எனது நாட்குறிப்புகள்

ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்

Posted by ம​கேஷ் மேல் ஜூன் 2, 2016

வரலாறு இன்னும் மிச்சமிருக்கிறது

13245448_1729956427276020_7970129239647815798_n

குரோவர் ஃபர் எழுதி 2011ல் வெளி வந்த உலகளவில் மிக முக்கிய நுால் “Khuruschev lied”. உலக கம்யூனிஸ்ட்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்த நுால். இந்நுாலுக்காக இந்நுால் ஆசிரியர் நல்லவிதமாகவும் மோசமாகவும் சர்வதேச ஊடகங்களால் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டார். டேவிட் ஹோரோவிட்ஸ் என்னும் அமெரிக்காவின் பிரபரலமான வலதுசாரி அறிவுஜீவியால் குரோவர் ஃபர் “அமெரிக்காவில் உள்ள மிக ஆபத்தான 101 கல்வியாளர்கள்” என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டார். இந்நுால் எதைப் பற்றி பேசுகிறது? இந்நுாலில் பேசப்படும் பிரச்சினைகளின் வரலாற்று முக்கியத்துவம் என்ன? அதில் பேசப்படும் பிரச்சினைகளுக்கும் இன்றைய நம் சமகால உலகில் மக்கள் எதிர்கொள்ளும் உயிராதாரப் பிரச்சினைகளுக்குமான தொடர்பு என்ன? என்கிற கேள்விகளுக்குள் செல்வதற்கு குறைந்தபட்சம் சோவியத் யூனியன் வரலாற்றை மிகச் சுருக்கமாகவேனும் புரிந்து கொள்ள வேண்டும்.

லெனின் தலைமையில் சோவியத் சோசலிச அரசு 1917ல் அமைக்கப்படுகிறது. உலக நாடுகளின் கடும் அடக்குமுறை மற்றும் நேரடியான யுத்தங்களுக்கு மத்தியிலும் உள்நாட்டு யுத்தத்திற்கு மத்தியிலும் அவ்வரசு தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகத்தோடே முதல் பல ஆண்டுகளை கழித்தன. உலகில் அமைக்கப்ட்ட முதல் தொழிலாளி வர்க்க அரசு என்கிற வகையில் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய முதலாளித்துவ அரசுகள் அனைத்தும் சோவியத் யூனியனை தங்களுக்கு விடப்பட்ட பெரும் சவாலாகவே எடுத்துக் கொண்டன. அதை எப்பாடு பட்டேனும், எவ்விலை கொடுத்தேனும் ஒழித்துவிட துடித்தன.

இரண்டாம் உலகப் போர் வெடித்த பொழுது, சோவியத் யூனியனுக்கு ஸ்டாலின் தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். அந்நாடு அப்பொழுதான் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டிருந்தது. உலகையே வென்று தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வரும் மிகப் பெரிய திட்டத்துடன் ஹிட்லரின் நாஜி ஜெர்மனி ஐரோப்பிய நாடுகள் பலவற்றை பிடித்துக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தது. அதன் படைபலம், ஆயுதபலம், தொழில்நுட்ப பலம் ஆகியவற்றை கண்டு உலக நாடுகள் பயந்து கொண்டிருந்தன. எந்தவொரு வல்லரசும் கூட அதனோடு தன்னால் நேருக்கு நேர் பொருத முடியும் என்ற நம்பிக்கையில் இல்லை.

ஆகவே அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நேச நாடுகள் ஒரு பக்கம் சோவியத் யூனியனோடு ஒப்பந்தங்கள் செய்து கொண்டாலும் மறைமுகமாக ஹிட்லர் ஜெர்மனியுடன் பல ரகசிய ஒப்பந்தங்களை செய்து கொண்டு, நாஜிப் படைகளை மாஸ்கோ பக்கம் திருப்பி விட பல சதிகளைச் செய்தனர். அன்றைக்கு உலக மக்கள் முழுவதும் ஜெர்மன் வெல்லப்பட முடியாத படை என அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தனர். பல நாடுகள் ஜெர்மனிடம் சரணடைய முன்னேற்பாடுகளில் இறங்கத் துவங்கின.

அத்தகைய சூழலில், சோவியத் மக்களும், அதன் செம்படையும், ஸ்டாலினின் தலைமையிலும் வழிகாட்டலிலும், பல அளப்பறிய தியாகங்களையும், இழப்புகளை எதிர்கொண்டு தன்னந்தனியாக எந்த உலக நாடுகளின் பெரும் உதவியும் இன்றி நாஜிப்படையை எதிர்கொண்டு வீழ்த்தி உலக வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத தன்னிகரற்ற சாதனையை படைத்து. தன் நாட்டையும் மக்களையும் மட்டுமல்லாமல் உலக மக்களையும் உலக நாடுகளையும் பாசிச அபாயத்தில் இருந்து காத்தனர்.

இதனால் சோவியத் யூனியன் மற்றும் ஸ்டாலின் மீதான உலக மக்களின் அன்பும் ஆதரவும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பெருகியது. அமெரிக்காவில் கூட பெரும்பான்மையான மக்கள் ஸ்டாலினை தங்கள் தலைவர் என்று கோஷமிட்டனர். பெரும் ஊர்வலங்களை நடத்தினர்.

அதே நேரத்தில், இரண்டாம் உலகப் போரால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சோவியத் யூனியன் அத்தனை சீக்கிரத்தில் மீள முடியாது என்றும் அதிலும் உலக ஏகாதிபத்தியங்களின் நிதிமூலதன ஏற்றுமதி இல்லாமல் அது சாத்தியமே இல்லை என்றும் உலக முதலாளித்துவ நாடுகள் நம்பிக் கொண்டிருந்தன. சோவியத் யூனியனின் மக்களும், அதன் தலைமையும் உலக முதலாளித்துவ நாடுகளின் அனைத்து மூடநம்பிக்கைகளையும் தரைமட்டமாக்கி மிகக் குறுகிய காலத்தில் உலகின் மிக வளர்ச்சியடைந்த தொழிற்துறை நாடாக, உற்பத்தியில் முதல்நிலை நாடாக அந்நிய ஏகாதிபத்தியங்களின் தொழில்நுட்ப மற்றும் நிதி மூலதன உதவியின்றி தங்கள் நாட்டை மாற்றிக் காட்டினார்கள்.

இது அனைத்திற்கும் ஸ்டாலினின் வழிகாட்டலும், தலைமையும்தான் முக்கிய காரணம் என்பது உலக மக்கள் அனைவருக்கும் மறுக்க முடியாத உண்மையாக வெளிப்பட்டது, அந்நேரங்களில் இவற்றை அன்றைய ஆளும்வர்க்க செய்தி ஊடகங்களாலும் மறுக்க முடியவில்லை. அவை அவற்றை அன்றைய செய்திகளில் வெளிப்படுத்தவே செய்தன. ஸ்டாலின் காலம் வரை எந்தப் பெரிய பொய்களையும் அவதுாறுகளையும் அவர்களால் கட்டமைக்க முடியவில்லை. தாங்கள் செய்த செய்கிற ஒவ்வொரு செயலுக்குமான காரண காரியங்களை அவர்கள் உலக மக்கள் முன்பு விளக்கவே செய்தனர். தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபணப்பூர்வமாக மறுத்தனர். இதனால் வாயடைத்திருந்தது உலக ஏகாதிபத்தியம்.

ஸ்டாலின் மறைவிற்குப் பிறகு அவருடன் மையக் கமிட்டியிலும் ஆட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்த குருச்சேவ் ஒரு “இரகசிய உரையும்” அடுத்து நடந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரசில் ஒரு உரையும் நிகழ்த்தினார். அவ்வுரைகள், அது அதுவரை இருந்த அனைத்து உன்னதங்களையும், பெருமைகளையும், நம்பிக்கைகளையும், தரைமட்டமாக்கியது. அது உலகளாவிலான தாக்கமும் பாதிப்பும் அளவிட முடியாதது. அதன்பிறகு படிப்படியாக உலக மக்கள் மத்தியில் கம்யூனிசம் குறித்த அவநம்பிக்கைகள் பரவலாயின. உலக கம்யூனிச இயக்கத்திற்குள் பிளவுகள் உருவாகின.

இன்றைக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் முதலாளித்துவ லாப வெறிக்காக வேட்டையாடப்படுவதற்கும், கொலை செய்யப்படுவதற்கும், வறுமையிலும் பட்டினியிலும் நோயிலும் பல கோடி மக்கள் இறப்பதற்கும், யுத்த அபாயமும். வாழ்க்கை உத்தரவாதமின்மையோடும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பரிதவிப்பதற்கும் இந்த குருச்சேவின் பொய்கள் முதலாளித்துவத்திற்கு மாற்று உண்டு என முழங்கிய கம்யூனிச இயக்கத்தை சிதைத்ததன் வாயிலாக முக்கிய காரணமாக அமைந்து உள்ளன.

அத்தகைய பொய்களை தோலுரித்து 2011ல் வெளிவந்த முக்கிய நுாலே  “Khuruschev lied” அதன் தமிழ் மொழியாக்கம் தற்பொழுது பொன்னுலகம் பதிப்பக வெளியீடாக இப்புத்தகச் சந்தையில் வெளிவந்துள்ளது. குருச்சேவின் பொய்கள் உலக முதலாளித்துவத்திற்குச் செய்த சேவைகள் அளவிடற்கரியவை. வரலாற்றில் அது உலக உழைக்கும் மக்களுக்குச் செய்த துரோகம் மிக மோசமானது. இந்நுாலில் சோவியத் யூனியன் தகர்விற்கு பிறகு வெளியிடப்பட்ட சோவியத் யூனியனின் இரகசிய ஆவணங்களைக் கொண்டே அவை அனைத்தையும் ஆதாரப்பூர்வமாக மறுக்கிறார். சோவியத் தகர்ந்த பொழுது வரலாறு முற்றுப் பெற்றுவிட்டதாக முதலாளித்துவ அறிவுஜீவி ஒருவர் அறிவித்தார். இத்தகைய நுால்களும், பெருகி வரும் முதலாளித்துவ நெருக்கடிகளும், மக்கள் போராட்டங்களும் “இல்லை வரலாறு முடியவில்லை, அது இன்னும் மிச்சமிருக்கிறது” என்பதை வெளிப்படுத்துகின்றன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் வெளியிடப்பட்ட “மாபெரும் விவாதம்” மற்றும் ஸ்டாலின் சகாப்தம், மாபெரும் சதி போன்ற நுால்களிலும் இரண்டாம் உலகப் போர் பற்றிய பல்வேறு நுால்களிலும் ஸ்டாலின் காலத்து சோவியத் யூனியனின் சாதனைகளையும் அது எவ்வாறு முதலாளித்துவ உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அவற்றை புரிந்து கொள்ளும் பொழுது மட்டும் தான் இந்நுாலில் குரோவர் ஃபர் முன்வைக்கும் ஆதாரங்களை புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் முடியும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: