எனது நாட்குறிப்புகள்

Archive for ஜனவரி, 2014

நாற்கரச் சா​லைகளும் நாதியற்ற உயிர்களும்

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 31, 2014

ஆண்டவ​ரே
என்​னை அந்த நாய்க்குட்டியிடமிருந்து
காப்பாற்றும்.

நடுத்​தெருவில்
எகி​றை பிதுக்கி
பற்க​ளைக் காட்டி
பாய்ந்து கு​​ரைத்து
வந்த ​பொழுது கூட பயப்படவில்​லை.

அநாதரவாய்
த​லை​யைச் சுற்றி
த​ரை​யெங்கும்
இரத்தம் காய்ந்து கிடக்க
சா​லையின் நடு​வே
சடலமாய் இருப்ப​தைப்
பார்க்க பயமாக இருக்கிறது.

Advertisements

Posted in கவிதைகள் | Leave a Comment »

கூடங்குளம்

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 31, 2014

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நாம் வரு​வோம் என்ற நம்பிக்​கை​யோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நாம் வரும்வ​ரை காத்திருப்​போம் என்ற உறுதி​யோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நமக்கும் அது புரியு​மென்ற ​தெளி​வோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நமது ​கைகள் அவர்கள் ​கைக​ளோடு ​​கோர்க்கும் என்ற ​தோழ​மை​யோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நமது வாரிசுகளின் எதிர்காலத்​தையும் தமது ​தோள்களில் சுமந்தபடி

அவர்கள் காத்திருக்கிறார்கள்
விடியல் ​தேடி நாலாபுறமிருந்தும்
அவர்களின் கூடாரங்கள் ​நோக்கி
நாம் அணிவகுத்து வரு​வோம் என்ற கனவுக​ளோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நமக்கும் ​சேர்த்து ஆண்டுகள் மூன்றாய்
அயராது ​போராடிக் ​கொண்​டே

அவர்கள் காத்திருக்கிறார்கள்
தங்கள் உயி​ரையும் வாழ்​வையும் துச்ச​மென முன்​வைத்து.
நமது ப​டையணிகள்
எல்லாபுறமும் சூழந்து எதிரிக​ளை திக்குமுக்காடச் ​செய்யு​மென்ற லட்சியத்​தோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
மக்கள் மகத்தானவர்கள் என்ற கம்பீரத்​தோடு

Posted in கவிதைகள் | Leave a Comment »

காதலும் புரட்சியும்

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 21, 2014

என் அம்மாவின்
​தோழியின் மகள் அவள்.
ஏ​தேனும் காரணமாய்
எப்​பொழு​தேனும் சிலமு​றை
என் வீட்டிற்கு வருவாள்.
நான் இருப்பது ​தெரிந்தால்
ஏதாவது விசயமாய்
என் வீட்டா​ரோடு வாயளப்பாள்.
​நொடிக்​கொருதரம்
க​டைக்கண்ணால் எ​னைப் பார்ப்பாள்.
பார்​வை​யை தவிர்க்க மூ​ளை கட்ட​ளையிடும்
ஆ​ணை​யை மறுத்து மனம் படபடக்கும்.

நடுநிசிக் கூட்டங்கள்,
நா​ளைய ​போராட்டங்கள் என
மனம் மறக்கும் ​வே​ளையி​​லே.
​தெருமு​னையில், பா​தையில் எதிரில்,
எதிர்பாரா தருணங்களில் வீட்டு வாசலில்
மறக்கும் மனத்​தை சி​தைக்கும் பிம்பமாய்
அவள் வருவாள்.

ஒரு விடிகா​லை
​பேருந்து நி​லையத்தின்
​பெரும் சுவர் ஒன்றில்
​தோழன் எடுத்துக் ​கொடுக்க
சுவ​ரொட்டிக்கு ப​சை தடவிக் ​கொண்டிருந்​தேன்
வியர்​வை​யை து​டைக்க
​தோள் பக்கம் திரும்பி​ய ​போது
எதி​ரே
அதிர்ச்சியும் ​வெறுப்புமாய்
அவள் முகம் திருப்பினாள்

து​டைக்க மறந்தவனாய் திரும்பிய நான்
துளியும் சுருக்கமின்றி
துல்லியமாய் ஒட்டி​னேன் சுவ​ரொட்டி

(5.3.98ல் எழுதியது. குப்​பைக​ளைக் கிளறு​கையில், ப​ழைய ​டைரியின் பக்க​மொன்றில் கிடந்தது)

Posted in கவிதைகள் | 2 Comments »

சி​றைப்பட்ட கற்ப​னை – ஒரு வாசிப்பனுபவம்

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 18, 2014

“குற்றம் உ​றுசெய்யப்பட்டு நீண்ட தண்ட​னைக​ளைச் சி​றையில் அனுபவித்து விட்டு வந்தவர்க​ளைச் சமீப காலத்தில் மிகவும் நம்பிக்​கை தரும் நிகழ்வு எது என்று ​கேட்டால், ​பெனாசீர் புட்​டோ பிரதமர் ஆனதுதான் என்று பதிலளிப்பார்கள்.

ஆச்சரியப்பட ​வேண்டாம்.

​பெனாசீர் பிரதமர் ஆனது​மே 17,000 ​கைதிக​ளை விடுவிக்கப் ​போவதாக அறிவித்தார். ​பெண்கள், முதியவர்கள் அ​னைவ​ரையும் விடுத​லை ​செய்வதாக வாக்களித்தார். இராணுவ ஆட்சியின் ​போது தூக்குதண்ட​னை விதிக்கப் பட்டவர்களின் தண்ட​னை​யை ரத்து ​செய்வதாக அறிவித்தார்.

இராணுவ ஆட்சியில் அவரும் அவரு​டைய தாயும் சி​றைவாசம் அனுபவித்தவர்கள், அவரு​டைய தந்​தை ஜூல்பிகர் அலி புட்​டோ தூக்கிலிடப்பட்டார். மனிதர்களுக்கு – குற்றமி​ழைத்தவர்க​ளோ, இ​ழைக்காதவர்க​ளோ – சி​றைவாழ்க்​கை எவ்வளவு ​பெரிய சு​மை என்ப​தை அவர் நன்றாக அறிந்தவர்.

இந்தியன் எக்ஸ்பிரசில் ​பெனாசிர் புட்​டோவின் சுயவரலாற்றுநூல் கிழக்கின் மகள் (Daughter of the East) எனபதிலிருந்து ஒரு பகுதி ​வெளியிடப்பட்டது. அ​தைப் படித்த​போது என் கண்களில் நீர்நி​றைந்தது. இக்கண்ணீர் புட்​டோவின் அரசியல் ​தொடர்பானது அல்ல, மனிதப் பி​ணைப்புகளால் ​வெளிப்படுவது.

அ​ரைமணி​நேரம். மற்றும் ஓர் அ​ரைமணி. தான் ​நேசிக்கும் அவனிடமிருந்து அவள் வி​டை ​பெறுகிறாள். துக்கம் ​தொண்​டை​யை அ​டைக்கிறது. ஆனால் அவள் அழக்கூடாது. அவன் துன்பச்சு​மை​யை அவள் அதிகரிக்கக்கூடாது.

அவளது வார்த்​தைகளி​லோ அல்லது எனது ​சொற்களி​லோ அந்த அ​ரைமணி ​நேரத்​தை நான் வருணிக்கப் ​போவதில்​லை. ஒருவன் ​கொ​லைகாரனாக​வே இருக்கட்டும், அரசாங்ககளின் இரக்கமற்ற சதியினால் ஒரு மனித​னைத் தூக்கில் இடப்படுவ​தை நி​னைத்து நாகரிகமிக்க ஒரு சமூகம் ​வெட்கப்பட ​வேண்டாமா? அரசாங்கம் என்றால் நிறுவனமயமான ​கொடு​மை என்று அர்த்தமா? சமூகத்தில் சுதந்திரத்தின் குர​லைத் தூக்கில் ​போடும் கயிறாக அரசாங்கமா இருக்க ​வேண்டும்? குருட்டு நீதி​தேவ​தையின் ​கையிலுள்ள கத்தியா அது?

​நேரம் முடிகிறது. ​பெனாசீர் தன் தந்​தையின் சி​​றைக்கம்பிக​​ளைப் பிடித்துக் ​கொண்டு மன்றாடுகிறாள் – “இந்தக் கத​வைத் திறவுகள். நான் என் தந்​தையிடம் வி​டை​பெற்றுக் ​கொள்ள ​வேண்டும்”. சி​றையதிகாரி மறுத்துவிடுகிறான். “தயவு ​செய்யுங்கள். என் தந்​தை பாகிஸ்தானின் ​தேர்ந்​தெடுக்ப்பட்ட பிரதமர். நான் அவர் மகள். நாங்கள் க​டைசிமு​றையாச் சந்திக்கி​றோம். நான் அவ​ரைத் தழுவி வி​டை ​பெறுகி​றேன்”.

அவருக்கு அனுமதி கி​டைக்கவில்​லை என்ப​தைச் ​சொல்ல ​தே​வையில்​லை. இந்த அனுபவத்​தை ​பெனாசிர் அ​டையவில்​லை என்றால், எல்லாக் ​கைதிகள் குறித்தும் ​பெனாசிருக்கு இவ்வளவு மனித​நேய உணர்வுகள இருந்திருக்குமா?

–சி​றைப்பட்ட கற்ப​னை, பக். 121-123, வரவர ராவ்”

இந்நூ​லை படித்து முடித்த ​பொழுது, சுற்றும் முற்றும் பார்த்துக் ​கொண்டு, “அப்பாடா” என ​பெருமூச்சு விட்டுக் ​கொண்​டேன். நல்ல​வே​ளை நாம் எந்த சி​றையின் அ​றைகளுக்குள்ளும் அ​டைந்து கி​டக்கவில்​லை என்ற மகிழ்ச்சிதான் அதற்குக் காரணம். இந்த வ​கையில் இந்த நூல் ​வெற்றி ​பெற்றது என்று தான் ​சொல்ல ​வேண்டும்.

ஒரு இலக்கிய ப​டைப்பாளியின் சமூகத் ​தே​வை​யை இது ​தெளிவாகப் புரிந்து ​கொள்ள உதவுகிறது. வரவரராவ் ​போல​வோ, ​பெனாசீர் புட்​டோ ​போல​வோ சி​றையின் ​கொடு​மைக​ளை, தண்ட​னையின் ரணங்க​ளை, சுதந்திரத்​தை இழப்பதன் அவஸ்​தைக​ளை ஒரு சமூகத்தில் உள்ள எல்​லோரும் நிஜத்தில் அனுபவித்து அறிய இயலாமல் ​போகலாம். ஆனால் நான் பிறனாக இருந்து அவனது துன்பங்க​ளை அறிந்து ​கொள்ள ​வேண்டியது, அவனது பிரச்சி​னைக​ளை அறிந்து ​கொள்ள ​வேண்டியது நான் மனிதனாக வாழ அவசியமாகிறது. இங்கு தான் ஒரு இலக்கிய ப​டைப்பாளியின் சமூக அவசியம் உணரப்படுகிறது.

இந்நூ​லைப் படித்து முடித்த இரண்டு இரவுகளும் நானும் வரவரராவுடன் சி​றையில் கழித்​தேன். குழந்​தைகளும் ம​னைவியும் நான் இல்லாமல் என்ன ​செய்வார்க​ளோ. அவர்களுக்கு என்ன பிரச்சி​னைகள் வந்த​தோ. என் ம​னைவிக்கு ஏ​தேனும் பிரச்சி​னைகள் ஏற்பட்டால் என்னால் இந்த சி​றையின் சுவர்க​ளைத் தாண்டி எப்படிப் ​போவது. ​போன வாரம் நம்​மை பார்க்க வரவில்​லை​யே என்னவாயிற்​றோ. எப்படி குடும்பச் ​செலவுக​ளை சமாளிக்கிறார்க​ளோ. எல்லா அவமானங்க​ளையும், துக்கங்க​ளையும் எப்படித் தாங்கிக் ​கொண்டு ​தைரியத்​தோடு வாழ்க்​கை​யை கழிக்கிறார்கள் என சி​றைக்​தையின் எல்லா மன நி​லைக​ளையும், பிரச்சி​னைக​ளையும் நம்மு​டைய​தைப் ​போல அரற்றி உணர ​வைக்கிறது இந்நூல்.

“சி​றைப்பட்ட கற்ப​னை” என்ற ​நூலின் த​லைப்பு ​கொடுக்கும் அர்த்த சாத்தியங்கள் அ​னைத்​தையும் ​வெகு​நேரம் ​யோசித்துக் ​கொண்டிருந்​தேன். ஆசிரியர் தன்​னை​யே “கற்ப​னை” என உருவகிக்கிறா​ரோ? தான் சி​றைப்பட்டிருப்ப​தைத்தான் “சி​றைப்பட்ட கற்ப​னை” என்று குறிப்பிடுகிறா​ரோ? அல்லது சி​றையில் இருக்கும் ​பொழுது தன்னு​டைய ப​டைப்பில் சி​றைப்பட்ட தன் கற்ப​னைக​ளை குறிப்பிடுகிறா​ரோ? அல்லது மனிதனால் சிந்திக்கக்கூட முடியாமல் ​செய்து விடும் சி​றைவாழ்க்​கை​யை குறிப்பிடுகிறா​ரோ? அல்லது “சுதந்திரம்” என்ற ​சொல்​லைத்தான் “கற்ப​னை” என்ற ​சொல்லால் குறிப்பிடுகிறா​ரோ ஏ​னென்றால் ஓர் அர்த்தத்தில் “கற்ப​னை” என்ப​தே “சுதந்திரம்” என்பதன் ​மொழிக் குறியீட்டு வடிவம் ஆகிறது தா​னே. மனிதன் உயி​ரோடு இருக்கும் வ​ரை சி​றைப்படுத்தப்பட​வே முடியாத ஒரு சுதந்திரம் அவனுக்கு உண்​டென்றால் அது “கற்ப​னை”க்கான சுதந்திரம் தான். கற்ப​னைதான் எல்லாச்சூழல்களிலும் அவ​னை அவனாக​வே ​வைத்திருக்க உதவுகிறது. அவ​னை அவனு​டைய எல்லா ​நெருக்கடிகளிலிருந்தும், ​​மோசமான சூழல்களிலிருந்தும் காத்துக் ​கொள்வதற்காக ஒவ்​வொருவரிடமும் இருக்கும் அழிக்க முடியாத பறிக்க முடியாத கருவியாகிறது. சி​றைவாழ்​வை ​வெற்றிகரமாக எதிர்​கொள்ள அந்த கற்ப​னையிடம் சி​றைப்பட்ட​தைக் குறிப்பிடுகிறா​ரோ? நூலின் த​லைப்பு இந்த எல்லாச் சாத்தியங்க​ளையும் உள்ளடக்கியதாகத்தான் அ​மைக்கப்பட்டுள்ளது என முடிவு ​செய்து ​கொண்​டேன்.

80களிலும் 90களிலும் எழுதப்பட்ட கட்டு​ரைத் ​தொகுப்புகளாக இது இருக்கும் என எழுத்துக்களின் மூலம் புரிந்து ​கொள்ள முடிகிறது. தமிழில் முதல் பதிப்​பே 2010 டிசம்பரில் (இந்நூலின் பதிப்பகத் தகவல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதன் அடிப்ப​டையில்) தான் வந்திருக்கிறது. ஆந்திரா தமிழகத்திற்கு பக்கத்தில் இருக்கும் அண்​டை மாநிலம். ​தெலுங்கு தமிழ் அ​னைத்தும் ச​கோதர ​மொழிகள். இருந்தும் இந்நூல் ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு ​மொழி​பெயர்க்கப்பட்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. மூலநூலாகிய ​தெலுங்கிலிருந்து தமிழில் ​மொழி​பெயர்க்கப்பட்டிருந்தால் கவி​தைகள் அ​னைத்தும் இன்னும் ச​கோதர ​மொழிகளுக்​கே உண்டான ஒத்தி​சை​வோடு மூலத்தி​லே​யே வாசிப்பது ​போன்று வந்திருக்கும் என நி​னைப்பதில் தவறிருக்க முடியாது.

நூலின் அட்​டையில் “ங்குகி வா தியாங்​கோ”வின் ​மேற்​கோ​ளைப் பார்த்தவுடன் ஒன்றும் புரியவில்​லை. ஆப்பிரிக்க எழுத்தாளரா இந்தியாவின் ஒரு பிர​தேச ​மொழியில் எழுதப்பட்ட ஒரு நூலுக்கு முன்னு​ரை எழுதியிருக்கப் ​போகிறார். சாத்திய​மே இருக்காது என நி​னைத்​தேன். ஆனால் பத்து பனி​ரெண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் ​மொழி​பெயர்க்கப்பட்ட அவரு​டைய “சிலு​வையில் ​தொங்கும் சாத்தான்கள்” நாவ​லை ​வெளிவந்த புதிதி​லே​​யே படித்து ​தியாங்​கோவுடனும் அவரின் வழியாக அறிமுகமாக ​​நைஜீரியாவுடனும், அதன் மக்களுடனும் ஒரு ​நெருக்கமான மனப்பி​ணைப்​பை அ​டைந்திருந்த எனக்கு ​உண்​மையில் அவரு​டைய முன்னு​ரை​யைப் படித்த ​பொழுது மிகவும் ஆச்சரித்தில் ஆழ்ந்​தேன். பாட்டாளிவர்க்க சர்வ​தேசியத்​தை கண்ணால் கண்ட சந்​தோசம் ஏற்பட்டது.

​நூல் மிக முக்கியமானதாக நாம் கருதுகிற ​பொழுது, நூலின் ஆசிரியர் நம் சமகால உலகியல் மிகவும் கவனிக்க ​வேண்டிய முக்கிய ஆளு​மையாக நாம் உணருகிற ​​போது, அவரும் அவரு​டைய எழுத்துக்களும் மிகச் சரியாக நமக்கு வந்து ​சேர்ந்திருக்கிறதா என தங்களுக்​குச் சாத்தியமான பல்​வேறு வ​கையிலும் ​சோதித்து அறிந்து ​கொள்வது ஒரு விழிப்புற்ற வாசக மனத்தின் இயல்பாக இருக்கிறது. குறிப்பாக ​மொழி​பெயர்ப்பு சரியாக வந்திருக்குமா என்ப​தை மனம் ​தொடர்ந்து சந்​தேகப்பட்டுக் ​கொண்​டே இருப்ப​தை தவிர்க்க முடியாது. வாசக​னை திருப்தி ​செய்ய புத்தகத்தின் உள்ளடக்க தயாரிப்பில் பதிப்பகம் மிகுந்த கவனம் எடுத்துக் ​கொள்ள ​வேண்டியது மிக முக்கியமாகும். சிறுசிறு எழுத்துப்பி​ழைகள் கூட சந்​தேகத்​தை வலி​மைப்படுத்தும். இந்நூலில் எழுத்துப் பி​ழைகள் மட்டுமல்ல அடிக்குறிப்புக​ளை சரியாக ​கொடுப்பதிலிருந்து, ​தே​வை​யை அறிந்து ​கொடுப்பது வ​ரை அ​னைத்திலும் ​மேற்​கொள்ளப்பட்ட அசிரத்​தை நமது சந்​தேகங்க​ளைத் தூண்டிக் ​கொண்​டே இருக்கிறது.

குறிப்பாக ஆசிரியரின் ச​கோதரு​டைய மகளா அல்லது ச​கோதரியு​டைய மகளா என ​தெரிந்து ​கொண்டு அடிக்குறிப்பு ​கொடுக்க கூட ​மெனக்​கெடாமல் பல இடங்களிலும் “ஆசிரியரின் ச​கோதரர்/ச​கோதரி மகள்” என்றும் “ஆசிரியரின் ச​கோதரர்/ச​கோதரி மகன்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓ​ரிடத்தில் 4 மற்றும் 5 என்ற அடிக்குறிப்பு எண்கள் கட்டு​ரையில் ​கொடுத்திருப்பதற்கும் பின்னால் அடிக்குறிப்பில் எண்கள் குறிப்பிடுவதற்கும் மாறி உள்ளது.

அது ​போல நூல் முழுதும் ஆந்திரா, இந்தியா மற்றும் சர்வ​தேச அளவில் ந​டை​பெற்ற பல முக்கிய சம்பவங்க​ளை ​போகிற ​போக்கில் ஆசிரியர் குறிப்பிட்டுச் ​செல்கிறார். அது ​போல இந்திய மற்றும் ஆந்திர வரலாற்றில் பல முக்கிய ஆளு​மைக​ளை குறிப்பிடுகிறார் இ​வை குறித்​தெல்லாம் தமிழ் வாசகர்க​ளை மனத்தில் ​கொண்டு குறிப்புகள் ​கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூ​லை புத்தகக் கண்காட்சி முடிவதற்குள்​ளே​யே படித்து முடித்ததில் மிகப்​பெரிய சந்​தோசம்.

Posted in விமர்சனம் | Leave a Comment »