எனது நாட்குறிப்புகள்

கூலி ஏழை விவசாயி – ஒரு உரையாடல்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 10, 2013

என்ன தஞ்சாவூர் பண்ணையாரே, நல்ல மழை பெய்ஞ்சிருக்கே விவசாயத்துக்கு ஏதாவது பயனுன்டா

எங்க சார். இப்பல்லாம் கூலிக்கு ஆளே கிடைக்கிறதில்ல. விவசாயத்திற்கு அது பெரிய சிக்கல்சார்

ஏன் கிடைக்கல

அரசாங்கம் இலவசமா அரிசி போடுது. நல்லா சோறு வடிச்சு குழம்பு வைச்சு சாப்பிட்டு தூங்கறான். அவனுக்கு நாளையப் பத்தி என்ன கவலை இருக்கு. அவன் பிள்ளைகளும் படிக்க போகுதுங்க. வேலைக்கு எங்க ஆள் கிடைக்குது.

நான் ஹிந்து பத்திரிகையின் பிராபர்டி பிளசில் ஒரு கட்டுரை படித்தேன். தமிழ்நாட்டுல வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. தேவை அதிகமாக இருக்கு. அதனாலதான் வெளி மாநிலங்களிலிருந்து ஆள் இறக்குிகிறார்கள்.

என்ன காரணம்

இலவச அரிசி. நூறு நாள் வேலைத்திட்டம். இலவச டிவி. பிறகு எதுக்கு அவன் வேலைக்கு வரப்போறான்.

நூறு நாள் வேலைத்திட்டத்துல எவ்வளவு கொடுப்பாங்க கமிஷன் போக ஒரு நாளைக்கு எம்பது ரூபா கொடுப்பாங்க.

நீங்க. பண்ணை வேலைக்கு எவ்வளவு கொடுப்பீங்க.

அரை நாள் கூலி இருநூறு ரூபாய். ஒரு நாள் கூலி 400 லிருந்து 500 ரூபாய்.

பிறகு ஏன் உங்ககிட்ட வரமாட்டேங்கிறான்

அவனுக்கு நாளையப் பத்தி கவலை இல்லை. இன்னிக்கு சோறு கிடைச்சா போதும்.

உங்களுக்கு இருக்குற நாளைக்கு. நாளைக்கு மறுநாளைக்கு, அடுத்த தலைமுறைக்கு பத்தின கவலையெல்லாம் ஏன் அவனுக்கு இல்லாம போச்சு.

குடிச்சு அழியறானுங்க. அரசாங்கம் சாராயக் கடையை திறந்து வைச்சு அவனுங்கள கெடுக்குது. எம்பது ரூபாய் கூலி பெருசா, 200 ரூபாய் கூலி பெருசா அவங்களுக்கு அதைப்பத்தியெல்லாம் கவலையில்லை.

100 நாள் வேலைத்திட்டத்துல ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை. வேலைச் சிரமம் எவ்வளவு.
அதுவும் இரண்டு மணிவரைதான். எங்ககிட்டயும் இரண்டு மணி வரைதான். ஆனா அங்க ஒரு மணி நேரத்துக்கு ரோட்டோரமா இருக்குற மரஞ்செடியை வெட்டிப் போட்டுட்டு போனாப் போதும். யாரும் கேட்க மாட்டாங்க.

அப்ப உங்க கிட்ட இடுப்பொடிய இரண்டு மணிவரைக்கும் உங்க கண்காணிப்பு கீழ வேலை பார்க்கனும்ல. என்ன பெரிய வித்தியாசம்.

எதிர்காலத்த யோசிக்கனும்ல.

இவர் கொடுக்குற 200 ரூபாயல அப்படியே எதிர்காலம் பூத்துக்குலுங்கப் போதுதாக்கும்

இல்ல நீங்க புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க. அவனுங்க, அவனுங்க வாழ்க்கையை மட்டும் வீணாக்கிக்கல. அவங்க பிள்ளைங்க வாழ்க்கையையும் வீணாக்குறாங்க.

நீ நகரத்துல ஒரு வேலைக்கு வர்ற. ஒரு கம்பெனியில, காலையில 8 மணியிலிருந்து இரவு 11 மணிவரை வேலை. மாதத்திற்கு 5000 ரூபாய் சம்பளம். இன்னொரு கம்பெனியில காலை 9 மணியிலிருந்து மாலை 6 அல்லது 7 மணி வரை வேலை மாதத்திற்கு 3000 சம்பளம் எதை தேர்ந்தெடுப்ப.

நான் சொல்றது உங்களுக்கு புரியலை.

இந்தப் பாரு. நீ ஒன்னும் அவனுக்கு வருஷம் பூரா வேலை கொடுக்கப் போவதில்லை. உனக்கு விவசாய வேலை இருக்குற அதிகபட்சம் 3 அல்லது 4 மாசத்துக்குத்தான் வேலை கொடுக்கப் போற. நீ ஏன் அவன் எதிர்காலத்த பத்தியெல்லாம் பேசுற.

எங்கிட்ட வருஷம் பூராத்துக்கும் வேலை இருக்கு விவசாய வேலையும் இருக்கு தோட்ட வேலையும் இருக்கு. தோட்ட வேலைக்கு வருஷம் பூரா ஆள் தேவை.

நெல்லு போல விவசாய வேலைக்குத் தேவைப்படற அளவுக்கு உனக்கு ஒன்னும் தோட்ட வேலைக்கு ஆள் தேவையில்லை. நீ இப்ப பிரச்சினைன்னு பேசறது விவசாய வேலை பத்திதான்.

கிடையாது. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல தோட்ட வேலை.

உனக்கு ஒன்னு சொல்லவா. நீ விவசாயம் முடிஞ்சவுடனே மூட்டை மூட்டையா கொண்டு போய் சேர்த்துப்ப. அவனுக்கு ஒன்னும் ஆகப் போறதில்லை. கடைசி நாளைக்கும் நீ கொடுக்குற கூலிதான். விவசாய முடிவுல அவனுக்கு மிஞ்சினது ஒன்னுமில்லை.

நெல்லுக்கு கடைசியில கூலி கொடுக்குறதில்லை. நெல் அளந்து கொடுப்போம்.

என்ன கூலியோ அந்த அளவுக்கு வேணா நெல்லு கொடுப்பே. சொந்தக்காரனுக்கு பாதி. கூலியாளுங்களுக்கு பாதிங்கற கணக்குலையா கொடுப்ப

இல்லை சார்

இதைப்பாரு. விவசாயத்து லாப நட்டத்துல அவனுக்கு பங்கு இல்லாத வரைக்கு. அவனுக்கு உன் விவசாயத்து மேல எந்த அக்கறையும், ஆர்வமும் இருக்காது. இருக்கனும்னு நீ எதிர்பார்த்தா அது உன் தப்பு.,

அது எப்படி சார்.

அது அப்படித்தான் சார். இந்தியாவின் ஏதோ ஒரு மூளையில இருக்குற இத்தனூண்டு பணக்கார விவசாயி நீ. உனக்குத் தெரியுமா இந்த பிரச்சினைதான் இந்தியாவின் தலையெழுத்தையே இப்படி வெச்சிருக்குனு. நிறைய படிக்கனும் தம்பி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: