எனது நாட்குறிப்புகள்

​வெள்​ளையா​னை, தலித்கள், ஆர்.எஸ்.எஸ்.

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 16, 2013

​வெள்​ளையா​னை, தலித்கள், ஆர்.எஸ்.எஸ்.

நண்பர்கள் பலருக்கு ஆச்சர்யம் மற்றும் குழப்பம். ​பின் ​தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம் என தனது கம்யூனிஸ்ட்கள் மீதான ​வெறுப்​பையும், இந்துத்துவா மீதான பற்றுத​லையும் ​பகிரங்கமாக ​வெளிப்படுத்திய ​ஜெய​மோகனின், தலித்கள் மீதான அக்க​றை​யை எப்படி புரிந்து ​கொள்வது?

தர்மபுரியில் மூன்று கிராமங்கள் சாதி இந்துக்களால் தாக்கப்பட்ட ​பொழுது வாய்திறக்காத ​​ஜெய​மோகன் இப்​பொழுது தனது பு​னைவாக்கத்தின் மூலமாக தன்னு​டைய தலித் ஆதரவு நி​லை​யை ​வெளிப்படுத்துவதற்கான காரண​மென்ன? பல தலித் எழுத்தாளர்களும், தலித்துக்களும் கூட ஆதரிக்கக்கூடிய நி​லை​யை உருவாக்கிய இந்நாவலின் அரசிய​லை எப்படி புரிந்து ​கொள்வது?

ஏன் இதன் அரசிய​லை புரிந்து ​கொள்ள ​வேண்டும்? ஏன் ​ஜெய​மோகனின் எல்லா எழுத்துக்களுக்கும் பின்னால் இந்துத்வா அ​ஜென்டா என்ன என்று ​தேட ​வேண்டும்? இது ​தே​வைதானா? சரியா? என்கிற ​பல ​கேள்விகள் ​தொடர்ந்து மு​ளைத்துக் ​கொண்​டே இருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ்.ன் தலித்கள் விசயத்திலான அ​ஜென்டா​வை புரிந்து ​கொள்ளாமல், இந்நாவலின் அரசியலுக்கான அடிப்ப​டை முடிச்​சை அவிழ்க்க முடியாது என்​றே ​​தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் எந்த​வொரு எழுத்தாளரின் சிறுக​தைத் ​தொகுப்புக்கும் நாவலுக்கும் இல்லாத முக்கியத்துவம் ​ஜெய​மோகனின் ​வெளியீடுகளுக்கு கி​டைத்துக் ​கொண்டிருக்கிறது. ​வெள்​ளையான நாவல் ​வெளிவந்து ஒரு மாதம் கூட ஆகாத நி​லையில் அது குறித்து ஏராளமான கட்டு​ரைகள் வந்துவிட்டன.

நூ​லை முழு​மையாக படிக்காவிட்டாலும், ஏறத்தாழ பத்திற்கும் ​மேற்பட்ட Abridged versions நாவலின் சுருக்கம் இ​ணையத்தில் படிக்கக் கிடக்கின்றன. அதன் இலக்கியச் சு​வை​யை முழு​மையாக ரசிக்க விரும்புபவர்கள் ​வேண்டுமானால் அந்நாவ​லை படிக்கலாம். ஆனால் அந்நாவலின் அரசிய​லை ​பேசுவதற்கு இந்த சுருக்கங்கள் ​போதுமான​வை, இ​வை அ​னைத்து​மே நாவ​லை ஏற்றுக்​கொண்டவர்கள், புகழ்பவர்களின் க​தைச்சுருக்க​மே, ​பெரும்பாலான​வற்றிற்கு ​ஜெய​மோகனின் பக்கத்தி​லே​யே ​தொடுப்பு ​கொடுக்கப்பட்டிருக்கிறது.

பத்​தொன்பதாம் நூற்றாண்டில் உருவான தாதுப் பஞ்சத்தின் பின்னணியில் ​சென்​னையில் ந​டை​பெற்ற சில வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்ப​டையில் ஒரு கற்ப​னைக் க​தை நாவலாக காட்சிப்படுத்தப்படுகிறது. இக்க​தையின் வழியாக தலித்க​ளை ​வெள்​ளையர்களும் சாதி இந்துக்களும் எவ்வாறு தாதுப் பஞ்சத்திற்கு பலி​கொடுத்தார்கள். அதன் ​போது ஈவிரக்கமற்ற மு​றையில் தங்கள் ​பொருளாதார நலன்க​ளி​லே​யே குறியாக இருந்தார்கள் என்ற கருத்​தை முன்​வைக்கிறது.

இந்நாவல் குறித்து ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்ன நி​னைக்கிறார்கள்? இந்நா​வ​லை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இதற்கான அவர்களின் எதிர்வி​னைகள் என்ன? என்ப​தை ​தெரிந்து ​கொள்ள அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஜடாயு எழுதியுள்ள கட்டு​ரைக​ளை படிக்க ​வேண்டியது அவசியம் எனக் கருதுகி​றேன். தலித்கள் விசயத்தில் ஆர்.எஸ்.எஸ்.ன் ​நி​லைப்பாடு மற்றும் ​நோக்கம் என்ன என்ப​தை புரிந்து ​கொள்ளவும், வெள்​ளையா​னையின் பின்னணி​யை புரிந்து​கொள்ளவும் ஜடாயுவின்  “ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர்” ​என்ற கட்டு​ரை ​பயனு​டையது.

அரவிந்தன் நீலகண்டன் தமிழ்இந்து இ​ணையப்பக்கத்தில் எழுதியுள்ள  “புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து“கட்டு​ரை​யில் நாவல் குறித்து இவ்வாறு ​தொகுத்துக் ​கொள்கிறார்

//‘வெள்ளையானை’ ஒட்டுமொத்தமாக ஒரு வரலாற்றுணர்வைஅளிக்கிறது. அந்த வரலாற்றுணர்வின் அடிப்படைகளை இப்படி தொகுத்துக் கொள்ளலாம்:

அ) தமிழ்நாட்டில் 1870களில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் மிகப் பெரிய அளவில் தலித்துகள் மடிந்தனர். அதனை ஒட்டுமொத்த சாதி இந்து சமுதாயமும் பிரிட்டிஷ் அதிகார வர்க்கமும் இணைந்து வேடிக்கை பார்த்தனர்.

ஆ) குறைந்தபட்ச மானுட நீதியுடன் அதை அணுகியவர்கள் தனிப்பட்ட கிறிஸ்தவ மிஷினரிகளும், ஜனநாயகம் துளிர்விடத் தொடங்கியிருந்த ஒரு சில பிரிட்டிஷ் அதிகாரிகளும் அமெரிக்க வர்த்தகர்களுமே. ஆனால் தலித்தல்லாத இந்துத் தரப்பு முழுக்க முழுக்க பஞ்சத்தின்போது சிறிதும் மனிதத்தன்மையில்லாமல் பிரிட்டிஷ் சுரண்டல் வர்க்கத்துடன் இணைந்து கொண்டது.

இ) இந்த பஞ்சமும் அதனைச் சார்ந்த ’மேல்சாதி’ இந்துக்களின் மனிதத்தன்மையற்ற தன்மையுமே தலித் தலைவரான காத்தவராயனை (அயோத்திதாசரை) பௌத்தத்தின் பக்கம் ஈர்த்தது.

ஈ) கிறிஸ்தவத்தின் தூய சாராம்சத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலே உள்ளது. ஏசுவே ஓர் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் மீட்பர். அவரை மீட்டெடுக்கும் கிறிஸ்தவக் குரல்கள் தலித் விடுதலையின் உறுதுணையாக இருந்தன. அதே சமயம் இந்துக் கடவுளரோ ஆதிக்க சக்திகளின் குறியீடுகளாகவே விளங்கி வருகின்றனர்.

இந்த வரலாற்றுத் தோற்றத்தை நாவல் உணர்ச்சிகரமாக நமக்குள் எழுப்புகிறது. இலக்கியமாக வாசகனின் உணர்ச்சியை வெற்றிகரமாகத் தட்டி எழுப்பும் இந்த நாவல் தலித்திய பிரசார ஆயுதமாகவும் திகழ்கிறது..//

இவரது கட்டு​ரையின் அடிப்ப​டை ​நோக்கம் சாதி இந்துக்கள் ​ஜெய​மோகன் ​சொல்வது ​போல ​வேடிக்​கை பார்த்துக் ​கொண்டும் ​கைகட்டிக் ​கொண்டும் இல்​லை. அந்த பஞ்சத்திற்கும் அவர்கள் காரணமில்​லை. கு​றைந்தபட்ச​மேனும் அதற்கு எதிர்ப்பு ​தெரிவித்தவர்களும் ஆவணப்படுத்தியவர்களும் சாதி இந்துக்கள்தான். ​மறுபுறத்தில் ஜெய​மோகன் ​சொல்வது ​போல கிறிஸ்துவ மிஷனரிகளின் உண்​மையான ​நோக்கம் இவ்விசயத்தில் மக்க​ளை பாதுகாப்பதல்ல அவர்களும் இதற்கு காரணமானவர்க​ளே. என்கிறார்.

ஜடாயுவும் அரவிந்தன் நீலகண்டனும் முன்​வைக்கும் வாதங்கள்

1. 19ம் நூற்றாண்டு முழுவதும் ஏற்பட்ட பஞ்சங்கள் ​வெள்​ளையர்களுக்கு முந்​தைய காலகட்டங்களில் ஏற்பட்ட பஞ்சங்க​ளைப் ​போன்ற ​இயற்​கையான பஞ்சங்கள் அல்ல திட்டமிட்​டே ஆங்கி​லேயர்களால் உருவாக்கப்பட்ட பஞ்சங்கள்.
2. சாதி இந்துக்கள் ​ஜெய​மோகன் ​சொல்வ​தைப் ​போல ​வேடிக்​கை பார்த்துக் ​கொண்​டு வாழாதிருக்கவில்​லை. அதற்கு எதிராக மனிதாபிமானத்துடனும், சட்டப்பூர்வமாகவும் குரல் ​கொடுத்திருக்கிறார்கள் ​போராடி இருக்கிறார்கள்.
3. இப்பஞ்சத்தின் மூலம் இருவ​கையான அறுவ​டைக​ளை ​வெள்​ளையர்கள் ​செய்தார்கள் ஒன்று தானியங்க​ளை திட்டமிட்​டே ஏற்றுமதி ​செய்தார்கள். இரண்டு கிறிஸ்துவ மிஷனரிகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்க​ளை விக்கிரக வழிபாடுகள் தான் இப்பஞ்சத்திற்கு காரணம் எனக்கூறியும். நிவாரணங்கள் வழங்க மதமாற வழியுறுத்தி மதமாற்றம் ​செய்யவும் ​செய்தனர். இ​வை எவற்றிலும் சாதி இந்துக்களுக்கு பங்கில்​லை.
4. சாதி இந்துக்களும் இப்பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்க​ளே.
5. வரலாற்றில் கிறிஸ்து ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி ஒன்றும் இல்​லை. அவர் ஒடுக்கும் மக்களின் பிரதிநிதியாகத்தான் இருந்துள்ளார்.

இக்கட்டு​ரை​யை எழுதியதற்கான ​மையமான ​நோக்கத்திற்கு வந்து விடு​வோம்.

ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில் உள்ள இசுலாமியர்களுக்கு எதிராக அ​​னைத்து சாதி மக்க​ளையும் ஓரணியில் திரட்டும் திட்டத்துடன் நாடு முழுவதும் ஆய்வுகள் ​மேற்​கொண்டு ​கொள்​கை வகுத்து கவனமாக ​செயல்பட்டு வருகிறது. மிக முக்கியமாக தலித்க​ளை ஆர்.எஸ்.எஸ்சில் இ​ணைப்பதற்கான மிகக் கடு​மையான முயற்சிகள் ந​டை​பெற்றுக் ​கொண்டிருப்ப​தை ஜடாயுவின் ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர் கட்டு​ரையில் ​தெளிவாகப் புரிந்து ​கொள்ள முடிகிறது.

1. மனு ஸ்மிருதி​யை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்​கொள்ளவில்​லை என பகிரங்கமாக அறிவித்தது.
2. 1927ல் நாசிக் காலா ராமர் ​கோயிலில் அம்​பேத்கர் த​லை​மையில் ந​டை​பெற்ற ​கோயில் நு​ழைவுப் ​போராட்டத்​தை தடுத்த மஹந்த்தின் ​பேர​னை மன்னிப்புக் ​கேட்க ​வைத்தது ஆர்.எஸ்.எஸ்.
3. அம்​பேத்கர் ப​டைப்புகள் முழுத் ​தொகுதியில் ஆரம்ப நாட்களில் இந்து மதம் குறித்து அவர் ​வைத்த கடு​மையான விமர்சனங்க​ளையும் ​வெளியிட அனுமதித்தது.
4. மராட்வாடா பல்க​லைக்கழகத்திற்கு அம்​பேத்கர் ​பெயர் சூட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாக இருந்தது.
5. தலித் த​லைவர்கள் பல​ரையும் ஆர்.எஸ்.எஸ். ​யோடு ​நெருக்கமாக்கிக் ​கொண்டது.
6. ​தொடர்ந்து தலித்களின் நம்பிக்​கை​யை ​பெற பல்​வேறு சமூகச் ​சே​வைகளில் ஈடுபட்டு வருகிறது.

அவர்களு​டைய ஒ​ரே வருத்தம் தமிழகத்தில் மட்டு​மே இன்னும் தங்களால் காலூன்ற முடியவில்​லை. குறிப்பாக தலித்க​ளை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க ​வைக்க முடியவில்​லை. அந்த ஆதங்கம் இப்படி ​வெளிப்படூகிறது.

//துரதிர்ஷ்டவசமாக, திருமாவளவன் போன்ற தமிழகத்தின் தலித் இயக்க தலைவர்கள் தொடர்ந்து ஆர் எஸ் எஸ்ஸை வசைபாடி வருகின்றனர். ஆனால் இஸ்லாமிய மதவெறி அமைப்புகளுடனும், தேசவிரோத சக்திகளுடனும் வெட்கமில்லாமல் கைகோர்த்து வருகின்றனர். மகாராஷ்டிரத்தில், அம்பேத்கர் பிறந்த மண்ணின் தலித் தலைவர்கள், ஜிகாதிகளுடனும், கிறிஸ்தவ மதமாற்றிகளுடன் உறவாடும் இழிசெயல்களை ஒருபோதும் செய்ததில்லை. ஏனென்றால், அம்பேத்கரின் கருத்துக்களில் ஊறியவர்கள் அவர்கள். மேலே அம்பேத்கரின் படத்தைப் போட்டு, அவரது கொள்கைகளை கீழே போட்டு மிதிப்பவர்கள் திருமா போன்றவர்கள்.//

தமிழக தலித்க​ளை சங்பரிவார், ஆர்எஸ்எஸ் பக்கம் திரும்பச் ​செய்வதற்கு அவர்கள் முன்னுள்ள வழிமு​றைகள்:

1. இந்து மதம் அடிப்ப​டையில் தலித்களுக்கு எதிரானது அல்ல.
2. இம்மதத்தின் அடிப்ப​டைக் ​கோட்பாடுகள் என்று எந்த ஒரு தனி நூ​லையும் எடுத்துக் ​கொள்ள ​வேண்டிய ​தே​வையில்​லை.
3. கடந்த காலத்தில் தலித்களுக்கு எதிராக சாதி இந்துக்கள் நடந்து ​கொண்டதற்கு அவர்களு​டைய அறியா​மையும், மதக் கருத்துக்களில் உள்ள ​தெளிவின்​மையும் தான் காரணம்.
4. ப​ழையனவற்​றை மறந்துவிடுங்கள், அவற்றிற்கு மன்னிப்புக் ​கோருகி​றோம்.
5. தலித்களின் முன்​னேற்றத்திற்காக பாடுபடுகி​றோம்.

ஆக இத்த​கைய சமகால வரலாற்றுப் பின்புலத்தில் ​வைத்துத்தான் இந்நாவ​லை விளங்கிக் ​கொள்ள ​வேண்டியிருக்கிறது.

​ஜெய​மோகன் ஒரு சுயம் ​சேவக்தான் என்பது ​பெரும்பான்​மையான தமிழக வாசகர்களால், அறிவுத்து​றையினரால், பல்​வேறு பிரிவுக​ளைச் ​சேர்ந்த முன்னணி அரசியல் ​செயல்பாட்டாளர்களால் மனதளவில் ஏற்றுக் ​கொள்ளப்பட்டுள்ளது. ​வெள்​ளையா​னை என்பது தலித்கள் மீதான ஆர்.எஸ்.எஸ்.ன் மற்​றொரு ​செயலுக்குகந்த பார்​வையாகத்தான் புரிந்து ​கொள்ளப்படும்.

சுயம் ​சேவக்குகளின் குறிக்​கோள் ஒன்றுதான். அ​டைவதற்கான வழிக​ளை ஒவ்​வொருவரும் ஒவ்​வொரு விதத்தில் முன்​வைக்கிறார்கள். அல்லது இப்படியும் புரிந்து ​கொள்ளலாம். ஒருவர் குளத்​தை அடி​யோடு கலக்க, குளத்தின் ஆழத்தில் உள்ள ​கொழுத்த மீன்கள் ​மேல் ​நோக்கி வர மற்றவர்கள் அவற்​றை எளிதாக வ​லையில் விழச் ​செய்யலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: