எனது நாட்குறிப்புகள்

​தேர்ந்​தெடுக்கப்பட்டவர்கள் யார்? விதிச​மைக்கப் ​போகிறவர்கள் யார்?

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 5, 2014

எல்​லோரும் ஓர் குலம் எல்​லோரும் ஓர் நி​றை” என்ற என்னு​டைய கட்டு​ரை​யை ஏப்ரல் 25, 2011ல் என்னு​டைய வ​லைப்பூவில் பதிவு ​செய்திருந்​தேன். இது ​ஜெய​மோகனின் ​தேர்ந்​தெடுக்கப்பட்டவர்கள், விதி சமைப்பவர்கள் ​போன்ற கட்டு​ரைகளினால் சீண்டப்பட்டு எழுதப்பட்ட கட்டு​ரை.

இந்த கட்டு​ரைக்கு மூன்றாண்டுகளுக்குப் பிறகு இப்​பொழுது ​​ஹென்றி என்கிற ​ஜெய​மோகனின் வாசகர் ஒருவரிடம் இருந்து மறுப்புப் பின்னூட்டம் வந்துள்ளது. அதில் ​ஜெய​மோக​னை எப்படி நீ விமர்சிக்கலாம் என்ற ​தொணி​யே பிரதானமாக ​மே​லோங்கி இருக்கிறது. ​பொதுவாக அந்த ​நேரத்தில் நி​றைய ​ஜெய​மோகனின் கட்டு​ரைக​ளையும், க​தைக​ளையும் படித்துவிட்டு சீண்டல்களுக்கு உள்ளாகி பல பதிவுக​ளை எழுதி​னேன். ​என்னு​டைய வாசிப்புக்கும், சிந்த​னைக்கும் ​நே​ரெதிரான மு​றையில் இருக்கும் அவரு​டைய பு​னைவுகள் மற்றும் அபு​னைவுகளால் சீண்டப்படும் தமிழ்ச்சூழ​லைச் ​சேர்ந்த பல​ரையும் ​போல நானும் சீண்டப்பட்​டேன். அவரு​டைய எழுத்துக்கள் என்னு​டைய வாசிப்புக​ளையும், சிந்த​னைக​ளையும் முன்​வைப்பதற்கான ம​றைமுகமான தூண்டல்களாக அமைந்தன.

இதற்கு ​மேலாக அவரு​டைய எழுத்துக்க​ளை விமர்சித்து எழுதுவதற்கான எந்த உள்​நோக்க​மோ, அவருடன் எந்த வாய்க்காத் தகராறுக​ளோ எனக்கில்​லை. எக்காலத்திலும் என்​னை பிரபலபடுத்திக் ​கொள்ள ​வேண்டும், என் புத்தகங்க​ளை விற்க ​வேண்டும், ​பேசுபடு ​பொருளாக நம்​மை ​மையப்படுத்த ​வேண்டும் என்பது ​போன்ற எந்த ​நோக்கங்களும் என்​னைப் ​போன்ற ​சோம்​பேறிகளுக்கு இருக்க வாய்ப்​பே இல்​லை. ​தோழர்கள் பலர் என்னு​டைய கவி​தைகள், கட்டு​ரைக​ளை பதிப்பிக்க எவ்வள​வோ வலியுறுத்தியும் இன்றுவ​ரை அவற்றில் எனக்கு உடன்பாடில்​லை என மறுத்துவருகி​றேன். பத்திரி​கைகளில் எழுதித் தரச் ​சொல்லி வந்த வாய்ப்புக​ளையும் கூட மறுத்​தே வருகி​றேன். இந்த இ​ணைய நிகர்நி​லை உலகில் எத்த​னை​யோ ​கோடி பதிவுகளுக்கு இ​டை​யே எனக்​கென்று ஒரு வ​லைப்பூ​வை உருவாக்கி (அதுவும் இது இலவசமாக தரப்படும் வ​ரை மட்டு​மே). அவ்வப்​பொழுது எனக்கு ஏற்படும் அனுபவங்க​ளை, என்​னை பாதித்த விசயங்க​ளை என்னு​டைய கல்வி மற்றும் சிந்த​னைகள் வழிநின்று நான் சிறு பதிவுகளாக, உரையாடல்களுக்கான சிறு குறிப்புகள் ​போல எழுதி ​வைத்துக் ​கொள்கி​றேன்.

​ஹென்றி என்பவர் ​கேட்கிறார் “So, by your logic, you and Carl Marx have the same IQ levels? Is that what you have been thinking about yourself?” என்னு​டைய கட்டு​ரையின் அடிநாத​மே அவருக்கு புரியவில்​லை அல்லது அவர் புரிந்து​கொள்ள முயற்சிக்கவில்​லை என்ப​தைத்தான் இந்த பின்னூட்டம் ​தெளிவுபடுத்துகிறது.

​​மேலும் குறிப்பிடுகிறார், “எங்கே டியூஷன் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா? அதே கார்ல் மார்க்ஸிடம் தான்! ஆனால் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் என்னவென்றால்: கார்ல் மார்க்சை மட்டும் படித்துவிட்டு உலகத்தில் வேறேதும் இல்லை என்று நான் முடிவுக்கு வரவில்லை.” மார்க்​சை மட்டும் படித்துவிட்டு நின்று விட்​டோமா, அ​தையும் தாண்டி பயணித்​தோமா, அல்லது அ​தை மறுத்​தொதுக்கிவிட்டு விலகி நடந்​தோமா என்ப​​தெல்லாம் அவரவர் ​தே​வை​யையும் ​நோக்கத்​தையும் ​பொறுத்தது. அது அவரவர் வர்க்க குணங்களாலும், வர்க்கச் சார்புகளாலும் முடிவு ​செய்யப்படுகிறது. கட்டு​ரையில் ​பேசப்படும் ​பொருள் குறித்த விவாதங்களுக்கு எவ்வ​கையிலும் ​பொறுத்தமற்றது அல்லது அதில் உள்ள சிக்கல்கள் எவ்வாறு கட்டு​ரையில் சிக்க​லை ஏற்படுத்துகிறது என்ப​தை குறிப்பிட ​வேண்டும். இது ​போன்ற நக்கல், ​நையாண்டி, ​லொள்ளு, ​நொட்​டை எல்லாம் நாங்களும் நிறைய ​செய்​வோம். அதற்கு இது இடமில்​லை.

இப்படியாக ​பேசியவர் தன்னு​டைய மூன்றாவது பின்னூட்டத்தில்தான் சிறிது உ​ரையாடலுக்கான விமர்சனங்க​ளை முன்​வைக்கிறார்.

“I’ve written nothing. I’m just an avid reader. So, I’m the common man here. You have written so many articles here and think about the betterment of society and people. So, you need to tell me whether you want to have more privileges to decide the life of common man like me! Communism wants to give the power to those ‘selected few’, the awakened preliterate to rule over common people like me. I, as a common man do not want that to happen. I’m more comfortable as a common man to decide democratically what we, the people want. Finally, let me point out what you have missed from Jeyamohan’s article. If you could differentiate between ‘Talent’ and ‘Privilege’, what he says will be abundantly clear. In his own words:

“உரிமைகளில் மனிதர்கள் அனைவரும் சமமே. மனிதர்கள் எவருக்கும் பிறர் மேல் அதிகாரமும் இல்லை. அதிகாரம் என்றுமே மக்களின் கூட்டுச்செயல்பாடாகவே இருந்தாகவேண்டும். ஆனால் திறனில் மனிதர்கள் அனைவரும் சமம் அல்ல. ஆகவே மானுட குலத்துக்கான பங்களிப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் அல்ல. சிலர் அதிக தகுதியும் ஆகவே அதிக பங்களிப்பாற்றும் பொறுப்பும் அதன் பொருட்டு அதிக தியாகம் செய்யவேண்டிய கடமையும் கொண்டவர்கள்.” Now, if I read your article again- it tells me that you’ve incorrectly assumed that Jeyamohan has asked for more privileges for the talented. But no, he simply says the more talented should NOT ask for more privilege but should be willing to do more sacrifices.”

என்னு​டைய கட்டு​ரையின் அடிப்ப​டை​யே, மனித சமூகத்தின் இயக்கத்​தை அதன் வரலாற்றில் ​வைத்துக் காண ​வேண்டும். நம் காலகட்டத்​தை அதன் வரலாற்றுத் ​தொடர்ச்சியிலிருந்து துண்டித்துக் காணும் ​பொழுதும், அத்த​கைய பார்​வையிலிருந்து முடிவுக​ளை அ​டைய முயலும் ​பொழுதும் மட்டு​மே “​தேர்ந்​தெடுக்கப்பட்டவர்கள்”, “விதிச​மைப்பவர்கள்” என்ற தவறான கண்​ணோட்டங்களுக்கு அடிப்ப​டையாகிறது என்ற என் கருத்​தை பதிவு ​செய்வது​மே என்னு​டைய கட்டு​ரையின் ​நோக்கம்.

இன்​றைக்கு நாம் காணும் உலகில், என் கட்டு​ரையில் குறிப்பிட்டுள்ள​தைப் ​போல மனிதர்களுக்குள் ஆயிரமாயிரம் ஏற்றதாழ்வுகள் உள்ளன. அனைவருக்கும் ஒ​ரே விதமான வாய்ப்புகள் வழங்கப்படவில்​லை. அ​னைவருக்கும் ஒ​ரே விதமான வரலாற்றுப் பின்னணிகள் இல்​லை. மனிதர்கள் ஒடுக்கப்பட்ட பாரம்பரியத்​தைச் ​சேர்ந்தவர்களாகவும், அடக்கியாண்ட பாரம்பரியத்​தைச் ​சேர்ந்தவர்களாகவும் பிரிந்து கிடக்கிறார்கள்.

​மேலும் இன்​றைய நவீன சமூக அ​மைப்பில் ​தொழில பிரிவி​னைகள் உச்சகட்ட வளர்ச்சிய​டைந்த நிலையிலும்,​போட்டி ​பொறா​மைகள், ​பொச்சரிப்புகள் வளர்ந்துள்ள நி​லையிலும் அறிவுச்​சொத்து என்பது அனைவரும் ​கையாளும் வ​கையில் அனைவருக்குமானதாக இல்​லை. இ​வை அ​னைத்தும் ஒழுங்கு ​செய்யப்படும் ஒரு உலகில் நிச்சயம் அனைவரும் ​தேர்ந்​தெடுக்கப்பட்டவர்களாகவும், விதி சமைப்பவர்களாகவும் உருவாவார்கள்.

எனக்கு இது குறித்து ஏராளமான ந​டைமு​றை அனுபவங்கள் உண்டு, நான் கடந்த இருபத்​தைந்து ஆண்டுகளாக ​தமிழகம் முழுவ​தையும் ​சேர்ந்த தோழர்கள் பலருடன் ​பேசிப் பலகி இருக்கி​றேன். பலர் அ​மைப்புகளின் அ​மைப்பாளர்களாக, க​லை இலக்கிய ஆளு​மைகளாக உள்ளனர். அவர்கள் ​பெயின்டர், ​கொத்தனார், ​நெசவாளர், ஆட்​டோ ஓட்டுபவர், ​லோடுதூக்குபவர், ஏன் ரவுடிகள், திருடர்கள், ​போன்ற பல பின்னணிகளிலிருந்து வந்து இன்​றைக்கு உ​ழைக்கும் மக்களின் மதிப்புக்கும் மரியா​தைக்குமுரிய த​லைவர்களாகவும், படைப்பாளர்களாகவும் உள்ளனர். அவர்களிடம் பலமு​றை ​பேசிக் ​கொண்டிருக்கும்​ ​பொழுது அவர்கள் என்னிடம் குறிப்பிட்டது, ​தோழர் மார்க்சியத்​தை ​நோக்கி மார்க்சிய இயக்கங்க​ளை ​நோக்கி நான் வரவில்​லை என்றால் நான் ​பொறுக்கியாக, புறம்​போக்காக, மக்களால் தூற்றப்படக்கூடிய ​கேவலமான வாழ்க்​கை​யைத்தான் வாழ்ந்து அழிந்திருப்​பேன்.

ஏன் தறியுடன் நாவ​லை எழுதிய ​தோழர் பாரதிநாதன் ​​பேசிக் ​கொண்டிருக்கும் ​பொழுது குறிப்பிட்டார் மூன்றாவது கூடபடிக்காத நான் ​மொழி​யைக் கற்றுக் ​கொண்டு உலக அரசிய​லை,தத்துவத்​தை, இலக்கியத்​தை கற்றுக் ​கொண்டு இன்​றைக்கு ஒரு நாவ​லை எழுதியிருக்கி​றேன் என்றால் அதற்கு மார்க்சியமும், மார்க்சிய இயக்கமும், மார்க்சிய அ​மைப்பாளர்களும் தான் காரணம் என்று குறிப்பிட்டார்.

ஆக​வே சரியான ​நோக்கமும், வாழ்க்​கைக்கான அர்த்தமும் காட்டிக் ​கொடுக்கப்பட்டால், சரியாக வழிகாட்டப்பட்டால், வாய்ப்புக​ளை உருவாக்கிக் ​கொள்ளும் தன்னம்பிக்​கையும்,​போராடும் குணத்​தையும் கற்றுக் ​கொடுத்தால் ஒவ்​வொரு மனிதனும் ​தேர்ந்​தெடுக்கப்பட்ட மனித​னே, விதி ச​​மைக்கும் ஆற்றல் ​பெற்ற மனித​னே.

Advertisements

2 பதில்கள் to “​தேர்ந்​தெடுக்கப்பட்டவர்கள் யார்? விதிச​மைக்கப் ​போகிறவர்கள் யார்?”

 1. வரலாற்றை வாசிக்கையில்…..
  தொழிலாளியின் கேள்விகள்.
  -பெட்ரால்ட் பிரெக்ட்
  தீபுக்களின்* ஏழு வாயில்களை கட்டியவர் எவர்?
  ஏடுகளில் இருப்பதோ மன்னர்களின் பெயர்கள்
  பாறைகளை அவர்களா உருட்டி வந்தார்கள்?
  பாபிலோன் அடிக்கடி அழிக்கப்பட்டதே
  அதை கட்டிகொண்டிருந்தவர்கள் யார்?
  எந்த வீட்டில் கட்டியவர்கள் குடியிருந்தார்கள்
  லீமா நகரில் தங்கமுலாம் பூசிய வீடுகளிலா?
  சீனப்பெருஞ்சுவர்கட்டி முடித்த மாலையில்,
  செங்கல் சுமந்தவர்கள் சென்றது எங்கே?
  ரோமப் பேரரசில் வெற்றி வளைவுகள் அதிகம் உள்ளதே..!
  யார் மீது சீசர்கள் வெற்றிக் கொண்டார்கள்?
  அடிக்கடி பாடப்பட்ட பைசான்ட்டியத்தின் குடியிருப்புகளில்
  அரண்மனைகள் மட்டுமா இருந்தன..?
  பாரம்பரிய அட்லாண்டிக்கை கடல் விழுங்கியபோது
  அடிமைகள் மூழ்கிய சப்தங்கள் கேட்கவில்லையோ?
  இந்தியாவை இளம் அலெக்சாண்டர் வென்றான்,
  அவன் மட்டுமா வென்றான்?
  பிரான்சு நாட்டை சீசர் வென்றான்
  அவனுடன் ஒரு சமையல்காரன் கூட இல்லாமலா?
  ஸ்பெயின் கப்பற்படை தோற்றபொழுது பிலிப் அழுதான்
  யாருமா அவனருகில் அழவில்லை?
  ஏழு ஆண்டுகள் போரில் ஃபிரட்ரிக் வென்றான்
  அவன் வென்றது தனியாகவா?
  ஒவ்வொரு பக்கத்திலும் வெற்றிகள்
  வெற்றி விருந்துகளை சமைத்தவர் எவர்?
  ஒவ்வொரு பத்து ஆண்டுகளில் ஒருபெரிய மனிதன்
  யார் அதற்கு விலை கொடுத்தவர்கள்?
  எவ்வளவு அறிக்கைகள் எவ்வளவு கேள்விகள்…
  வரலாற்றை வாசிகையில்……
  மொழியாக்கம்: இளங்கோ
  ( மக்கள் பண்பாடு இதழ் தொகுப்பில் இருந்து..)
  *ரோமாபுரியில் உள்ள இடம்

  இந்த கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்….விதிசமைக்கப் போகிறவர்கள்…கருவிலேயே திருயுடையவர்களுக்குமானது…

 2. cpalani said

  தோழரே உங்கள் கருத்து சரியானது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: