எனது நாட்குறிப்புகள்

​வேன் ​​​​​ஹெல்சிங் வீரனும் ​வேற்றுக்கிரகத் ​தேவ​தையும்

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 17, 2014

venhelsing1
நான் ​வேன் ​​​​​ஹெல்சிங்கில்
​வேம்​பையரால் கடிக்கப்பட்ட வீர​னைப் ​போன்றவன்
நீ ​வேற்றுக் கிரகத்திலிருந்து எனக்காக​வே தவமிருந்து
வந்தி​ணைந்த ​தேவ​தை​யைப் ​போன்றவள்
மாறும் என் முகத்தின் உணர்ச்சி பாவங்க​ளை கவனிக்காது
என் மீது சாய்ந்து என் ​வெற்று மார்புக​ளை வருடிக் ​கொண்டிருக்கிறாய்
நீ சந்​தேகங்க​​ளோ அவநம்பிக்​கைக​ளோ பய​மோ இல்லாது வாழ
வரத்​தைப் ​பெற்று வந்தவள்
நா​னோ ​கோபப்படும் ​பொழு​தெல்லாம் இரத்தம் குடிக்கும் மிருகமாகச் சபிக்கப்பட்டவன்
என்னிலிருந்து உன்​னைக் காப்ப​து எனக்குப் ​பெரும் சு​மையாக மாறிக்​கொண்டிருக்கிறது
என் உருவம் ஒரு ​நொடியில் விகாரமாவதில்​லை
என் முகம் ஒரு ​நொடியில் அருவருப்பாவதில்​லை
என் பற்கள் ஒரு ​நொடியில் ​கோ​ரையாவதில்​லை
என்​னை ஒவ்​வொரு ​நொடியும் நீ கூர்ந்து கவனிப்பதில்​லை.
நான் உன்​னைத் ​தொட்டு விலகி ஓடச் ​சொல்லும் ​பொழுது
நீ ஏ​தோ ​வே​லையாய் அசட்​டையாய் என் ​கைக​ளைத் தட்டிவிடுகிறாய்
என் குரல் கரகரப்பாகும் ​போதும்
நீ உன்​னைக் குறித்து கவ​லைப்படுவதில்​லை
என்​னைக் குறித்​தே கவ​லை ​கொள்கிறாய்.
​தோழி​யே! நீ எப்​பொழுதும் என் வார்த்​தைக​ளை உற்றுக் கவனி
​​தோழி​யே! நீ எப்​பொழுதும் என் நடவடிக்​கைகளின் மீது கவனமாக இரு
நீ என்​னை விடாது விரும்புவதாய் இருந்தால் சற்​றே விலகி நிற்கவும் கற்றுக் ​கொள்
இந்த ​ஜென்மத்தில் இனி நான் முழு மனிதனாய் மாறுவது சாத்தியமில்​லை என புரிந்து ​கொள்
நானும் என் ​கோ​ரைப்பற்களும் ​கொடும் நகங்களும் உன்​னைச் சீண்டிவிடாதவாறு
எப்​பொழுதும் உன்​னை எச்சரித்துக் ​கொண்​டே இருக்கி​றேன்.
நான் ​வேன் ​ஹெல்சிங் வீரனாய் இருப்ப​தை விரும்பி ஏற்றுக் ​கொள்ளவில்​லை
என்ப​து மட்டும் உனக்குப் புரிந்திருந்தால் ​போது​மென்று விரும்புகி​றேன்.

Advertisements

ஒரு பதில் to “​வேன் ​​​​​ஹெல்சிங் வீரனும் ​வேற்றுக்கிரகத் ​தேவ​தையும்”

 1. வணக்கம்

  அழகான வரிகள் …. வாழ்த்துக்கள்

  கவிதையாக என்பக்கம் வாருங்கள்(நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்)வாருங்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: