எனது நாட்குறிப்புகள்

கு​ரோனி ​கேப்பிடலிசம் என்றால் என்ன?

Posted by ம​கேஷ் மேல் ஏப்ரல் 21, 2014

​நேற்று மா​லை நண்பர் ஒருவர். எழும்பூரில் நடக்கும் கூட்டம் ஒன்றுக்கு ​போகலாம் வாருங்கள் என்று அ​ழைப்பு விடுத்திருந்தார். சரி என ஏற்கன​வே ஒப்புக் ​கொண்டபடி ​நேற்று நானும் அவரும் ​போயிருந்​தோம். “த​லையங்க விமர்சனம்” என்ற த​லைப்பில் இக்கூட்டம் ​தொடர்ச்சியாக 69 வாரங்களாக நடந்து ​கொண்டிருக்கிறது. ​நேற்று 70வது அமர்வு. “சமகால இந்திய ​பொருளாதாரம்” என்ற த​லைப்பில் திரு. இல. குருநாதன் என்ற வங்கி ​மேலாளராக உள்ள ​பொருளாதார அறிஞர் ஒருவர் உ​ரையாற்றுவதாக இருந்தது. நல்ல த​லைப்புத்தான். ​தெரிந்து ​கொள்ள நி​றைய விசயங்கள் இருக்கும் என ஆர்வமா​னேன்.

கூட்டத்திற்கு த​லை​மை​யேற்று திரு. இளங்​கோ சுப்பிரமணியன் என்பவர் உ​ரையாற்றத் துவங்கினார். நியூட்டன் விஞ்ஞான கழகம் என்ற அ​மைப்பு ஒன்றில் உள்ளவர் என நண்பர் அவ​ரைக் குறித்து அறிமுகம் ​செய்து ​வைத்தார். ​தொழிற்சங்கங்களில் ​வே​லை ​செய்து ​போராட்டங்களில் கலந்து ​கொண்டு அனுபவம் ​பெற்ற இடதுசாரி எனக் கூடுதல் தகவல்கள் ​பேச்சில் கி​டைத்தது. தனது உ​ரையில் மார்க்சியத்தின் மூன்று ​தோற்றுவாய்கள் மற்றும் மூன்று உள்ளடக்கக் கூறுகள் குறித்து திராவிட ​மே​​டைப் ​பேச்சு பாணியில் ஜனரஞ்சகமாக ​பேசிக் ​கொண்டிருந்தார். ​ஜெர்மனியில் திரும்பிய பக்க​மெல்லாம் தத்துவஞானிகளாக இருப்பார்கள். இங்கிலாந்தில் டீக்க​டை ஒன்றில் அமர்ந்திருக்கும் பத்துப்​பேரில் எட்டுப் ​பேர் அரசியல் ​பொருளாதார ​மே​தைகளாக இருப்பார்கள், பிரான்சில் ​பேருந்துக்கு நின்று​கொண்டிருக்கும் 100 ​​பேரில் எண்பது ​பேர் ​சோஷலிஸ்ட்களாக இருப்பார்கள் என்று கூறிக்​கொண்​டே ​போனார். ஜனரஞ்சகம் படும் பாடு சுவராசியமாக இருந்தது. அடுத்தகட்டமாக மார்க்சியர்களுக்​கே உரிய கறார்த்தன்​மையுடன் மார்க்சியம் குறித்த தன் விமர்சனங்க​ளை ​வைத்தார், அதாவது 19ம் நூற்றாண்டு வ​ரை மார்க்சும் எங்​கெல்சும் உயி​​ரோடிருந்தவ​ரை இயற்​கை விஞ்ஞானத்தில் ஏற்பட்ட வளர்ச்சிக​ளை மட்டு​மே அவர்கள் இயக்கவியல் ​பொருள்முதல்வாத வழியில் ​பொது​மைப்படுத்தி மார்க்சியத்தின் விஞ்ஞானத்தன்​மை​யை நிரூபித்தார்கள் 1901ல் துவங்கி அதன்பிறகு ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சி​க​ளை யாரும் மார்க்சிய அடிப்ப​டையில் ​ஆய்வு​ ​செய்து மார்க்சியத்தின் சரித்தன்​மை​யை நிரூபிக்கவில்​லை. மார்க்சும் எங்​லெசும் இருந்த ​பொழுது மின்சாரம் கூட கண்டுபிடிக்கப்படவில்​லை. ஆனால் மிக முக்கிய விஞ்ஞான ஆய்வுக​ளெல்லாம் அதன் பிற​கே ஏற்பட்டன. குவான்டம் இயற்பியல் ​பொருள்தான் முதன்​மையானது என்ப​தை மறுத்து எவ்வள​வோ காலமாகிவிட்டது இந்த உண்​மை​யை மார்க்சியர்கள் தட்டிக்கழிக்காமல் மறுக்காமல் ஏற்றுக்​கொள்ளத்தான் ​வேண்டும் என்றார்.

அ​தோடு நிறுத்திக்​கொண்டிருந்தாலும் பரவாயில்​லை யா​ரேனும் நான் ​சொல்வது தவறு என்று நிரூபித்தால் இந்த இடத்தி​லே​யே எதி​ரே சுழலும் மின்விசிறியில் தற்​கொ​லை ​செய்து ​கொள்கி​றேன் எனத் ​தே​வையில்லாமல் அதிக உணர்ச்சிவசப்பட்டார். என்ன பிரச்சி​னை​யோ, அநியாயமாக ஒரு தற்​கொ​லைக்கு நாம் காரணமாகிவிடக்கூடாது என அ​​மைதிகாக்க முயற்சித்​தேன். ஆனால் கூட்டத்தின் முடிவில் அவராக என்​னோடு உ​ரையாட வந்தார். நான் ​கேட்​டேன். நீங்கள் ​லெனின் எழுதிய ​”​பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற நூ​லை படித்திருக்கிறீர்களா? கு​றைந்தது அந்நூ​லைப் பற்றிக் ​கேள்விப்பட்டதுண்டா ஏ​னெனில் அதன் முழு​மையான ​மொழி​பெயர்ப்பு இதுவ​ரை தமிழில் வரக்கூட இல்​லை என்று ​சொன்​னேன். ​கொஞ்சம் மிரண்டது ​போல் ​தோன்றியது. அநாவசியமாக வார்த்​தைக​ளை விடாதீர்கள். நீங்கள் பாட்டுக்கு தூக்கில் ​தொங்குகி​றேன் என்​றெல்லாம் ஏன் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என்று ​கேட்​டேன்.

அடிப்ப​டையில் அவருக்கு ​பொருள், கருத்து ஆகியவற்றிற்கி​டையிலான வித்தியாசங்களி​லே​யே ​தெளிவில்​லை என்பது ​தெளிவாகியது. குவான்டம் இயற்பியலின் படி ​பொரு​ளை பகுத்துக் ​கொண்​டே ​போனால் இறுதியில் எஞ்சுவது ஆற்ற​லே என்ற ஒரு விதி இருக்கிறது. அ​தைத்தான் அவர் குவான்டம் இயற்பியல் மார்க்சியத்​தை மறுத்துவிட்டதாகக் கருதியிருக்கிறார ​போலும்.

​பொருள் என்றால் என்ன? என்ற ​கேள்விக்கு இதுநாள் வ​ரை வந்துள்ள வி​டைகளி​லே​யே அற்புதமானதும் ஆகச்சிறந்ததுமான வி​டை​யை அளித்தவர் இயக்கவியல் ​பொருள்முதல்வாத தத்துவஞானியாகிய வி.ஐ.​லெனின்தான் என்கிற அடிப்ப​டை விசயம் கூடத் ​தெரியாமல் தன்​னை மார்க்சியர்கள் என்று கூறிக்​​கொள்வதன், அதன் மீது நின்று ​​கொண்டு மார்க்சியத்​தை விமர்சனம் ​செய்யும் மனம் எப்படிப்பட்டது?

​லெனின் ​பொருள் குறித்த ​கேள்விக்கு இப்படி பதிலளிப்பார். “எ​வை மனித சிந்த​னைக்கு ​வெளி​​யே சு​யேச்​சையாக உள்ள​தோ அ​வை அ​னைத்தும் ​பொருள்வ​கைத் தன்​மைய​தே” ​பொருள் என்றால் ஒரு நி​றையும் எ​டையும் இருக்கும், அது திடமாக​வோ, திரவமாக​வோ, வாயுவாக​வோ, இருக்கும். அது ஐம்புலன்களா​லோ, கருவிகளின் து​ணை​கொண்​டோ உணரக்கூடியதாக இருக்கும் என்பதான வ​ரைய​றைக​ளை​யெல்லாம் தாண்டி ​கொடுக்கப்பட்ட இந்த அற்புதமான விஞ்ஞான வழிப்பட்ட விளக்க​மே மார்க்சியம் என்ப​தை ஆழமாக உணரமுடியாமல், ​தெரிந்து ​கொள்ள முடியாமல் ​​​போய்விடுதல் துரதிர்ஷ்டம்தான்.

மார்க்​சையும் எங்​லெ​சையும் தாண்டி மார்க்சியம் வளர்ந்திருக்கிறதா, வளர்த்திருக்கிறார்களா எனத் ​தெரியாம​லே​யே நாம் இருந்து ​கொண்டு அதன் மீது குற்றம்சாட்டுவது எத்த​னை ​பெரிய அசட்டுத்தனமும், அ​யோக்கியத்தனமுமாகும்.

இரண்டாவதாக சிறப்பு​ரை ஆற்ற வந்தவர் “சமகால இந்திய ​பொருளாதாரம்” குறித்த நமது அன்றாட ந​டைமு​றைரீதியான கண்​ணோட்டத்தில் எளிய உ​ரையாற்றினார். இ​டையி​டை​யே இது என் கருத்தல்ல இன்​றைய முதலாளித்துவ உலகமும், இந்திய அரசும் அவ்வாறு கூறுகின்றன எனத் ​தெளிவுபடுத்திக் ​கொண்​டே வந்தார். லிபர​லை​சேஷன் ந​டைமு​றை குறித்து 1984 வ​ரை இருந்த ​லெ​சென்ஸ் ​பெர்மிட் ராஜ் காலகட்டத்திற்கு ஏற்பட்ட மாற்றங்க​ளை மிகச்சுருக்கமாக எளி​மையாக விவரித்தார். இவற்றின் வி​ளைவாக 1991ல் சர்வ​தேச நிதிநிறுவனங்கள் நிர்பந்தங்கள் எவ்வாறு இந்தியா​வை தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் பா​தைக்கு இழுத்து வந்தது, அன்​றைய நிதி அ​மைச்சர் மன்​மோகன் சிங்கின் நடவடிக்​கைகள் குறித்து சுருக்கமாக விவரித்தார். இ​டையி​டை​யே அதில் ஏற்பட்ட ​தொய்வுகள், மற்றும் முன்​யோச​னையும், ​தெளிவான திட்டமுமின்றி அத​னை ந​டைமு​றைப்படுத்தியதால் ஏற்பட்ட ​நெருக்கடிக​ளை குறிப்பிட்டார். இத​னைச் ​சொல்லும் ​பொழுது ஒன்​றைக் குறிப்பிட்டார். எந்த முடிவுக​ளையும் ​நெருக்கடியான மற்றும் நிர்பந்தம் காரணமாக எடுக்கக்கூடாது அ​வை ​தோல்விகளில்தான் முடியும். முதன்முதலில் தனியார்மயமாக்கலின் ​பொழுது ராஜீவ்காந்தி காலகட்டத்தில் ​செய்யப்பட்ட​வை என ​டெலிகாம் து​றை மற்றும் ஆட்​டோ​மொ​பைல் து​றையிலான புரட்சி​யை குறிப்பிட்டார். ஓரிடத்தில் தாராளமயமாக்கலின் வளர்ச்சி​​யை கண்டறிவதற்கான குறிகளாக கீழ்வருவனவற்​றை சர்வ​தேச முதலாளித்துவ அ​மைப்புகள் குறிப்பிடுகின்றன என்றார். அ​வை, தனிமனிதர்கள் தமக்குச் ​சொந்தமாக ​பைக், கார், ​​மொ​பைல், ஏசி மற்றும் ​சொந்த வீடு ஆகிய ஐந்​தையும் ​சொந்தமாக ​வைத்திருப்பதாகும். ​தொன்னூறுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் 10லட்சம் ​பேர் என்ற அளவிற்​கே, இ​தை ​வைத்திருந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் 2000ற்குப் பிறகு இது 50 ​கோடி​யை தாண்டிவிட்டது நிச்சயம் நாமும் இந்த சாதக அம்சங்க​ளை ஒத்துக் ​கொள்ளத்தான் ​வேண்டும் என்றார். வறு​மை கணிசமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. அது மிக ​மெதுவாகத்தான் ஒழிக்க முடியும் என தாராளவாத மாற்றங்க​ளை முன்​மொழிபவர்கள் குறிப்பிடுகிறார்கள். 1984ற்கு முன்பு வ​ரை இருந்த​தை இந்திய ஆட்சியாளர்கள் ​சோசலிச மாதிரி என்று குறிப்பிடுகிறார்கள். நமக்கு அதில் மாறுபட்ட கண்​ணோட்டம் இருக்கலாம். ஆனால் ​சோசலிசமும் இல்லாமல் முதலாளித்துவமும் இல்லாமல் அ​தைப் ​போன்ற ஒன்று ஒழிக்கப்படுவது இந்தியாவில் இடதுசாரிகள் மீண்டும் வலி​மை ​பெறுவதற்கு அவசியமாகும். என்​னைக் ​கேட்டால் ​மோடி ​போன்றவர்களின் வரு​கை எதிர்ம​றையாக இடதுசாரிகளுக்கு சாதகமானதாகும்.

இத​னைக் குறிப்பிடும் ​பொழுது எனக்கு ​கேட்கத் ​தோன்றிய ஒரு ​கேள்வி “உங்களுக்கு இந்த அளவீட்டு மு​றையில் எந்த சந்​தேகமும் வரவில்​லையா, நம்​மை யா​ரோ முட்டாளாக்குகிறார்களா என்ற சந்​தேகம் ​தோன்றவில்​லையா?”. ஆனால் கூட்டம் முடிந்தவுடன் அவரு​டைய ​பேச்சில் உள்ள சில சிக்கல்க​ளை அவருக்கு சுட்டிக் காட்ட முடிந்தது. அவரும் ​நட்​போடு அவற்​றை ​பொறு​​​மையாகக் ​கேட்டுக் ​கொண்டார் என்பது அவர் மீதான மரியா​தை​யை உயர்த்தியது.

​தொழிற்சா​லை அல்லது ​​வே​லை​செய்யும் நிறுவனம் அதற்கு அருகி​லே​யே அந்தத் ​தொழிலாளர்கள் அல்லது ஊழியர்களுக்கான குடியிருப்புகள், அவர்கள் குழந்​தைகளுக்கான பள்ளிக்கூடங்கள், அவர்களுக்கான கூட்டுறவு பண்டகசா​லைகள், வி​​ளையாட்டுத்திடல்கள், புத்துணர்வுப் பூங்காக்கள், நி​றைய மரம் ​செடிகளுக்கு இ​டை​யே இப்படியான வாழ்க்​கையில் இன்​றைக்கு இருப்பது ​போன்ற வாகனப் ​​பெருக்கங்களுக்கும், ​பெட்​ரோல் ​போன்ற அந்நிய இறக்குமதிக்கான அவசியங்கள் இல்லாது ​போவ​தையும், சுற்றுச்சூழலும், ​வெப்பமயமாதலும் கு​றைந்து ஏசி ​போன்ற ஆபத்தான குளிர்சாதனப் ​பொருட்கள் பயன்பாடு கு​றைவ​தையும், குடியிருப்புகளின் வழியாக ரியல் எஸ்​டேட், தனியார் ​சொந்த வீடுகட்டும் ​வெறி ஆகிய​வை கு​றைந்த ஒரு உலகத்​தை கு​றைந்தபட்சம் கனவு காணக்கூட முடியாமல் ​போவ​தை எப்படி விளங்கிக் ​கொள்வது? எல்லா ​பொருளாதார அறிஞர்களும் ஏ​தோ ஒரு வ​கையில் கார்ப்ப​ரேட்டுகளின் அளவீட்டுமு​றைகளுக்கும் சிந்த​னை மு​றைகளுக்கும் பலியாகிப் ​போவதும், ​சொந்த சிந்தனா ஆற்ற​லை பகுத்தறி​வை இழந்து ​போதல் ​​வேத​னைக்குரியதாக இருக்கிறது.

மார்க்சியம் என்ப​தை நம்மில் பலரும் நிலவும் முதலாளித்துவ முரண்களுக்கான இயலா​மைகளுக்கான மாற்றீடாக மட்டும் சுருக்கிக் காணுவ​தே இதில் உள்ள பிரதான சிக்கல். மார்க்சிய அரசியல் ​பொருளாதாரம் என்பது ​பொருளாதாரத்​தை புரிந்து ​கொள்வதற்கான அடிப்ப​டைப் பார்​​வையில​யே முற்றிலும் எதிரானது என்ப​தையும், அது முற்றிலும் முதலாளித்துவத்திற்கு எதிரான ​​பொருளாதார இயங்குமு​றை​யை முன்​வைக்கிறது. அது எவ்வாறு முதலாளித்துவ ​பொருளாதாரத்தின் ​நெருக்கடிக​ள் நிரந்தரமாக தீர்க்க முடியாத​வை என விளக்குகிறது என்ப​தை ஆழமாக புரிந்து ​கொள்ளத் தவறுகிறார்கள். மார்க்சியத்தின் ​பொருளாதாரப் பார்​வை அதன் பிற பகுதிகளிலிருந்து பிரிக்க முடியாமல் பின்னிப்பி​ணைந்து நிற்கிறது. எனக்குத் தத்துவம் ​​​தெரியும் ஆனால் ​பொருளாதாரம் ​தெரியாது என்ப​தோ, எனக்கு ​சோசலிசம் ​தெரியாது என்ப​தோ மார்க்சியத்​தை புரிந்து ​கொண்டதாக​​வே ஆகாது. அத்த​கைய நி​லையில் நாம் நம்​மை மார்க்சியவாதி, இடதுசாரி என்று கூறிக் ​கொள்வ​தே தவறான​து ஆகும்.

இ​டையில் அவரிடம் கு​ரோனி ​கேப்பிடலிசம் என்றால் என்ன? என்று த​லை​​மையு​ரை ஆற்றியவர் ​கேட்டார். அதற்கு பதிலளித்த சிறப்பு​ரை ஆற்றியவர். டாடா பிர்லா ​போன்றவர்க​ளை இந்திய கிளாசிக்கல் முதலாளிகளுக்கு உதாரணமாக குறிப்பிடலாம் என்றால் ரி​லையன்ஸ், அதானி, தமிழகத்தின் சன் குழுமம் ​போன்றவர்க​ளை கு​ரோனி ​கேப்பிடலசத்திற்கு உதாரணமாகக் கூறலாம். இ​வை சுதந்திரச் சந்​தை. சுதந்திரப் ​போட்டி என்பனவற்றின் மீது நம்பிக்​கை இல்லாத​வை. இ​வை அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியவற்​றோடு கள்ளக்கூட்டு ​வைத்துக் ​கொண்டு சந்​தையில் தன் எதிரிக​ளை சதித்தனமாக ஒழித்துக் கட்டி தங்கள் ஆதிக்கத்க​தை நி​லைநாட்டும் என்றார்.

இத​னைக் கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் கடு​மையாக மறுத்தார். டாடா​வையும் பிர்லா​​வையும் வியாபார அறங்க​ளை மு​றையாக க​டைபிடித்தவர்கள், கிளாசிக்கல் முதலாளிகள் என்று நீங்கள் குறிப்பிட்டது தவறு. டாடாவின் துவக்க​மே பிரிட்டிஷ் அர​சோடு ​சேர்ந்து ​​கொண்டு சீனாவின் அபினி யுத்தத்தில் பங்கு​பெற்றதிலிருந்து துவங்குகிறது. அவர்களின் துவக்க​மே பல குறுக்குவழிக​ளை, சதிக​ள் மூலமாகவும் காங்கிர​சோடு கள்ளக்கூட்டுச் ​சேர்ந்து ​கொண்டு நிலங்க​​ளையும், இயற்​கை வளங்க​ளையும் மிகக் கு​றைந்த வி​லைக்குப் ​பெற்று ​போட்டி​யேயின்றி லாபம் ​கொழிப்பதிலிருந்துதான் துவங்குகிறது. உங்கள் பிரசன்​டேசனில் பிரச்சி​னை இருக்கிறது என்றார்.

நான் இ​டைபுகுந்து அது ​வெறும் presentationல் உள்ள பிரச்சி​னை இல்​லை, அவ்வாறு சுருக்க முடியாது. இது perspective​லே​யே உள்ள பிரச்சி​னை என்​றேன். நம்மில் பலரிடம் முதலாளித்துவ மு​றை​யை ​நேர்​மையாக க​டைபிடித்தால் முதலாளித்துவ மு​​றையி​லே​யே பல ​வெற்றிக​ளை சாதிக்க முடியும், இந்தியாவில் இன்னும் ஒரு முதலாளித்துவ புரட்சி​யே முழு​மையாக ந​டை​பெறவில்​லை ஆக​வே முதலாளித்துவ ​செயல்பாடுக​ளை ஊக்குவிக்க ​வேண்டும் என்பதான புரிதல்கள் உள்ளன. இ​​வை அடிப்ப​டைத் தவறுகள். ஏகாதிபத்திய காலகட்டம் குறித்த பார்​வையில் உள்ள சிக்கல்கள். ​லெனின் இ​வை குறித்து “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” என்ற நூலில் மிக விரிவாக ஆய்வு ​செய்கிறார். இந்த காலகட்டத்தின் தன்​மை எது? இக்கால முதலாளிகளின் குணாம்சம் எ​வை​யெ​வை? இது எவ்வாறு இனி எந்த ஒரு தனி நாட்டிலும் ஒரு முதலாளித்துவ புரட்சி​யை அதன் தன்​மையில் நடத்தும் ஆற்ற​லை இழந்துவிட்டது என்ப​தை விளக்குகிறார். இ​வை குறித்​தெல்லாம் நமக்குச் சிறிது புரிதல் ​தே​வை. ​​மேலும் கு​ரோனி ​கேப்பிடலிசம் என்ப​தெல்லாம் முதலாளித்துவ பசப்புகள். மார்க்சியம் இத்த​கைய catergorization​யை ஏற்றுக் ​கொள்ள முடியாது. இவர்கள் கு​ரோனி ​கேப்பிடலிசம் என ஒன்றுக்கு ​கொடுக்கும் வ​ரைய​றை​யை அது இந்த ஏக​போக முதலாளித்துவ காலகட்ட முதலாளிகளின் ​பொது வ​ரைய​றைகளில் ஒன்றாக​வே மார்க்சியம் குறிப்பிடுகிறது. காரல் மார்க்ஸ் அவர் காலகட்டத்தி​லே​​யே தன்னு​டைய மூலதனம் நூலில் சந்​தை​யைக் ​கைப்பற்ற எத்த​கைய அராஜக வழிகளிலும் முதலாளித்துவம் ஈடுபடும் எனத் ​தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

உண்​மையில் ​நேற்​றைய கூட்டம் பயனுள்ளதாக​வே இருந்தது. நாம் புரிந்து​கொண்ட​​வைக​ளை எழுதிப் ​பார்க்க ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்த அந்த நன்பர்கள் அ​னைவருக்கும் நன்றி ​சொல்லிக் ​கொள்ள ​வேண்டியதுதான்.

 

Advertisements

11 பதில்கள் to “கு​ரோனி ​கேப்பிடலிசம் என்றால் என்ன?”

 1. அருமை.அருமையான பதிவு. இது போன்று படைப்புக்கள் தமிழில் எழுதுவதும் படைப்பதும் மிக குறைவு. இது போன்ற படைப்புகள் கல்வி துறையில் ருக்கும் என் போன்றவர்களுக்கு அவசியமான பயனான  ஒன்று. எனது அருமை நண்பருக்கு நன்றி. வாழ்த்துகள்.

  அன்புடன்

  சு. துளசிதாஸ்
  மலேசியா தேசிய பல்கலைகழகம் 
  மலேசியா
   
  S.TULASIDASS M.A (DENMARK)
  Centre for Corporate Communication
  The National University of  Malaysia 
  43600 UKM Bangi, Selangor
  MALAYSIA.
  Email: (1) tulasidass@gmail.com
  (2) tulasidass@ukm.my

 2. நன்றி. திரு. சு. துளசிதாஸ்

 3. இரா.ஜவஹர் அவர்களின் கீழ்க்கண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.

  ” குரோனி கேப்பிடலிசம் என்றால் என்ன ? “ இது மிகச் சிறந்த கட்டுரை . அறிவியல், மார்க்சியம், பொருளாதாரம், குரோனி கேப்பிடலிசம் பற்றிய ஒரு பருந்துப் பார்வையும், சரளமான மொழி நடையும் சிறப்பாக உள்ளன. மனமார்ந்த பாராட்டுகள். சில வேறுபாடுகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக – பொருள் என்றால் என்ன ? “லெனின் பொருள் குறித்த கேள்விக்கு இப்படி பதிலளிப்பார். “எவை மனித சிந்தனைக்கு வெளியே சுயேச்சையாக உள்ளதோ அவை அனைத்தும் பொருள்வகைத் தன்மையதே” பொருள் என்றால் ஒரு நிறையும் எடையும் இருக்கும், அது திடமாகவோ, திரவமாகவோ, வாயுவாகவோ, இருக்கும். அது ஐம்புலன்களாலோ, கருவிகளின் துணைகொண்டோ உணரக்கூடியதாக இருக்கும் என்பதான வரையறைகளையெல்லாம் தாண்டி கொடுக்கப்பட்ட இந்த அற்புதமான விஞ்ஞான வழிப்பட்ட விளக்கமே மார்க்சியம் என்பதை ஆழமாக உணரமுடியாமல், தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடுதல் துரதிர்ஷ்டம்தான். “ என்று கட்டுரையில் உள்ளது. இது ” விஞ்ஞான வழிப்பட்ட விளக்கம் “ அல்ல. Philosophical or epistemological வகைப்பட்ட விளக்கம். அதனால்தான் லெனின் கூறுகிறார் : ” Thus, the question is decided in favour of materialism, for the concept matter, as we already stated, epistemologically implies nothing but objective reality existing independently of the human mind and reflected by it. ” அதனால்தான் லெனின் மேலும் கூறுகிறார் : . ” There is nothing in the world but matter in motion, and matter in motion cannot move otherwise than in space and time. ” அதாவது தத்துவத்தைப் பொருத்தவரைதான் – எது primary , matter or mind என்ற கேள்வியைப் பொருத்தவரைதான் – பொருளையும், சிந்தனையையும் பிரித்து விவாதிக்கிறோம். மற்றபடி சிந்தனை உட்பட அனைத்துமே பொருள்தான்; matter தான்; matter in motion in space and time தான். மேலும் கட்டுரையில் matter , mass என்ற இரண்டுக்குமே பொருள் என்ற வார்த்தை குழப்பமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. Matter = பொருள், mass = நிறை என்றால் சரியாக இருக்கும். As far as natural science is concerned, it does not speak about matter but mass and energy.

  தோழமையுடன்,
  இரா.ஜவஹர்

 4. இரா. ஜவஹர் அவர்களின் பாராட்டிற்கும், சுட்டிக்காட்டல்களுக்கும் என் நன்றி. “விஞ்ஞான வழிப்பட்ட விளக்கம் “ அல்ல. Philosophical or epistemological வகைப்பட்ட விளக்கம். அதனால்தான் லெனின் கூறுகிறார்” நான் அவ்விடத்தில் இயற்கை விஞ்ஞானத்தை குறிப்பிடவில்லை. மார்க்சிய தத்துவ விஞ்ஞான வழிப்பட்ட மிகச்சிறந்த விளக்கமாகவே கூறுகிறேன். இந்த இடங்களிலெல்லாம் மிகவிரிவாக பேசவேண்டும். ஒரு ஞாபகப் பதிவாக இத்தனை சுருக்கமாக எழுதி வைத்துக் கொள்வதில் வரும் சிக்கல் என்றே உணர்கிறேன். உரையாடல்களில் இவற்றைச் சாத்தியமாக்கிக் கொள்ளலாம். விரிவாக எழுத வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயமாக இத்தகைய குழப்பங்கள் ஏற்படா வண்ணம் விரிவாக எழுதலாம். “மேலும் கட்டுரையில் matter , mass என்ற இரண்டுக்குமே பொருள் என்ற வார்த்தை குழப்பமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.” எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை வெளிப்படுத்தலில் ஏதேனும் சிக்கல் ஏற்படுகிறதா எனத் தெரியவில்லை. நான் “பொருள் என்றால் ஒரு நிறையும் எடையும் இருக்கும்” என்பதில் நிறையையும் எடையையும் பொருளின் இரண்டு பண்புகளாக குறிக்கப்படும் ஒரு விளக்கத்தைத்தான் குறிப்பிட்டேன். அது சரியென்றே கருதுகிறேன்.

 5. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  http://www.Nikandu.com
  நிகண்டு.காம்

 6. ​தோழர் நடசராசனின் ​​பேஸ்புக்கில் ​தொடர்ந்து இது குறித்த பலரும் தங்கள் கருத்துக்க​ளை கூறி வருகின்றனர். அவர்களுக்கு என் நன்றி.

  ​மேலும் ஒரு கருத்து

  Junior Physics #மார்க்சியம் என்பதை நம்மில் பலரும் நிலவும் முதலாளித்துவ முரண்களுக்கான இயலாமைகளுக்கான மாற்றீடாக மட்டும் சுருக்கிக் காணுவதே இதில் உள்ள பிரதான சிக்கல். மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்பது பொருளாதாரத்தை புரிந்து கொள்வதற்கான அடிப்படைப் பார்வையிலயே முற்றிலும் எதிரானது என்பதையும், அது முற்றிலும் முதலாளித்துவத்திற்கு எதிரான பொருளாதார இயங்குமுறையை முன்வைக்கிறது. அது எவ்வாறு முதலாளித்துவ பொருளாதாரத்தின் நெருக்கடிகள் நிரந்தரமாக தீர்க்க முடியாதவை என விளக்குகிறது என்பதை ஆழமாக புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்.# இவையெல்லாம் சரியான விவாதங்கள் தாம். இந்த கட்டுரை ஆசிரியரின் மார்க்சியத்தின் வாசிப்பு சிறப்பாக தான் இருக்கிறது. ஆனால் மார்க்சியம் என்பது கறாரானதும், ஏற்கனவே வரையறுக்கப்பட்டதும் அல்ல. இத்தகைய வரையறுக்கப்பட்ட அல்லது பேசப்பட்ட மாக்சிய கேட்பாட்டாக்கங்கள் பிரச்சனையை சந்தித்து வருகின்றது. இது குறித்து தான் கோபாட் காந்தி சுதந்திரம் மக்கள் விடுதலை குறித்தான பிரச்சனைகள் புத்தகத்தின் பேசுகிறார். ஆக இத்தகைய விசயங்கள் குறித்து முகம் கொடுப்பது மற்ற எல்லாவற்றையும் விட சிறந்ததொரு பணியாகும்

  https://www.facebook.com/natarajan.krishnan.1?fref=nf

 7. Junior Physics என்பவருக்கு என்னு​டைய பதில்:

  Magesh Ramanathan //ஆனால் மார்க்சியம் என்பது கறாரானதும், ஏற்கனவே வரையறுக்கப்பட்டதும் அல்ல. இத்தகைய வரையறுக்கப்பட்ட அல்லது பேசப்பட்ட மாக்சிய கேட்பாட்டாக்கங்கள் பிரச்சனையை சந்தித்து வருகின்றது. இது குறித்து தான் கோபாட் காந்தி சுதந்திரம் மக்கள் விடுதலை குறித்தான பிரச்சனைகள் புத்தகத்தின் பேசுகிறார். ஆக இத்தகைய விசயங்கள் குறித்து முகம் கொடுப்பது மற்ற எல்லாவற்றையும் விட சிறந்ததொரு பணியாகும்// மார்க்சியத்தின் சரியான மிகச்சிறந்த மாணவர்கள் யாரும் அதை வறட்டுச் சூத்திரமாகவோ, முற்று முழுதானதாகவோ, கருதியதாக எங்கும் குறிப்புகள் இல்லை. ஆனால் குறிப்பான விவாதத்தில் உள்ள கருத்துக்களை குறிப்பாக விமர்சிக்காமல் இது போல பொதுவான கருத்துக்களை கூறுவது, எப்பொழுதும் அவர்களை ஒரு மார்க்சிய விரோதிகளைப் போலவே காட்டுகிறது. என்னுடைய கட்டுரையிலும் நான் ஒன்றும் மார்க்சியம் என்பது ஒரு மாற்ற முடியாதது, முடிந்த முடிவானது, வளர்க்க வேண்டியதும் எதுவும் அவசியம் இல்லாதது என்பதைப் போல எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் மார்க்சியத்தின் அடிப்படை அம்சங்களையே, அதனால் செய்யப்பட்ட ஆய்வுகளையே படிக்காமல், முழுமையாக புரிந்து கொள்ளாமல், அதன் சாரத்தை உள்வாங்காமல் வைக்கப்படும் விவாதங்களையும், முடிவுகளையுமே நான் விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ளேன். இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம், போன்றவை மார்க்சியத்தின் அடிப்படைகள். அவற்றை விமர்சிப்பவர்கள் அது பேசுகின்ற சகல அம்சங்களையும் படித்துத் தேறாமல் அதனை விமர்சிக்க முயற்சிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதே என்னுடைய வாதம். உலகம் முழுவதும் பல்வேறு மிகச்சிறந்த மார்க்சியவாதிகள் மார்க்சியத்தையை செயலூக்கம் உள்ள வகையில் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பல புதிய கருத்துக்களை முன் வைக்கிறார்கள். அவற்றை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைத் தாண்டி, நிச்சயமாக அவை நம்மால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது என்பதிலும், அவைகுறித்த தீவிர வாதங்களை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

 8. பலர் தங்கள் ​பேஸ்புக்கில் இப்பதி​வை பங்கிட்டுக் ​கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி:

 9. தலையங்க விமர்சனக் கூட்டத்தின் 20.04.2014 தேதிய அமர்வு குறித்த தங்களின் விமர்சனம் படித்தேன்; ரசித்தேன்; சிரித்தேன்.
  அதில் தாங்கள் என்னைப் பற்றி ( பி. இளங்கோ சுப்பிரமணியன்) எழுதியுள்ள பல விஷயங்கள் முற்றிலும் தவறானவை.

  லெனின் எழுதிய பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்
  என்ற நூலை நான் படிக்கவே இல்லை என்று தாங்களாகவே கற்பிதம் செய்து கொண்டு பேசுவது தங்களின் நோய்மனத்தின் வெளிப்பாடு.

  குவாண்டம் கொள்கையில் காரண-காரியப் பொருத்தம் இல்லை என்பதே நான் கூறியது. நான் கூறாத பலவற்றைக் கூறியதாக
  தாங்கள் எழுதி இருப்பது சரியன்று; நேர்மையும் அன்று.

  பருப்பொருள் என்பது ஒரு புறநிலை யதார்த்தம் என்ற லெனினின் வரையறுப்பு முழுமையானது அன்று; இது அறிவியல் வகைப்பட்ட வரையறுப்பு அன்று என்பதையும் லெனின் தெளிவு படுத்தி இருந்தார்.
  இதுதான் நான் சொன்னது.

  நாற்பதாண்டுகளுக்கு மேல் நீண்டு இன்றும் தொடரும் என் மார்க்சிய வாழ்க்கையில், எனது மார்க்சியக் கல்வி, அறிவு மற்றும் புரிதல் குறித்து
  சான்றிதழ் வழங்க முற்படும் தங்களின் பேதைமையை நினைத்து நான் பரிதாபப் படுகிறேன்.

  என்னைப் பற்றி எதை வேண்டுமானாலும் தாங்கள் எழுதலாம்; அது தங்களின் பிறப்புரிமை. ஆனால் எழுதிய பின், தாங்கள் எழுதி இருப்பதை பற்றி எனக்குத் தெரியப்படுத்துவது தங்களின் தட்ட முடியாத கடமை.

  நன்றி, வணக்கம்,
  பி. இளங்கோ சுப்பிரமணியன்
  இயக்குனர்,
  நியூட்டன் அறிவியல் மன்றம்,
  சென்னை.

  • திரு. இளங்​கோ சுப்பிரமணியன் அவர்களுக்கு,

   தங்களு​டைய பின்னூட்டத்திற்கு நன்றி. நான் தான் திரு. ஜீவானந்தத்தின் மூலமாக இத்தகவ​லை உங்களுடன் பகிர்ந்து ​கொள்ளச் ​சொன்​னேன். எனக்கு தங்களு​டைய ​தொடர்பு எண்​ணோ மின்னஞ்சல் முகவரி​யோ ஏதும் ​தெரியாது.

   நீங்கள் அன்​றைய கூட்டத்தில் ​பேசிய​வை அ​னைத்​தையும் நான் எந்தவித முன் முடிவுகள் இல்லாமல் விரும்பியும் ரசித்தும் ​கேட்ட​வை தான். அது ​போக உங்க​ளை நான் அன்​றைய கூட்டத்தில்தான் முதன் முதலாகப் பார்த்​தேன். ​கேள்விப்பட்​டேன். உங்க​ளைக் குறித்து நீங்கள் ​பேசாத​வைக​ளை ​பேசியதாகக் கூற எனக்கு எந்த ​நோக்கமும் இருக்க வாய்ப்பில்​லை.

   ​தோழர். ஜீவானந்தமும் உடன் இருந்தார். நீங்கள் ​லெனினின் இயற்​கை விஞ்ஞானம் பற்றிய ஆய்வுகள் குறித்​தெல்லாம் எதுவும் அக்கூட்டத்தில் குறிப்பிடவில்​லை. நீங்கள் ​லெனின் குறித்து குறிப்பிட்ட​தெல்லாம் அவர் கட்சி கட்டுவது, புரட்சி ​செய்வது ​​போன்றவற்றிற்​கே ​நேரம் சரியாகப் ​போய்விட்டது. ஆக​வே அவர் இவற்றில் கவனம் ​செலுத்தவில்​லை என்​றே குறிப்பிட்டீர்கள்.

   “பருப்பொருள் என்பது ஒரு புறநிலை யதார்த்தம் என்ற லெனினின் வரையறுப்பு முழுமையானது அன்று; இது அறிவியல் வகைப்பட்ட வரையறுப்பு அன்று என்பதையும் லெனின் தெளிவு படுத்தி இருந்தார்.
   இதுதான் நான் சொன்னது.” இ​வை​யெல்லாம் நீங்கள் அந்தக் கூட்டத்தில் ​பேசாத விசயங்கள். ஏன் கூட்டத்திற்குப் பிறகு நாம் ​பேசிய ​போது நான் ​லெனினின் பங்கு குறித்து குறிப்பிட்ட ​பொழுது கூட நீங்கள் இவற்​றைக் குறிப்பிடவில்​லை.

   நீங்கள் 1900த்​தோடு இயற்​கை விஞ்ஞானம் குறித்த மார்க்சிய ஆய்வும் ​தொகுப்பும் முடிந்து விட்டது என்​றே குறிப்பிட்டீர்கள். அதற்குப் பிறகு ​லெனினும், ஸ்டாலின் த​லை​மையிலான ​சோவியத் யூனியனும் இயக்கவியல் ​பொருள்முதல்வாத அடிப்ப​டையில் நவீன இயற்​கை விஞ்ஞானம் குறித்து ​செய்த ஆய்வுக​ளையும் அது குறித்து ​வெளிவந்த புத்தகங்க​ளையும், ஆய்வாளர்க​ளையும் கவனத்தில் எடுக்க​வே இல்​லை.

   எனக்கும் புரிகிறது. ஒரு நாளில் ஒரு உ​ரையாடலில் ஒருவரு​டைய முழு புரித​லையும் புரிந்து ​கொள்ள முடியாது என்ப​தை. நானும் கூட அக்கூட்டத்தில் நீங்கள் ​வைத்த கருத்துக்கள் குறித்த என் விமர்சனத்​தை மட்டு​மே பதிவு ​செய்​தேன். அதிலிருந்து உங்க​ளைக் குறித்த எந்த ​மேலதிகமாக முடிவுகளுக்​கோ, விமர்சனங்களுக்​கோ ​போகவில்​லை.

   தங்க​ளை விமர்சிக்க நான் யார்? அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா இல்​லையா என்ற சிந்த​னைக​ளெல்லாம் நான் ​செய்ய​வே இல்​லை. இப்​பொழுதும் உங்க​ளைப் ​போன்​றோ​ரோடு ​தொடர்ந்து ஆ​ரோக்கியமாக விவாதிக்கவும் கற்றுக் ​கொள்ளவுமான மனநி​லை​யோ​டே இருக்கி​றேன்.

   என்னு​டைய விமர்சனங்க​ளை நீங்கள் தனிப்பட்ட மு​றையில் எடுத்துக் ​கொள்ள ​வேண்டாம் என்று ​தோழ​மையுடன் ​கேட்டுக் ​கொள்கி​றேன். நீங்கள் தாங்கள் ​சொல்ல விரும்புவது எதிராளியிடம் எத்த​கைய வ​கையில் ​போய்ச் ​சேருகிறது என்ப​தை புரிந்து ​கொள்ள கி​டைத்த வாய்ப்பாகக் கருதுங்கள் என்று ​கேட்டுக் ​கொள்கி​றேன்.

 10. திரு மகேஷ் அவர்களுக்கு,

  பிறழ் புரிதலும் அது பிறப்பிக்கும் விவாதங்களையும் தவிர்த்திட,
  பொருள்முதல் வாதத்துக்கு லெனினின் பங்களிப்பு குறித்த இப்பின்னூட்டத்தை அனுமதிக்கும்படி வேண்டுகிறேன்.

  1) 1901 முதல் 2014 வரையிலான காலக்கட்டத்தில், அறிவியலில் மாபெரும் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. பிரபஞ்சம் குறித்த நமது பார்வையை இவை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளன. எனினும், அறிவியலின் வளர்ச்சிக்கு நிகராக இயங்கியல் பொருள்முதல்வாதம்
  தன்னை வளர்த்துக்கொள்ளவில்லை. புதுப்பித்துக் கொள்ளவில்லை.
  இவ்வாறு தேங்கிய நிலையில் உள்ள பொருள்முதல்வாதம், போர்க்குணம் மிக்கதாகவோ பொருள்முதல்வாதமாகவோ இருக்காது என்று லெனின் கூறி உள்ளார்.

  2) மார்க்ஸ் 65 ஆண்டுகளும், எங்கெல்ஸ் 75 ஆண்டுகளும் வாழ்ந்தனர். அனால் லெனின் அவர்களோ 54 ஆண்டுகள்தான் வாழ்ந்தார். 1917 முதல் 1924 வரை, ( தமது மறைவு வரை) லெனினின் முன்னுரிமை சோவியத் நாட்டை ஆள்வதாக இருந்தது.போல்ஷ்விக்குகளால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்ற கூற்றைப் பொய்ப்பிக்க வேண்டி இருந்தது.

  3) 1897ல் எலக்ட்ரான் கண்டு பிடிக்கப் பட்டது. 1898ல் ரேடியம் கண்டு பிடிக்கப் பட்டது. பின்னர் தனிமங்கள் ஒன்று மற்றொன்றாக மாறுவது கண்டுபிடிக்கப் பட்டது. இவற்றை எல்லாம் பற்றி லெனின் எழுதி உள்ளார். ( பார்க்க: மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும்… )

  4) ஆனால், சிறப்புச் சார்பியல், பொதுச் சார்பியல், நியல்ஸ் போர் அவர்களின் அணுச் சித்திரம், குவாண்டம் விசையியல் .. இன்ன பிற
  குறித்து லெனின் எதுவும் பங்களிக்க வில்லை.

  5) பிரசித்தி பெற்ற தமது “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற நூலில் ரஷ்ய நாட்டு மாகியவாதிகளின் ‘ஆற்றல் கோட்பாட்டுக்கு’ எதிரான கருத்துக்களை முன் வைக்கிறார்.

  6) பருப்பொருள் என்பது ஒரு புறநிலை யதார்த்தம் என்ற பிரசித்தி பெற்ற
  லெனினின் வரையறுப்பு பருப்பொருள் என்பதை முழுமையாகவோ
  அறிவியல்பூர்வமாகவோ வரையறுக்கவில்லை.

  7)சுருங்கக் கூறின், மார்க்ஸ் எங்கெல்ஸ் சொன்னதற்கு மேலாக லெனின் சொல்லி விடவில்லை. எனவேதான் அன்றைய கூட்டத்தில்,
  லெனின் ஒரு சிறந்த உரையாசிரியர்; மார்க்ஸ் எங்கெல்ஸ் கூறிய பொருள்முதல்வாதக் கருத்துக்களுக்கு சிறந்த உரை எழுதி உள்ளார் என்று குறிப்பிட்டேன்.

  8) இது எவ்விதத்திலும் லெனினின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாக அமையாது. லெனினின் முன்னுரிமைகள் வேறு; அவர் கட்சி கட்டினார்; சோவியத்தை ஆண்டார்; சோசலிசக் கட்டுமானத்துக்கு முயன்றார்; தேசிய இனங்களை ஒன்றிணைத்தார்; எனவேதான் ஏகாதிபத்தியக் காலக்கட்டத்தின் மார்க்சியம் என்பதாக லெனினியம் போற்றப் படுகிறது.

  9) லெனினின் “புறநிலை யதார்த்தம்” பற்றிய வரையறுப்பை ஆராய்வோம். மனித சிந்தனைக்குப் புறம்பாக இருப்பதெல்லாம் பொருள் என்று கருத முடியாது. ஆற்றலும் மனித சிந்தனைக்குப் புறம்,பாகத் தான் இருக்கிறது.

  10) பருப்பொருள் என்பது திடம், திரவம், வாயு என்ற மூன்று நிலைகளில் இருக்கிறது என்று விளக்கம் கூறுவதும் இன்று பொருந்தாது. ஏனெனில் மூன்றுக்கு மேற்பட்ட நிலைகள் பொருளுக்கு உண்டு. ( உதாரணம்: பிளாஸ்மா, போஸ்-ஐன்ஸ்டீன் கண்டன்செட்)

  11) எல்லாம் ஆற்றலே என்ற மாகியவாதிகளின் வரட்டுக் கூச்சலுக்கு
  எதிராக லெனின் தம் சக்தியை எல்லாம் செலவழித்தார். பொருளும் ஆற்றலும் ஒன்றே என்ற ஐன்ஸ்டீனின் சமன்பாடு வந்த பின், ஆற்றல் வேறு, பொருள் வேறு என்ற கூப்பாடுகள் மறைந்து விடுகின்றன.

  12) பொருள் என்பது ஆற்றலின் சுருங்கிய வடிவம்; ஆற்றல் என்பது பொருளின் விரிந்த வடிவம். பொருளின் பண்பு சுருக்கம் ( contraction).
  ஆற்றலின் பண்பு விரிவு ( propagation).
  ஆக பொருள்முதல்வாதம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவில்லை
  என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

  நன்றி, வணக்கம்,

  பி. இளங்கோ சுப்பிரமணியன்
  இயக்குனர், நியூட்டன் அறிவியல் மன்றம்,
  சென்னை 600 094.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: