக அ அடித்துவிட்​​டேன் தவறுதலாக).

ஏ​தேனும் புதியதாக விசயங்கள் இருக்குமா, தர்க்கங்கள் இருக்குமா என்று பார்த்தால் அரசுத்து​றை சார்ந்த பல விஞ்ஞானிகளும் அறிவாளிகளும் ​முன்​வைக்கும் வாத எல்​லைக​ளைத்தாண்டி இக்கட்டு​ரை பயணிக்க​வே இல்​லை. மீண்டும் மக்க​ளை முட்டாள்கள் என்றும் அவர்கள் சிலரால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் அரசு முன்​வைக்கும் அ​தே குற்றச்சாட்டுக​ளைத்தான் இக்கட்டு​ரை ஆசிரியரும் கூறுகிறார். வரலாறு ​நெடுகிலும் ஆளும் வர்க்கங்கள் “மக்க​ளை முட்டாள்கள்” என்று ​சொல்வார்கள், ​போராளிகள் மற்றும் ஆளப்படும் வர்க்கங்களின் த​லை​மை “மக்க​ளை மகத்தானவர்கள்”, “மக்கள்தான் வரலாற்​றைப் ப​டைக்கிறார்கள்” என்று ​சொல்வார்கள் எனப் அரசியல் புத்தகங்களில் படித்த​தை​யெல்லாம் ந​டைமு​றையில் மிகச் சரியான​வை எனப் புரிந்து ​கொள்ள கி​டைத்த மகத்தான வரலாற்றுப் ​போர் நிகழ்ந்து ​கொண்டிருக்கிறது.

கூடங்குளம் அணு உ​லை குறித்த பிரச்சி​னை​யை இவ்வாறு பிரித்துக் ​கொள்ளலாம்

1. அணுஉ​லைகள் ஆபத்தான​வையா? இல்​லையா?
2. அணுஉ​லைகள் ​நோக்கம் மின்சாரமா? அணுஆயுதங்களா?
3. அணுஉ​லைக​ளை ஆபத்தின்றி பக்கவி​ளைவுகள் மற்றும் பின்வி​ளைவுகளின்றி இயக்க முடியுமா?
4. அணு உ​லைக​ளை ​வெற்றிகரமாக இயக்கும் அளவிற்கு இந்திய அரசிற்கும் அதன் நிர்வாக இயந்திரங்களுக்கும் தகுதியும் திற​மையும் இருக்கிறதா?
5. அணுக்கழிவுக​ளை என்ன ​செய்கிறார்கள்?
6. அணுஉ​லைகளில் ஆபத்துக்க​ளோ விபத்​தோ நடந்தால் மக்க​ளை எப்படி காப்பாற்றுவார்கள்?
7. கூடங்குளம் அணுஉ​லை கட்டியதிலிருந்து, தற்​பொழுது யு​ரேணியம் நிரப்ப நடக்கும் முயற்சிகள் வ​ரை கு​றைந்தபட்சம் சர்வ​தேச விதிமு​றைகள் எந்தக் கு​றைபாடும் இன்றி க​டைபிடிக்கப்பட்டுள்ளதா?
8. மாற்று மின்சார மு​றைக​ளை விட அணுமின்சார மு​றைக்கு அதிக முக்கியத்துவம் ​கொடுப்ப​தேன்? அதற்கு அது தகுதியானது தானா?
9. கூடங்குளம் அணுமின்நி​லையத்தால் பாதிக்கப்படப் ​போகிறவர்கள் யார் பயன​டையப் ​போகிறவர்கள் யார்?
10. தமிழக மின்பற்றாக்கு​றைக்கு காரணங்கள் யா​வை?
11.தமிழகம் மற்றும் இந்திய மின்பற்றாக்கு​றை முழுவ​தையும் தீர்க்கும் ஆற்றல் அணுமின்சாரத்திற்கு உண்டா?
12. இதுவ​ரை இயங்கிக் ​கொண்டிருக்கும் இந்திய அணுமின்நி​லையங்களின் நி​லை என்ன? அவற்றின் பாதிப்புகள் குறித்த மூன்றாம் குழுக்களின் ஆய்வுக​ளை பகிரங்கமாக அறிவிக்க முடியுமா?
13. அரசுசாரா குழுக்களின் ​தொடர் கண்காணிப்புக​ளை ஏன் அரசு தடுத்து நிறுத்தியது?

இத்த​கைய ​கேள்விகள் எதற்கும் துளியும் முகம் ​கொடுக்காமல் அணு உ​லை ஆதரவாளர்கள் அணுமின்சாரத்தின் ​தே​வை தவிர்க்க முடியாதது, நவீன அணு உ​லைகள் முழு​மையாக பாதுகாப்பான​வை, புகுசிமா வ​ரை ​வெடித்த அணுஉ​லைகளுக்கும் இதற்கும் சம்பந்தமில்​லை, விஞ்ஞானத்​தைப் பற்றி ஒன்றும் ​தெரியாமல் ​பேசாதீர்கள் என்​றே ஒ​ரே வரியில் அ​னைத்துக் ​கேள்விக​ளையும் புறங்​கையால் தள்ளிவிடுகிறார்கள். சரி உங்களின் நவீன அணு உ​லைகள் பற்றி ​பேசு​வோம் வாருங்கள் என்றால் அதற்கும் ஆழமான விவாதங்களுக்கு வருவதில்​லை.

அவர்கள் சிறிதள​வேனும் அணு உ​லை எதிர்ப்பாளர்க​ளோடு உடன்படும் இடம் உண்​டென்றால் அது நமது தற்கால அரசாங்கத்தின் மீதான நமது சந்​தேகப்பகுதி​யைத்தான். ஆனால் அதற்கும் முட்டுக் ​கொடுக்க ஆயிரம் நம்பத்தகாத வாதங்க​ளை ​வைத்திருக்கிறார்கள்.

ஏன் அணு உ​லை கட்டுவதற்கு முன்பு க​டைபிடிக்க ​வேண்டிய சர்வ​தேச விதிகள் எதுவும் க​டைபிடிக்கப்படவில்​லை என்ற ​கேள்விக்கு, சரிதான் உங்கள் ​கேள்வி என்பவர்கள். இத்த​கைய ந​டைமு​றை பிரச்சி​னைக​ளே அணுஉ​லை ​வேண்டாம் என்பதற்கு எந்தளவிற்கு ​போதுமான காரணங்கள் என்ப​தை புரிந்து ​கொள்ள முடியாதவர்களாக​வோ அல்லது மறுப்பவர்களாக​வோ இருக்கிறார்கள். நூறடி உயரத்திலிருந்து நீரில் குதிப்பது மனிதனுக்கு சாத்தியமான ஒரு இலக்காக இருக்கலாம் ஆனால் அது எல்லா மனிதனுக்கும் சாத்தியமான இலக்காக இருக்க முடியாது. அதற்கு நி​​றைய பயிற்சியும் உடல் தகுதியும் மனத் தகுதியும் ​வேண்டும். அது இல்லாமல் அது சாத்திய​மே இல்​லை. இங்​கே ​பொது முடிவுக​ளோ விஞ்ஞான விதிக​ளோ எந்த வி​னையும் ஆற்ற முடியாது. ந​டைமு​றை சாத்தியப்பா​டே தீர்மானகரமான முடி​வை வகிக்கிறது.

​அருந்ததி ராய் அவர்கள் ​கேட்ப​தைப் ​போல, ​தெருக் குப்​பைக​ளை​யும், ​தொழிற்சா​லை குப்ப​க​ளையு​மே அள்ளுவதற்கான அ​மைப்பு, ஒழுங்குமு​றை​யோ, விதிக​ளோ, ​தொடர்ச்சியான ந​டைமு​றை​யோ இல்லாத ஒரு நாடு எப்படி அணுக்கழிவுக​ளைக் ​கையாளும் தகுதி ப​டைத்ததாக நம்ப முடியும் என்பது மிக மிக முக்கியமான ​கேள்வி. இவற்றில்தான் அதன் மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் மற்றும் அரசின் மீதான நம்பிக்​கை​யோ சந்​தேக​மோ கட்ட​மைக்கப்படுகிறது. இது ஒன்று புறக்கணிக்கத்தக்க வாதமல்ல.

மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்பும் ஒரு விசயம், இதில் உள்ள விஞ்ஞானச் சிக்கல்க​ளைத் தாண்டி முக்கியத்துவமான பிரச்சி​னை இதன் சமூக ​பொருளாதார அரசியல் பிரச்சி​னைகள்தான். புதிய அணுமின் நி​லையங்கள் இந்தியாவின் சமீபத்திய சர்வ​தேச அணு ஒப்பந்தங்களின் வி​ளை​வே. அ​வை உலக ஏகாதிபத்திய நாடுகளுக்கும், பன்னாட்டுக் கம்​பெனிகளுக்கும் ​சே​வையும் லாபமும் ஈட்டித்தரும் ​நோக்கம் ​கொண்ட​வை​யே. மாறிவரும் சர்வ​தேச அரசியல் சூழலில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சர்வ​தேச இராணுவ மூலபாயங்களுக்காக உருவாக்கப்படுப​வை​யே இந்த புதிய அணுமின் நி​லையங்கள்.

இத்த​கைய ஒப்பந்தங்கள் மூலம், முதலாளித்துவத்தின் லாப ​வெறிக்கும் சந்​தைப் ​போட்டிகளுக்கும் களப்பலி ஆக்கப்பட்டுக் ​கொண்டிருப்பவர்கள் கூடங்குளம் மக்கள் மட்டுமல்ல, தமிழக மக்களும், இந்திய மக்களும், இந்தியாவின் அன்​டை நாட்டு மக்களும்தான்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: