எனது நாட்குறிப்புகள்

‘பண்பாட்டு உ​டை’யில் பதுங்கும் வரலாற்று ஆய்வுகள்

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 23, 2013

இப்படி​யொரு ​கேள்வி ​ஜெய​மோகனிடம் ​கேட்கப்பட்டது:

//ஒவ்வொரு இனக்குழுக்களுக்கும் ஆடை என்பது அதன் தனி அடையாளமாக உள்ளதை நாம் அறிவோம். மரப்பட்டைகளும் – தழைகளும் கட்டிக் கொண்டிருந்த காலம் முதல் ஜீன்ஸ், சல்வார் கமீஸ் போடும் காலம் வரையும்!

நம் முன்னோர்கள், இடுப்பில் ஒரு 4 முழு வேட்டியும், தோளில் துண்டும் அணிந்தவர்கள். அப்புறம் 8 முழு வேட்டி – உடன் சட்டை. என் பாட்டி, முப்பாட்டிகள் ரவிக்கை அணிந்திருக்கவில்லை. அதிகபட்சம் ஒற்றைப் பிரியில் சேலை.

நவீன தொழில் நுட்பமும், பஞ்சாலைகள் மற்றும் செயற்கை நூல் இழைகளின் வரவால்- ஆடைகளின் உபயோகமும், வடிவமும், பயன்பாடுகளும் மாறிவிட்டன.

இச்சூழலில் எந்த ஒரு இனத்திற்காகவென்றும் தனித்த ஆடை அடையாளம் சாத்தியமா? உதாரணமாக, தமிழன் என்றால் வேட்டி, சட்டை, சேலை. வட நாட்டவர் என்றால் பைஜாமா, குர்தா, ஐரோப்பியர் என்றால் பேண்ட், கோட், அரபு நாட்டவர் என்றால் நீண்ட பைஜாமா, கோஷா…இப்படி!

மேலும் சில இந்துக் கோயில்களில், பேண்ட் அணிந்து வரக் கூடாது. சுடிதார் போட்டுக் கொண்டு வரக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளும் – குறிப்பிட்ட பூஜை, சடங்குகள், திருமண விழாக்கள் ஆகியவற்றின் போது சில வகையான ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளும் தேவையா? இது கால பரிணாமத்தின் வேகத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும் செயலாகப் படவில்லையா?

எம்.எஸ்.ராஜேந்திரன். திருவண்ணாமலை//

பண்பாட்டு உ​டை

​மே​லே உள்ள ​கேள்வியில் உள்ள எல்லாவற்றிற்கும் வரலாற்றுப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் ​ஜெய​மோகன் பதலளிப்பார். ​​கோயில்கள் – குறிப்பாக ​கேரளக் ​கோயில்களின் – உ​டை கட்டுப்பாடுகள் விசயத்தில் மழுப்புவார் என்ற அவர் பற்றிய புரிதலிலிருந்து எதிர்பார்த்​தேன். நி​னைத்தது ​போல​வே அ​மைந்திருந்தது அவரது பதில்.

//நான் அலுவலகத்தில் வேலைபார்த்த நாட்களில் சட்டை பாண்ட் அணிந்து பெல்ட் கட்டி ஓர் மத்திய அரசூழியனுக்கான உடையில்தான் இருந்தேன். அது என் வசதியை மட்டும் சார்ந்தது அல்ல. என்னைச் சந்திக்கவரும் பொதுமக்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கவேண்டும் என்பதைச்சார்ந்தது அந்த அலுவலகத்தில் முழுக்க நிலவும் பொதுவான உடைப்பண்பாடு சார்ந்தது. நான் விலகி நிற்க முடியாது. நின்றால் பணி சிறப்பாக நடக்காது.

இதே முறையைத்தான் கோயில்களிலும் காண்கிறோம். கேரள ஆலயங்களில் வேட்டி கட்டி மேல்சட்டை இன்றிச் செல்லவேண்டும். அது ஒரு உடைவிதி. அந்நிறுவனம் அந்த அடையாளத்தைப் பேண விரும்புகிறது, அவ்வளவுதான். அதன்மூலம் அது சில பாரம்பரிய அடையாளங்களைப் பேண விழைகிறது.//

//உடைகளில் பண்பாடு இல்லை. உடைகள் பண்பாட்டின் மேலோட்டமான தற்காலிக அடையாளங்கள் மட்டுமே. உடைகளுக்கு அப்பாலுள்ள பண்பாடு பற்றிய பிரக்ஞை இல்லாத நிலையிலேயே உடைகளைப்பற்றி அலட்டிக்கொள்கிறோம்//

//உடைகள் இரண்டு தளங்களில் அர்த்தம் கொள்கின்றன. தேவை, வசதி சார்ந்த ஒரு தளம். அடையாளம் சார்ந்த ஒரு தளம். இவ்விரண்டுமே நாம் வாழும் சூழலுடன் சம்பந்தப்பட்டவையே ஒழிய நிரந்தரமானவை அல்ல. மாறாத எதையும் சுட்டி நிற்கக்கூடியவை அல்ல. ஆகவே உடை மாறாமலிருக்கவேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.

இன்றைய தேவைக்காகவும் வசதிக்காகவும் நாம் நம் உடைகளைத் தேர்வுசெய்வதே இயல்பானது. இன்று வேட்டி மிக வசதிக்குறைவான உடை என்பதே என் எண்ணம். ஆகவே நாமனைவரும் இன்று கால்சட்டையும் மேல்சட்டையும்தான் அணிகிறோம். நான் உடைகள் கசங்காமலிருக்கவேண்டும், அழுக்குத்தெரியக்கூடாது என்பதற்காக எப்போதும் ஜீன்ஸ்தான் அணிகிறேன்.

அதேபோலப் பெண்களுக்கு அவர்களுக்கு வசதியான உடைகள் இருக்கலாம். நான் அவதானித்தவரை சுடிதார் அவர்களுக்கு மிக வசதியான ஆடை. அதைவிட வசதியான ஆடை வருமென்றால் அதற்குச் செல்லலாம். என் மகன் அவனுக்கு வசதியாக உணர்வது டிஷர்ட் மட்டுமே. சட்டை அணிவதே இல்லை.//

//இன்னொருபக்கம் உடை என்பது அடையாளம். நம் சமூகம், நாம் புழங்கும் தொழிற்சூழல் ஆகியவை சார்ந்த உடைகளை நாம் அணிகிறோம். அந்த தளத்திற்கான அடையாளங்களை உடைகள் கொண்டிருக்கின்றன. ஏதோ ஒருவகையில் எல்லா நிறுவனங்களும் உடைவிதிகளைக் கொண்டிருக்கின்றன. சொல்லாமலோ அல்லது சொல்லியோ .//

தர்க்கம், விஞ்ஞானம் ஆகியவற்​றை தான் ​கொண்ட நம்பிக்​கைகளுக்கு, ​கொள்​கைகளுக்கு ​சேதம் ஏற்படுத்தாத எல்​லை வ​ரை பயன்படுத்துவது. தன்னு​டைய நம்பிக்​கைகள், ​கொள்​கைகளுக்கு ​சேதாரம் ஏற்படுத்தும் முழு​மையாக தர்க்கம் மற்றும் விஞ்ஞான அணுகுமு​றைக​ளை பயன்படுத்தினால் என்று ​தெரியவரும் இடங்களில் தன்னு​டைய எழுத்துச்சாதுர்யங்க​ளை பயன்படுத்தி லாவகமாகத் தாண்டிச் ​செல்லுதல் என்கிற ஒரு மு​றை​யை கருத்தியல் ​தெளிவுடன் கூர்ந்து வாசிப்பவர்களால் அ​டையாளம் காண முடியும்.

​பொதுவாக உ​டை விசயத்தில் ​தே​வை வசதி ஆகியவற்றின் அடிப்ப​டையில் உ​டைத் ​தேர்வு அ​மைவ​தை ஏற்றுக் ​கொள்கிறார். குறிப்பாக தமிழகத்தில் உ​டையின் கலாச்சாரத் த​டைகளால் ​பெரிதும் பாதிக்கப்படும் ​பெண்களுக்குச் சார்பாக முற்​போக்காக பதலு​ரைக்கிறார். உ​டைகளின் விசயத்தில் ​தே​வைப்படும் வரலாற்றுப் பார்​வை​யை ​கோடிட்டு காட்டுிகிறார். வாழ்வின் எல்லா விசயங்களிலும் ஏற்படுவது ​போல​வே உ​டைகளின் விசயங்களிலும் காலம் ​தோறும் மாற்றங்கள் ​​தோன்றுவது தவிர்க்க முடியாதது என்ப​​தையும். ஏற்றுக் ​கொள்ளத்தான் ​வேண்டும் என்ப​தையும் புரிய​வைக்கிறார்.

எல்லாவற்றிற்கும் இ​டையில் தன்னு​டைய இந்துத்துவ சார்பு கருத்தியல் நி​லை​யையும் லாவகமாக பாதுகாத்துக் ​கொள்கிறார்.

​வே​லை ​செய்யும் இடங்களில் நாம் க​டைபிடிக்கும் உ​டை சம்பந்தப்பட்ட ஒழுங்குமு​​றைக​​ளோடு ​கோயில்களில் க​டைபிடிக்கப்படும் உ​டை சம்பந்தபட்ட கட்டுப்பாடுக​ளை சமப்படுத்துகிறார்.

​குறிப்பிட்ட ​தொழில்களுக்கு குறிப்பிட்ட வ​கையான உ​டைகள் என்ப​வை ​வெறும் அ​டையாளத்திற்கான​வை அல்ல. அ​டையாளம் என்பது அ​டையாளத்திற்காக​வே உருவாக்கப்படுவதில்​லை. அ​டையாளம் என்பதும் ஒரு பயன்பாடு/​தே​வை கருதி​யே. என்ற அடிப்ப​டைகளுக்குள் ​செல்லாமல் ​வெறும​னே ‘அ​டையாளம்’ என்ற ​சொல்​லை ​தொழில்கள் மற்றும் கல்விநி​லையங்களில் பயன்படுத்தும் சீரு​டைகளுக்கான விளக்கமாக ​கொடுத்துவிட்டு, அதற்கு ​மேல் அது குறித்து ஆழமான ஆய்வுக்குச் ​செல்லாமல் ​​மெளனம் காப்பதின் மூலம். சில இந்துக் ​கோயில்களின் ந​டைமு​றைக​ளோடு அவற்​றை சமப்படுத்துகிறார். விவாதமற்ற மு​றையில் அ​தை ஏற்கச் ​செய்யும் ஒரு விவாதமு​றை​யை அரங்​​கேற்றுகிறார்.

அவரது கூற்றுப்படி​யே இந்தியா முழுவதும் இந்து மதம் பரவியிருக்கிறது. அது​வே இந்தியாவின் வரலாற்று ரீதியான ஒற்று​மைக்கும், கலாச்சார மற்றும் வாழ்வியல் ஒரு​மைப்பாடுகளுக்கும் காரணமாக இருக்கிறது என்கிற ​போது. ஏன் தமிழகத்தின் ​பெரும்பான்​மையான ​கோயில்களில் இல்லாத ஆண்கள் ​மேலா​டையின்றி, ​வேட்டி மட்டும் கட்டிக்​கொண்டு, துண்​டை இடுப்பில் கட்டிக்​கொண்டுதான் ​கோயிலுக்குள் வர​வேண்டும் என்கிற விதிமு​றை ​கேரள இந்துக் ​கோயில்களிலும், சில தமிழ்க் ​கோயில்களிலும் – அதிலும் குறிப்பாக ​கேரளத்​தை ஒட்டிய தமிழிக இந்துக் ​கோயில்களிலும் – மட்டும் க​டைபிடிக்கப்படுகிறது. நமக்குத் ​தெரிந்து வட இந்திய இந்துக் ​கோயில்களிலும் இத்த​கைய விதிமு​றைகள் இருப்பதாகத் ​தெரியவில்​லை. இது முழுக்க முழுக்க மத்தியகால அரச மற்றும் ஜமின்தாரி அடி​மைமு​றை கலாச்சாரத்தின் மிச்ச​சொச்​சமே அன்றி ​வே​றெதுவமாக இருக்கும் என்று ​தோன்றவில்​லை. இது குறித்த விவாத​மோ, கருத்துப்பரவ​லோ ஏற்படாத வண்ணம் ஜாக்கிர​தையாக ​பேசுகிறவர்கள் எப்படி நல்ல ஆ​ரோக்கியமான விவாதச் சூழல் இல்​லை என்பது குறித்​தெல்லாம் கவ​லைப்பட அருக​​தையு​டையவர்கள் ஆவர்?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: