எனது நாட்குறிப்புகள்

​ஜே.சி. குமரப்பாவும் நவீன உற்பத்திமு​றையும்

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 12, 2014

ஜே.சி. குமரப்பாவின் கட்டு​ரைகள் ​தொகுப்பு புத்தகம் ஒன்​றை ​நேற்று புத்தகக் கண்காட்சியில் பார்த்துக் ​கொண்டிருந்த ​பொழுது, ​தோழர். நடராசன் ​பெருவீத ​மையப்படுத்தப்பட்ட உற்பத்திமு​​றைக்கு மாற்றாக முன்​வைக்கப்படும் சிறுவீத பகுதிவாரியான உற்பத்திமு​றை அல்லது கிராமிய உற்பத்திமு​றை என்று ​சொல்லக்கூடிய முழு​மையாக சுய​தே​வைகள் அ​னைத்​தையும் பூர்த்தி​செய்து ​கொள்ளக்கூடிய தனித்த அலகுகளான கிராமங்கள் குறித்த உங்கள கருத்து என்ன என்று ​கேட்டார். அது குறித்து மார்க்சிய வழியில் சிந்திக்கும் ​பொழுது ​தோன்றிய பதில்:

“நவீன உற்பத்திமு​றை​யை ​கைவிடுதலில் அல்ல மனிதகுலத்தின் விடுத​லை, மாறாக நவீன உற்பத்திமு​றை​யை கட்டுப்பாட்டிற்குள் ​கொண்டு வருதலில்தான் மனிதகுலத்தின் உண்​மையான விடுத​லை அடங்கியுள்ளது.”

மீண்டும் மீண்டும் “திராட்​சையும் நரியும்” க​தைதான் ஞாபகத்திற்கு வருகிறது. சாத்தியமில்​லை என ம​லைக்க ​வைக்கும் இலக்குக​ளை “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” எனக் கருதும் மனநி​லை. ​வேறு வழியில் ​சொல்வ​தென்றால், மிகப்​பெரிய உ​ழைப்​பையும், முயற்சி​யையும், தியாகங்க​ளையும், உள்ளும் புறமுமான மாற்றங்க​ளையும் ​கோரும், நீண்ட ​நெடிய ​நேர்வழிகளுக்கு மாற்றாக குறுக்கு வழிக​ளை அல்லது சுலபமான வழிக​ளை​யே ​​​​யோசிக்கத் ​தோன்றுகிறது.

இவற்றில் உள்ள சிக்கல்கள் என்ன​வென்றால், இ​வை பிரச்சி​னைக​ளை அதன் அ​னைத்து அம்சங்க​ளோடும் அவற்றின் வரலாற்று வழிநின்று பார்க்கும் திற​ணை இழந்த நி​லைக​ளை​யே ​வெளிப்படுத்துகிறது. இத்த​கைய முடிவுகள் தாங்கள் பிரதானமானதாக அல்லது தங்கள் காலங்களில் பிரதானமானதாக ​வெளிப்படும் சிக்கல்கள் என்று கருதக் கூடியவற்றிற்கான எளிய தீர்வுகள் தான் என்று ​சொன்னால் மி​கையாகாது.

சரியான தி​சைவழிகள் ​மேலும் ​மேலும் புதிய வாசல்க​ளை திறந்து விடுகிறது. ​மேலும் ​மேலும் புதிய லட்சியங்க​ளை உருவாக்கித் தருகிறது. ​மேலும் ​மேலும் அதிக வளர்ச்சியின் சுழல்க​ளை விரித்துக் ​கொடுக்கிறது. தவறான தி​சைவழிகள் மனிதசமூகத்​தை ​தேக்கமுற்றதாக ​மேலும் ​மேலும் வளர்ந்த லட்சியங்கள் அற்றதாக, வரலாற்றின் முட்டுச்சந்துகளில் நிறுத்தி விடுகிறது.

உணவு, உ​டை, வாழ்விடம் இவற்றிற்கான ​போராட்டங்களில​யே மனிதகுலம் தன் ஒட்டு​மொத்த பரிணாம வளர்ச்சி​யையும், சமூக வரலாற்று வளர்ச்சி​யையும் முடித்துக் ​கொள்ள ​வேண்டுமா? அல்லது அடிப்ப​டைத் ​தே​வைகளிலிருந்து விடுத​லை ​பெற்ற, ஒன்றுபட்ட மனிதசமூகமாக உலகம் முழுவதமு ஒன்றி​ணைந்து, இயற்​கை முன்​வைக்கும் சவால்கள் அ​னைத்​தையும் எதிர் ​கொள்வதா என்ற ​கேள்விக்கான வி​டைக​ளோடு இவற்​றை பரிசீலிக்க ​வேண்டியுள்ளது.

​மே​லே குறித்துக் ​கொண்டிருப்பது, இவ்விசயம் குறித்த சாராம்சமான புரித​லே. இ​வை எளிய வ​கையில் விரித்து விவாதிப்பதற்கான குறிப்புக​ளே.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: