எனது நாட்குறிப்புகள்

ஜனநாயகத்தின் கருவ​றை​

Posted by ம​கேஷ் மேல் ஒக்ரோபர் 26, 2012

“பாகிஸ்தானின் அனுமதி ​பெற்றுத்தான் ஒசாமா​வை ​கொல்ல
பாகிஸ்தானுக்குள் புக ​வேண்டும் என காத்திருந்திருந்தால்
அ​மெரிக்க மக்களுக்கு ​கொடுத்த
வாக்குறுதி​யை காப்பாற்றியிருக்க முடியாது”
என்கிறான் ​தேர்தல் களத்தில்
ஒரு ​தேசத்தின் அதிபர்.

எல்லாவற்​றையும் தாண்டி
அவ்வாறு ​செய்ததற்காக பாராட்டுகிறான்
அதிபர் பதவிக்கான அவனது ​போட்டியாளி.

ஈராக் துவங்கி ஈரான் வ​ரை
ஆதிக்கத்திற்கான யுத்தத்தின் ​வேகம் ​போதாது
என குற்றச்சாட்டுக்க​ளை பட்டியலிடுகிறான் இவன்.

ந​டைமு​றை அ​செளகரியங்க​ளை விளக்கி
​பெற்ற ​வெற்றிக​ளை பட்டியலிடுகிறான் முதலாமவன்.

​நேருக்கு ​நேராய், பகிரங்கமாக
ஊடகங்களில் தங்கள் ​கொள்​கைக​ளை முன்​வைத்து
வாதம்​செய்யும் ஜனநாயகக் ​கோயிலின் கருவ​றை​யை
வியந்து வாய்பிளந்து பார்த்துக் ​கொண்டிருக்கி​றோம்
​தொ​லைக்காட்சி ​பெட்டிகளின் முன்பு
நீரிலிட்டு ​நெருப்பில் ​வைத்த ஆ​மைக​ளைப் ​போல.

உலக ஜனநாயகத்தின் சவ​மேட்டில்
ஒரு ​தேசத்தின் ஜனநாயகம் ​நாடகமாடுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: