எனது நாட்குறிப்புகள்

இந்திய விவசாய சிக்கல்கள்

Posted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 1, 2014

இன்று facebookல் ந​டை​பெற்ற ஒரு விவாதத்தில் என்னால் முன் ​வைக்கப்பட்ட பின்னூட்டங்க​ளை ​தொகுத்துக் ​கொள்ளும் முயற்சி.

முதலாளித்துவ நாடுகளோடு இந்தியாவை ஒப்பிட முடியாது. இந்தியா போன்ற நாடுகளின் சந்தைகள் அந்நியர்களின் ஆட்சி காலம் துவங்கி தொடர்ந்து அந்நியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முதலாளித்துவ நாடுகள் துவங்கி ரஷ்யா, சீனாவரை அனைத்தும் தங்கள் சந்தையை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. குறிப்பாக ரஷ்யா சீனாவிற்கும் இந்தியாவிற்குமான அடிப்படை முரண்பாடே அவை கம்யூனிஸ்ட்களின் தலைமையிலான புரட்சிக்கு பிறகு தங்களின் சந்தையை முழுமையாக அந்நியர்களின் கட்டுப்பாட்டிலிருந்து பறித்து எடுத்துக் கொண்டு விட்டன.

அதனால் அவற்றால் விவசாயத்துறையில் பல அடிப்படை மாற்றங்களைச் செய்ய முடிந்தது. நிலம், உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள், உற்பத்திக் கருவிகள் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு பிரிவுகளிலும் நாடு முழுவதும் சீரானதும் துரிதமானதுமான வளர்ச்சியை அவர்களால் எட்டமுடிந்தது.

ஆனால் இந்தியா அத்தகைய நிலையை 1947ல் அடையவில்லை. இங்கே வளர்ச்சி என்பது இதன் சந்தையை தீர்மானிக்கும் பல்வேறு சக்திகளின் தேவை மற்றும் அனுமதிக்கும் அளவைப் பொறுத்து மந்தமானதாகவும், சமச்சீரற்றதாகவும், தேக்கம் நிறைந்ததாகவுமே இருந்து வருகிறது. இந்திய சந்தை என்பது முழுமையாக இந்திய அரசால் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் தீர்மானிக்கக் கூடியதாகவும் ஆரம்பத்திலிருந்தே இல்லை. இந்த முழுமையாக சுதந்திரம் இல்லாத சூழலில் உருவான உற்பத்தி முறை வர்க்க உருவாக்கங்கள் அவற்றின் வளர்ச்சி படிபபடியாக மீண்டும் இந்தியாவை சர்வதேச முதலாளித்துவ சக்திகளிடம் தன்னை இழக்க வேண்டிய நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது.

இந்திய விவசாயத்தைப் பொறுத்தவரை அதன் அடிப்படை தன்மைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய புரட்சிகர செயல்பாடுகள் செய்யப்படவில்லை. இந்திய ஆளும் வர்க்கங்கள் என்பது இந்திய நிலவுடமையோடும், ஏகாதிபத்தியங்களோடும் சமரசம் செய்து கொண்டதன் விளைவே இது.

இன்றைக்கு இந்திய விவசாயம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருப்பதற்கு, நாடு முழுவதும் இரண்டறை லட்சத்திற்கும் (அரசு புள்ளிவிபரங்களின்படி) அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கும் ரசாயண உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் மட்டுமே பிரதான காரணமல்ல, சர்வதேச நிர்பந்தங்களும், இந்திய ஆட்சியாளர்களின் இந்திய மக்கள் விரோத நிலைப்பாடுகளுமே காரணம்.

விவசாய உற்பத்தியிலிருந்து கி​டைக்கும் ​தேசிய வருமானத்தின் சதவீதத்திற்கும் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தொகைக்கும் உள்ள வித்தியாசத்திற்கான காரணம் என்பது இந்திய ஆளும் வர்க்கங்கள் நிலவுடமையோடும், ஏகாதிபத்தியங்களோடும் சமரசம் செய்து கொண்டதன் விளைவான அரசியல் சமூக பொருளாதார இழிநிலைகளின் ஊடாக பார்க்கப்பட வேண்டிய அம்சம்.

ஒரு அர்த்தத்தில் பார்த்தால் இயற்கை வேளாண்மை என்பது இந்திய விவசாய உற்பத்திமுறையை சர்வதேச விவசாய உற்பத்தி முறையோடு போட்டி போடச் செய்ய முடியாமல் அதன் முன் இந்திய விவசாயத்தை சரணடைந்து அழிந்து போக வைப்பதற்கான அம்சமும் உள்ளடங்கியிருப்பதாகத்தான் இன்றைய சர்வதேச அரசியல் பின்னணியில் ஒரு பொருள் கிடைக்கிறது.

முதலாளித்துவ நாடுகளில் நிலங்கள் தனியார்களின் மிகப்பெரும் பண்ணைகளாக உருவாகின அவற்றின் விளைவாக அங்கே உற்பத்தியில் மிகப்பெரும் பாய்ச்சல்களை அதன் பல்வேறு அம்சங்களிலும் உருவாக்க முடிந்தது.

ரஷ்யா சீனாவில் நிலங்கள் விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டதின் பின்னால், கூட்டுப்பண்ணைகள் உருவாக்கப்பட்டன. அவற்றின் மூலமாக நிலங்கள் துண்டுதுண்டாக சிதறுண்டு போகாமல் ஒன்றிணைக்கப்பட்டு முதலாளித்துவ நாடுகளைப் போலவே பாய்ச்சல் ரீதியான விவசாய உற்பத்திமுறையை சாதிக்க முடிந்தது.

ஆனால் இந்தியா முதலாளித்துவ நாடுகளின் திசையிலும் வளரமுடியாமல், ரஷ்யா சீனா பாணியிலும் வளர முடியாமல் வரலாற்று வளர்ச்சி போக்கில் சிக்கிக கொண்டது. அதற்கு காரணம் இந்திய விடுதலைப் போராட்டம் என்பது உறுதியான தலைமைகளின் பின்னால் அணிதிரண்டு நடத்தப்படவில்லை. மறுபுறம் சுதந்திரத்திற்குப் பிறகும் உறுதியான புரட்சிகர தலைமைகள் உருவாகி ஒரு புரட்சியை இந்தியாவில் இது வரை நடத்த முடியவில்லை. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சர்வதேச சூழல்களில் நிலைமைகள் மேலும் மேலும் மோசமாகிக் கொண்டு வருகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: