எனது நாட்குறிப்புகள்

மனித மனம் என்றால் என்ன? சுயநல​மே மனித இயல்பா?

Posted by ம​கேஷ் மேல் மே 28, 2014

இ​ணையத்தில் மார்க்சியம் குறித்த ஒரு சுவாரசியமான விவாதம் ஒன்​றை ​தோழர் அ.கா. ஈஸ்வரனின் ​பேஸ்புக் பக்கத்தில் அதியமான் என்பவர் நிகழ்த்திக் ​கொண்டிருப்ப​தைக் கண்​டேன். மார்க்சியத்​தை ​கேள்விக்குட்படுத்தி, கம்யூனிசம் என்ப​தே சாத்தியமில்லாத, மனித​ இயல்புக்கு எதிரான ஒன்று என தான் எழுதியிருக்கும் “கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?” கட்டு​ரைக்கு ​தொடுப்பு ​கொடுத்து எழுதியிருந்தார்.

“மனித மனங்களை (human psychology) பற்றிய போதிய தெளிவில்லாமல் உருவாக்கப்பட்ட சித்தாந்தம் இது. அதாவது அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக, சுயநலமே இல்லாத பொது உடைமைவாதிகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாததால் ஏற்பட்ட விளைவுகளை பார்ப்போம்.

​தேனிக்களை போல, எறும்புகளை போல மனிதர்களையும் சுயநலமில்லாமல், ஆனால் மிக திறமையான, சுறுசுறுப்பான வேலையாட்களாக மாற்ற முடியும் என்ற பெரும் கனவு இது. தேனிக்களும், எறும்புகளும், நாள் பூராவும் கடுமையாக உழைத்து, உழைப்பின் பயனை தம் சமூக கூட்டிற்க்கு மனமுவந்து அளிக்கும். அவை அங்கு சேகரிக்கப்பட்டு, பிறகு ஒவ்வொறு தனி உறுப்பினருக்கும், அவரின் ‘தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் மனிதர்களிடம் இதே போன்ற தன்னலமற்ற முழு உழைப்பை, தேவைக்கேற்ற ஊதியம் அளித்து பெற முடியாது. சாத்தியமே இல்லை என்பதை தான் மனித உளவியலும், வரலாறும் சொல்கிறது.”

முதலில் மனித மனம் என்றால் என்ன? மனித இயல்பு என்றால் என்ன?
மனித மனம் மனித இயல்பு என்ப​​தெல்லாம் மாறாத என்​றென்​றைக்குமான ஒன்​றோ, கால ​தேச வர்த்தமானங்க​ளை (Time and Space) கடந்த ஒன்​றோ என்ற ​கேள்வி​யை எழுப்பி வி​டை ​தேடிக் ​கொள்ள ​வேண்டியது அவசியமாகிறது.

இரண்டாவது, ​தேனீக்களுடனும் எறும்புகளுடனும் மனித மனங்க​​ளை இயல்புக​ளை ஒப்பிடுவது எவ்வாறு சரியானது என்பதற்கு பதில் கண்ட​டைய ​வேண்டும்.

இவர் குறிப்பிடுகிற “சுயநலம்” என்ப​தை மார்க்சிய ​சொற்களில் கறாராக குறிப்பிடுவது என்றால் “தனியுட​மை சிந்த​னை” என்றுதான் குறிப்பிட ​வேண்டும். இந்தத் தனியுட​மை சிந்த​னை என்பது மனிதர்களுக்குள் எந்த ஆகாயத்திலிருந்​தோ ஆதியிலிருந்த​தோ வந்திறங்கிய ஒன்றல்ல. எப்​பொழுது சமூகம் வர்க்கங்களாகப் பிரிகிற​தோ எப்​பொழுது வர்க்க சமூகங்கள் ​தோன்றுகிற​தோ, எப்​பொழுது தனியுட​மை உருவாகிற​தோ, அப்​பொழு​தே தனியுட​மை சிந்த​னைகளும்​ ​​தோன்றுகின்றன.

இத​னை நிரூபிப்பதற்கு ஏராளமான சான்றுக​ளை மானுடவியல், ​மொழியியல், பண்​டைச் சமூகங்கள் குறித்த ஆய்வுகள், ஆதிவாசிகள், பழங்குடிகள் குறித்த ஆய்வுகள் வழி மிக எளிதாக நாம் நிரூபிக்கலாம். இ​வை குறித்​தெல்லாம் ​கொஞ்சமும் ​தெரிந்து ​கொள்ளாமல் எப்படி ​தைரியமாக “வரலாறு ​சொல்கிறது” எனக் குறிப்பிடுகிறார் ​தெரியவில்​லை.

அ​னைத்து து​றைகளும் ஆய்ந்து கண்ட​டைந்த உண்​மைகளின் ஒளியில் தான் அ​னைத்துவ​கையான தத்துவங்களின் ​போதா​மைகளும், சிறப்பும் சீர்தூக்கிப்பார்க்கப்படுகின்றன. பார்க்கப்பட​வேண்டும்.  மார்க்சியம் அந்த வகையில்தான் நவீன துறைகள் அனைத்தினது விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு மற்றும் ஆய்வு ​மு​றைகளின் ​மேல்கட்டப்பட்ட ​செழு​மையானதும் ஆகச்சிறந்ததுமான தத்துவமாகிறது.

இந்தியா முழுவதும் பழங்குடிகள் ஆதிவாசிகள் மத்தியில் ஆய்வுகள்​ ​செய்த ஒரு நண்பர் ​பேசிக்​கொண்டிருந்த ​பொழுது குறிப்பிட்டார். பல ஆதிவாசிகளின் ​மொழிகளில் “திருட்டு”, “திருடன்” என்ற ​சொற்க​ளே இல்​லை. அவர்களுக்கு அப்படி என்றால் என்ன​வென்​றே ​தெரியவில்​லை என்று குறிப்பிட்டார். திருட்டு, திருடன் என்ற ​சொற்கள் தனியுட​மையிலிருந்து பிரிக்கமுடியாத ​சொற்கள்.

அது​ ​போல தனியுட​மைசார்ந்த நம் ​மொழியும், நம் கலாச்சாரமும் அவர்களுக்கு மிகுந்த குழப்பங்க​ளை ஏற்படுத்துகின்றன. நவீன அரசுகள் அவர்கள் மீது ​போடும் குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு புரிவ​தேயில்​லை என்று ஏராளமான விசயங்க​ளை குறிப்பிட்டார். இன்​றைக்கும் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான பழங்குடிகளுக்கு சுயநலம் என்று ​சொல்லப்படக்கூடிய தனியுட​​மை வாழ்க்​கைமு​றை அது சார்ந்த சிந்த​னை இல்​லை என்ப​தை விளக்கும் ஏராளமான சான்றுகள் பதிவாகியுள்ளன.

ஆக​வே இச்சிந்த​னை என்பது குறிப்பாக நம் காலகட்டத்தில் இச்சிந்த​னை என்பது முதலாளித்துவ தனியுட​மை​யோடு ​தொடர்பு​டையது. மனித சமூகமானது ​தொடர்ந்து காட்டுமிராண்டி காலகட்டத்திலிருந்து பல கட்டங்க​ளைக் கடந்து அதாவது ​வேட்​டையாடும் சமூகம், உணவு ​சேகரித்து வாழும் சமூகம், ​மேய்ச்சல் சமூகம், விவசாய சமூகம், ஆண்டான் அடி​மை சமூகம், மத்தியகால நிலவுட​மை சமூகம், மாறிமாறி இன்​றைய நவீன ​தொழிற் உற்பத்தி அதாவது முதலாளித்துவ சமூகம் வ​ரை வளர்ச்சிய​டைந்து வந்துள்ளது. சமூக வடிவங்கள் மாறமாற அதற்​கேற்ப அ​தை ஒட்டி​யோ அ​தைத்​​தொடர்ந்​தோ மனித சிந்த​னைமு​றை உட்பட அ​னைத்தும் மாறிக் ​கொண்​டேதான் வருகின்றன.

புராதன ​பொதுவுட​மைச் சமூகங்களில் மனிதர்களிடம் தனியுட​மைச் சிந்த​னைகள் இருந்திருக்க வாய்ப்பில்​லை. அது ​போல​வே தனியுட​மைச் சமூகங்களில் மனிதர்களிடம் தனியுட​மைச் சிந்த​னைகள் இருப்பதில் ஆச்சரியமில்​லை

மனித சமூகத்தின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் எவ்வாறு புராதன ​​பொதுவுட​மை சமூக அ​மைப்பில் தனியுட​மைச் சிந்த​னைமு​றை ​அதற்கு முரணாக இயங்கமுடியா​தோ, அது ​போல வருங்கால கம்யூனிச சமூகத்திலும் அச்சிந்த​னைமு​றை முரணாக இயங்கமுடியாது.

​தேனீயும், எறும்பும் அவற்றின் சமூக வாழ்க்​கை​யையும் எந்த​வொரு மானுடவியல் ஆய்வாளனும் மனித சமூகத்​தோடு ​பொருத்தி ஆராயத் துணியமாட்டான். அ​வை காலகாலமாக அ​தே வாழ்​வைத்தான் எந்தவித முன்​னேற்றமுமில்லாமல் மாற்றமுமில்லாமல் வாழ்ந்து​ ​கொண்டிருக்கின்றன. அ​வை அவற்றின் இயற்​கை பண்புகளில் ஒன்று. ஆனால் மனிதனும் அவனு​டைய சமூகமும் அவனுக்கு உண்டான இயற்​கை பண்​போ, மாறாத​தோ, வளர்ச்சிய​டையாத​தோ அல்ல.

சங்காலம் துவங்கி இன்றுவ​ரை ​தேனீக்கள் அ​தே வாழ்க்​கை​யைத்தான்வாழ்ந்து ​கொண்டிருக்கின்றன. அ​தே வ​கையில் கிஞ்சித்தும் மாறாத ​தேன்கூடுக​ளைக் கட்டித் ​தே​னை ​சேகரித்து ​வைக்கின்றன. ஆனால் அ​தைச்சுற்றி இருந்த மனிதனின் சமூகம் ​சொல்​லொனா மாற்றங்க​ளை அ​டைந்துவிட்டது. அந்தத் ​தேன்கூட்டிலிருந்து ​தேன் எடுக்கும் மு​றை​யே எவ்வள​வோ நவீனப்பட்டிருக்கிறது.

மார்க்ஸ் கம்யூனிசத்திற்காக ​போராடும் வளர்ச்சிய​டைந்த வர்க்கமாக பாட்டாளிவர்க்கத்​தை இனம் காண்கிறார். அதற்கு அவர் குறிப்பிடும் காரணங்கள் மிக முக்கியமான​வை. அவற்​றை ஆழமாக படித்து புரிந்து ​​கொண்டவர்கள் “போதிய தெளிவில்லாமல் உருவாக்கப்பட்ட சித்தாந்தம்” எனக் கூற​வோ விமர்சிக்க​வோ துணியமாட்டார்கள்.

பாட்டாளி என்பவன், நவீன ​தொழிற்சா​லைகளில் பல ஆயிரம் ​தொழிலாளர்க​ளோடு கூட்ட​ழைப்பில் ஈடுபடுகிறான். அவன் நவீன உற்பத்திமு​றையின் ஆழஅகலங்க​​ளை புரிந்து​ ​கொள்கிறான். நாம் மிகப்​பெரிய உற்பத்திமு​றையின் சிக்கலான கண்ணியில் ஓரளகு என்ப​தைப் புரிந்து ​கொள்கிறான். நாம் இனி தனித்தியங்க முடியாது இம்மா​பெரும் பாட்டாளிவர்க்கத்​தோடு அவர்களின் வாழ்​வோடும் வீழ்ச்சி​யோடும் இரண்டறக் கலந்து ஒன்றுபட்டு நின்று ​போராடுவதுதான் ஒ​ரே வாழ்க்​கைமு​றை, அதுதான் வளர்ச்சி என்ப​தைப் புரிந்து ​கொள்கிறான். நவீன உற்பத்திமு​றை​யில் ஈடுபடவும், ஒன்றுபட்டு அ​தை இயக்கவும் கட்டுப்படுத்தவும் கற்றுக் ​கொண்ட வர்க்கம் என்கிறார். இந்தக் கண்ணியில்தான் மீண்டும் மனிதர்களிடம் ​பொதுவுட​மைச் சிந்த​னைமு​றை மலர்வதற்கான ​வேர்கள் உள்ளன என்ப​தைத் ​தெளிவுபடுத்துகிறார். இதுதான் மார்க்சிய வரலாற்றியல் ​பொருள்முதல்வாதம். இதுதான் வளர்ச்சி குறித்தும், மனித குல முன்​னேற்றம் குறித்துமான மார்க்சியத்தின் ஆக்கப்பூர்வமான விஞ்ஞானப்பார்​வை.

ஏகாதிபத்திய காலகட்டத்தில் முதலாளித்துவ வளர்ச்சி முழு​மைய​டையாத சமூகங்களில் புரட்சி​ நிகழ ​வேண்டிய சந்தர்ப்பங்களில் ​தொழிலாளிவர்க்கம் முழு​மையாக வளர்ச்சிய​டையாத சூழல்களில் மார்க்சிய இயக்கங்கள் எதிர்​கொண்ட பிரச்சி​னைக​ளை ​​வெற்றிகரமாக எதிர்​கொள்வதற்கு பல்​வேறு உபாயங்கள் ​கையாளப்பட்டன. விஞ்ஞானரீதியாக,சித்தாந்தரீதியாக நிரூபிக்கப்பட்ட​தேயாகினும், ந​டைமு​றையில் ​வெற்றிகரமான ​செயல்படுத்தப்படுவது என்பது மனிதர்களின் ​தேர்ச்சி மற்றும் அனுபவம் சார்ந்த​வை. அ​வை மனிதர்களின் திறண் வரம்புக்குட்பட்ட​வை. புரட்சி என்பது தத்துவார்த்தரீதியாக நிரூபிக்கப்பட்ட ​கோட்பாடு ஆனால் புரட்சி​யை நிகழ்த்துவது என்பது ஒரு க​லை. அது பயிற்சி​யையும் ​தேர்ச்ச​யையும் ஈடுபாட்​டையும் ​பொறுத்தது. இ​தற்கு இருபதாம் நூற்றாண்டு முழுவதும் ஆய்வு ​செய்து ​வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டதும், மனிதர்களின் அன்றாட புழக்கத்திற்கு பயன்படுத்த கற்றுக்​கொள்ளப்பட்ட நீண்ட இயற்​கை விஞ்ஞானம் சார்ந்த அனுபவங்களு​மே சாட்சி.

பாரீஸ் கம்யூனில் 70 நாட்களில் ​தோல்வி கண்ட அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்​கொண்ட மார்க்சியம் ​சோவியத்யூனியனில் 70 ஆண்டுகள் நி​லைத்து நின்றது. இதிலிருந்து கி​டைக்கும் படிப்பி​னைகள் 700 ஆண்டுகள் தாண்டியும் மனிதகுலம் தன் உள்முரண்பாடுகள் அ​னைத்திலிருந்தும் விடுத​லை ​பெற்று இந்த அண்ட​வெளி எங்கும் பல்கிப் ​பெருக வழிவகுக்கும். இல்​லை​யென்றால் முதலாளித்துவம் இன்னு​மொரு நூறாண்டுக்குள் இப்பூ​மி​யையும் இதில வாழும் பல ​கோடி உயிரினங்க​ளையும் கீழ்​மையான தனது லாப​​வெறிக்காக அழித்​தொழித்துவிடும் என்ப​தே உண்​மை.

Advertisements

7 பதில்கள் to “மனித மனம் என்றால் என்ன? சுயநல​மே மனித இயல்பா?”

 1. அ,கா,ஈஸ்வரன் said

  //பாட்டாளி என்பவன், நவீன ​தொழிற்சா​லைகளில் பல ஆயிரம் ​தொழிலாளர்க​ளோடு கூட்ட​ழைப்பில் ஈடுபடுகிறான். அவன் நவீன உற்பத்திமு​றையின் ஆழஅகலங்க​​ளை புரிந்து​ ​கொள்கிறான். நாம் மிகப்​பெரிய உற்பத்திமு​றையின் சிக்கலான கண்ணியில் ஓரளகு என்ப​தைப் புரிந்து ​கொள்கிறான். நாம் இனி தனித்தியங்க முடியாது இம்மா​பெரும் பாட்டாளிவர்க்கத்​தோடு அவர்களின் வாழ்​வோடும் வீழ்ச்சி​யோடும் இரண்டறக் கலந்து ஒன்றுபட்டு நின்று ​போராடுவதுதான் ஒ​ரே வாழ்க்​கைமு​றை, அதுதான் வளர்ச்சி என்ப​தைப் புரிந்து ​கொள்கிறான். நவீன உற்பத்திமு​றை​யில் ஈடுபடவும், ஒன்றுபட்டு அ​தை இயக்கவும் கட்டுப்படுத்தவும் கற்றுக் ​கொண்ட வர்க்கம் என்கிறார். இந்தக் கண்ணியில்தான் மீண்டும் மனிதர்களிடம் ​பொதுவுட​மைச் சிந்த​னைமு​றை மலர்வதற்கான ​வேர்கள் உள்ளன என்ப​தைத் ​தெளிவுபடுத்துகிறார். இதுதான் மார்க்சிய வரலாற்றியல் ​பொருள்முதல்வாதம். இதுதான் வளர்ச்சி குறித்தும், மனித குல முன்​னேற்றம் குறித்துமான மார்க்சியத்தின் ஆக்கப்பூர்வமான விஞ்ஞானப்பார்​வை.//- இது தான் மார்க்சியப் பார்வை.

  இன்று ஒரு குண்டூசியைக் கூட தனி ஒருவன் உருவாக்குவதில்லை. பல பேருடைய கூட்டுழைப்பில் தான் உண்டாக்கப்படுகிறது.

  முதலாளித்துவ உற்பத்தியின் முதிர்ச்சி, சமூக உற்பத்தியா வளர்ச்சியுறுகிறது. அது தனியுடைமையின் உற்பத்தி முறைக்கு தடையாகி பொதுவுடமை சமூகத்தின் தேவையை முன்னிருத்துகிறது. இது தான் சமூக மாற்றத்துக்கான புறநிலை. அகநிலையான மாற்றம் அதனோடு ஏற்படுகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வர்தம் அகநிலை மாற்றத்தை புறநிலையே தீர்மானிக்கிறது என்கிறது. இதன் அடிப்படையில் எதிர்கால சமூகம் இன்றைய அகநிலையோடு செயற்படாது என்றறிய முடிகிறது.

  • ​தோழர் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்ற. இன்னும் விரிவாக முதலாளித்துவ சமூகம் குறித்தும், வரலாற்றுரீதியாக பாட்டாளி வர்க்கம் எனபது எவ்வாறு வளர்ச்சிய​டைந்த வர்க்கம். அது எவ்வாறு ​பொதுவுட​மை சமூகத்​தையும், சிந்த​னை​யையும் வரலாற்றுரீதியாக தன்னு​டையதாக்கிக் ​கொள்கின்ற, ​கொள்ள​​வேண்டிய வர்க்கம் என்பது குறித்​தெல்லாம் மார்க்சின் ஆய்வுக​ளை குறிப்பட்டு எழுத ​வேண்டும். விரிவஞ்சியும், வாசகர்களின் முதல் கட்ட புரிதல்களுக்கு மிரட்டலில்லாமல் இருக்க ​வேண்டும் என்பது குறித்தும். ​பேஸ்புக்கில் இடப்படும் பதிவு சிறியதாக இருக்க ​வேண்டும் என்ற ​நோக்கத்​தோடும் கு​றைத்துக் ​கொண்​டேன்.
   வரலாற்றுரீதியாக முதலாளித்துவ சமூகத்தில்தான், உ​ழைக்கும் வர்க்கமானது உற்பத்திக் கருவிகள் அ​னைத்திலிருந்தும் சுதந்திரமாக்கப்படுகிறார்கள். தன் உ​​​ழைப்​பை சந்​தையில் முதலாளிகளிடம் விற்பதன் மூலமாக மட்டு​மே தானும் தன் குடும்பமும் உயிர் வாழ்வதற்கான அவசியத் ​தே​வைக​ளை அ​டையும் நி​லைக்கு ஆளாகிறார்கள். மறுபுறத்தில் உற்பத்திக் கருவிகள் மற்றும் சாதனங்கள் அ​னைத்தும் பிரம்மாண்ட நவீனத் ​தொழிற்சா​லைகளின் வழி ஒன்று குவிக்கப்படுகிறது. உற்பத்தி சமூகமயமாக்கப்படுகிறது. இ​வை எவ்வாறு ​பொதுவுட​மைச் சமூகத்திற்கும் ​பொதுவுட​மைச் சிந்த​னை மு​றைக்கும் அடிப்ப​டையாகிறது என்​றெல்லாம் விரிவாக எழுத​வேண்டும்.

 2. மனம் ஒரு குரங்கு!
  —————————-
  கட்டுரையின் முதல் வாக்கியத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை;வாக்கிய அமைப்பு சரியில்லையா அல்லது முழுமை பெறாத வாக்கியமா என்று தெரியவில்லை.

  இது போன்ற கருத்தை ( அல்லது இதே கருத்தை) மிக அண்மையில்
  எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. எங்கு என்றுதான் தெரியவில்லை.

  நிற்க.ஒரு கருத்தை விமர்சிக்கும் போது, அக்கருத்தை முழுமையாக முன்வைத்து விமர்சிக்க வேண்டும். கருத்தை மறைத்து வைத்துக் கொண்டு, விமர்சனத்தை மட்டும் முன் வைப்பது வாசகர்களுக்கு குழப்பத்தைத் தரும்; மேலும் அது முறையும் அன்று.

  எனவே, “மேற்படி கருத்து யாருடையது? இணையத்தில் எங்கு உள்ளது?, யார் எழுதியது?” இன்ன பிற விவரங்களை எல்லாம் முன்வைத்த பின்னர் விமர்சிப்பதுதான் முறை. அப்போதுதான், விமர்சிக்கப் பட வேண்டிய கருத்தை முழுமையாக உள்வாங்கி
  கொண்ட பிறகுதான் அதைச் சரியாக விமர்சிக்க முடியும் என்பது என் கருத்து.
  மனித மனம், மனித இயல்பு பற்றிய என் கருத்துகளை “மனம் ஒரு குரங்கு” என்ற தலைப்பில் பின்னூட்டம் இடுவதற்கு வசதியாக
  தாங்கள் நான் குறிப்பிட்ட விவரங்களைத் தருமாறு வேண்டுகிறேன்.

  பி. இளங்கோ சுப்பிரமணியன்,
  நியூட்டன் அறிவியல் மன்றம்.

  • //நிற்க.ஒரு கருத்தை விமர்சிக்கும் போது, அக்கருத்தை முழுமையாக முன்வைத்து விமர்சிக்க வேண்டும். கருத்தை மறைத்து வைத்துக் கொண்டு, விமர்சனத்தை மட்டும் முன் வைப்பது வாசகர்களுக்கு குழப்பத்தைத் தரும்; மேலும் அது முறையும் அன்று.// இப்படி​யெல்லாம் எந்த அவசிமும் இல்​லை. இவ்வளவு அனுபவஸ்தரான நீங்கள் சற்று ​பொறு​மை​யோடு என்ன நிகழ்ந்தது என்று கேட்டிருந்தால் நன்றாக இருக்கும்.

   நான் ​நேற்று ​தொ​லை​பேசியில் குறிப்பிட்ட​தைப் ​போல, ​பேஸ்புக்கில் ​தோழர் ஒருவருடன் ​வே​றொருவர் நிகழ்த்திக் ​கொண்டிருந்த விவாதத்தில், அவர் தன்னு​டைய ​பேஸ்புக்கில் ​போட்டிருந்த பதி​வு ஒன்​றை ​தோழருக்கு லிங்க் ​கொடுத்திருந்தார். அதற்கு மறுப்பாக என்னு​டைய கருத்​தை அந்த விவாதத்தில் பின்னூட்டம் இட முயற்சித்​தேன். நீண்ட பதி​வை பின்னூட்டமிட முடியாததால் என்னு​டைய பிளாக்கில் பதிவு ​செய்து விட்டு அதன் லிங்​கை அந்த விவாதத்தில் ​சேர்த்​தேன். ஆக​வே இது எந்த ​​நேர்​​மை கு​றைவான ​நோக்கத்​தோடும் ​செய்யப்பட்டதல்ல.

   தற்​பொழுது என் வ​லைப்பூவில் ​நேரடியாக படிப்பவர்களுக்காக, இது ​தொடர்பான ​பேஸ்புக் விவாத பக்கத்திற்கு லிங்க் ​கொடுத்து என் பதி​வை அப்​டேட் ​செய்துள்​ளேன்.
   ​​பொதுவாக நான் எனது வ​லைப்பூவில் பதிவுகள் இடும் ​பொழுது இ​ணையத்தில் அது குறித்த கட்டு​ரைககள் இருந்தால் அவற்றிற்கு லிங்க் ​கொடுத்து ​போடுவதுதான் கட்டாயமாக க​டைபிடிக்கும் மு​றை. புத்தகங்ளில் படித்தவற்​றைக் குறித்து கருத்துக்க​ளை பரிமாறிக் ​கொள்வ​தென்றால் சம்பந்தபட்ட பத்திரி​கையின் ​பெயர், இதழ் எண், எழுத்தாளர் மற்றும் கட்டு​ரையின் ​பெயர் ஆகியவற்​றை குறிப்பிட்டு எழுதுவதுதான் என்னுi​டைய வழக்கம்.

   • தேவையான தகவல்களைத் தந்து கட்டுரையின் தொடக்க வாக்கியங்களை மாற்றி அமைத்தமைக்கு நன்றி. இப்போது என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.குழப்பமாக இருக்கிறது என்றுதான் நான் கூறினேனே தவிர, நேர்மைக்குறைவு இருக்கிறது என்றா கூறினேன்? படுத்த படுக்கையாக இருக்கும் மார்க்சியத்துக்கு உயிர்த்தண்ணி ஊற்றுகின்ற உங்களைப் போன்ற இளைஞர்கள் மீது
    எனக்கு என்ன கோபம் இருக்க முடியும்? நிற்க. மனம், மனித இயல்பு குறித்த என் கருத்துக்களை தனியாக அடுத்த பின்னூட்டத்தில் தருகிறேன். நன்றி.

    பி. இளங்கோ சுப்பிரமணியன்
    நியூட்டன் அறிவியல் மன்றம்.

 3. மனம் ஒரு குரங்கு!
  ——————————-
  மனம், உள்ளம், நெஞ்சம், இதயம் ஆகிய இவை பெயர்களில் மட்டுமே
  வேறுபடுகின்றன. இவை அனைத்தும் சுட்டுவது மூளையைத் தான்.
  மூளை என்பது சிந்தனையின் உறுப்பு என்றார் லெனின். மூளையில் இருந்துதான் சிந்தனை பிறக்கிறது.

  பொருள் என்பது முதலாவது; சிந்தனை என்பது இரண்டாவது.
  புற உலகைப் பொறுத்து சிந்தனை அமையும். புற உலகு மாறும்போதெல்லாம் அதற்கேற்ப நமது சிந்தனையும் மாறும்.
  மனித சிந்தனை என்பது மாறாநிலைத் தன்மை கொண்டது அல்ல.
  தொடந்து மாறும் தன்மை கொண்டது. எனவேதான் ” மனம் ஒரு குரங்கு” என்று கூறப் படுகிறது.

  புற உலகு என்பது , இயற்கை, உலகம், சமுதாயம் ஆகிய அனைத்தையும் குறிக்கும். மேற்கூறிய அனைத்தையும் பொறுத்து சிந்தனை அமையும். உடைமைச் சமுதாயத்தில் உடைமைச் சிந்தனையும், உடைமை ஒழிந்த சமுதாயத்தில் பொதுமைச் சிந்தனையும் தோன்றும்.இது பொதுவான விதி.எனினும், இந்த விதிக்கு உட்படாமல் சில விலகல்கள் நேர்வதும் உண்டு. விலகல்களை சம்பந்த்தப்பட்ட சமூகம் சரி செய்யும்.

  மனிதகுலம் மொத்தமுமே கபடும் சூதும் வஞ்சமும் கொண்டதாக விளங்கும் என்று கருதுவது அறிவியலுக்கு எதிரானது. மேலும் இது மானுடத்துக்கே எதிரானது ( misanthropical). திருவாளர் அதியமானின் கருத்துக்கள் இத்தகையவை என்பது அனைவரும் அறிந்ததே.

  நல்லதொரு பொருளில் மார்க்சிய விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் திரு மகேஷ் அவர்களுக்கு நன்றி.

  பி. இளங்கோ சுப்பிரமணியன்
  நியூட்டன் அறிவியல் மன்றம்.

 4. cpalani said

  உங்கள் கருது உண்மை சரியானவை நானும் படித்தேன்
  நான் எழுத முயர்சிகறேன்,
  என் எழுது மொழி சிற்பக இருக்க முயசிபேன்
  சில நாளில் எல்லாம் சரி ஆகும் என்ரூ நினகிரியன்
  பணம் இருந்தால் மட்டும் மனிதங்க மதிகிரர்கள்
  ஆனால் பணம் இருந்தும் தன்மை அற்று வாழும் வாழ்கை எதற்கு!
  பணத்தை நேசிக்கும் கும்பல் மட்டுமே புத்திசளியாக பார்க்கும் கூட்டம் எல்லா இடமும் பெருகி விட்டது!
  நான் மனிதனக வழ விரும்புகிறேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: