எனது நாட்குறிப்புகள்

Archive for பிப்ரவரி, 2014

மேக்சிமஸிற்குத் ​தெரியும்

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 24, 2014

மேக்சிமஸிற்குத் ​தெரியும்
வரலாற்றின் ஊடாகப் பயணித்துத்தான்
வரலாற்​றை ​வெற்றி ​கொள்ள முடியு​மென்பது

​கொ​லோசியத்தில்
​மேக்சிமஸின் வாள்
​​வெற்றி​பெற்ற ஒவ்​வொரு மு​றையும்
அடி​மைகளின் விடுத​லை​
​மேலும் ஒரு சுற்று ​நெருங்கி வந்தது

நம்​மைப் ​பொறுத்தவ​ரை
​மேக்சிமஸ் ஒரு காட்டுமிராண்டி
மேக்சிமஸ் ஒரு ஈவுஇரக்கமற்ற ​கொ​லைகாரன்
மேக்சிமஸ் ஒரு மிருகம்
நம்மு​டையது எ​தையும் நாம் எதிர்பார்க்க முடிவதில்​லை
மேக்சிமஸ்களிடமும், ஸ்பார்டகஸ்களிடமும், ஸ்டாலின்களிடமும்

Advertisements

Posted in கவிதைகள் | Leave a Comment »

​இலக்கிய வடிவங்களின் வர்க்க பின்புலங்கள்

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 9, 2014

நேற்று முரண்களரி ப​டைப்பகம் தனது நான்கு நூல்கள் அறிமுக விழா​வை ​சென்​னை இக்ஷா ​மையத்தில் ​நேற்று மா​லை நடத்தியது. அதில் ஒரு நூல் நான் முன்னு​​ரை எழுதியுள்ள ம​னைப்பாம்பு சிறுக​தைத் ​தொகுப்பு. இந்நூல் குறித்து கவிஞராக அஸ்வ​கோஷ் என்றும் அரசியல் எழுத்தாளராக இரா​ஜேந்திர ​சோழன் என்றும் அறியப்பட்டுள்ள இரா​ஜேந்திர ​சோழன் அவர்கள் அறிமுக உ​ரை​யை விழாவின் இறுதி உ​ரையாக ஆற்றினார்.

அவர் தான் ​பேசும் ​பொழுது சிறுக​தை என்னும் இலக்கிய வடிவத்​தை ​கையில் எடுப்பவர்கள் க​டைபிடிக்க ​வேண்டிய முக்கிய அம்சங்கள் என சிலவற்​றை குறிப்பிட்டார்.

1. நூற்றாண்டு கண்ட தமிழ் சிறுக​தை வடிவத்தி​னை கற்றுக்​கொள்ள ஓரளவிற்கு தன் முன்​னோர்களின் சிறுக​தைகள் பலவற்​றை வாசித்து அனுபவம் ​பெற ​வேண்டும்.
2. க​தைக்கரு இது வ​ரை யாரும் ​தொடாததாக புதியதாக இருக்க ​வேண்டும்.
3. வடிவம் இதுவ​ரை வந்த வடிவங்க​ளை​யெல்லாம் கணக்கி​லெடுத்துக் ​கொண்டு கச்சிதமாக அ​மைய ​வேண்டும்.
4. ஏற்றுக்​கொள்ளப்பட்ட மதிப்பீடுக​ளை மறுபரிசீல​னைக்கு உட்படுத்துவதாக இருக்க ​வேண்டும்.

எந்தத் து​றையில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும் அத்து​​றை குறித்த வரலாற்​றையும், சாத​னைக​ளையும், ​போக்குக​ளையும் கற்று அறிந்திருக்க ​வேண்டும் என்பது ​​பொதுவாக ஏற்றுக் ​கொள்ளப்பட்ட மறுப்​பெதுவும் ​சொல்ல முடியாத கருத்துக்க​ளே.

​மேலும் ​பேசும் ​பொழுது ப​டைப்பு என்பது ​மையநீ​ரோட்டத்தால் அங்கீகரிக்கப்படுவதாக இருக்க ​வேண்டும் என்றார். இன்​றைய தமிழ்ச்சூழ​லைப் ​பொருத்தவ​ரை ​மையநீ​ரோட்டம் என்று எ​தைக் குறிப்பிடுகிறார் எனப் புரிந்து ​கொள்ள முடியவில்​லை. வணிகப்பத்திரி​கைகளில் வரும் சிறுக​தைக​ளை எடுத்துக் ​கொண்டால் அத​னோடு எவ்விதத்திலும் நடராசனின் சிறுக​தைகளின் பல க​தைக்கருக்க​ளை ஒப்பிட்டு ​பேச​வே முடியாது. அவர்களால் கற்ப​னை ​செய்துகூட ​பார்க்க முடியாத​வையும் ஏற்றுக் ​கொள்ளத் தகாத​வையுமாகும்.சிறுபத்திரி​கைச்சூழல் என்றால் இன்​றைக்கு அ​வை பல அரசியல் குழுக்களாக உள்ளன. ஒரு சிறுபத்திரி​கை சார்ந்த வட்டம் மற்​றொரு வட்டத்​தைச் சார்ந்த ப​டைப்பாளர்க​ளை ​பெயரளவிற்குக் கூட குறிப்பிட்டு ​பேசுவதில்​லை. ஒரு சிலரால் மிகப்​பெரிய அளவில் சிலாகிக்கப்படுபவர்க​ளை மற்றவர்கள் ஒன்று​மே இல்லாதவர்களாக ​பேசுகின்றனர். இங்​கே ஏ​தோ ஒரு குழுவின் அங்கத்தினராக இருப்ப​தே நம்​மை கு​றைந்தளவிற்​கேனும் ​பேசுபடு ​பொருளாக மாற்றிக் ​கொள்வதற்கான அடிப்ப​டையாக உள்ளது. நம்மிடம் இருக்கும் சரக்​கெல்லாம் இரண்டாம் பட்சமான​வைதான். இன்னும் ​சொல்லப்​போனால் நமது பிரச்சி​னைக​ளை​யெல்லாம் தாண்டி நம்​மை தூக்கி முன்னிறுத்தி விடும் வலி​மை ​கொண்ட குழுக்கள் உள்ளன. ஆட்சி மாற்றங்களுக்கு ஏற்ப இக்குழுக்களுக்குள் அதிகார ​மையங்களும் மாறும் அளவிற்கு நாட்டு அரசிய​லோடு பின்னிக் கிடக்கின்றன பல குழுக்கள்.

சிறுக​தையின் வடிவ ​நேர்த்தி குறித்து ப​டைப்பாளி மிக கவனமாக இருக்க ​வேண்டும் என்ப​தை பலமாக அழுத்திக் கூறினார். அ​தை ​நேரடியாக இல்லாமல் ம​றை​பொருளாக இத்​தொகுப்பில் உள்ள சிறுக​தைகளின் வடிவச் சிக்கல்க​ளை குறிப்பிடுவதாக​வே இருந்தது. எனக்​கென்ன​வோ புதிய க​தைக்கருக்க​ளை, புதிய சிந்த​னை மு​றைக​ளை,புதிய வாழ்க்​கை மு​றைக​ளை ​பேச வி​ழையும் இலக்கியங்களில் உள்ள வடிவச் சிக்கல்க​ளை அவ்வளவு எளிதாக தீர்க்க முடியாது என்​றே ​தோன்றுகிறது. அ​வை தங்களுக்கான வடிவ மு​றைக​ளை கண்ட​டைய ​​வேண்டிய ​தே​வை இருக்கிறது. அது மிக நீண்ட ​போராட்டத்தின் ஊடாக ​தொடர்ச்சியான ​செயல்பாடுகளின் மூலமாக​வே அ​டைய முடியக் கூடிய வழிமு​றை எனக் கருதுகி​றேன்.

வடிவம் என்ப​தை அவற்றின் உள்ளடக்கத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாது. வடிவம் என்ப​தை எழுத்தாளனின் வர்க்க நி​லைப்பாடுகளிலிருந்து பிரித்து பார்க்க முடியாது.

இன்​னொருபுறம் இலக்கியம் என்பது என்ன? இலக்கியத்தின் ​நோக்கம் என்ன? இலக்கியத்தின் வாசகர்கள் யார்? என்கிற பல ​​கேள்விக​ளோடும் இலக்கிய வடிவம் பின்னி பி​ணைந்து நிற்கிறது.

​நேற்​றைய ​பேச்சில் இரா​ஜேந்திர ​சோழன் அவர்கள் வடிவ ​நேர்த்திக்கு புது​மைப்பித்தனின் “இது மிஷின் யுகம்!” என்ற சிறுக​தை​யை குறிப்பிட்டார். மிஷின் ​போல ​ஹோட்டலில் ​வே​லை ​செய்யும் சர்வர். வாடிக்​கையாளரிடம் இயந்திரத்​தைப் ​போல் அவர் ​செய்யும் ஆர்டர்க​ளை எடுத்துக் ​கொண்டு சப்​ளை ​செய்யும் ஒரு மா​லை ​நேரத்தில். க​டைசியாக எழுத்தாளரின் ​கைக்குட்​டை கீ​ழே விழும்​பொழுது, “ஸார் உங்கள் ​கைக்குட்​டை கீ​ழே விழுந்துவிட்டது, ஸார்!” என்கிற ​போது எழுத்தாளர் “மனிதன் தான்!” என ஊர்ஜிதப்படுத்திக் ​கொள்வ​தோடு க​தை முடிந்ததாகவும் இது தான் கச்சிதமான சிறுக​தைக்கான இலக்கணம் என்றும் குறிப்பிட்டார். உண்​மையில் க​தை அ​தோடு முடியவில்​லை என்பது ​வேறு விசயம்.

ஆனாலும் இச்சிறுக​தை​யின் கரு​வையும், வடிவத்​தையும் ஆய்வுக்கு எடுத்துக் ​கொள்வது நல்லது என்​றே நி​னைக்கி​றேன். இது முழுக்க முழுக்க ஒரு மத்தியதர வர்க்க, ஆண் ​மையப் பார்​வை என்பதற்கு ​மேலாக ஒன்றுமில்​லை. இக்க​தைக்​கேற்ற வடிவத்​தை இக்க​தை எடுத்துக் ​கொண்டுள்ளது. இக்க​தையின் ​நோக்கத்திலிருந்து இக்க​தையின் வடிவத்​தை பிரித்துப் பார்க்க​வே முடியாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ​ஜெய​மோகன் ​கேரள ​​​ஹோட்டல் ​தொழிலாளர்கள் குறித்து தனது ​கோபத்​தையும், ​வெறுப்​பையும் ​வெளியிட்டிருந்தார். அதன் ​வே​ரை இச்சிறுக​தையில் காண முடிகிறது. அதன் ​தொடர்ச்சி​யை அக்க​தை​யை இரசிக்கும் அ​தை முன் உதாரணமாகக் காட்டும் இரா​​ஜேந்திர ​சோழனின் இரச​னையில் காண முடிகிறது. இங்​கே ஒரு மத்தியதர வர்க்க மனப்​போக்கின், வாழ்க்​கைப் பார்​வையின் சங்கிலித் ​தொட​ரை இணங்காண முடிகிறது.

ஒரு மத்தியதர வர்க்க ஆணின் மனப்பாங்கு சாப்பாட்டு விசயத்தில், தனக்கு சாப்பாடு பரிமாறுபவர் எப்படி நடந்து ​கொள்ள ​வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு விசயத்தில் இக்க​தையில் ​தெளிவாக ​வெளிப்படுகிறது. இக்காலத்தில் ம​னைவியிடம் தாயிடம் கூட எதிர்பார்க்க முடியாத உணவு பரிமாறும் ​பொழுது குறிப்பறிந்தும், சிரித்த முகத்துடனும், அணுசர​ணையாக அருகில் இருந்து ​வேண்டுவது ​கேட்டு தனி கவனம் ​செலுத்தி, அன்​போடு நடந்து ​கொள்ள நி​னைக்கும் எதிர்பார்ப்பின் ​வெளிப்பாடும் அந்த நக்கலும் தான் “மனிதன் தான்!” என்ற ​சொல்லில் ​வெளிப்படுவதாக வர்க்க, பாலின, சமூக ஆய்வும் ​செய்து பார்க்கலாம்.

இது மத்தியதர வர்க்கத்திலிருந்து வருபவர்களுக்கு தன்னியல்பாக கி​டைக்கக்கூடிய கருத்தியல் நி​லைப்பாடுகள். தன்னியல்பாக நமது பிறப்பு மற்றும் வளர்ப்பு அடிப்ப​டையில் கி​டைக்கும் அனுபவச் ​சேகரிப்புகள் தரும் ப​டைப்புகளின் வடிவ ​நேர்த்தி உண்​மையில் கச்சிதமாகத்தான் அ​மையும். அ​வை இயல்பான​வை.

ஆனால் தனது வர்க்க நி​லைக்கும், தான் சார்ந்த அரசியல், ​கொள்​கை அடிப்ப​டையிலான வர்க்க நி​லைகளுக்கும் இ​டை​​யேயான ​வேறுபாடுகள் உ​டையவர்கள். தன்னியல்பான அனுபவங்க​ளை தான் ​தேர்ந்​தெடுத்துக் ​கொண்ட கருத்துக்களின் நி​லைகளிலிருந்து புரிந்து ​கொள்ளவும் ப​டைப்பாக்கவும் முயற்சிக்கும் ​பொழுது ஏற்படும் வடிவச் சிக்கல்கள், அவர்கள் தங்க​ளை எந்தளவிற்கு தங்களின் ​தேர்ந்​தெடுத்துக் ​கொண்ட கருத்துக்க​ளோடு இ​ணைத்துக் ​கொள்கிறார்கள் என்பது சார்ந்ததாக​வே உள்ளது. முன்னது subconscious அடிப்ப​டையிலானது. பின்னது consciousஆக ​செய்ய ​வேண்டியது.

இரண்டாவது மிக முக்கியமான விசயம். இலக்கியங்களின் வாசகர்களும் மத்தியதர வர்க்கத்தினராக​வே இருப்பதால் அவர்களின் எதிர்பார்ப்புகளும் முன்ன​தோடு ​பொருந்திப் ​போய்விடுவதால் அவர்களால் அந்த வடிவங்க​ளே உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. அவர்கள் புதிய எழுத்தாள​னை, வடிவ பரி​சோத​னைகளில் விழிப்புணர்​வோடு ஈடுப​ட ​வேண்டிய ப​டைப்பாள​னை ஆளு​மை ​செய்ய ​தொடங்குகிறார்கள். தன்னு​டைய ​நோக்கங்களில் ​தெளி​வோடு இல்லாத அல்லது அங்கீகரிப்பிற்கு முன்னால் சரண​டைந்து விடுகிற ப​டைப்பாளன், தன்னு​டையதும் தனது வாசகனு​டையதுமான அந்த மத்தியதர வர்க்க க​தைக்கருக்களுக்கும், க​தை ​சொல்லல் மு​றைகளுக்கும் திரும்பி விடுகிற அவலங்களும் ஏற்பட்டு விடுகின்றன. வடிவத்தின் மீதான தாக்குதல்கள் எப்​பொழுதும் அறிந்​தோ அறியாம​லோ கருக்களின் மீதான தாக்குதலும் தான்.

Posted in கட்டு​ரை | Leave a Comment »

இந்திய விவசாய சிக்கல்கள்

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 1, 2014

இன்று facebookல் ந​டை​பெற்ற ஒரு விவாதத்தில் என்னால் முன் ​வைக்கப்பட்ட பின்னூட்டங்க​ளை ​தொகுத்துக் ​கொள்ளும் முயற்சி.

முதலாளித்துவ நாடுகளோடு இந்தியாவை ஒப்பிட முடியாது. இந்தியா போன்ற நாடுகளின் சந்தைகள் அந்நியர்களின் ஆட்சி காலம் துவங்கி தொடர்ந்து அந்நியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முதலாளித்துவ நாடுகள் துவங்கி ரஷ்யா, சீனாவரை அனைத்தும் தங்கள் சந்தையை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. குறிப்பாக ரஷ்யா சீனாவிற்கும் இந்தியாவிற்குமான அடிப்படை முரண்பாடே அவை கம்யூனிஸ்ட்களின் தலைமையிலான புரட்சிக்கு பிறகு தங்களின் சந்தையை முழுமையாக அந்நியர்களின் கட்டுப்பாட்டிலிருந்து பறித்து எடுத்துக் கொண்டு விட்டன.

அதனால் அவற்றால் விவசாயத்துறையில் பல அடிப்படை மாற்றங்களைச் செய்ய முடிந்தது. நிலம், உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள், உற்பத்திக் கருவிகள் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு பிரிவுகளிலும் நாடு முழுவதும் சீரானதும் துரிதமானதுமான வளர்ச்சியை அவர்களால் எட்டமுடிந்தது.

ஆனால் இந்தியா அத்தகைய நிலையை 1947ல் அடையவில்லை. இங்கே வளர்ச்சி என்பது இதன் சந்தையை தீர்மானிக்கும் பல்வேறு சக்திகளின் தேவை மற்றும் அனுமதிக்கும் அளவைப் பொறுத்து மந்தமானதாகவும், சமச்சீரற்றதாகவும், தேக்கம் நிறைந்ததாகவுமே இருந்து வருகிறது. இந்திய சந்தை என்பது முழுமையாக இந்திய அரசால் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் தீர்மானிக்கக் கூடியதாகவும் ஆரம்பத்திலிருந்தே இல்லை. இந்த முழுமையாக சுதந்திரம் இல்லாத சூழலில் உருவான உற்பத்தி முறை வர்க்க உருவாக்கங்கள் அவற்றின் வளர்ச்சி படிபபடியாக மீண்டும் இந்தியாவை சர்வதேச முதலாளித்துவ சக்திகளிடம் தன்னை இழக்க வேண்டிய நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது.

இந்திய விவசாயத்தைப் பொறுத்தவரை அதன் அடிப்படை தன்மைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய புரட்சிகர செயல்பாடுகள் செய்யப்படவில்லை. இந்திய ஆளும் வர்க்கங்கள் என்பது இந்திய நிலவுடமையோடும், ஏகாதிபத்தியங்களோடும் சமரசம் செய்து கொண்டதன் விளைவே இது.

இன்றைக்கு இந்திய விவசாயம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருப்பதற்கு, நாடு முழுவதும் இரண்டறை லட்சத்திற்கும் (அரசு புள்ளிவிபரங்களின்படி) அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கும் ரசாயண உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் மட்டுமே பிரதான காரணமல்ல, சர்வதேச நிர்பந்தங்களும், இந்திய ஆட்சியாளர்களின் இந்திய மக்கள் விரோத நிலைப்பாடுகளுமே காரணம்.

விவசாய உற்பத்தியிலிருந்து கி​டைக்கும் ​தேசிய வருமானத்தின் சதவீதத்திற்கும் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தொகைக்கும் உள்ள வித்தியாசத்திற்கான காரணம் என்பது இந்திய ஆளும் வர்க்கங்கள் நிலவுடமையோடும், ஏகாதிபத்தியங்களோடும் சமரசம் செய்து கொண்டதன் விளைவான அரசியல் சமூக பொருளாதார இழிநிலைகளின் ஊடாக பார்க்கப்பட வேண்டிய அம்சம்.

ஒரு அர்த்தத்தில் பார்த்தால் இயற்கை வேளாண்மை என்பது இந்திய விவசாய உற்பத்திமுறையை சர்வதேச விவசாய உற்பத்தி முறையோடு போட்டி போடச் செய்ய முடியாமல் அதன் முன் இந்திய விவசாயத்தை சரணடைந்து அழிந்து போக வைப்பதற்கான அம்சமும் உள்ளடங்கியிருப்பதாகத்தான் இன்றைய சர்வதேச அரசியல் பின்னணியில் ஒரு பொருள் கிடைக்கிறது.

முதலாளித்துவ நாடுகளில் நிலங்கள் தனியார்களின் மிகப்பெரும் பண்ணைகளாக உருவாகின அவற்றின் விளைவாக அங்கே உற்பத்தியில் மிகப்பெரும் பாய்ச்சல்களை அதன் பல்வேறு அம்சங்களிலும் உருவாக்க முடிந்தது.

ரஷ்யா சீனாவில் நிலங்கள் விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டதின் பின்னால், கூட்டுப்பண்ணைகள் உருவாக்கப்பட்டன. அவற்றின் மூலமாக நிலங்கள் துண்டுதுண்டாக சிதறுண்டு போகாமல் ஒன்றிணைக்கப்பட்டு முதலாளித்துவ நாடுகளைப் போலவே பாய்ச்சல் ரீதியான விவசாய உற்பத்திமுறையை சாதிக்க முடிந்தது.

ஆனால் இந்தியா முதலாளித்துவ நாடுகளின் திசையிலும் வளரமுடியாமல், ரஷ்யா சீனா பாணியிலும் வளர முடியாமல் வரலாற்று வளர்ச்சி போக்கில் சிக்கிக கொண்டது. அதற்கு காரணம் இந்திய விடுதலைப் போராட்டம் என்பது உறுதியான தலைமைகளின் பின்னால் அணிதிரண்டு நடத்தப்படவில்லை. மறுபுறம் சுதந்திரத்திற்குப் பிறகும் உறுதியான புரட்சிகர தலைமைகள் உருவாகி ஒரு புரட்சியை இந்தியாவில் இது வரை நடத்த முடியவில்லை. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சர்வதேச சூழல்களில் நிலைமைகள் மேலும் மேலும் மோசமாகிக் கொண்டு வருகிறது.

Posted in கட்டு​ரை | Leave a Comment »