எனது நாட்குறிப்புகள்

Archive for மே, 2014

மனித மனம் என்றால் என்ன? சுயநலமே மனித இயல்பா?

Posted by ம​கேஷ் மேல் மே 28, 2014

இணையத்தில் மார்க்சியம் குறித்த ஒரு சுவாரசியமான விவாதம் ஒன்றை தோழர் அ.கா. ஈஸ்வரனின் பேஸ்புக் பக்கத்தில் அதியமான் என்பவர் நிகழ்த்திக் கொண்டிருப்பதைக் கண்டேன். மார்க்சியத்தை கேள்விக்குட்படுத்தி, கம்யூனிசம் என்பதே சாத்தியமில்லாத, மனித இயல்புக்கு எதிரான ஒன்று என தான் எழுதியிருக்கும் “கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?” கட்டுரைக்கு தொடுப்பு கொடுத்து எழுதியிருந்தார்.

“மனித மனங்களை (human psychology) பற்றிய போதிய தெளிவில்லாமல் உருவாக்கப்பட்ட சித்தாந்தம் இது. அதாவது அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக, சுயநலமே இல்லாத பொது உடைமைவாதிகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாததால் ஏற்பட்ட விளைவுகளை பார்ப்போம்.

தேனிக்களை போல, எறும்புகளை போல மனிதர்களையும் சுயநலமில்லாமல், ஆனால் மிக திறமையான, சுறுசுறுப்பான வேலையாட்களாக மாற்ற முடியும் என்ற பெரும் கனவு இது. தேனிக்களும், எறும்புகளும், நாள் பூராவும் கடுமையாக உழைத்து, உழைப்பின் பயனை தம் சமூக கூட்டிற்க்கு மனமுவந்து அளிக்கும். அவை அங்கு சேகரிக்கப்பட்டு, பிறகு ஒவ்வொறு தனி உறுப்பினருக்கும், அவரின் ‘தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் மனிதர்களிடம் இதே போன்ற தன்னலமற்ற முழு உழைப்பை, தேவைக்கேற்ற ஊதியம் அளித்து பெற முடியாது. சாத்தியமே இல்லை என்பதை தான் மனித உளவியலும், வரலாறும் சொல்கிறது.”

முதலில் மனித மனம் என்றால் என்ன? மனித இயல்பு என்றால் என்ன?
மனித மனம் மனித இயல்பு என்பதெல்லாம் மாறாத என்றென்றைக்குமான ஒன்றோ, கால தேச வர்த்தமானங்களை (Time and Space) கடந்த ஒன்றோ என்ற கேள்வியை எழுப்பி விடை தேடிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இரண்டாவது, தேனீக்களுடனும் எறும்புகளுடனும் மனித மனங்களை இயல்புகளை ஒப்பிடுவது எவ்வாறு சரியானது என்பதற்கு பதில் கண்டடைய வேண்டும்.

இவர் குறிப்பிடுகிற “சுயநலம்” என்பதை மார்க்சிய சொற்களில் கறாராக குறிப்பிடுவது என்றால் “தனியுடமை சிந்தனை” என்றுதான் குறிப்பிட வேண்டும். இந்தத் தனியுடமை சிந்தனை என்பது மனிதர்களுக்குள் எந்த ஆகாயத்திலிருந்தோ ஆதியிலிருந்ததோ வந்திறங்கிய ஒன்றல்ல. எப்பொழுது சமூகம் வர்க்கங்களாகப் பிரிகிறதோ எப்பொழுது வர்க்க சமூகங்கள் தோன்றுகிறதோ, எப்பொழுது தனியுடமை உருவாகிறதோ, அப்பொழுதே தனியுடமை சிந்தனைகளும் தோன்றுகின்றன.

இதனை நிரூபிப்பதற்கு ஏராளமான சான்றுகளை மானுடவியல், மொழியியல், பண்டைச் சமூகங்கள் குறித்த ஆய்வுகள், ஆதிவாசிகள், பழங்குடிகள் குறித்த ஆய்வுகள் வழி மிக எளிதாக நாம் நிரூபிக்கலாம். இவை குறித்தெல்லாம் கொஞ்சமும் தெரிந்து கொள்ளாமல் எப்படி தைரியமாக “வரலாறு சொல்கிறது” எனக் குறிப்பிடுகிறார் தெரியவில்லை.

அனைத்து துறைகளும் ஆய்ந்து கண்டடைந்த உண்மைகளின் ஒளியில் தான் அனைத்துவகையான தத்துவங்களின் போதாமைகளும், சிறப்பும் சீர்தூக்கிப்பார்க்கப்படுகின்றன. பார்க்கப்படவேண்டும். மார்க்சியம் அந்த வகையில்தான் நவீன துறைகள் அனைத்தினது விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு மற்றும் ஆய்வு முறைகளின் மேல்கட்டப்பட்ட செழுமையானதும் ஆகச்சிறந்ததுமான தத்துவமாகிறது.

இந்தியா முழுவதும் பழங்குடிகள் ஆதிவாசிகள் மத்தியில் ஆய்வுகள் செய்த ஒரு நண்பர் பேசிக்கொண்டிருந்த பொழுது குறிப்பிட்டார். பல ஆதிவாசிகளின் மொழிகளில் “திருட்டு”, “திருடன்” என்ற சொற்களே இல்லை. அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்றே தெரியவில்லை என்று குறிப்பிட்டார். திருட்டு, திருடன் என்ற சொற்கள் தனியுடமையிலிருந்து பிரிக்கமுடியாத சொற்கள்.

அது போல தனியுடமைசார்ந்த நம் மொழியும், நம் கலாச்சாரமும் அவர்களுக்கு மிகுந்த குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. நவீன அரசுகள் அவர்கள் மீது போடும் குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு புரிவதேயில்லை என்று ஏராளமான விசயங்களை குறிப்பிட்டார். இன்றைக்கும் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான பழங்குடிகளுக்கு சுயநலம் என்று சொல்லப்படக்கூடிய தனியுடமை வாழ்க்கைமுறை அது சார்ந்த சிந்தனை இல்லை என்பதை விளக்கும் ஏராளமான சான்றுகள் பதிவாகியுள்ளன.

ஆகவே இச்சிந்தனை என்பது குறிப்பாக நம் காலகட்டத்தில் இச்சிந்தனை என்பது முதலாளித்துவ தனியுடமையோடு தொடர்புடையது. மனித சமூகமானது தொடர்ந்து காட்டுமிராண்டி காலகட்டத்திலிருந்து பல கட்டங்களைக் கடந்து அதாவது வேட்டையாடும் சமூகம், உணவு சேகரித்து வாழும் சமூகம், மேய்ச்சல் சமூகம், விவசாய சமூகம், ஆண்டான் அடிமை சமூகம், மத்தியகால நிலவுடமை சமூகம், மாறிமாறி இன்றைய நவீன தொழிற் உற்பத்தி அதாவது முதலாளித்துவ சமூகம் வரை வளர்ச்சியடைந்து வந்துள்ளது. சமூக வடிவங்கள் மாறமாற அதற்கேற்ப அதை ஒட்டியோ அதைத்தொடர்ந்தோ மனித சிந்தனைமுறை உட்பட அனைத்தும் மாறிக் கொண்டேதான் வருகின்றன.

புராதன பொதுவுடமைச் சமூகங்களில் மனிதர்களிடம் தனியுடமைச் சிந்தனைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. அது போலவே தனியுடமைச் சமூகங்களில் மனிதர்களிடம் தனியுடமைச் சிந்தனைகள் இருப்பதில் ஆச்சரியமில்லை

மனித சமூகத்தின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் எவ்வாறு புராதன பொதுவுடமை சமூக அமைப்பில் தனியுடமைச் சிந்தனைமுறை அதற்கு முரணாக இயங்கமுடியாதோ, அது போல வருங்கால கம்யூனிச சமூகத்திலும் அச்சிந்தனைமுறை முரணாக இயங்கமுடியாது.

தேனீயும், எறும்பும் அவற்றின் சமூக வாழ்க்கையையும் எந்தவொரு மானுடவியல் ஆய்வாளனும் மனித சமூகத்தோடு பொருத்தி ஆராயத் துணியமாட்டான். அவை காலகாலமாக அதே வாழ்வைத்தான் எந்தவித முன்னேற்றமுமில்லாமல் மாற்றமுமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை அவற்றின் இயற்கை பண்புகளில் ஒன்று. ஆனால் மனிதனும் அவனுடைய சமூகமும் அவனுக்கு உண்டான இயற்கை பண்போ, மாறாததோ, வளர்ச்சியடையாததோ அல்ல.

சங்காலம் துவங்கி இன்றுவரை தேனீக்கள் அதே வாழ்க்கையைத்தான்வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதே வகையில் கிஞ்சித்தும் மாறாத தேன்கூடுகளைக் கட்டித் தேனை சேகரித்து வைக்கின்றன. ஆனால் அதைச்சுற்றி இருந்த மனிதனின் சமூகம் சொல்லொனா மாற்றங்களை அடைந்துவிட்டது. அந்தத் தேன்கூட்டிலிருந்து தேன் எடுக்கும் முறையே எவ்வளவோ நவீனப்பட்டிருக்கிறது.

மார்க்ஸ் கம்யூனிசத்திற்காக போராடும் வளர்ச்சியடைந்த வர்க்கமாக பாட்டாளிவர்க்கத்தை இனம் காண்கிறார். அதற்கு அவர் குறிப்பிடும் காரணங்கள் மிக முக்கியமானவை. அவற்றை ஆழமாக படித்து புரிந்து கொண்டவர்கள் “போதிய தெளிவில்லாமல் உருவாக்கப்பட்ட சித்தாந்தம்” எனக் கூறவோ விமர்சிக்கவோ துணியமாட்டார்கள்.

பாட்டாளி என்பவன், நவீன தொழிற்சாலைகளில் பல ஆயிரம் தொழிலாளர்களோடு கூட்டழைப்பில் ஈடுபடுகிறான். அவன் நவீன உற்பத்திமுறையின் ஆழஅகலங்களை புரிந்து கொள்கிறான். நாம் மிகப்பெரிய உற்பத்திமுறையின் சிக்கலான கண்ணியில் ஓரளகு என்பதைப் புரிந்து கொள்கிறான். நாம் இனி தனித்தியங்க முடியாது இம்மாபெரும் பாட்டாளிவர்க்கத்தோடு அவர்களின் வாழ்வோடும் வீழ்ச்சியோடும் இரண்டறக் கலந்து ஒன்றுபட்டு நின்று போராடுவதுதான் ஒரே வாழ்க்கைமுறை, அதுதான் வளர்ச்சி என்பதைப் புரிந்து கொள்கிறான். நவீன உற்பத்திமுறையில் ஈடுபடவும், ஒன்றுபட்டு அதை இயக்கவும் கட்டுப்படுத்தவும் கற்றுக் கொண்ட வர்க்கம் என்கிறார். இந்தக் கண்ணியில்தான் மீண்டும் மனிதர்களிடம் பொதுவுடமைச் சிந்தனைமுறை மலர்வதற்கான வேர்கள் உள்ளன என்பதைத் தெளிவுபடுத்துகிறார். இதுதான் மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதம். இதுதான் வளர்ச்சி குறித்தும், மனித குல முன்னேற்றம் குறித்துமான மார்க்சியத்தின் ஆக்கப்பூர்வமான விஞ்ஞானப்பார்வை.

ஏகாதிபத்திய காலகட்டத்தில் முதலாளித்துவ வளர்ச்சி முழுமையடையாத சமூகங்களில் புரட்சி நிகழ வேண்டிய சந்தர்ப்பங்களில் தொழிலாளிவர்க்கம் முழுமையாக வளர்ச்சியடையாத சூழல்களில் மார்க்சிய இயக்கங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு பல்வேறு உபாயங்கள் கையாளப்பட்டன. விஞ்ஞானரீதியாக,சித்தாந்தரீதியாக நிரூபிக்கப்பட்டதேயாகினும், நடைமுறையில் வெற்றிகரமான செயல்படுத்தப்படுவது என்பது மனிதர்களின் தேர்ச்சி மற்றும் அனுபவம் சார்ந்தவை. அவை மனிதர்களின் திறண் வரம்புக்குட்பட்டவை. புரட்சி என்பது தத்துவார்த்தரீதியாக நிரூபிக்கப்பட்ட கோட்பாடு ஆனால் புரட்சியை நிகழ்த்துவது என்பது ஒரு கலை. அது பயிற்சியையும் தேர்ச்சயையும் ஈடுபாட்டையும் பொறுத்தது. இதற்கு இருபதாம் நூற்றாண்டு முழுவதும் ஆய்வு செய்து வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டதும், மனிதர்களின் அன்றாட புழக்கத்திற்கு பயன்படுத்த கற்றுக்கொள்ளப்பட்ட நீண்ட இயற்கை விஞ்ஞானம் சார்ந்த அனுபவங்களுமே சாட்சி.

பாரீஸ் கம்யூனில் 70 நாட்களில் தோல்வி கண்ட அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட மார்க்சியம் சோவியத்யூனியனில் 70 ஆண்டுகள் நிலைத்து நின்றது. இதிலிருந்து கிடைக்கும் படிப்பினைகள் 700 ஆண்டுகள் தாண்டியும் மனிதகுலம் தன் உள்முரண்பாடுகள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று இந்த அண்டவெளி எங்கும் பல்கிப் பெருக வழிவகுக்கும். இல்லையென்றால் முதலாளித்துவம் இன்னுமொரு நூறாண்டுக்குள் இப்பூமியையும் இதில வாழும் பல கோடி உயிரினங்களையும் கீழ்மையான தனது லாபவெறிக்காக அழித்தொழித்துவிடும் என்பதே உண்மை.

Advertisements

Posted in கட்டு​ரை | 7 Comments »

​தொல்லியல் ஆய்வுகள் ஒரு உ​ரையாடல்

Posted by ம​கேஷ் மேல் மே 20, 2014

​கடந்த ஞாயிறன்று மா​லை நன்பர்கள் சிலருடன் தமிழகத்தின் மிக முக்கிய ​தொல்லியல் ஆய்வுகளில் பங்கு​பெற்ற  ​தொல்லியல் ஆய்வாளர் ஒருவருடன் உ​ரையாடும் வாய்ப்புக் கி​டைத்தது.  அவர் தன்னு​டைய அனுபவங்க​ளை ​பிரமிப்​போடும் ​பெருமிதத்​தோடும் எங்க​ளோடு பகிர்ந்து ​கொண்டார். அதிலிருந்து எங்களுக்கு நி​றைய தகவல்கள் கி​டைத்தன.

தமிழகத்தின் பழங்கால த​லைநகரங்கள் உட்பட பல முக்கிய இடங்களில் தாங்கள்  நடத்திய ஆய்வுகளில் தங்களுக்​கேற்பட்ட  அனுபவங்க​ளையும், அதில் குறிப்பாக தங்களுக்கு உண்டான வரலாறு குறித்த முக்கிய சந்​தேகங்க​ளையும் எங்க​ளோடு பகிர்ந்து ​கொண்டார். குறிப்பாக தமிழகத்தில் ந​டை​பெற்ற ஆய்வுகளில் ​பெரும்பாலும் கி​டைத்த​வை பா​னை ஓடுகள்தான். அடுக்குகள் ​தோறும் அந்ததந்த காலத்திற்கான ​தெளிவான வ​கைப்பாடுகளுடன் கூடிய பா​னை ஓடுக​ளே ​பெரும்பாலும் கி​டைத்தன, வி​லைமதிப்பு  மிக்க எந்த​வொரு அரிய சான்றுகளும் ​பெரும்பாலும் கி​டைக்கவில்​லை. இத்த​​னைக்கும் தமிழகத்தில் 1500 பிசி வ​ரை நாகரீகம் இருந்ததற்கான மறுக்கமுடியாத உறுதியான ​தொல்லியல் ஆதாரங்கள் கி​டைத்துள்ளன. ஆனால் இதில் பாதிகூட இல்லாத ஆந்திரம், கர்நாடகத்தில் எல்லாம் கண்ணில் ஒத்திக்​கொள்ளத் தக்க வ​கையில் அற்புதமான ஆதாரங்கள் கி​டைத்துள்ளன. இங்கு என்ன ஏ​ழைகளாகத்தான் மக்கள் வாழ்ந்திருக்கிறார்களா, வசதிப​டைத்த மக்க​ளே வாழவில்​லையா என்கிற சந்​தேகங்க​ளை ஏற்படுத்துகின்றன என்றார்.

நான் என் சந்​தேகம் ஒன்​றை அவ்விடத்தில் ​கேட்​டேன், “ஒரு ​வே​ளை மதிப்புமிக்க உ​லோகங்களாலான ​பொருட்கள் அ​னைத்தும் அடுத்தடுத்த அடுக்குகளுக்கு அவற்றின் மதிப்பு, பயன்பாடு, மறுசுழற்சியில் பயன்டுத்திக் ​கொள்ளும் வாய்ப்பு காரணமாக ​மே​லெழும்பி  வந்திருக்கலாமில்​லையா?” என்​றேன்.

அவர், ஒரு உ​டைந்த வாள்கூடவா கி​டைக்காது ​​போய்விடும் என்றார்.

தமிழகத்தில் உ​​லோகங்கள்  ஒப்பீட்டளவில் மிக கி​டைத்தற்கரியனவாக இருந்திருக்கலா​மோ என நி​னைத்துக் ​கொண்​டேன்.

சிதம்பரம் ​கோயிலில் ​வே​றொரு ஆய்வி​னை ​மேற்​கொண்டிருந்த ​பொழுது, மிக முக்கியமான ஒரு கல்​வெட்​டைிக் கண்டதாகக் குறிப்பிட்டார். அதில் அக்காலத்தி​​லே​யே மதிய உணவு குழந்​தைகளுக்கு ​கொடுக்கப்பட்டதற்கான குறிப்புகள் இருந்தது. இ்ன்​றைய மதிய உணவுத் திட்டத்திற்​கெல்லாம் ஆரம்பம் அங்​கே இருந்துள்ளது என்றார்.

நான் “அவ்வாறு நாம் அ​தைக் கருத ​வேண்டியதில்​லை,  ஜனநாயக  அரசுகளின் மதிய உணவுத்  திட்டத்​தோடு அ​தை ஒப்பிடத் ​தே​வையில்​லை”  என்​றேன்.

அவருக்கு சற்று  ​கோபம் வந்துவிட்டது. “,இது தான் இங்குள்ள பிரச்சி​னை உட​னே அரசியல் ​பேசத்துவங்கிவிடுவீர்கள், இந்த நல்ல மு​றையல்ல” என்றார்.

நான் அ​மைதியாக இருந்துவிட்​டேன். இறுதியாக ​பேசும் ​பொழுது குறிப்பிட்​டேன். வரலாற்​றை சமகால நிகழ்​வுக​ளோடு ​பொருத்துவதில் உள்ள சிக்கல்க​ளை நாம் எப்​பொழுதும் கவனத்தில் ​கொள்ள ​வேண்டும். வரலாற்று நிகழ்வுக​ளை உயர்த்தி​யோ தாழ்த்தி​யோ எவ்வ​கையிலும் நிகழ்காலத்துடன் ​பொருத்திப் பார்ப்பது சமகால அரசியல் அபிலா​ஷைகளால் அ​வை தவறாக திரிக்கப்படும் ஆபத்திருப்ப​து நம் சமகால வரலாற்றில் ​தெளிவான உதாரணங்கள் இருக்கு இ​வை குறித்து ​மேலதிகமாக நாம் ​பேச ​வேண்டியதில்​லை. ​மேலும் வரலாற்று நிகழ்வுக​ளை இவ்வாறு சுருக்கிக் காண முயற்சிப்பது ஆய்வாளர்களின் ​தொடர்ச்சியான அதுகுறித்த ஆய்வுகளில் த​டை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்​டேன்.

வரலா​றை எப்படிப் பார்க்க ​வேண்டும், எப்படிப் புரிந்து ​கொள்ள ​வேண்டும் என்ப​தை ​பெரும் இயக்கமாக​வே இந்தியா முழுவதும் எடுக்க ​வேண்டும். வரலாற்றின் வி​டை காணப்படாத பக்கங்க​ளை  எந்தச் சமகால இயக்கங்களும் தங்களின் அரசியல் நலன் சார்ந்த hypothesis க​ளைக் ​கொண்டு நிரப்பிவிடாமல்  தடுப்பதும், ​தே​வைப்படும் இடங்களில் அத்த​கைய hypothesis க​ளை உருவாக்கிக் ​கொள்வதற்கான உரி​மை​யை நல்ல மதிப்புமிக்க வரலாற்று ஆய்வாளர்களுக்கு மட்டு​மே வழங்குவதும்தான் ஆ​ரோக்கியமான சமூகத்திற்கான அடிப்ப​​டைகள் என்று கருதுகி​றேன்.

Posted in கட்டு​ரை | Leave a Comment »