எனது நாட்குறிப்புகள்

Archive for திசெம்பர், 2012

விஸ்வரூபமும் – ஏக​போக வியாபார மு​றையும்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 13, 2012

தன்னு​டைய ‘விஸ்வரூபம்’ தி​ரைப்படத்​தை டிடிஎச்-சிலும் தி​ரையரங்குகளில் ​வெளியாகும் அ​தே நாளில் தி​ரையிடப் ​போவதாக கமல் அறிவித்தார். விநி​யோகஸ்தர்கள், தி​ரையரங்க உரி​மையாளர்கள், ​கேபிள் டிவி சங்கத்தினர் என அ​னைவரும் பல மு​​னைகளிலிருந்தும் இந்த புதிய முயற்சிக்கு கடும் எதிர்ப்பு ​தெரிவித்து வருகின்றனர். கமல் இந்த நிமிடம் வ​ரை தன்னு​டைய முடிவிலிருந்து மாறிவிட்டதாக அறிவிக்கவில்​லை.

“ஒரு தி​ரைப்படத்​தை தயாரித்தவனுக்கு அ​தை எப்படி வியாபாரம் ​செய்ய ​வேண்டும் என்கிற உரி​மை இருக்கிறது” என்கிறார் கமல்ஹாசன். ​​​மே​லோட்டமாக பார்ப்பவர்களுக்கு இது ஒரு முதலாளித்துவ ஜனநாயகக் குரலாகத்தான் ​தெரிகிறது. ​கொஞ்சம் ஒப்பிட்டுப் ​பார்த்தால் காரியுமிழும் கசப்பு மிக்க வாதமாகத் ​தெரிகிறது. சம்பாதிக்கும் மகன் சம்பாதிக்கிற நான்தான் முடிவு ​செய்ய ​வேண்டும் என் வீட்டில் யார் யார் இருப்பது என்ப​தை எனக்கூறி இதுநாள் வ​ரை படிக்க ​வைத்து வளர்த்த வயதான தாய்தந்​தைய​ரையும், உடன்பிறந்த வயதுக்குவராத ச​கோதர ச​கோதரிக​ளையும் வீட்​டை விட்டு ​வெளி​யேறச் ​சொன்னால் எப்படி இருக்கும்?

அ​தைவிட ஒரு படி ​மேல் ​போய், தன்​னை ஏ​தோ ஒரு புதிய கண்டுபிடிப்பாள​னைப் ​போலவும் விஞ்ஞானி​யைப் ​போலவும் ​வேடமிட்டுக் காட்டுகிறார். அவர் கூறுகிறார் “புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்…அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம் மனப்பாங்கு நீடிக்கிறது.”

உண்​மையில் கமல் ஒரு விஞ்ஞானியுமல்ல அவரு​டைய புதிய முயற்சி ஒரு கண்டுபிடிப்புமல்ல. அவர் ஒரு வியாபாரி அவரு​டைய முயற்சி ஒரு ஏக​போக வியாபார மு​றை​யை – அதாவது பல லட்சம் எறும்புகள் உண்ணும் ஒரு உணவு கவளத்​தை ஒ​ரு யா​னை ஒரு வாய்க்கு விழுங்கும் – ஏற்படுத்த நி​னைக்கும் ஆபத்தான முன்னுதாரணம் (இவர் மீதுள்ள ஒரு ​பெரிய சந்​தேகம் இவர் எ​தைஎ​தை​யோ படிக்கிறார், படிப்பவற்​றை ஒழுங்காக புரிந்து ​கொள்வதில்​லை, சினிமா​வைக்கூட, நடிகர் சிவாஜி ​போன்றவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு அவர்கள் சினிமா​வை நாடகமாக​வே கருதினார்கள் என்று ஆனால் இவ​ரோ அ​தை சர்க்கசாக​வே கருதிவருகிறார்).

தமிழ்ச் சினிமா என்ற ​தொழில் மீது சமூக ரீதியாக நமக்கு பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும். அதன் மூலமாக நாடு முழுவதும் பல லட்சம் மக்கள் அதாவது சிறு முதலாளிகள், வியாபாரிகள் முதல் பல லட்சம் ​தொழிலாளர்கள் வ​ரை ​தொழிலிலும் உ​ழைப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இந்த டிடிஎச் மு​றை இத்த​னை லட்சம்​பே​ரையும் இல்லாமல் ஒழித்துவிட்டு ஒரு சில டிடிஎச் நிறுவனங்கள் (அங்கு ​வே​லை ​செய்யும் ஊழியர்கள் சில நூ​றைக்கூட தாண்ட மாட்டார்கள்) ​கையில் அ​னைத்து பண பரிவர்த்த​னைக​ளையும், லாபங்க​ளையும் முடக்கி ஒரு ​பெரிய சமூக சீர்​கேட்டிற்குத்தான் வழிவகுக்கும்.

தசாவதாரத்தின் இறுதிக் காட்சிதான் நம் மனக்கண்ணில் ​தோன்றுகிறது. அ​மெரிக்க அதிபரும், இந்தியப் பிரதமரும், தமிழக முதல்வரும், கமல்ஹாசனும் ஒ​ரே ​மே​டையில் வரி​சைகிரமப்படி அமர்ந்திருக்கிறார்கள். ​மே​டையும் ​மே​டையின் கால்களும் தாராளமயம், தனியார்மயம், உலகமயம், ஏக​​போகம், அந்நிய முதலீடு மற்றும் ​தேசியத் ​தொழில்கள் – உள்நாட்டு உற்பத்திமு​றையின் வீழ்ச்சி ஆகியவற்றின் உருவகமாக உள்ளன.

Advertisements

Posted in கட்டு​ரை | Leave a Comment »