எனது நாட்குறிப்புகள்

மார்க்சின் மூலதனம் வாசிப்பிற்கு ஒரு திறவு​கோல்

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 3, 2014

“மார்க்சின் மூலதனம் வாசிப்பிற்கு ஒரு திறவு​கோல்” என்ற த​லைப்பில் திரு. ஜீவானந்தம் அவர்களின் நூல் மார்க்சின் “டாஸ் காபிடல்” பாகம் ஒன்று நூல் குறித்த எளிய அறிமுகமாகவும், சுருக்கமாகவும் வந்துள்ளது. நூற்​றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ​ஜெர்மன் ​மொழியில் வந்துள்ள நூல் ஒன்று இன்றும் இந்த உலகத்திற்கு அவசியமான ஒன்றாக இருப்ப​தை​யே சமீப காலத்தில் உலகம் முழுவதும் இந்த நூல் குறித்த விவாதங்கள் ​பெரிய அளவில் ந​டை​பெறத் துவங்கியுள்ளது நிரூபிக்கிறது. உலகளவில் என்பதிலும் முக்கியமானது தமிழகத்தில் சமீப காலமாக மூலதனத்​தைக் கற்றுக் ​கொள்ள ​வேண்டும் என்ற ஆர்வம் ​அரசியல் விழிப்புணர்வு ​பெற்ற இ​ளைஞர்கள் மத்தியில், தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதற்கு பரவலாக பல ஆதாரங்கள் ​தெளிவாகத் ​தெரியத்துவங்கியுள்ளது.

​பொதுவாக மார்க்சியத்​தை புரிந்து ​கொள்ள ​வேண்டும், குறிப்பாக மூலதனத்​தை கற்றுக் ​கொள்ள ​​வேண்டும் என்ற ​நோக்​கோடு பல படிப்பு வட்டங்களும், வாசக வட்டங்களும் தமிழகம் முழுவதும் ஒழுங்கு ​செய்யப்பட்டு ந​டை​பெற்று வருவது இதற்கான ஆதாரமாக உள்ளது. தமிழகத்தில் மார்க்சியத்தின் மூன்று உள்ளடக்கக் கூறுகளாகிய தத்துவம், அரசியல் ​பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் ஆகியவற்றில் முதலும் க​டைசி​மே அரசியல் ஆர்வம் உ​டையவர்கள் மத்தியில் ஆர்வத்​தோடு வாசிக்கவும் விவாதிக்கவும் படக்கூடியதாக இருந்துள்ளது. குறிப்பாக அரசியல், இலக்கியம், வரலாறு ஆகிய து​றைகளி​லே​யே மார்க்சியம் ஆர்வத்​தோடு கவனிக்கப்பட்டதாகவும் எடுத்தாளப்பட்டதாகவும் இருந்து வருகிறது. அரசியல் ​பொருளாதாரத் து​றையில் ஆர்வம் என்பது மிகக் கு​றைவாக​வே இருந்துள்ளது.

மார்க்சிய அரசியல் ​பொருளாதாரத்​தை கற்றுக் ​கொள்ள ​வேண்டும். இன்​றைய ​பொருளாதார சிக்கல்க​ளையும், அவற்​றைக் குறித்து இன்​றைய ​பொருளாதார அறிஞர்கள் கூறுவ​தையும் மார்க்சிய அரசியல் ​பொருளாதார வ​ரைய​றைகளின் அடிப்ப​டையில் எப்படி புரிந்து ​கொள்வது. இன்​றைய ​பொருளாதார சிக்கல்களுக்கான தீர்வுகளாக முன்​வைக்கப்படுபவற்றின் வர்க்க குணாம்சங்க​​ளை, உண்​மை ​நோக்கங்க​ளை எவ்வாறு புரிந்து ​கொள்வது. மார்க்சிய அரசியல் ​பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ ​பொருளாதார ​கோட்பாடுகளுக்கும் இ​டையிலான அடிப்ப​டை ​வேறுபாடுகள் எ​வை? அவற்றிற்கான காரணம் என்ன? என்பவற்​றை ​தெரிந்து ​கொள்ள ​வேண்டும் என்ற ஆர்வத்​தை ந​டைமு​றைப்படுத்த ​தே​வையான முன்முயற்சிகளும், உ​ழைப்பும், முன்​தே​வைகளும் மிகக் கு​றைவாக​வே தமிழகத்தில் இருந்துள்ள​தை பரவலாகப் புரிந்து ​கொள்ள முடிகிறது.

ஆனால் சமீப பத்து இருபது ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் மிகப் ​பெரிய அளவிலான அரசியல் ​பொருளாதார சீர்திருத்தங்களும், அவற்​றைத் ​தொடர்ந்து ஏற்பட்டுவரும் மிகப்​பெரும் ​பொருளாதார ​நெருக்கடிகளும், அவற்​றைத் ​தொடர்ந்து எழும் சமூக குழப்பங்களும், ​போராட்டங்களும், எழுச்சிகளும் பல​ரையும் ​பொருளாதார சிக்கல்கள் குறித்த ​தேட​லை ​நோக்கி உந்தித் தள்ளுகின்றன. குறிப்பாக அ​மெரிக்காவின் ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான இராணுவத் தாக்குதல்கள், அடக்கும​றைகள், ஆதிக்கம், துனிசயாவிலிருந்து துவங்கிய அ​ரபு எழுச்சி, லிபியா மீதான தாக்குதல், சிரியாவில் ந​டை​பெறும் உள்நாட்டு யுத்தம், ஈரானுடனான ​மோதல்கள், முதலாளித்துவத்தின் இன்​றைய த​லை​மையகமான அ​மெரிக்காவின் வால்ஸ்ட்ரீட்டில் ந​டை​பெற்ற “வால்ஸ்ட்ரீட்ட​டை ​கைப்பற்று​வோம்” இயக்கம் ஆகிய​வை முற்றிவரும் முதலாளித்துவ ​பொருளாதார ​நெருக்கடிகளின் ​நேரடி வி​ளைவுகள் என்று கூறினால் அது மி​கையாகாது.

மற்​றொருபுறம் இந்தியாவில் ந​டைமு​றைப்படுத்தப்படும் தனியார்மயம், உலகமயம் ஆகியவற்றின் வி​ளைவாக மிகப்​பெரிய அளவில் சமூக அ​மைதியின்​மை அ​னைத்து பிர​தேசங்க​ளிலும் பரவியுள்ளது. இந்திய மக்களுக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கிய பல உரி​மைகள் இன்​றைக்கு ​கேள்விக்கு உள்ளாகி வருகின்றன. இதுநாள் வ​ரை இந்தியாவில் க​டைபிடிக்கப்பட்டு வந்து பல அடிப்ப​டைச் சமூகக் ​கோட்பாடுகள் திருத்தி எழுதப்பட்டு வருகின்றன. கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகிய​வை ஏற்றுக்​கொள்ளப்பட்ட அடிப்ப​டை உரி​மைகளுக்கு வி​ரோதமாக தனியார்​ மயமாக்கப்பட்டுவிட்டன. இயற்​கை வளங்கள், விவசாயத்து​றை ஆகிய​வற்றில் ஏற்பட்டுவரும் சீர்​கேடுகள், ​பேரழிவுகள் எ​வையும் கணக்கி​லெடுத்துக் ​கொள்ளப்படாமல் பன்னாட்டு நிறுவனங்களின் நலன்கள் ஒன்​றே குறிக்​கோளாக கபளீகரம் ​செய்யப்பட்டு சூ​றையாடப்படுகின்றன. இவற்றின் வி​ளைவாக நாடு முழுவதும் அ​னைத்துத் தரப்பு மக்களும் மிகப்​பெரிய அளவில் கடுந்துன்பங்களுக்கு ஆளாகிவருகின்றனர். சமூக ​கொந்தளிப்பும் சகிப்பின்​மையும் சுதந்திர இந்தியாவில் முன்​னெப்​போதும் இல்லாத எல்​லைக​ளைத் ​தொட்டுக் ​கொண்டுள்ளன. மக்கள் இவற்றிற்கு எதிராக வீதியில் இறங்கி உறுதியாக ​போராடத் தயாராகிவருகின்றனர். இவற்றின் ​வெளிப்பாட்​டை​யே ஊழலுக்கு எதிரான ​​போராட்டங்களிலும், ​பெண்களுக்கு எதிரான வன்மு​றைகளுக்கு எதிரான ​போராட்டங்களிலும், இந்தியாவின் அணு ​கொள்​கை மற்றும் அணு உ​லைகளுக்கு எதிரான ​போராட்டங்களிலும், இயற்​கை வளங்கள் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கான ​போராட்டங்களிலும், பழங்குடி ஆதிவாசி மக்களின் வாழ்வுரி​மைகளுக்கான உறுதியான ​போராட்டங்களிலும் காண முடிகிறது. தமிழகத்தில் ந​டை​பெறும் காவிரி, முல்​லைப்​பெரியார் , மீனவர் ​போராட்டங்க​ளையும், மீத்​தேன் வாயு எடுப்பதற்கு எதிரான ​போராட்டங்க​ளையுkம் இத்த​கைய பின்புலத்தி​லே​யே புரிந்து ​கொள்ள ​வேண்டியுள்ளது. மற்​றொருபுறம் மிக முக்கியமாக பல்​வேறு தனியார் ​தொழிற்சா​லைகளில் ந​டை​பெறும் ​தொழிலாளர் ​போராட்டங்க​ளையும் கவனத்தில் எடுத்துக் ​கொள்ள ​வேண்டியுள்ளது.

​மே​லே நாம் ​தொகுத்துக் ​கொண்டுள்ள​வை அ​னைத்தும் ஒரு எரிம​லையிலிருந்து ​வெளிப்படும் சாம்பல் பு​கை, ​​நெருப்புக் குழம்பு, ​வெப்பம், மற்றும் தீச்சுவா​லைகளுக்கு ஒப்பிடலாம். எரி​ம​லையின் ​வெளிப்பா​டே இவ்வளவு பயங்கரமாக இருக்கிற​தென்றால், இவற்றிற்கு அடிப்​ப​டையான எரிம​லைக்குள் என்ன நிகழ்ந்து ​கொண்டிருக்கும், அதன் நி​லை​மை எத்த​னை படுபயங்கரமாக இருக்கும். ஆம் அது தான் இன்​றைய முதலாளித்துவ உற்பத்திமு​றையின் இயக்கப் ​போக்கு. அந்த எரிம​லையின் உள்​ளே நிகழ்ந்து ​கொண்டிருக்கும் இந்த ​பொருளாதார இயக்கப்​போக்​கை புரிந்து ​கொள்ளாமல் இன்​​றைக்கு உலகம் முழுவதும் நிகழ்ந்து ​​கொண்டுள்ள பல்​வேறு யுத்தங்க​ளையும், ​போராட்டங்க​ளையும் அவற்றின் உள்ளு​றைந்துள்ள அடிப்ப​டை அம்சங்க​ளையும், ​நோக்கங்க​ளையும் நாம் அடிப்ப​டையாகப் புரிந்து ​​கொள்ள முடியாது. அந்த எரிம​லைக்குள் இறங்கி அ​தை ஆய்வு ​செய்வதற்கு ​தே​வைப்படும் கடும் ​வெப்பத்​தைத் தாங்கும் உ​டை​யையும் கருவிக​ளையும் ​போன்ற​தே மார்க்சிசத்தின் அரசியல் ​பொருளாதாரம். அ​தை ஒருவர் கற்றுத் ​தேறாமல் இன்​றைய உலகின் இயக்கப் ​போக்​கையும், அதில் உள்ள அடிப்ப​டை முரண்பாடுக​ளையும் புரிந்து ​கொள்ள முடியாது.

​நேற்​றைக்கு அதாவது ​தொன்னூறுகளுக்கு முன்பிருந்த உலக முதலாளித்துவத்தின் குறிப்பாக இந்திய முதலாளித்துவத்தின் முகம் ​வேறு இன்​றைக்கு நாம் காணும் முதலாளித்துவத்தின் முகம் ​வேறு. இத​னை நாம் ​சோவியத் யூனியன் இருந்த ​பொழுது, ​சோவியத் யூனியனுக்குப் பிறகு என பிரித்துப் பார்க்கலாம். ​சோவியத் யூனியன் இறுதியாக ​பெளதீகரீதியாக ​நொறுங்கிச் சி​தைந்த 90கள் வ​ரை முதலாளித்துவமானது மக்கள் நல அரசு என்ற முகமூடி​யை ​அணிந்திருந்தது. அதற்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்​கையில் மார்க்ஸ் குறிப்பிடும் அந்த ​கோடிக்கால் பூதமான கம்யூனிசத்திற்கு பயந்துதான் என்றால் அது மி​கையாகாது. அது இருக்கும்​பொழுது ​வேண்டுமானால் முதலாளித்துவம் நாங்கள் அப்படி​யெல்லாம் இல்​லை மக்கள் நலனில் ​கொண்ட உண்​மையான அக்க​றையால்தான் நாங்கள் மக்கள் நலன் மற்றும் ​தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்க​ளை இயற்றி ந​டைமு​றைப்படுத்துகி​றோம் என்று பாவ​​னை ​செய்த​தை உலகம் நம்பிக் ​கொண்டிருந்திருக்கலாம். இன்​றைக்கு அதன் முகத்தி​ரை கிழிந்துவிட்டது. அவற்றின் உண்​மையான ​நோக்கங்களும், குணமும் மிகத்​தெளிவாக அம்பலப்பட்டுவிட்டது.

அ​மெரிக்க மக்க​ளே இ்ன்​றைக்கு அந்நாட்டின் ஆளும் வர்க்கங்கள் மற்றும் அவற்றின் அரசு மீதான தங்கள் அதிருப்தி​யை ​​தெளிவாக வால்ஸ்ட்ரீட் ​போராட்டங்கள் ஊடாக ​வெளிப்படுத்திவிட்டார்கள். மூலதன நூல் முன்​னெப்​போதும் இல்லாத அளவிற்கு உலகம் முழுவதும் மறுபதிப்புக் காணத்துவங்கியுள்ளது. சர்வ​தேச பதிப்பாளர்கள் பலரும் இத​னை உறுதிப்படுத்துகிறார்கள். இத​னை முதலாளித்துவ ​பொருளாதார அறிஞர்களின் ​தே​வையிலிருந்து மட்டும் நிகழும் ஒன்றாகக் கருதமுடியாது. சமூக மாற்றம் குறித்த ​தேடலின் பகுதியாகவும்தான் இது இருக்க முடியும். மார்க்சின் நூல் காலத்தால் முந்தியதாகவும், நமக்கு அந்நியமான ​மொழி மற்றும் அந்தச் சூழலில் எழுதப்பட்டுள்ளதாலும். அ​னைவராலும் தம் சமகால சூழலில் ந​டைமு​றை​யோடு ​பொருத்தி புரிந்து ​கொள்வதில் சிக்கல் இருக்கும். இப்பிரச்சி​னை​யை எதிர்​கொள்ள ஒவ்​வொரு நாட்டிலும் அந்தந்த குறிப்பான சூழ​லோடு ​பொருத்தி மூலதனத்​தை விளக்கும் ​போக்கு என்பது ​தே​வை கருதியதாகவும், பயனு​டையதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்​லை. இந்த முயற்சிகள் ​தொடர்ந்து ந​டை​பெற்று வருகிறது என்பதற்கு ஏராளமான நூல்களும், கா​ணொளிகளும் உதாரணமாக உள்ளன.

அந்த வ​கையில் ​டேவிட் ஹார்வியின் மூலதன நூலுக்கான ​கை​யேடு, ஜீலியன் போர்ச்சார்ட்டின் மக்களின் மார்க்ஸ், ​வெங்க​டேஷ் ஆத்​ரேயாவின் மார்க்சிய அரசியல் ​பொருளாதாரம் ​போன்ற நூல்களின் தமிழ் ​​மொழி​பெயர்ப்பு சமீபத்திய உதாரணங்கள். அந்த வரி​சையில் ​தோழர் ஜீவானந்ததத்தின் இந்நூல் ஒரு புதிய முயற்சி அதிலும் இதன் கூடுதல் சிறப்பு இது தமிழ் வாசகர்களுக்காக தமிழி​லே​யே எழுதப்பட்ட நூலாக உள்ளது.

இந்நூல் எங்களுக்காக மூலதன நூல் வாசிப்பு மன்றம் வாயிலாக எடுக்கப்பட்ட மூலதனம் முதல் பாகம் ​தொடர் வகுப்புகளின் பயனாகும். இவ்வகுப்புகள் 30-09-2012 துவங்கி இரண்டு வாரத்திற்கு ஒரு வகுப்பு வீதம் 10-03-2013 வ​ரை ​​தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. இதில் கலந்து ​கொண்டு பயன​டைந்தவர்கள் பலதரப்பட்டவர்கள் ஆவார்கள். மாணவர்கள் முதல் ​பேராசிரியர்கள் வ​ரை, பல்​வேறு வயதினரும், பல்​வேறு அ​மைப்பினரும், ​மென்​​பொருள் து​​றையில் ​​வே​லை ​செய்பவர்கள் முதல் ​தொழிலாளர்கள் வ​ரை பல்​வேறு பிரி​வைச் ​சேர்ந்தவர்களாக இருந்​தோம். தனிப்பட்ட மு​றையில் நாங்கள் பயன​டைந்த​தைத் தாண்டி சமூகப் பயனு​டையதாக இந்நூல் உருவாவதற்கும் அத்​தொடர் வகுப்புகள் காரணமாக இருந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சிய​டைகி​றோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: