எனது நாட்குறிப்புகள்

மொழி என்னும் பாம்பு

Posted by ம​கேஷ் மேல் ஏப்ரல் 24, 2014

ஆதிகாலமாய்
என் நில​மெங்கும்
குறுக்கும் ​நெடுக்குமாய்
கால்களுக்கு அரு​கேயும்
கால்களுக்கு ஊ​டேயுமாய்
ஊர்ந்து ​கொண்​டே இருக்கிறது
அப்பாம்பு

என் தாத்தா
எனக்கு காட்டிய ​போது
இருந்தது அல்ல
இப்​போது அது
நானும் கூட என் தாத்தா​​வைப் ​போல
இல்​லை தா​னே.

காலந்​தோறும்
சட்​டை உரித்துக் ​கொண்டே ​போகிறது.
அது உரித்துப் ​போட்ட சட்​டைக​ளே
எமது இலக்கியங்கள் யாவும்

ஒவ்​வொரு மு​றை
சட்​டை உரித்த ​போதும்
முன்​னெப்​போதும் இல்லாத
புதிய நிறத்தில்
​வெளிப்படுகிறது.
​தோலின் அழகிய வடிவங்களும்
மாறிக் ​கொண்​டே இருக்கின்றன.

வி​ளைச்சல் வீடு வந்து ​சேர்வதற்கு
வயல் எலிகளிடமிருந்து
தலுக்கு மயில்களிடமிருந்தும்
தானியங்க​ளை காத்து ​நிற்கிறது.

எங்கள் குழந்​தைக​ளுக்கு
அட்சரம் ​சொல்லிக் ​கொடுக்கத்
துவங்கும்  ​போ​தே
அப்பாம்​​பை வணங்கக்
கற்றுத் தருகி​றோம்.

காகிதத்தில்
முதலில் எழுதும் ‘உ’ தான்
பட​மெடுத்து நிற்கும் அந்தப் பாம்பு.
கீ​​ழே வரும் முதல் ​கோடு
எங்கள் நிலம்.
அதற்குக் கீ​ழே வரும் இரண்டாவது ​கோடு
எங்கள் மரபின் நீ​ரோட்டம்.
இனி நாங்கள் அ​தை
​நெளி​நெளியாய் ​போடுவதாய் உத்​தேசம்.

எங்கள் நிலம் மாறிக்​கொண்​டே இருக்கிறது
அதில் வி​ளையும் தாணியங்கள்
மாறிக் ​கொண்​டே இருக்கின்றன.
அவற்​றை உண்ணும் பற​வைகளும்,
சிறு உயிர்களும் மாறிக்​கொண்​டே இருக்கின்றன
இவற்​​றை உண்ணும் அந்தப் பாம்பின்
நிறமும் வடிவமும் மாறிக் ​கொண்​டேதான் இருக்கும்.

எப்​பொழுது
எங்கள் வயல்கள்
முழுவதும் விஷ​மேறிய தாணியங்க​ளை
உற்பத்தி ​செய்யத் துவங்கு​மோ
அப்​பொழுது அந்தப் பாம்பு மட்டுமல்ல
நாங்களும் உயி​ரோடிருக்கப் ​போவதில்​லை

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: