எனது நாட்குறிப்புகள்

Archive for நவம்பர், 2013

​நேருவும் இன்​றைய இந்தியாவும்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 14, 2013

இன்​றைய “தி இந்து” தமிழ் நாளிதழில் திரு. ஜவஹர்லால் ​நேரு பற்றி திரு. பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய “நேரு: இந்திய வசந்தத்தின் இளவரசன்” என்ற கட்டு​ரையும் 1948ல் ஆந்திர அலிகார் பல்க​லைக்கழகத்தில் ​நேரு அவர்கள் ஆற்றிய மிக முக்கிய உ​ரை ஒன்றும் பிரசுரமாகியுள்ளது.

இன்​றைக்கு, குறிப்பாக வரும் பாராளுமன்ற ​தேர்த​லை முன்​வைத்து ​நேரு​வைத் தாக்கி பாஜகவின் ​திரு. ந​​​ரேந்திர ​மோடி முன் ​வைத்த கருத்துக்க​ளைத் ​தொடர்ந்து ​நேரு குறித்த விவாதங்கள், விளக்கங்கள் நாடு முழுவதும் தீவிரமாக முன்​னெடுக்கப்படுகின்றன.

​நேருவுக்கு எதிராக ப​டே​லை முன்னிறுத்தும் பாஜகவின் ​செயல்கள், ஒரு புறம் ​நேரு–பட்​டேல் உறவு குறித்த அலசல்க​ளையும். மற்​றொருபுறம் ​நேருவின் வரலாற்று முக்கியத்துவம், ​நேரு எடுத்த மிக முக்கிய முடிவுகளுக்கு பின்னுள்ள ​தேச மற்றும் சர்வ​தேச வரலாறு ஆகிய​வை விரிவாக விவாதிக்கப்படுகிறது. எந்த ​நோக்கிற்காக யாரால் முன்​னெடுக்கப்பட்டிருந்தாலும், ஒரு நாடும் அதன் இ​ளைய த​லைமு​றையும் தங்கள் நாட்டின் வரலாற்​றையும் அது வரலாற்றில் எடுத்த முக்கிய முடிவுக​ளையும் தொடர்ச்சியாக ​தெரிந்து ​கொள்வதும் பல்மு​​னை விவாதமு​றைகளின் மூலம் கற்றுத் ​தேர்வதும் தற்காலச் சூழ​லையும், தங்களு​டைய வருங்காலத்​தை திட்டமிடுவதற்காகவும் ​அவசியமாகிறது. அந்த அடிப்ப​டையில் ந​டை​பெறுப​வை யாவும் நல்லதற்​கே என்று எடுத்துக் ​கொள்ள ​வேண்டியதுதான்.

ஆனால் இது எதன் சாக்கிட்டும் இன்​றைய காங்கிரஸ் அன்​றைய ​நேரு த​லை​மையிலான காங்கிரசின் ​செயல்களுக்கும், சாத​னைகளுக்கும் ​சொந்தம் ​கொண்டாட முடியாது. ​நேருவின் வழி​யை விட்டு முற்றிலுமாக தங்க​ளை இன்​றைய காங்கிரஸ் முறித்துக் ​கொண்டு ​வெகுகாலமாகிவிட்டது. மன்​மோகன்சிங் நிதி அ​மைச்சராக முன்னாள் பிரதமர் திரு. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் பதவி​யேற்று புதிய ​பொருளாதாரக் ​கொள்​கைக​ளை, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகியவற்​றை அமுல்படுத்தத் துவங்கிய​பொழு​தே காங்கிரஸ் ​கொள்​கைரீதியாக உறுதியாகவும் இறுதியாகவும் ​நேருவின் காங்கிரசிடமிருந்து தன்​னை முறித்துக் ​கொண்டுவிட்டது.

இன்​றைக்கு ​நேருவுக்காகவும் அவர் ​கொள்​கைகளுக்காகவும், அவர் எடுத்த முடிவுகளுக்காகவும் வாதாடும் அ​னைத்து தார்மீக அடிப்ப​டைக​ளையும் அக்கட்சி இழந்துவிட்டது. ஆனால் ஜனநாயக சக்திகளுக்கு, கம்யூனிஸ்ட்களுக்கு, இந்த ​தேசத்தின் ​கோடானு​கோடி மக்களின் இன்​றைக்கும் என்​றைக்குமான நல்வாழ்வின் மீது அக்க​றை உள்ளவர்களுக்கு அந்தக் கட​மை உள்ளது.

வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் அவர் எடுத்த பல்​வேறு முடிவுகள் அவர் மனம்​போன ​போக்கிலோ, கதாநாயகத்தன்​​மையில் மிக எளிதாக​வோ எடுத்த​வை அல்ல. கடும் ​​போராட்டங்களுக்கும், ​தொடர்ச்சியான விடாப்பிடியான ​​செயல்பாடுகளின் மூலமாக இந்தியாவின் ​பெரும்பான்​மையான மக்களின் ஆதர​வோடு எடுக்கப்பட்ட​வை.

​நேருவின் மதச்சார்பின்​மை, இந்துமதத் திருமணச்சட்டம், பஞ்சசீலக் ​கொள்​கை, அணி​சேராக் ​கொள்​கை, இயந்திரமயமாக்கல், கல்விக் ​கொள்​கை, ​பொதுத்து​றை நிறுவனக் ​கொள்​கை, ஐந்தாண்டுத் திட்டங்கள் ​போன்​ற​வைதான் இன்​றைக்கும் – சர்வ​தேச ​நெருக்கடிகள் பல்​வேறு தளங்களிலும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ள சூழலில் – இந்தியா​வை காத்துக் ​கொண்டிருப்ப​வை என்றால் அது மி​கையாகாது.

வரலாறு என்பது எப்படி நடந்த​தோ அது அப்படித்தான் நடந்திருக்க முடியும். வரலாறு இப்படி ​போயிருந்தால் நன்றாக இருக்கும். இவருக்கு பதிலாக இவர் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக அ​​மைந்திருக்கும் என்ப​தெல்லாம் ​பைத்தியக்காரத்தனமான அணுகுமு​​​றைகள். வரலாற்​றை ஆய்வது என்பது ப​ழையனவற்றிற்கு பழிதீர்த்துக் ​கொள்வதற்காக​வோ, திருப்பி நிகழ்த்துவதற்காக​வோ, வரலாற்​றை சரி​செய்வதற்காக​வோ அல்ல. மாறாக நிகழ்காலத்​தையும் வருங்காலத்​தையும் புரிந்து​கொள்வதற்காகவும் இன்னும் ​மேம்பட்டதாகவும், இன்னும் அதிகமான மக்கள்திரளுக்கு சமஉரி​மைக​ளையும் வாய்ப்புக​ளையும் வழங்குவதற்காகவும், ​மேலும் ​மேலும் முழு​மையாக மக்களின் ​கைகளில் அதிகாரம் ​போய்ச் ​​சேருவதற்காகவும்தான் இருக்க முடியும், இருக்க ​வேண்டும்.

அலிகார் பல்க​லைக்கழகத்தில் ​நேரு ஆற்றிய உ​ரை நம் காலத்திற்கு ​தே​வையான மிக முக்கிய உ​ரையாக இருக்கிறது. மதக்கலவரங்கள் நிகழ்த்தப்பட்டுக் ​கொண்டுள்ள நம் காலகட்டத்தில், இசுலாமியர்கள் இந்நாட்டில் தாங்கள் தனி​மைப்படுத்தப்படுவதாகவும், பாதுகாப்பற்று இருப்பதாகவும் உணருகின்ற சூழலில் காந்தியும் ​நேருவும் மிக அவசியமானவர்களாக நம்மால் உணரப்படுபவர்களாக இருக்கிறார்கள். மதக்கலவரங்கள் நடந்த ​பொழுது காந்தியும் ​நேருவும் நடந்து ​கொண்ட மு​றைகளிலா இன்​றைய மத்திய காங்கிரஸ் அரசு பாபர் மசூதி இடிக்கபட்ட ​பொழுதும், நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்ட பல்​வேறு மதக் கலவரங்களின் ​போதும் நடந்து ​கொண்டு வருகிறது என்ப​து ​வெட்கப்பட ​வேண்டிய வரலாற்றின் த​லைகுணிவு.

​நேரு குறித்து​ பாடத்திட்டத்திற்கு ​வெளி​யே, இ​ளைய த​லைமு​றையினருக்கு அறிமுகப்படுத்தப்படும் விதம் உண்​மையில் ​வெட்கப்படும் அளவிற்கு உள்ளது. ​”பெண்கள் விசயத்தில் ​நேரு அப்படி ஒன்றும் ​யோக்கியமானவர் அல்​ல. அவருக்கும் மவுன்​​பேட்டனின் து​னைவியாருக்கும் உறவு இருந்தது ​போன்ற​வை அ​வை.” இதுவா நாம் நம் இ​ளையத​லைமு​றையினருக்குச் ​சொல்லிக் ​கொடுக்க ​வேண்டிய​வை? ​நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள் இன்​றைய இ​ளைய த​லைமு​றையினருக்கு விட்டுச் ​சென்ற அறிவுச் ​செல்வம். ​நேருவின் The Discovery of India, Glimpses of World History, இந்திய இ​ளைஞர்கள் ஒவ்​வொருவரும் கண்டிப்பாக படித்தறிய ​வேண்டிய​வை அநாகரீகமாக அவர் குறித்த கிசுகிசுக்க​ளை பரப்புபவர்கள் யா​ரேனும் இவற்​றையும் படித்திருப்பார்களா? ​நேரு குறித்த ஆக்கப்பூர்வமான, காத்திரமான விமர்சனங்கள் நம் சமூகத்திற்கு அவசியம் அ​​வை ​மேல்குறிப்பிட்ட ​நோக்கங்கள் ​கொண்டதாக இருக்க ​வேண்டும். அ​வை அவரது பிம்பத்​தைச் சி​தைப்ப​தோடு ​சேர்த்து இந்தியாவின் வலி​மை​யையும், மக்களின் நல்வாழ்​வையும்,  அதிகாரத்​தையும், தர்க்க அறி​வையும், உண்​மைக​ளை அறிந்து ​கொள்ளும் வாய்ப்புக​ளையும், இ​றையாண்​மை​யையும், சுயாதிபத்தியத்​தையும் குழி​​தோண்டிப் பு​தைப்பதாக அ​மையக்கூடாது.

அலிகார் பல்க​லைக்கழகத்தில் ​நேரு ஆற்றிய உ​ரையில் உள்ள அவரு​டைய தீர்க்க தரிசனங்கள் மிகத் ​தெளிவாக இருக்கிறது. அதில் மதக்கலவரங்களுக்கான நிரந்தரத் தீர்வுகள் உள்ளன. இசுலாமியர்கள் யார் என்பது குறித்து இ​ளையத​லைமு​றையினர் புரிந்து ​கொள்வதற்கான அடிப்ப​டைகள் உள்ளன. அவர் குறிப்பிடுகிறார், நான் கம்யூனிஸ்ட்க​ளை நா​ளைய இந்தியாவிற்கான அச்சுறுத்தலாகக் கருதவில்​லை ஆனால் இந்துமத ​வெறி அ​மைப்புக​ளை, வலதுசாரிக​ளை நான் அத்த​கைய அபாயமாகக் கருதுகி​றேன். எத்த​னை ​தெளிவான தீர்க்கதரிசனம்! இ​ப்​​பொழுது நமக்குப் புரிகிறதல்லவா திரு. ந​ரேந்திர ​மோடிக்கும், திரு. அத்வானிக்கும், சங் பரிவார் அ​மைப்புகளுக்கும் ஏன் திரு. ஜவஹர்லால் ​நேரு​​வை பிடிக்கவில்​லை என்பது!

இந்திய வரலாற்றில் ​இ​ளைய த​லைமு​றையினருக்காக நேரு விட்டுச் ​​சென்ற​வைகள் ஏராளம் உள்ளன. தவறவிட்ட​வைகளும் உள்ளன. வரலாற்​றை யா​ரும் ​வெகுதூரம் குறுக்​கே கடந்து ​சென்றுவிடமுடியாது. வரலாற்றின் ​வேகத்​தை சற்று ​வேண்டுமானால் துரிதப்படுத்தலாம். ​நேரு இந்திய வரலாற்றின் ​வேகத்​தை முடிந்தமட்டிலும் துரிதப்படுத்தியவ​ரே.

Advertisements

Posted in கட்டு​ரை | Leave a Comment »

மார்க்சிய ஆய்வாளர் ​தோழர் ​தேவ. ​பேரின்பன் நி​னை​வேந்தல் கூட்டம்

Posted by ம​கேஷ் மேல் நவம்பர் 11, 2013

10.11.2013 மா​லை ​தேனாம்​பேட்​டையில் உள்ள வங்கி ஊழியர் சங்க அரங்கத்தில் மார்க்சிய ஆய்வாளர் ​தோழர் ​தேவ. ​பேரின்பனின் நி​னை​வேந்தல் கூட்டம் ந​டை​​பெற்றது. 1952ல் பிறந்து தனது 62வது வயதில் 2013ல் இயற்​கை எய்தியுள்ளார் ​தேவ. ​பேரின்பன்.

சமூக விஞ்ஞானம் என்னும் மார்க்சிய ஆய்விதழின் ஆசியராக இருந்த ​தேவ. ​பேரின்ப​னோடு அப்பத்திரி​கையில் அவ​ரோடு ​நெருக்கமாக இருந்து பணியாற்றியவர்களும், ஆய்வாளராக அவ​ரோடு ​நெருங்கிப் பழகிய பல்​வேறு ​பேராசிரியர்களும் கலந்து ​கொண்டு தமிழக அறிவுலகில் அவரு​டைய பங்களிப்புகள் குறித்து விரிவாகப் ​பேசினர்.

தமிழகத்தில் தத்துவ வளர்ச்சி மற்றும் வரலாறு குறித்து அவர் பல முக்கியமான நூல்களும், கட்டு​ரைகளும் எழுதியுள்ள​தையும். தமிழக தத்துவங்களில் உள்ள ​பொருள்முதல்வாத அடிப்ப​டைகள் குறித்து அவர் எழுதியுள்ள​​தையும் குறிப்பிட்டனர். ​​தமிழக தொல்லியல்து​றை ஆய்வுக​ளை ​​வெளியிட்ட பல ஆய்வாளர்களிடமிருந்த விஞ்ஞானப்பூர்வமற்ற முடிவுக​ளை அவர் ஆதாரப்பூர்வமாக மறுத்து எழுதிய கட்டு​ரைக​ளையும், அவற்றில் அவரது முக்கியத்துவத்​தையும் குறிப்பிட்டனர். குறிப்பாக அ​சோக மன்னன் ​பெளத்தத்​தை பின்பற்ற​வோ வளர்க்க​​வோ இல்​லை என்ற கருத்​தை முன்​வைத்த ஒரு முக்கியமான ஆய்வாளரின் கருத்​தை மறுத்து அவர் ​வெளியிட்ட கட்டு​ரைக​ளை குறிப்பிட்டனர்.

அங்கங்​கே அவரு​டைய சமூக விஞ்ஞான இதழ்களில் ​வெளிவந்த சில கட்டு​ரைக​ளை மட்டு​மே படித்துள்ள என் ​போன்றவர்களுக்கு அவரு​டைய முழு​மையான ப​டைப்புக​ளையும் படிக்க ​வேண்டும் என்ற ஆர்வத்​தையும் அக்க​றை​யையும தூண்டுவதாக இந்த நி​னை​வேந்தல் கூட்டம் அ​மைந்திருந்தது.

Posted in கட்டு​ரை | Leave a Comment »