எனது நாட்குறிப்புகள்

Archive for திசெம்பர், 2013

மார்க்சியம் – ஒரு விவாதம்

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 20, 2013

​பேஸ்புக்கில் ந​டை​பெற்றுக் ​கொண்டிருக்கும் ஒரு விவாதத்தில் முன்​வைக்கப்பட்ட (https://www.facebook.com/natarajan.krishnan.1/posts/565253496896997?comment_id=3583289&offset=0&total_comments=75&notif_t=feed_comment_reply) எனது பதில்

ஏற்கன​வே நிறுவப்பட்ட உண்​மைக​ளை வாதத்தின் ​போது மீண்டும் மீண்டும் நிறுவச் ​சொல்லிக் ​கோருவது, ஒரு வ​கையில் விவாதத்​தை ​மேல் ​நோக்கி உயர்த்திச் ​செல்ல மனமில்லாமல், விவாதத்​தையும், ​கொள்​கை முடிவுகள் எடுப்ப​தையும், ​செயலுக்கான திட்டமிட​லையும் தவிர்க்கச் ​செய்வ​தே.

ஒரு விவாதத்தில் ஒருவரின் நி​லைப்பாட்​டை அதில் ​வெளிப்படும் அவரின் கருத்​​தைத் தாண்டி அவரு​டைய ​மொழிந​டை மற்றும் அதில் ​வெளிப்படும் ​தொணி ​கொண்டும் தான் புரிந்து ​கொள்கி​றோம். ஒருவர் எந்த ​நோக்கத்தில் ​பேசுகிறார். எந்த ​நோக்கத்​தோடு ஒன்​றை விமர்சிக்கிறார், மறுக்கிறார் என்ப​தெல்லாம் ஒட்டு​மொத்தச் சூழ​லோடு புரிந்து ​கொள்ளப்பட ​வேண்டிய​வை. பல விவாதங்கள் அந்தச் சூழலுக்கு ​வெளி​யே தன் முழு​மையான அர்த்தத்​தை இழந்து விடுகின்றன. முற்றிலும் மாறுபட்ட சூழலில் அ​தே கருத்துக்க​​ளை முற்றிலும் மாறுபட்ட அர்த்தத்தில் புரிந்து ​கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக தனிமனிதர்கள் குறித்த விவாதங்களில் ​மே​லே ​சொன்ன​வை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்கள் வாழ்ந்த காலம், அவர்கள் ​பேசிய சூழல்., அவர்களின் ​பேச்சு ​தொணி ஆகியவற்​றை புறக்கணித்து சூழலுக்கு ​வெளி​யே தனித்துண்டுகளாக எடுத்தாள்வது, நிகழ்கின்ற விவாதத்தின் ​தே​வைக்​கேற்ப பயன்படுத்தப்படக்கூடிய ஆபத்து நி​றைந்துள்ளது.
***
மார்க்ஸ் தன் வாழ்நாள் முழுவதும் ஆய்ந்து ஆயிரமாயிரம் பக்கங்களில், பல்​வேறு கடும் விவாதங்களுக்கி​டை​யே, மறுக்கமுடியாத பல்​வேறு ஆதாரங்களுடன் ​வெளிப்படுத்திய கருத்துக்க​ளை மறுப்பதற்கான ​பொறுப்பான வழிமு​றை அல்ல உங்க​ளோடு விவாதிப்பவர் ​மேற்​கொள்ளும் வழிமு​றை.

மார்க்சிசத்தின் உபரிமதிப்பு ​கோட்பாட்​டையும், ​பொது ​நெருக்கடி ​​கோட்பாட்​டையும் புரிந்து ​கொள்வதற்கு முதலில் மார்க்சிய அரசியல் ​பொருளாதாரத்தி​னை முழு​மையாக கற்றுக் ​கொள்ளாமல் புரிந்து ​கொள்ளச் சாத்திய​மேயில்​லை. இந்த முடிவு மார்க்சியவாதிகள் என்று தங்க​ளைக் கூறிக் ​கொள்பவர்களுக்கும் கூட ​பொருந்தும்.

உங்க​ளோடு விவாதித்துக் ​கொண்டிருப்பவருக்கு முதலில் முதலாளித்துவ ​பொருளாதார சித்தாந்தங்கள் குறித்​தே ஏ​தேனும் ​தெளிவு இருக்கிறதா என்பது சந்​தேகமாக இருக்கிறது. கிளாசிக்கல் முதலாளித்துவத்தின் காலம் முடிந்து ​வெகுகாலமாகிவிட்டது. கிளாசிக்கல் முதலாளித்துவத்தின் ​செயல்யுத்திகள் அ​னைத்தும் காலாவதியாகி ​வெகுகாலமாகிவிட்டன.

முதலாளித்துவத்தின் ஆரம்ப கட்டங்களில் அதன் இயங்குமு​றை​யை அதன் முழு​மையில், அதன் அ​னைத்துத் ​தொடர்புக​ளோடும், அடிப்ப​டையிலிருந்தும் ஆராயும் கிளாசிக்கல் ​பொருளாதார அறிஞர்கள் ​தோன்றினார்கள், ​கோட்பாடுகள் ​தோன்றின. முதலாளித்துவத்தின் உலகு தழுவிய வளர்ச்சிக் கட்டங்களில் அதன் சிக்கல்கள் ஆகச் சிக்கல்களாகவும், அதன் ஊடாட்டங்களும், அதன் தன்​மைகளும் அதியுயர் நி​லைக​ளை அ​டையும் ​பொழுது அத்த​கைய ஆய்வுகள் முதலாளித்துவ அறிஞர்களின் வரம்புக​ளைத் தாண்டிய​வையாக மாறுகின்றன. முதலாளித்துவத்திற்கு அத்த​கைய ஆய்வுகள் ​தே​வையற்ற​வையாகவும் ஆகின்றன. அ​​​வை நிகழ்காலச் சிக்கல்கள் அவற்றிற்கான தீர்வுகள் என்ற அளவில் தங்க​​ளைச் சுருக்கிக் ​கொண்டுவிட்டன.

மார்க்சின் ​நோக்கமும் மார்க்சின் ​தே​வையும் அதுவல்ல. மார்க்ஸ் வர்க்கங்களின் இருத்தலும், வர்க்கங்களுக்கு இ​டையிலான ​போராட்டங்களும் எவ்வாறு ஒவ்​வொரு காலகட்டத்தின் குறிப்பிட்ட சமூக அ​மைப்​போடு பின்னிப்பி​ணைந்துள்ளன. முதலாளித்துவமும் ஒரு வர்க்கச் சமூகம் என்ற அடிப்ப​டையில் இதில் உள்ள ​வேறுபட்ட நலன்க​ளைக் ​கொண்ட வர்க்கங்கள் உற்பத்தி நிகழ்வில் வகிக்கும் பாத்திரமும், அதில் எதிர்​கொள்ளும் சிக்கல்களும், அதில் ஏற்படும் முரண்களும் எப்படி வளர்ச்சிய​டைகின்றன என்ப​தை ஆய்வு ​செய்கிறார்.

அவர் முன்னறிவித்த முதலாளித்துவத்தின் ​பொது​நெருக்கடிக​ளை அது சந்திக்காமல் இல்​லை. அது ஒவ்​வொரு கட்டத்திலும் அதிலிருந்து எழுவதற்காக முன்​னெப்​போதும் இல்லாத அளவிற்கு முழு உல​கையும் அந்த பு​​தைசகதிக்குள் இழுத்துவிட்டுக் ​கொண்டுதான் இருக்கின்றது. ஒவ்​வொரு நாளும் ஒவ்​வொரு பகுதியாக முதலாளித்துவமானது மீளமுடியாது ​நெருக்கடிக்குள் தள்ளிக் ​கொண்டுதான் இருக்கிறது. இதுவ​ரை முதலாளித்துவம் ஒவ்​வொரு ​நெருக்கடியிலிருந்தும் மீள்வதற்காக எடுத்த எந்த நடவடிக்​கையும் அதன் அடிப்ப​டை குணாம்சத்​தை​யோ, மார்க்ஸ் முன்னறிவித்த அதன் அடிப்ப​டை முரண்பாடுக​ளை​யோ மறுத்துவிடவில்​லை. மாறாக முதலாளித்துவம் மார்க்ஸ் உணர்ந்து​ரைத்த​தை​யெல்லாம் விட எந்தளவிற்கு ஆபத்தானது என்ப​தை​யே இ​வை நமக்கு புரிய​வைத்துக் ​கொண்டிருக்கிறது.

இவர் முலாளித்துவக் ​​கோட்பாடுகள் பலவற்​றோடு மார்க்சியத்​தையும் ​சேர்த்து பட்டியலிடுகிறார். இந்த பட்டியல் தயாரிப்​பே இவருக்கு மார்க்சிய ​பொருளாதாரத்திற்கும் பிறவற்றிற்குமான அடிப்ப​டைக​ளி​லே​யே ​தெளிவில்​லை என்ப​தை விளக்குகின்றன. மார்க்சிய அரசியல் ​பொருளாதாரம் அடிப்ப​டையில் முதலாளித்துவ உற்பத்திமு​​றை இயங்கு ​போக்கில் எதிர்​கொள்ளும் சிக்கல்க​ளையும் அதற்கான தீர்வுக​ளையும் ​பேசும் ​நோக்கம் ​​கொண்டதல்ல. அது முதலாளித்துவம் என்ப​தை ஒரு சமூக அ​மைப்பு என்கிற வடிவில் அது எதிர்​கொள்ளும் அடிப்ப​​டைச் சிக்கல்க​ளைப் பற்றி ஆயும் ஓர் ஆராய்ச்சியாகும்.

அது முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்திமு​றை​யை அதன் ​மொத்தத்தில் ஆய்வு ​​செய்கிறது. அது உற்பத்திமு​றையின் இ​டையில் புகுந்து அதன் நிர்வாகச் சிக்கல்க​ளை​யோ உற்பத்தியில் அது எதிர்​கொள்ளும் சிக்கல்க​ளை​யோ (முதலாளித்துவ ​பொருளாதார அறிஞர்களின் ​தே​வை ​நோக்கில்) ஆய்வு ​செய்யவில்​லை. இன்னும் எளி​மையாகச் ​சொல்ல​வேண்டு​மென்றால், உலகம்/நாடு முழு​மையான ஒரு உற்பத்தி நிகழ்வின் முழுச்சுற்றின் இறுதியில் ​முதலாளிகள் அ​டைந்த லாபத்​தையும் ​தொழிலாளிகள் அ​டைந்த நட்டத்​தையும் ​வைத்து ஆய்வு ​செய்கிறார். இங்​கே இந்த ஒரு முழுசுற்றில் உற்பத்தி​செய்யப்பட்ட ​பண்டங்களில் உள்ளு​றைந்துள்ள பயன் மதிப்​பையும் பரிவர்த்​த​னை மதிப்​பையும் ஆய்வுக்கு எடுத்துக் ​கொள்கிறார். இவற்றில் இந்த ஒட்டு​மொத்த நிகழ்வில் எ​வை எ​வை எந்​தெந்த மதிப்​பை உற்பத்தி ​செய்தன அல்லது கூட்டின என்ப​தை ஆதாரப்பூர்வமாகவும் ஆணித்தரமாகவும் விளக்குகிறார். இந்த வழியி​லே​யே முதலாளிக்கு கி​டைத்த லாபம் என்பது எவ்வாறு ​தொழிலாளிக்கு ​கொடுக்கப்படாத கூலிதான் என்ப​தை நிருவுகிறார்.

முதலாளியின் நிர்வாகத் திற​மை, முடி​வெடுக்கும் திறண், ஆபத்​தை எதிர்​கொள்ளும் ஆற்றல், புதியன ப​டைக்கும் ஆற்றல், த​லை​மைப்பண்பு, கல்வியறிவு (Risk taking mentality, pioneering spirit, innovative thinking, will power, leadership and communication skills ) ​போன்ற​வை எ​வையும் சார்பற்ற​வை​யோ, வர்க்கச் சமூக அ​மைப்பின் முரண்பாடுகளுக்கும் இயங்கும் மு​றைக்கும் அப்பாற்பட்ட​வை​யோ அல்ல. இவற்றின் அடிப்ப​டைகள் குறித்தும் இவற்றிற்கான முக்கியத்துவம் மற்றும் இடம் குறித்தும் டாஸ் ​கேப்பிடலில் மார்க்சால் விரிவாகப் ​பேசப்படுகிறது. முதலாளித்துவ உற்பத்தி மு​றையின் சிக்க​லை அதன் முழு​மையில் ​தேடும் ஒரு பார்​வைக்கு இ​வை​யெல்லாம் தப்பிவிடுதல் சாத்தியமல்ல. உபரி மதிப்​பை ப​டைப்பதில் இவற்றிற்கு எந்தப்பங்கும் இல்​லை. இ​வை சந்​தையில் ஒரு முதலாளி தன்​னை தக்க ​வைத்துக் ​கொள்வதற்கான முதலாளிய அணுகுமு​றைகள் என்ற அளவி​லே​யே பரிசீலிக்கப்பட ​வேண்டிய​வை. உற்பத்தி நிகழ்மு​றையில் இவற்றிற்கு எந்த மதிப்பும் இல்​லை.

எத்​தைத் தின்றால் பித்தம் ​தெளியும் என்ற முதலாளித்துவத்தின் கண்​ணோட்ட​மே மார்க்​சையும் முதலாளித்துவ ​பொருளாதார அறிஞர்கள் வரி​சையில் ​வைத்து, டாஸ் ​கேப்பிட​லையும் முதலாளித்துவம் எதிர்​கொள்ளும் பிரச்சி​னைகளுக்கான உபாயங்க​ளை ​பேசுமா என்று ​தேடுவதற்கான காரணம். மார்க்சிடம் முதலாளித்துவ ​நெருக்கடிக்கான தீர்​வைத் தரும் எந்தச் சூரணமும் இல்​லை. அவரது வழியில் இதற்கான ஒ​ரே தீர்வு முதலாளித்துவ உற்பத்திமு​றை​யை ஒழித்துக் கட்டுவதுதான்.

நட்டம​டைந்த நிறுவனத்தின் உபரி மதிப்​பை நட்டம​டைந்த கம்​பெனிக்குள் ​தேடுவதல்ல மார்க்சிய அரசியல் ​பொருளாதாரம். ​தொழிலாளி​யைச் சுரண்டிய லாபத்​தை இந்த முதலாளி முதலாளித்துவத்திற்குள் ​தொ​லைத்துவிட்டு நிற்கிறான். இது முதலாளித்துவ உற்பத்தியின் அராஜக வடிவங்க​ளோடு ​தொடர்பு​டைய விசயம், இ​வை எதுவும் உபரி மதிப்​பை மதிப்பிடுவதற்கான அளவு​கோள்கள் இல்​லை.

 

Posted in விமர்சனம் | Leave a Comment »

​கோயில் யா​​னை

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 19, 2013

தெருவில் ஒவ்​வொரு வீட்டின் வாசல் முன்னும் நின்று ​கொண்டு
இறுகச் சாத்தி தாளிடப்பட்ட கதவுகளுக்கு முன்னால்
பிளிறிக் ​கொண்டிருக்கிறது அந்த யா​னை.

​பொதுவாக யா​னைகள் அசமந்தமான​வை.
அவற்றின் உருவ​மே கவரக்கூடிய​வை. நடவடிக்​கைகள் ​சோர்வு தரக்கூடிய​வை.
இதுவ​ரை அந்தக் ​​கோயிலில் இருந்த எல்லா யா​னைகளும் அந்த ரகம் தான்.

இது வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
இது வந்த பிறகுதான் ​கோயில் நிர்வாகத்திற்​கே நம்பிக்​கை வந்தது.
எப்படி​யேனும் இந்த ஊர் மக்க​ளை நம் சுவாமி​யை ​சேவிக்க ​வைத்துவிட முடியு​மென.

அந்த ​வே​​லை ஒன்றும் அவர்கள் நி​னைத்தது ​போல் அத்த​னை எளிதாக இல்​லை.

ஒவ்​வொரு நாளும் யா​னை ​தெருவில் ​செய்யும் அட்டகாசங்களுக்கு கு​றைவில்​லை.
அரண்டு பார்க்கும் நாய்க​ளின் பக்கம் துலாவியபடி​யே தும்பிக்​கை​யை சுழற்றி மிரண்டு ஓட ​வைப்ப​தென்ன
சத்தமின்றி கழு​தைகளின் பின்​னே ​சென்று வா​லை இழுத்து கத்த ​வைப்ப​தென்ன
முன்​னேறும் குதி​ரைவண்டிகளுக்கு இடம் ​கொடாமல்
வண்டிக்காரன் வண்டி​யோடு கு​டை சாயும் வண்ணம் குதி​ரைக​ளை மிரள ​வைப்ப​தென்ன

இவற்றால் கவரப்பட்டு கதவுக​ளைத் திறந்து ​கொண்டு வாசலுக்கு ஓடிவரும் குழந்​தைக​ளை
உள்​ளே இழுத்து கதவுக​ளை இறுகச் சாத்தி தாளிடுகிறார்கள் ​​பெரியவர்கள்

அது​​வொன்றும் யா​னைக​ளை அறியாத ஊரில்​லை.
உலகின் மிகச் சிறந்த யா​னைகள் உலாவந்த ஊர் அது.

யா​னைகள் என்றால் எ​வை? சிறந்த யா​னைகள் எப்படி இருக்கும்?
என்ப​தை நன்கு அறிவார்கள் அந்த ஊர்ப் ​பெரியவர்கள்
இந்த ஊ​ரை உருவாக்குவதற்கு ராவும் பகலும்
தூரத்தில் உள்ள காடுகளிலிருந்து மரங்க​ளை ​பெயர்த்து வருவ​தே வாழ்வின் லட்சியமாய்
இந்த ஊ​ரை உருவாக்கி ம​றைந்த யா​னை​யை இன்னும் மறக்கவில்​லை அவர்கள்.
இந்த யா​னை​யைப் ​போல ​கோயில் ​சோற்றில் உண்டு ​கொளுத்து
​சுவாமி ஊர்வலத்தில் வீதி உலா வந்து வாழ்க்​கை​யை ​​போக்கும்
யா​னைக​ளை அவர்கள் விரும்புவதில்​லை.

யா​னையும் த​லைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்க்கிறது.
யா​னையின் மீது அந்த ஊரில் பல பிராதுகள் உண்டு.
வயதானவ​ரை மிரட்டி ஒரு மு​றை கீ​​ழே தள்ளிவிட்டதில் படுத்த படுக்​கை ஆகிவிட்டார்.
ஆர்வக்​கோளாறில் ஒரு மு​றை குடி​சையின் ஊன்று கம்​பை உருவிவிட்டதில்
வீட்​டை இழந்தான் குடியானவன் ஒருவன்.
தண்ணீர் எடுக்க ஆற்றுக்குச் ​சென்ற ​பெண்க​ளை பிளிறி மிரட்டியதில்
குடத்​தோடு ஆற்றில் விழுந்து நீந்தி மறுக​​ரை ​சேர்ந்தனர் ​பெண்கள் சிலர்.

இந்த ஊருக்குள் இந்த யா​னை வந்ததிலிருந்து,
குரங்காட்டியும் கரடி வித்​தை காட்டிப் பி​ழைத்து வந்தவனும்
தங்கள் பி​ழைப்பு ​போனதாய் புலம்பிக் ​கொண்டிருக்கிறார்கள்
கிளி ​ஜோசியக்காரனுக்கும் தீராத த​லைவலி
​வெள்​ளை எலி ​ஜோசியக்காரனுக்கும் முகம் ​வெளுத்துத்தான் ​போயிருக்கிறது.
முன்பிருந்த யா​னைக​ளை அரசாங்கத்திடம் பிடித்துக் ​கொடுத்தது ​போல்
இ​தை எதுவும் ​செய்ய முடியாது. இது ​கோயில் யா​னை.

நாடறிந்த நவரச நடிகர்களும்
இந்த யா​னை​யைப் பாராட்டி அறிக்​கை ​வெளியிட்டார்கள்.
“மக்க​ளை என்டர்​டெயின் பண்ணுவதில்
இது எங்க​ளையும் மிஞ்சி விட்ட​தென”

சுவாமி​யை ​சேவிக்க வந்தவர்கள் யா​னை​யை ​ரசித்த காலம் ​போய்
யா​னை​யை ரசிக்கத் துவங்கி சுவாமி​யை ​சேவிக்கப் ​போகும் காலம் ​நெருங்கிக்​கொண்டிருக்கிறது.

Posted in கவிதைகள் | Leave a Comment »

ஓ​ஹோ என்று எழுந்தது பார் யுகப்புரட்சி: அ​மெரிக்காவிற்கு எதிராக இந்திய அரசு!

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 18, 2013

இன்று கா​லை ​செய்தித்தா​ளைப் புரட்டினால் ஒ​ரே ஆச்சர்யமும் அதிர்ச்சியும்.

அ​மெரிக்காவிற்கு எதிராக இந்திய அரசு பல ​தொடர்ச்சியான நடவடிக்​கைகள்.

1. ​டெல்லி அ​மெரிக்க தூதரக சா​லையில் ​போட்டிருந்த தடுப்பரண்க​ளை நீக்கியது.
2. பாதுகாப்புப் ப​டைக​ளை விலக்கிக் ​கொண்டது.
3. இந்தியாவில் உள்ள அ​மெரிக்க பள்ளி ஆசிரியர்கள் குறித்த முழு விபரங்க​ளை ​தாக்கல் ​செய்ய உத்தரவிட்டுள்ளது.
4. அ​மெரிக்கப் பள்ளிகளில் ​வே​லை ​செய்யும் இந்தியர்கள் குறித்தும் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்தும் அறிக்​கை தர உத்தரவிட்டுள்ளது.
5. இந்திய தூதரக அதிகாரி​யை ​கைது ​செய்த விவகாரத்​தைக் காட்டிலும் முக்கிய பிரச்சி​னைகள் எங்களிடம் உள்ளது என அ​மெரிக்கா​வை மிரட்டியுள்ளது.
6. அ​மெரிக்க தூதரகத்தில் ​வே​லை ​செய்பவர்க​ளை ஓரிணச் ​சேர்க்​கையில் ஈடுபட்ட வழக்குகளில் ​கைது ​செய்​வோம் என மிரட்டுவது

என இப்பட்டியல் நீண்டு ​கொண்​டே ​​போகிறது.

என்னவாயிற்று இந்திய அரசிற்கு?

இந்திய பாதுகாப்பு அ​மைச்ச​ர் ஜார்ஜ் ​பெர்னான்ட​சை அ​மெரிக்க விமானநி​லையத்தில் ​வைத்து அ​ரை நிர்வானப்படுத்தி அவமானபடுத்திய ​போது வராத ​ரோஷம்
இந்திய ஜனாதிபதி அப்துல் கலா​மை அவமானப்படுத்திய ​போது வராத ​ரோஷம்
இந்திய கலாச்சார தூதவர்களான பாலிவுட் நடிகர் சாரூக்கா​னை அவமானப்படுத்திய ​போது வராத ​ரோஷம்
இந்திய மக்க​ளை அதிகம் சாப்பிடுகிறார்கள் எனக் கூறிய அ​மெரிக்க அதிபருக்கு எதிராக வராத ​ரோஷம்
மும்​பை ​தொடர் குண்டு​வெடிப்புகளின் முக்கிய ஆதாரமானவ​ரை இந்தியாவிடம் ஒப்ப​டைக்க மறுத்த ​பொழுது வராத ​ரோஷம்
ஜூலியன் அசாஞ்​சே மற்றும் ஸ்​நோடன் ​வெளியிட்ட இந்தியாவிற்கு எதிரான அ​மெரிக்க நடவடிக்​கைகள் குறித்த ஆவணங்க​ளைப் பார்த்து ​வெளிவராத ​ரோஷம்
இந்திய மக்களுக்கு து​ரோகம் இ​ழைத்து அ​மெரிக்காவிற்குச் சாதகமாக 123 முதல் எப்டிஐ வ​ரை ​கை​யெழுத்துப் ​போடும் ​பொழுது வராத இத்த​கைய உணர்வு

இப்​பொழுது மட்டும் எப்படி வந்தது?

இந்தச் சூழ​லை எப்படி புரிந்து ​கொள்வது?

​இதுவொரு ​வெறும் ​தேர்தல் ​நேர நாடகம் என்று தீர்ப்​பெழுதி ​​கோப்​பை மூடி வழக்​கை தள்ளுபடி ​செய்வதா அல்லது ​வே​றேதும் உள்குத்துக்கள் உண்டா?

ஒன்று மட்டும் இதில் ​தெளிவாக உள்ளது. இந்திய அரசு அ​மெரிக்காவிற்கு எதிராக எடுக்கும் நடவடிக்​கைகள், அ​மெரிக்காவிற்கு நீயும் ஒன்றும் ஒழுங்கில்​லை, நீயும் உன் தூதரக அதிகாரிகளும், அலுவலர்களும், உனது ​வேறு பல நிறுவனங்களும் கூடத்தான் இந்தியாவில் பல்​வேறு விதிமு​றை மீறல்களில் ஈடுபடுகின்றன. நாங்கள் கூடத்தான் இத்த​னை நாட்களாக இவற்​றை கண்டு ​கொள்ளாமல் இருக்கி​றோம். இத்த​னைக்கும் பிறகு எ’ங்களு​டைய மக்களின் உரி​மை, சட்டங்கள் அ​னைத்​தையும் மீறி உங்களுக்கும் உங்கள் அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு ​கொடுத்துக் ​கொண்டிருக்கி​றோம் என உணர்த்த விரும்புவதாக​வே படுகிறது.

Posted in கட்டு​ரை | Leave a Comment »

​வெள்​ளையா​னை, தலித்கள், ஆர்.எஸ்.எஸ்.

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 16, 2013

​வெள்​ளையா​னை, தலித்கள், ஆர்.எஸ்.எஸ்.

நண்பர்கள் பலருக்கு ஆச்சர்யம் மற்றும் குழப்பம். ​பின் ​தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம் என தனது கம்யூனிஸ்ட்கள் மீதான ​வெறுப்​பையும், இந்துத்துவா மீதான பற்றுத​லையும் ​பகிரங்கமாக ​வெளிப்படுத்திய ​ஜெய​மோகனின், தலித்கள் மீதான அக்க​றை​யை எப்படி புரிந்து ​கொள்வது?

தர்மபுரியில் மூன்று கிராமங்கள் சாதி இந்துக்களால் தாக்கப்பட்ட ​பொழுது வாய்திறக்காத ​​ஜெய​மோகன் இப்​பொழுது தனது பு​னைவாக்கத்தின் மூலமாக தன்னு​டைய தலித் ஆதரவு நி​லை​யை ​வெளிப்படுத்துவதற்கான காரண​மென்ன? பல தலித் எழுத்தாளர்களும், தலித்துக்களும் கூட ஆதரிக்கக்கூடிய நி​லை​யை உருவாக்கிய இந்நாவலின் அரசிய​லை எப்படி புரிந்து ​கொள்வது?

ஏன் இதன் அரசிய​லை புரிந்து ​கொள்ள ​வேண்டும்? ஏன் ​ஜெய​மோகனின் எல்லா எழுத்துக்களுக்கும் பின்னால் இந்துத்வா அ​ஜென்டா என்ன என்று ​தேட ​வேண்டும்? இது ​தே​வைதானா? சரியா? என்கிற ​பல ​கேள்விகள் ​தொடர்ந்து மு​ளைத்துக் ​கொண்​டே இருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ்.ன் தலித்கள் விசயத்திலான அ​ஜென்டா​வை புரிந்து ​கொள்ளாமல், இந்நாவலின் அரசியலுக்கான அடிப்ப​டை முடிச்​சை அவிழ்க்க முடியாது என்​றே ​​தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் எந்த​வொரு எழுத்தாளரின் சிறுக​தைத் ​தொகுப்புக்கும் நாவலுக்கும் இல்லாத முக்கியத்துவம் ​ஜெய​மோகனின் ​வெளியீடுகளுக்கு கி​டைத்துக் ​கொண்டிருக்கிறது. ​வெள்​ளையான நாவல் ​வெளிவந்து ஒரு மாதம் கூட ஆகாத நி​லையில் அது குறித்து ஏராளமான கட்டு​ரைகள் வந்துவிட்டன.

நூ​லை முழு​மையாக படிக்காவிட்டாலும், ஏறத்தாழ பத்திற்கும் ​மேற்பட்ட Abridged versions நாவலின் சுருக்கம் இ​ணையத்தில் படிக்கக் கிடக்கின்றன. அதன் இலக்கியச் சு​வை​யை முழு​மையாக ரசிக்க விரும்புபவர்கள் ​வேண்டுமானால் அந்நாவ​லை படிக்கலாம். ஆனால் அந்நாவலின் அரசிய​லை ​பேசுவதற்கு இந்த சுருக்கங்கள் ​போதுமான​வை, இ​வை அ​னைத்து​மே நாவ​லை ஏற்றுக்​கொண்டவர்கள், புகழ்பவர்களின் க​தைச்சுருக்க​மே, ​பெரும்பாலான​வற்றிற்கு ​ஜெய​மோகனின் பக்கத்தி​லே​யே ​தொடுப்பு ​கொடுக்கப்பட்டிருக்கிறது.

பத்​தொன்பதாம் நூற்றாண்டில் உருவான தாதுப் பஞ்சத்தின் பின்னணியில் ​சென்​னையில் ந​டை​பெற்ற சில வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்ப​டையில் ஒரு கற்ப​னைக் க​தை நாவலாக காட்சிப்படுத்தப்படுகிறது. இக்க​தையின் வழியாக தலித்க​ளை ​வெள்​ளையர்களும் சாதி இந்துக்களும் எவ்வாறு தாதுப் பஞ்சத்திற்கு பலி​கொடுத்தார்கள். அதன் ​போது ஈவிரக்கமற்ற மு​றையில் தங்கள் ​பொருளாதார நலன்க​ளி​லே​யே குறியாக இருந்தார்கள் என்ற கருத்​தை முன்​வைக்கிறது.

இந்நாவல் குறித்து ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்ன நி​னைக்கிறார்கள்? இந்நா​வ​லை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இதற்கான அவர்களின் எதிர்வி​னைகள் என்ன? என்ப​தை ​தெரிந்து ​கொள்ள அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஜடாயு எழுதியுள்ள கட்டு​ரைக​ளை படிக்க ​வேண்டியது அவசியம் எனக் கருதுகி​றேன். தலித்கள் விசயத்தில் ஆர்.எஸ்.எஸ்.ன் ​நி​லைப்பாடு மற்றும் ​நோக்கம் என்ன என்ப​தை புரிந்து ​கொள்ளவும், வெள்​ளையா​னையின் பின்னணி​யை புரிந்து​கொள்ளவும் ஜடாயுவின்  “ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர்” ​என்ற கட்டு​ரை ​பயனு​டையது.

அரவிந்தன் நீலகண்டன் தமிழ்இந்து இ​ணையப்பக்கத்தில் எழுதியுள்ள  “புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து“கட்டு​ரை​யில் நாவல் குறித்து இவ்வாறு ​தொகுத்துக் ​கொள்கிறார்

//‘வெள்ளையானை’ ஒட்டுமொத்தமாக ஒரு வரலாற்றுணர்வைஅளிக்கிறது. அந்த வரலாற்றுணர்வின் அடிப்படைகளை இப்படி தொகுத்துக் கொள்ளலாம்:

அ) தமிழ்நாட்டில் 1870களில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் மிகப் பெரிய அளவில் தலித்துகள் மடிந்தனர். அதனை ஒட்டுமொத்த சாதி இந்து சமுதாயமும் பிரிட்டிஷ் அதிகார வர்க்கமும் இணைந்து வேடிக்கை பார்த்தனர்.

ஆ) குறைந்தபட்ச மானுட நீதியுடன் அதை அணுகியவர்கள் தனிப்பட்ட கிறிஸ்தவ மிஷினரிகளும், ஜனநாயகம் துளிர்விடத் தொடங்கியிருந்த ஒரு சில பிரிட்டிஷ் அதிகாரிகளும் அமெரிக்க வர்த்தகர்களுமே. ஆனால் தலித்தல்லாத இந்துத் தரப்பு முழுக்க முழுக்க பஞ்சத்தின்போது சிறிதும் மனிதத்தன்மையில்லாமல் பிரிட்டிஷ் சுரண்டல் வர்க்கத்துடன் இணைந்து கொண்டது.

இ) இந்த பஞ்சமும் அதனைச் சார்ந்த ’மேல்சாதி’ இந்துக்களின் மனிதத்தன்மையற்ற தன்மையுமே தலித் தலைவரான காத்தவராயனை (அயோத்திதாசரை) பௌத்தத்தின் பக்கம் ஈர்த்தது.

ஈ) கிறிஸ்தவத்தின் தூய சாராம்சத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலே உள்ளது. ஏசுவே ஓர் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் மீட்பர். அவரை மீட்டெடுக்கும் கிறிஸ்தவக் குரல்கள் தலித் விடுதலையின் உறுதுணையாக இருந்தன. அதே சமயம் இந்துக் கடவுளரோ ஆதிக்க சக்திகளின் குறியீடுகளாகவே விளங்கி வருகின்றனர்.

இந்த வரலாற்றுத் தோற்றத்தை நாவல் உணர்ச்சிகரமாக நமக்குள் எழுப்புகிறது. இலக்கியமாக வாசகனின் உணர்ச்சியை வெற்றிகரமாகத் தட்டி எழுப்பும் இந்த நாவல் தலித்திய பிரசார ஆயுதமாகவும் திகழ்கிறது..//

இவரது கட்டு​ரையின் அடிப்ப​டை ​நோக்கம் சாதி இந்துக்கள் ​ஜெய​மோகன் ​சொல்வது ​போல ​வேடிக்​கை பார்த்துக் ​கொண்டும் ​கைகட்டிக் ​கொண்டும் இல்​லை. அந்த பஞ்சத்திற்கும் அவர்கள் காரணமில்​லை. கு​றைந்தபட்ச​மேனும் அதற்கு எதிர்ப்பு ​தெரிவித்தவர்களும் ஆவணப்படுத்தியவர்களும் சாதி இந்துக்கள்தான். ​மறுபுறத்தில் ஜெய​மோகன் ​சொல்வது ​போல கிறிஸ்துவ மிஷனரிகளின் உண்​மையான ​நோக்கம் இவ்விசயத்தில் மக்க​ளை பாதுகாப்பதல்ல அவர்களும் இதற்கு காரணமானவர்க​ளே. என்கிறார்.

ஜடாயுவும் அரவிந்தன் நீலகண்டனும் முன்​வைக்கும் வாதங்கள்

1. 19ம் நூற்றாண்டு முழுவதும் ஏற்பட்ட பஞ்சங்கள் ​வெள்​ளையர்களுக்கு முந்​தைய காலகட்டங்களில் ஏற்பட்ட பஞ்சங்க​ளைப் ​போன்ற ​இயற்​கையான பஞ்சங்கள் அல்ல திட்டமிட்​டே ஆங்கி​லேயர்களால் உருவாக்கப்பட்ட பஞ்சங்கள்.
2. சாதி இந்துக்கள் ​ஜெய​மோகன் ​சொல்வ​தைப் ​போல ​வேடிக்​கை பார்த்துக் ​கொண்​டு வாழாதிருக்கவில்​லை. அதற்கு எதிராக மனிதாபிமானத்துடனும், சட்டப்பூர்வமாகவும் குரல் ​கொடுத்திருக்கிறார்கள் ​போராடி இருக்கிறார்கள்.
3. இப்பஞ்சத்தின் மூலம் இருவ​கையான அறுவ​டைக​ளை ​வெள்​ளையர்கள் ​செய்தார்கள் ஒன்று தானியங்க​ளை திட்டமிட்​டே ஏற்றுமதி ​செய்தார்கள். இரண்டு கிறிஸ்துவ மிஷனரிகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்க​ளை விக்கிரக வழிபாடுகள் தான் இப்பஞ்சத்திற்கு காரணம் எனக்கூறியும். நிவாரணங்கள் வழங்க மதமாற வழியுறுத்தி மதமாற்றம் ​செய்யவும் ​செய்தனர். இ​வை எவற்றிலும் சாதி இந்துக்களுக்கு பங்கில்​லை.
4. சாதி இந்துக்களும் இப்பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்க​ளே.
5. வரலாற்றில் கிறிஸ்து ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி ஒன்றும் இல்​லை. அவர் ஒடுக்கும் மக்களின் பிரதிநிதியாகத்தான் இருந்துள்ளார்.

இக்கட்டு​ரை​யை எழுதியதற்கான ​மையமான ​நோக்கத்திற்கு வந்து விடு​வோம்.

ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில் உள்ள இசுலாமியர்களுக்கு எதிராக அ​​னைத்து சாதி மக்க​ளையும் ஓரணியில் திரட்டும் திட்டத்துடன் நாடு முழுவதும் ஆய்வுகள் ​மேற்​கொண்டு ​கொள்​கை வகுத்து கவனமாக ​செயல்பட்டு வருகிறது. மிக முக்கியமாக தலித்க​ளை ஆர்.எஸ்.எஸ்சில் இ​ணைப்பதற்கான மிகக் கடு​மையான முயற்சிகள் ந​டை​பெற்றுக் ​கொண்டிருப்ப​தை ஜடாயுவின் ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர் கட்டு​ரையில் ​தெளிவாகப் புரிந்து ​கொள்ள முடிகிறது.

1. மனு ஸ்மிருதி​யை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்​கொள்ளவில்​லை என பகிரங்கமாக அறிவித்தது.
2. 1927ல் நாசிக் காலா ராமர் ​கோயிலில் அம்​பேத்கர் த​லை​மையில் ந​டை​பெற்ற ​கோயில் நு​ழைவுப் ​போராட்டத்​தை தடுத்த மஹந்த்தின் ​பேர​னை மன்னிப்புக் ​கேட்க ​வைத்தது ஆர்.எஸ்.எஸ்.
3. அம்​பேத்கர் ப​டைப்புகள் முழுத் ​தொகுதியில் ஆரம்ப நாட்களில் இந்து மதம் குறித்து அவர் ​வைத்த கடு​மையான விமர்சனங்க​ளையும் ​வெளியிட அனுமதித்தது.
4. மராட்வாடா பல்க​லைக்கழகத்திற்கு அம்​பேத்கர் ​பெயர் சூட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாக இருந்தது.
5. தலித் த​லைவர்கள் பல​ரையும் ஆர்.எஸ்.எஸ். ​யோடு ​நெருக்கமாக்கிக் ​கொண்டது.
6. ​தொடர்ந்து தலித்களின் நம்பிக்​கை​யை ​பெற பல்​வேறு சமூகச் ​சே​வைகளில் ஈடுபட்டு வருகிறது.

அவர்களு​டைய ஒ​ரே வருத்தம் தமிழகத்தில் மட்டு​மே இன்னும் தங்களால் காலூன்ற முடியவில்​லை. குறிப்பாக தலித்க​ளை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க ​வைக்க முடியவில்​லை. அந்த ஆதங்கம் இப்படி ​வெளிப்படூகிறது.

//துரதிர்ஷ்டவசமாக, திருமாவளவன் போன்ற தமிழகத்தின் தலித் இயக்க தலைவர்கள் தொடர்ந்து ஆர் எஸ் எஸ்ஸை வசைபாடி வருகின்றனர். ஆனால் இஸ்லாமிய மதவெறி அமைப்புகளுடனும், தேசவிரோத சக்திகளுடனும் வெட்கமில்லாமல் கைகோர்த்து வருகின்றனர். மகாராஷ்டிரத்தில், அம்பேத்கர் பிறந்த மண்ணின் தலித் தலைவர்கள், ஜிகாதிகளுடனும், கிறிஸ்தவ மதமாற்றிகளுடன் உறவாடும் இழிசெயல்களை ஒருபோதும் செய்ததில்லை. ஏனென்றால், அம்பேத்கரின் கருத்துக்களில் ஊறியவர்கள் அவர்கள். மேலே அம்பேத்கரின் படத்தைப் போட்டு, அவரது கொள்கைகளை கீழே போட்டு மிதிப்பவர்கள் திருமா போன்றவர்கள்.//

தமிழக தலித்க​ளை சங்பரிவார், ஆர்எஸ்எஸ் பக்கம் திரும்பச் ​செய்வதற்கு அவர்கள் முன்னுள்ள வழிமு​றைகள்:

1. இந்து மதம் அடிப்ப​டையில் தலித்களுக்கு எதிரானது அல்ல.
2. இம்மதத்தின் அடிப்ப​டைக் ​கோட்பாடுகள் என்று எந்த ஒரு தனி நூ​லையும் எடுத்துக் ​கொள்ள ​வேண்டிய ​தே​வையில்​லை.
3. கடந்த காலத்தில் தலித்களுக்கு எதிராக சாதி இந்துக்கள் நடந்து ​கொண்டதற்கு அவர்களு​டைய அறியா​மையும், மதக் கருத்துக்களில் உள்ள ​தெளிவின்​மையும் தான் காரணம்.
4. ப​ழையனவற்​றை மறந்துவிடுங்கள், அவற்றிற்கு மன்னிப்புக் ​கோருகி​றோம்.
5. தலித்களின் முன்​னேற்றத்திற்காக பாடுபடுகி​றோம்.

ஆக இத்த​கைய சமகால வரலாற்றுப் பின்புலத்தில் ​வைத்துத்தான் இந்நாவ​லை விளங்கிக் ​கொள்ள ​வேண்டியிருக்கிறது.

​ஜெய​மோகன் ஒரு சுயம் ​சேவக்தான் என்பது ​பெரும்பான்​மையான தமிழக வாசகர்களால், அறிவுத்து​றையினரால், பல்​வேறு பிரிவுக​ளைச் ​சேர்ந்த முன்னணி அரசியல் ​செயல்பாட்டாளர்களால் மனதளவில் ஏற்றுக் ​கொள்ளப்பட்டுள்ளது. ​வெள்​ளையா​னை என்பது தலித்கள் மீதான ஆர்.எஸ்.எஸ்.ன் மற்​றொரு ​செயலுக்குகந்த பார்​வையாகத்தான் புரிந்து ​கொள்ளப்படும்.

சுயம் ​சேவக்குகளின் குறிக்​கோள் ஒன்றுதான். அ​டைவதற்கான வழிக​ளை ஒவ்​வொருவரும் ஒவ்​வொரு விதத்தில் முன்​வைக்கிறார்கள். அல்லது இப்படியும் புரிந்து ​கொள்ளலாம். ஒருவர் குளத்​தை அடி​யோடு கலக்க, குளத்தின் ஆழத்தில் உள்ள ​கொழுத்த மீன்கள் ​மேல் ​நோக்கி வர மற்றவர்கள் அவற்​றை எளிதாக வ​லையில் விழச் ​செய்யலாம்.

Posted in ​ஜெய​மோகன் | Leave a Comment »