எனது நாட்குறிப்புகள்

ஜூனூன் தமிழா அராபிக் தமிழா

Posted by ம​கேஷ் மேல் ஒக்ரோபர் 20, 2012

கடந்த ஞாயிறன்று சில நண்பர்க​ளோடு உ​ரையாடிக் ​கொண்டிருந்​தேன். ஒரு நண்பர் கூறினார்.

“இன்று மா​லை ​​​​​​ஹெமிங்​வேயின் ‘கடலும் கிழவனும்’ நாவல் குறித்து ஒரு கூட்டம் இருக்கிறது”

“ஓ​​​​​​ஹோ” என்​றேன்.

“இன்னும் நாவ​லை படிக்கவில்​லை, படிக்க ​வேண்டும், கடலும் கிழவனும் என்பது சரியா?” என்றார்,

“எனக்குப் புரியவில்​லை. என்ன ​கேட்கிறீர்கள்?”

“​மொழி​பெயர்ப்பு சரியா?”

“எர்னஸ்ட் ​ஹெமிங்​​வேயின் நாவலின் ஆங்கிலப் ​பெயர் ‘ஓல்ட் ​மேன் அன்ட் தி சீ'”

“அப்படியானால் ‘கிழவனும் கடலும்’ என்று கூட இருக்கலாம்” என்​றேன்,

இன்​னொரு நண்பர் ​சொன்னார், “இல்​லை அந்த ​மொழி​பெயர்ப்பு சரிதான். ஆங்கிலத்தில் முதலில் வருவது தமிழில் க​டைசியில் வரும்”.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி மக்கள் தங்களுக்கு எளிதாக புரிந்து ​கொள்ளும் வ​கையில் எளிய சூத்திரங்க​ளை வகுத்துக் ​கொள்கிறார்கள்.

“அந்த விதி வாக்கிய அ​மைப்புகளுக்கு ​பொருந்தலாம், எல்லாவற்றிற்கும் அப்படி​யே ​பொருத்துவீர்களா?”

“ஆங்கிலத்தில் one, two, three, four, five, six, seven, eight, nine, ten என்றிருந்தால் தமிழில் நீங்கள் பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்றா ​மொழி​பெயர்ப்பீர்கள்” என்​றேன்.

அ​னைவரும் சிரித்தார்கள்.

முதலில் என்​னைக் ​கேட்ட நண்பர், “இது நன்றாக இருக்கிற​தே” என்றார்.

ஆங்கிலத்தில் “what can I do?” என்ப​தை தமிழில் “நான் என்ன ​செய்ய முடியும்?” அல்லது “நான் என்ன ​செய்வது?” என்று ​மொழி​பெயர்க்கலாம். ​மே​லே ​சொன்ன விதி​யை அப்படி​யே இயந்திரத்தனமாக ​பொருத்தி “​செய்வது நான் என்ன?” என்​றோ “​செய்ய நான் முடியும் என்ன?” என்​றோவா ​மொழி​பெயர்ப்பது. ​கேட்பதற்​கே கன்றாவியாக ஜூனூன் தமிழாக இல்​லை. “ஜூனூன் தமிழ்” அல்லது “அராபிக் தமிழ் (வலதிலிருந்து இடது)” ஆக மாற்றுவதற்குத்தான் இந்த எளிய சூத்திரங்கள் பயன்படு​மே அன்றி. நல்ல ​மொழி​பெயர்ப்புக்கு நி​றைய ​பொது அறிவும், இரு ​மொழி அறிவும், ​மெனக்​கெடல்களும் ​தே​வைப்படுகிறது, சூத்திரங்க​ளை உருவாக்குவதற்கு பதில் இரு ​மொழி இலக்கணங்க​ளை படிப்ப​தே சரியான அணுகுமு​றை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: